ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு ….ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். …அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். ..நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் ..வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
(பதிலில் மோதி), இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் உண்டு. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புகிறோம். ….
1.எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள் –நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக…. மக்களை வளப்படுத்த.. அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் கருவிகளாக உள்ளன.
2.ஈ-கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. … மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும்.
Category: இதழ்-137
இந்த மழை என்ன செய்யும் ?
உன் நினைவன்றி ஏதுமில்லா
கணங்களாய் நிறையும்
காகித விமான சேமிப்பாளர்
ஹாரி எவரெட் ஸ்மித் ஒரு ஓவியர்; திரைப்படகர்த்தா; வித்தியாசமானப் பொருள்களை சேமிப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை மானுடவியலாளராக உணர்ந்தவர். ஈஸ்டர் பண்டிகையின் போது ஒளித்து வைக்கப்படும் முட்டைகளில் துவங்கி பல்வேறு விஷயங்களை கர்மசிரத்தையாகத் தொகுத்தவர். நியு யார்க்கரில் அவர் சேமித்த காகித விமானங்களைப் பார்க்கலாம். விண்ணைத்தொடும் நியு யார்க்கின் “காகித விமான சேமிப்பாளர்”
கண்களும் கவி பாடுதே
நியு யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் படைப்பாக கலைஞர்களையும் வித்தியாசமானக் காட்சியாக்கங்களையும் திரையிடுகிறார்கள். கீழே பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண் சிமிட்டுகிறது. நீங்கள், அவர்களைப் கண்காணிப்பது போலவே, அந்தக் கண்களும் உங்களை கவனிக்கின்றன. Midnight Moment: "Eyes on “கண்களும் கவி பாடுதே”
கருவிகளின் இணையம் – அலுவலகங்களில் கருவிகள்
பெரும்பாலும் அலுவலகங்களில்தான், கணினி வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள் – இதனால், கருவிகளின் இணையம் அலுவலகங்களில் தானே முதலில் தொடங்க வேண்டும்? கேள்வி என்னவோ நியாயமானதுதான். ஆனால், அலுவலகங்கள், கட்டிடங்களில் இவ்வகைக் கருவிகளின் தாக்கம் என்னவோ மிகக் குறைவுதான். இத்தனைக்கும், உலகையே மாற்றி அமைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என்னவோ மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றன. அலுவலகக் கட்டிடங்களின் சக்தி தேவைகளைக் குறைத்து, அதன் செயல்திறனை உயர்த்த, பல வழிகளை, LEED என்ற அமைப்பு, முன் வைத்து, அப்படிக் கட்டப்படும் கட்டிடங்களுக்குச், சில ஆண்டுகளாக, சான்றிதழும் வழங்கி வருகிறார்கள்.
ரஞ்சனி
நீலக்குழல் விளக்கொளி அறையெங்கும் பரவி இரவின் முழுமையை ரஞ்சனியின் மனதில் நிலைத்தது.கதவில் தொங்கிய மாவிலைகள் அசையும் நிழலையேப் பார்த்திருந்தாள். எழுந்து வெளியே போகமல் ஏன் இப்படியே இருக்கிறேனென்று எண்ணிக் கொள்கிறாள். சீனுவின் சீரான மூச்சொலி, குழந்தைகள் புரண்டு படுக்கும் அசைவு எல்லாவற்றையும் உணரமுடிகிறது. ஆனால் அவள் அப்பெரும் வெளியில் நிற்கிறாள். வெள்ளிநிறத்தில் மின்னும் மணலும், நிலவொளியில் அசைந்தோடும் தண்ணீரின் அசைவும், குளிர் வாடையும்…
மாணிக்குறளனே தாலேலோ!
கிருஷ்ணனைக் குழந்தையாக்கி அவனுடைய பால லீலைகளில் ஆழ்ந்து விடுவது பக்தி செலுத்துவதில் ஒரு அழகான வகை. பக்தி செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் இறைவனைக் குழந்தையாக எண்ணிக் கொஞ்சுவதில்லை. குழந்தையாகக் கொஞ்சும் போது இறைவன்- அடியார் என்ற நிலையைக் கடந்து, இவன், இந்தக் குழந்தை என்னுடையவன், என அவனிடம், இறைவனிடம் (அவனை இறைவன் என்று உணர்ந்தும் உணராத நிலையில்) எல்லையற்ற அன்பும் பாசமும் பிணைப்பும் ஏற்படுகிறதே, இது பக்திக்கும் மேல் ஒருபடி உயர்ந்த உறவல்லவா?
பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்
மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.
குளக்கரை
ஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லை. பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான்னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது.
காண்பதும், கேட்பதும்
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை. அதற்காக, காண்பது, கேட்பது ஆகிய விஷயங்களில் பிரச்னை இல்லை என்று இல்லை. இந்த விசாரிப்பதில் யாரை விசாரிப்பது, என்ன விசாரிப்பது, எப்படி விசாரிப்பது என்று ஆரம்பத்திலேயே விவகாரம் துவங்கி விடும்.
வெளி விஷயங்களுக்கு இந்த விசாரிப்பு ஓரளவு உதவலாம். உள் விஷயங்களுக்கு நாம் யார் யாரையோ விசாரிப்பது பிரயோசனம் அற்றது. நாம் நம்மையேதான் விசாரிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து விவகாரங்களிலும், விஷயங்களிலும் சந்தேகம் இருந்தாலும் அவை அனைத்தும் சேர்ந்தும் நம் மீது நமக்கு இருக்கும் சந்தேகத்துக்கு இணையாக மாட்டா. உங்களைப் பற்றித் தெரியாது. என்னளவில் சொல்கிறேன்.
வெளி விஷயங்கள் பற்றி விசாரிப்பதில் அவை பற்றி கிட்டத் தட்ட தெரிந்து கொள்ளலாம்.
கோவையிலிருந்து
ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம்
முடிவு நெருங்குவதை உணரும் ஹிட்லர், ஈவா பிரௌனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். ராணுவ அதிகாரி மோங்கேயிடம் ஹிட்லர், ”பெர்லினை இன்னும் எவ்வளவு நேரம் காப்பாற்ற முடியும்?” என்கிறார். ”ரஷ்யப் படையினர் சில நூறு மைல்கள் தூரத்திலேயே உள்ளனர். 20 மணி நேரம்தான் காக்கமுடியும்.” என்கிறார் மோங்கெ. ஹிட்லர் தான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்கிறார். பிறகு தனது பாதுகாவலர் குன்ஸியை((Gunze) ) அழைக்கும் ஹிட்லர், ~~நாங்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, எங்கள் உடல்கள் ரஷ்யப்படையிடம் கிடைத்தால், அதை மியூசியத்தில் காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்கள். எனவே எங்கள் உடல்களை உடனே எரித்துவிடவேண்டும்.” என்று தெரிவிக்கிறார். குன்ஷா (Günsche) 200 லிட்டர் பெட்ரோல் தயார் செய்து வைத்துக்கொள்கிறான்.
பாப்லோ எஸ்கோபார்: போதை மருந்து வியாபாரியின் கதை
சிறிது நாட்களுக்கு முன்னால் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான Netflix தயாரித்த Narcos என்றொரு பிரபலமான தொடரை பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமடைந்திருக்கும் தொடரான இது கொலம்பிய போதை மருந்து கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரின் (Pablo Escobar) சுயசரிதை. பத்து எபிசோட் வரைக்கும் இதுவரை வந்திருக்கிறது. இனிமேலும் எபிசோட்கள் தொடர்ந்து வருமென்று நினைக்கிறேன். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடராக அல்லது சினிமாவாக எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் சுயசரிதைகள் சம்பந்தா சம்பந்தமில்லாம நாடகத்தனமாக இருக்கும் அல்லது சகிக்கவே முடியாதபடிக்கு சம்பந்தப்பட்டவரை கேவலப்படுத்தியிருப்பார்கள் அல்லது உச்சாணிக் கொம்பில் செயற்கையாக தூக்கி வைத்துக் கொண்டடியிருப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அந்தவகையில் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய இந்த தொடரும் ஒரு விதிவிலக்குதான்.
சக்தி… மனசில் நிறையும்போது…
1970 களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நாங்கள் குடியிருந்தபோது நவராத்திரி சமயத்தில் நம் மண் பொம்மைகள் கிடைக்காமல் குழந்தையின் விளையாட்டு பொருட்களையும் பத்திரிகைகளிலிருந்து சில படங்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டி, படிகளில் நிற்க வைத்து கொலு வைத்தேன் . அப்படி நான் கத்தரித்து ஒட்டிய படங்களுள், காஞ்சிப் பெரியவர், கடவுள் படங்கள் இவற்றுடன் மோனோலிஸா படமும் ( அழகாக இருந்ததே..!)என் கொலுவில் இருந்தன. தாம்பூலத்திற்கு அழைத்திருந்த பெண்களில் அக்கம் இருந்த ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க பெண்களும் உண்டு. வந்திருந்த பெண்களில் ஒருவர் கேட்டார்: “பூஜை என்றீர்கள். சரிதான். ஆனால் மோனோலிஸா படத்தையும் இந்த பஸ், விமானம் போன்ற பொம்மைகளையும் கடவுள் படங்களுடன் ஏன் வைத்துள்ளீர்கள்?” என்றார்.
அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்
படத்தின் கட்டமைப்பும் உள்ளீடும் ஒன்றையொன்று தாங்கிப் பிடிப்பதோடு ஒன்றை மற்றது விளக்குவதாகவும் அமைந்திருக்கின்றன. பிணைப்பு பளுவாகாமல், ஒன்றிய இயக்கமாகி விடுகிறது. ஒன்று தூக்கலாக அமைந்து கவனத்தைக் கவ்வினால் மற்றது தன் பின் தேங்கிய இருப்பில் ஒன்றாத இயக்கமாகக் காட்சிகள் அமைந்து உறுத்தத் துவங்கும். சில சமயம் சிறந்த இயக்குநர்களிடம் கூட இந்த இணைப்பில் அபசுருதி நுழைந்து நம்மை அன்னியமாக்கும். அண்டோனியானியின் ரெட் டெஸர்ட் படத்தை இன்று பார்த்தால் அதில் கருத்தியலால் நகர்த்தப்படும் காட்சிப்படுத்தலின் செயற்கைத் தன்மை உறுத்தவே செய்கிறது. அன்னியப்படுத்தலைச் சொல்ல வந்த படம் அன்னியமாக்கி வைப்பதால் அந்த ‘அனுபவத்தை’ நமக்குக் கொடுப்பதில்லை. ஒரு வகையில் கலை என்பது ஒரே நேரம் இந்த சாளரத்தன்மையைக் கொண்டதாகவும், அதை மறக்கடித்த ஈடுபாட்டை நம்மிடம் கொடுத்து விடுவதாகவும் இருக்கையில் அது வெற்றி பெறுகிறது. கலையின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல, மாறாக நம்மை நம்மிடமிருந்து அகற்றி நம்மில் வேறொன்றை நிரப்புவது.
மகரந்தம்
மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் டிஸைனர் இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் …
பெண்ணும் சாமியும்
இன்று, அலுவலகம் ஓடுகையில் தொங்கத் தொங்கத் தாலி எரிச்சலூட்டுகிறது. தாலியை புனிதமாக தலையில் ஏற்றிய ஆணுக்கோ அது அவனின் ஆயுளை நிர்ணயிக்கும் ஒன்றாக மனதில் உருவேறிக் கிடக்கிறது. “என்னது? தாலியைக் கழற்றுவதா?” என்கிறான் அவன். “பேங்கில் பண்ணத்தைப் போடச்” சொல்கிறாள் பெண். பெற்ற பிள்ளை, அவனுடையது என்பதை அவனுக்கே அவள்தான் சொல்ல வேண்டிவந்தமையால் அவன் பெயர் இனிஷியலானது. இப்போது எவரை நம்ப வைக்க வேண்டும். இது நம் பிள்ளை என நமக்குத் தான் தெரியுமே? பின் எதற்கு? நம் இருவரின் உற்பத்திக்கு நம் இருவரின் பெயர்
உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997
தமிழகத்தில் இன்னமுமே கணிசமான ‘அறிவு ஜீவிகள்’ மார்க்சிய மாயையில் மூழ்கியவர்கள் என்பதால் இந்த எழுத்தாளரின் கருத்துகளைப் பற்றிய ஒரு கட்டுரை ஒரு சிறு அளவு மயக்கத் தெளிவிப்பு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் இதைக் கொணர்கிறேன். மாறாக, மனநல மருத்துவ சிகிச்சையை அளித்தாலாவது ஏதாவது பயன் இருக்கும் என்று சிலர் சொல்லக் கூடும். இப்படி நகைச்சுவையைக் கருதிச் சொன்னாலும், இன்றைய மனநல மருத்துவமுமே அப்படி ஒன்றும் பயனுள்ள சிகிச்சை முறை என்று தோன்றவில்லை என்றும் சுட்டுகிறேன். வேப்பிலை அடித்து மஞ்சள் நீராட்டிப் பேயோட்டியவர்கள் காலம் போய்…