குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்

சியாட்டில் quarterback ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற சியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. சியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார். தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணைக் கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.

எம்எஸ்வி இசையும் காலமும் – 3

இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை”யின் ஆண்டு. இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல், மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்ட பாடலும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல்கள்- அனைத்தும் இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்ந்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-பைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்து வருகிறது.

குணம் நாடி, குறை தவிர்த்து

கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்

ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல்

திருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப்படமோ மாட்டி, செப்பு போல் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்கரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக்குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு. ‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா! அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா? நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம்? ‘

இருத்தல்

கீழ்வீட்டைக் கடக்கும் போது சின்னதாய் ஒரு தயக்கம்; ஸ்ரீலஸ்ரீவெங்கடகிருஷ்ணனை தரிசித்து விடக் கூடாது; இல்லையானால் மூன்றுமாத வாடகை பாக்கியிலிருந்து, பாகவதம், ஞானம் என்று போய்விடுவார். வீட்டுக்காரர் என்பதற்காக அவர் சொல்லும் “நேதி நேதி “ – இது இல்லை இது இல்லை- என தேடும் வேத விசாரணைகளில் மாட்டிக் கொள்வது அவனுக்கு உதறலாய் இருந்தது. ஆனால் இன்று அவரிடம் மாட்டிக்கொள்வது ஓரளவு உறுதியாகி விட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருந்தார். பட்டையாய் இருந்த சந்தன கீற்றின் நடுவே குங்குமம் வைத்திருந்தார். பஞ்சகச்சம் இல்லாமல் வெள்ளை வேட்டியை நீளமாக உடுத்தி இருந்தார். வெற்றிலையை குதப்பிய வாயை ஊதுவது போல் குவித்து மென்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார். இடை இடையே ஜீவன், ஆத்மா, மனம் என்று பேசுவது கேட்டது. பக்கத்தில் வேறு யாரோ ஒருவர் உட்கார்ந்து …

கிளையிலிருந்து வேர்வரை – காலத்தின் நீட்சி

தொகுப்பின் முகப்பை அலங்கரித்து நிற்கும் கட்டுரை நடவு நடுவதில் தொடங்கி நெல் மணிகளை உதிர்த்து அரிசியாக்குவது வரையிலான ஒரு நெடிய உழைப்பை அழகிய சித்திரமாய் நமக்குள் தீட்டுகிறது. விளைநிலங்கள் எல்லாம் மனைநிலங்களாக மாறிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் விவசாயம் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்லவும், எனக்கும் விவசாயம் தெரியும் என நம் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளவும் இந்த ஐந்து பக்கக் கட்டுரையை அப்படியே மனனம் செய்து வைத்துக் கொள்ளலாம்!

வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்

நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன்.

கருவிகளின் இணையம் – தனியார் போக்குவரத்து உலகம் – பகுதி 3

டெஸ்லாவின் மின் கார், கூகிளின் தானியங்கிக் கார்கள், தனியார் வாகனங்களின் அடுத்தக் கட்ட முன்னோட்டத்தை உணர்த்துகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் செயல்திறனில் மிகவும் முன்னேறிய கார் டெஸ்லாவினுடையது. உலகின் மிகப் பயனுள்ள மின்கார் இது – ஒரு மின்னேற்றத்தில் 600 கி.மீ. வரை பயணம் செய்யலாம். மேலும், இதில் எண்ணெய் உட்கொள்வதில்லை. முக்கியமாக, எஞ்சின் பகுதி இல்லாததால், எடையும் குறைவு. காரின் முன்னும், பின்னும் நம் பொருள்களை வைத்துக் கொள்ளலாம். கார் கண்ணாடியைத் துடைக்க உதவும் சோப்புத் தண்ணிரைத் தவிர எந்த திரவமும் இக்காரில் இல்லை. காரின் மின்சார மோட்டார், காரின் அடியே அமைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னேற்றம் செய்தால், அடுத்த நாள் முழுக்க காரை ஓட்டலாம். அதன் மோட்டரைக் கட்டுப்படுத்துவது, எப்பொழுது மின்னேற்றம் செய்வது, ஓட்டுனருக்குப் பல வகை அளவுகளைக் காட்சியளிப்பாக வழங்குவது, என்பதை எல்லாம், கருவிகள் மூலமாகப் பெற்று, காரின் கணினி முடிவிற்காக ஓட்டுனருக்கு முன்வைக்கும். ஓடும் காருக்கு மென்பொருள் மாற்றங்கள் செய்யும் வசதியுள்ள கார் டெஸ்லா.

மேற்கில் சின்னத்திரை

முதலில் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், தலைமைப் படைப்பாளியின் கண்காணிப்பில் மூன்று மாத காலம் தினமும் பத்து மணி நேரம் அவர்கள் வைத்திருக்கும் கதையை விவாதம் செய்வார்கள். முதலில் அந்த தொடருக்கான தொடக்கம் (ஓபனிங்) (இது தொடர் முழுக்க வரும்). பிறகு சென்ற வாரம் என்ன நடந்தது என்பதற்கான டீசர் (இது இரண்டாவது பகுதியில் இருந்து வரும்). பிறகு ஒரு மணி நேரம் ஒரு எபிசொட் என்றால், நான்கு விளம்பர இடை வேளைகள், ஆக நான்கு பாகமாக சீன்கள் பிரிக்கப்படும். ஏனென்றால், விளம்பரம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் மீண்டும் பார்ப்பதற்காக முடிச்சு இந்த நான்கு பாகங்களின் முடிவில் இருக்க வேண்டும்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!-2

நங்காய்! இந்த என் குழந்தையைத் தொட்டிலில் இட்டால் அத்தொட்டில் கிழிந்து போய்விடுமோ என்னும் படியாக உதைக்கிறான்; சிறிது நாழி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், நழுவி இறங்கி, என் இடுப்பை முறித்து விடுகிறான்; சிறிது நேரம் ஒன்றும் செய்யாமலிருப்பானாக என்று இறுக மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டால் குட்டிக் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். இப்படி இவன் தனது பருவத்துக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதனால் நான் மிகவும் மெலிந்து களைத்துப் போய் விட்டேன்…

எனக்கேயுரிய வாழ்க்கை

ஆலிவர் சாக்ஸ் இன்று இறந்த செய்தி எத்தனை பேரை பாதித்திருக்கும் என்று தெரியவில்லை. நரம்பியல் குறித்து பொது வாசகர்களிடையே சுவாரசியமான அறிமுக கட்டுரைகளை எழுதிய அவரது மரணம், மனித குலத்துக்கு ஒரு பேரிழப்பு. கருவிகளையும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படை மருத்துவ முறைமைகளாகக் கொள்ளும் போக்கு மேற்கத்திய மருத்துவத்தில் வலுத்து வரும் காலத்தில், உயிரும் உணர்வும் கொண்ட தனிமனிதனைத் தன் மருத்துவக் கட்டுரைகளைக் கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவர் அவர்.

மிதுனம்: பண்பாடு – பன்னாடு – பெற்றோர்

மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.

ஓவிய வியாபாரியின் கண்காட்சி

மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”

குவாண்டம் கணி

தற்போதைய கணினிகளில் எல்லாம் இருமையான நிலைகளைக் கொண்டவை – உண்டு (1) அல்லது இல்லை (0) என்னும் நிலையில் இருப்பவை. இப்பொழுது துளித்துளியாக, தொடர்ச்சியான மாற்றநிலைகளை அடிப்படையாகக் கொண்ட துளிமம் (க்வாண்டம்) கணினிகள் ஸ்திரமான, பொது பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளன. அலைகள் போல் மாறும் பல்வேறு கூறுகளுக்கு எப்படி நிரலி “குவாண்டம் கணி”

மகரந்தம்

உள்ளடி தரகு என்பது பிரசித்தமானது. சுருக்கமாக இப்படி விவரிக்கலாம். நிறுவனங்கள் வாங்குவதையும் விற்பதையும் தொழிலாகக் கொண்ட வங்கியில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். யாருடன் எப்பொழுது எந்த அமைப்பு இணைய வேண்டும் என்பதை பரிந்துரைப்பவர், அந்த இரகசியத்தை உங்கள் காதில் ஓதுவார். அதை ஒரு கைக்குட்டையில் கிறுக்கி, குறிப்பிட்ட முக்குசந்தில், பங்குத்தரகராகிய உங்களின் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுப்பீர்கள். அவரும் அதைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்வார். குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தி, தொலைக்காட்சியில் வந்தவுடன், அதன் பங்குகள் எகிறும். உடனடியாக, அந்த சகோதரி, நிறுவனத்தின் பங்குகளை விற்று இலாபம் அடைவார். உங்களுக்கு ஐம்பது சதவிகிதம் மாமூல் கொடுத்துவிடுவார். தெருமுக்கு என்றில்லை… இதை கோல்ஃப் விளையாட்டின் நடுவே கூட நிறைவேற்றலாம்.