வருக்கத்தொகையும் பின்னபாகாரமும்

கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும் என்று நினைப்பது செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.

மூன்று சிகரங்கள்

ஏழு பேர் போவதாக முடிவாகியிருந்தது, அதில் ஐந்து பேருடன் நான் ஏற்கனவே ஒரு முறை ஸ்னோடோன் மலை மட்டும் ஏறி இருக்கிறேன். அவர்கள் வேகத்திற்கு முடியாவிட்டாலும் பெரிதாக சிரமபடாமல் மலையேறி முடித்திருந்தேன். நண்பர் பேச பேச லேசாக ஆசை துளிர்த்தது. இம்முறை வேரோரு நண்பர் வண்டி ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளதால் நான் ஓட்ட வேண்டி இருக்காது, அதுவும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. இந்நண்பர் குழாமோடு பயணம் செய்வது எனக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் இனிய அனுபவமாகவே இருந்துள்ளது, அது இன்னோரு பெரிய உந்துதல் . அரை மணி நேரத்தில் “மூணு மலதான ,ஏறிறுவோம்” என்று சொல்லும் அளவுக்கு தயார்ஆகிவிட்டேன்.

உறவுகள் மேம்பட

முன் காலத்தில் பெண்கள் வெகு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.(அந்த காலத்தில் பெரும்பாலும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்; செய்து கொள்ளப்படுவதில்லை. இதில்தான்எத்தனை வித்தியாசம்?!) தங்களுக்கென்று இன்னும் ஆழமாக கருத்து ஏதும் உருவாகாத நிலையில் திருமணம் செய்துவைக்கப்படும்போது புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையில் புகும்போது சட்டென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தலைமுறை பெண்கள்.

பிரான்சு : பிரெஞ்சு மக்கள்

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றா¡சிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள்

வடிவழகு- மதுராதிபதேர் அகிலம் மதுரம்!

ஒரு குழந்தையைப் பார்க்கும் போது ‘இவனுடைய கண் இவன் தந்தையுடையதைப் போலுள்ளது,’ எனவோ, ‘இவனுடைய சுருட்டைத் தலைமயிர் தாயினுடையதைப் போலுள்ளதே,’ என்றோ வியந்து மகிழ்கின்றோம். அது போன்றே, சிறு மகவிற்கு, அது ஆணோ பெண்ணோ, விதம்விதமாக ஆடை அணிமணிகள் புனைவித்து, அலங்காரம் செய்து அழகு படுத்திக் கண்டு களி கொள்கிறோம். அப்படிப்பட்ட குழந்தை, ஆண்டவனாகவே, ஸ்ரீ கிருஷ்ணனாகவே இருந்து விட்டால் என்ன செய்வோம்?

கருவிகளின் இணையம் – அணியப்படும் கருவிகள்

அணியப்படும் கருவிகளே, கருவிகளின் இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய தூதுவனாக இன்று உள்ளது. அத்துடன், நிறையப் பணம் இருப்பவர்கள், அலட்டிக் கொள்ள உதவும் ஒரு நுட்பம் என்ற கருத்தையும் பரவ உதவியதும், இக்கருவிகளே. ஆனால், குழந்தைத்தனத்தைத் தாண்டி, இக்கருவிகள் மிகவும் முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படும்படி பல புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கவும், விளையாட்டில் உயர்வுபெற உதவவும், தொழில்களில் வேலைக்குப் பயன்படவும், நோயாளிகளுக்குப் சிகிச்சைகளைப் பராமரிக்கவும், உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதாகவும் பரிமளிக்கும் கருவிகளைப் பார்ப்போம்.

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும் என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை கூறியது. நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது. ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன? 19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்: இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பெண்ணுக்கெதிராகவா சட்டங்கள்?

இன்றும் பல இடங்களிலும், பெண்ணை முடக்கிப் போட அவளின் பாலினத்தைக் குறிப்பிட்டு அல்லது அதை இழிவு செய்தலே போதுமானதாக இருக்கிறது. தலை எடுக்கும் பெண்ணா…? “அவள் கேரக்டர் சரி இல்லை” என்பதே போல… இப்படியான கருத்துக்களுக்கு பெண்களும் எதிர்வினையாற்றுவதும் இன்னும் நடக்கிறதுதானே?

அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"

ஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.

கவிதை எனும் வேதாளம்

மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது

குளக்கரை

தாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். அந்தக் கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்கிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகத் தகவல்கள் மூலம் ஆராய்கிறார் ராகேஷ் கிருஷ்ணன்.

மகரந்தம்

50களில் துவ்ங்கி உலக சினிமாவைப் புரட்டிப் போட்ட ஃப்ரெஞ்சுப் புது அலை என்கிற திரைப்பட ‘இயக்கம்’ ஒரு முனைத்தானது அல்ல என்று நிறைய பேர் எழுதிப் படித்திருப்பீர்கள். ரோமர் இந்த அலையில் ஒரு முக்கியப் புள்ளி, ஆண் பெண் உறவுகளில் அறவுணர்வைப் பற்றி நுண்மையான கவனிப்புகள் கொண்ட மென்மையான படங்களை எடுத்தவர் என்று அவர் புகழப்படுகிறார். இவர் பலரைப் போல ஏதேதோ கருக்களைக் கொண்ட படங்களை எடுக்காமல் அனேகமாக நம்பிக்கைக்குரிய உறவுக்கும், தூண்டுதலுக்கு இரையாகி பாதை மாறுவதற்கும் இடையே உள்ள இழுபறியைப் பற்றிய பல கதைகளையே தொடர்ந்து படமாக்கி இருக்கிறார். ரோமர் (அல்லது க்ஹோமேஹ்!!) தன் படங்களை சில கருக்களின் பல கோணங்களையே திரும்பத் திரும்பக் கலைத்துப் போட்டு உருவாக்கியவர் என்று ஒரு புறம் வருணிக்கப்பட்டாலும், அறச்சிக்கல்களைப் பல கால கட்டங்களில் பொதிந்த கதைகள் மூலம் யோசித்துப் பார்த்திருக்கிறார் என்பதை நாம் கருதலாம்.

விளக்கு விருது – 2014

தமிழில் கவனிக்கப்படும் விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சி.மோகன், கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறவர். படைப்பு மையப் பார்வையையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தும் இவருடைய செயல்பாடு, சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் “விளக்கு விருது – 2014”

ஆறு நொடி ஆட்டங்கள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது சில தருணங்கள் எப்போதும் மனதில் நிற்கும். பாகிஸ்தானின் மிகச் சிறந்த மட்டை வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஜாவேத் மியன்தாத், மரபை மீறிய நடவடிக்கைகள் கொண்டவராகத் தெரிய வந்தவர் என்பதால் ஒரு அளவு பாகிஸ்தானிலும், வேறு பல நாடுகளிலும் பிரபலமானவர். இவர் “ஆறு நொடி ஆட்டங்கள்”

புடபெஸ்டை அடைதல்

அம்மாக்கள் மும்முரமாக கூந்தலை வாரிக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் சொர்கத்தைவிட்டு வெளியில் செல்வதற்ககு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் முன்னே வரிசையாக போகும் போது மட்டும் எங்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். ஆண்கள் எப்போதும் போல் ஜாகரண்டா மரங்களுக்கு கீழே வட்டாட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த்தால் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.

வாசிப்பதற்கான அவகாசம்

நவீன தகவல் அமைப்புகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூரோசயன்ஸ் துறையின் ஆய்வுகள் உதவுகின்றன. பிற அனைத்தையும்விட புதிய தகவல்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மனித மூளைகள் உருவாகியிருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது- சில ஆய்வுகள், சோற்றுக்கும் சம்போகத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்துவத்தை மூளை புதிய தகவல்களுக்கு அளிப்பதாகச் சொல்கின்றன.

எம்எஸ்வி: விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு

எம்எஸ்வி இசை பற்றி பேசுமுன், தமிழ் திரையிசையின் வளர்ச்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தி விட்டுச் சென்ற தாக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழ் திரையிசையை கர்நாடக சங்கீதத்தின் பிடியிலிருந்து விடுவித்து நவீனப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதை ஏற்கனவே பேசிவிட்டோம். அதையடுத்து இரண்டாவது முக்கியமான விஷயம், 1961-65 வரையான ஐந்து ஆண்டுகளின் இசை என்பதே இவர்களின் இசை என்று சொல்லுமளவு ஆதிக்கம் செலுத்தியவர்கள் இவர்கள் என்பதுதான். இந்தப் பாடல்களில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.

மிதுனம்

எதிர்பாராத விதமாய் நான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.
“இங்கே என்ன பொம்மலாட்டமா நடக்கிறது? கணவன் மனைவி என்றால் ஆயிரம் பேச்சு இருக்கும். எல்லாவற்றுக்கும் நீ பல்லைக் காட்டத்தான் வேண்டுமா? சிறிசு பெரிசு என்ற பாகுபாடு வேண்டாமா? பார்த்து விட்டாய் இல்லையா? இனி கிளம்பு” என்று மாமி என்னை அதட்டினாள்.

எப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்

பின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்?
ஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் …