இந்தியப் பருவமழையும் காரணிகளும்

பெருங்கடல்களை நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவையே. அதனால், பெருங்கடல்களில் ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றோரிடத்தில் அது தொடர்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் எல்-நினோ. இந்தோனேசியாவைக் கிழக்கெல்லையாகவும் தென்னமெரிக்காவை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து விரிந்திருக்கும் பசிபிக் கடலின் வெப்பம் ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும்.

மன அழுத்தம்

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில் அதிகமாகதான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னாள் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணிணிப் பொறியாளர்.

குளக்கரை

உலகத்தின் பிணி என வருணிக்கப்படும் ஐரோப்பா இன்று வர்த்தகத்தில் நலிவடைந்து வருகிறது. ஒரு பக்கம், கடனை அடைக்கமுடியாது திண்டாடும் கிரேக்க நாடு ஐரோப்பிய யூனியனுக்குள் இருப்பதால் சலுகைகள் எதிர்பார்ப்பதை எதிர்த்து பிரஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய சம்மேளனமும், மற்றொரு புறம், பிரான்சு எல்லையைக் கடந்து இங்கிலாந்துக்குள் நுழையப்பார்க்கும் அகதிகள் நடத்தும் துறைமுகப் போராட்டங்கள் என நலிவடைந்துவரும் ஐரோப்பிய நாடுகளின் இன்றைய பெரும் தலைவலிகளாக இவை மாறிவருகின்றன.

பீமாயணம் – தீண்டாமையின் அனுபவங்கள்

ரயில் பாம்பாகிறது. அச்சுறுத்தும் கோட்டை சிங்கமாகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை வரவேற்கும் மக்களுடைய மகிழ்ச்சியானது சிரிக்கும் முகங்களாக அல்லாமல் நடனமாடும் மயிலாக இருக்கின்றன. ஒரு தலித், ஒரு கிணற்றைத் தோண்டியதற்காக கொலை செய்யப்பட்டதும், இரண்டு பசுக்கள் சாட்சியாக இருக்க அவன் பயன்படுத்திய புல்டோசர் அழுகிறது. வீடு வாசலற்ற அம்பேத்கர் பரோடாவின் தோட்டத்தில் தன் தலைவிதியை ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையயில் அவர் தோட்டமாக ஆகிவிடுகிறார்.

எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்

அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த  நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது.

அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்

அரபு நாடு என்றவுடன் மாட மாளிகைகளும், துபாய் நகரத்தின் அங்காடிகளும், கேளிக்கை மையங்களும், கத்தார் நாட்டின் கால்பந்து உலகக் கோப்பை மைதானங்களும் பிரமிப்பில் ஆழ்த்தி நினைவிற்கு வரும். அந்த பிரும்மாண்டங்கள் உருவாகக் கோடிக்கணக்கான தினக்கூலிகள் இந்தியாவில் இருந்தும் பங்களாதேஷில் இருந்தும் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். அரேபிய பாலைவனத்துக்கு “அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்”

எழுத்தும் மருத்துவமும்

மருத்துவம் பார்த்தலின் உச்ச கணங்களும் எழுத்துப் பணியின் உச்ச கணங்களும் எனக்கு ஒன்றே போலிருக்கின்றன. அவற்றின் கடின கணங்களும் நகைச்சுவை கணங்களும்கூட ஒன்றே போல்தான் இருக்கின்றன, பலமுறை அத்தகைய கணங்கள் ஒரே சமயத்தில் நிகழ்வதும் உண்டு. மருத்துவம் தனக்கென ஓர் அதிகாரம் உண்டென எத்தகைய புறக்குறிகளால் கோரிக்கொண்டாலும்- வெள்ளை அங்கிகள், “உள்ளே வராதே” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் கொண்ட இடைவழிகள், வலுவற்ற பல்வகை அதிசயங்கள் குறித்த உறுதிமொழிகள்-, இன்னும் தன்னிலை இழக்கவில்லையெனில், மருத்துவர்கள் பலகாலும் திக்குத் தெரியாதிருப்பவர்கள்தான், அல்லது, தொலைந்துபோனத்தனம் கொண்டவர்கள். எழுத்தாளர்கள் குறித்தும் இப்படிச் சொல்வது உண்மையாக இருக்கும்

பாஸ்டனில் ஜெயமோகன்

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரை ஒன்றிற்கு ’காட்டை உற்று நோக்கும் காடு’ என்பதைத் தலைப்பாக வைத்திருப்பார். இதை ஒரு வாசகன் எழுத்தாளரின் படைப்புகளைப் பார்ப்பதற்கு ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் படைப்புகள் எழுதப்படும்போது அவர்கள் வசிக்கும் உலகம் வேறு, இதைத்தான் வாசகர் எழுத்தாளராகக் காண்கிறார். படைப்பு முடிந்ததும் எழுத்தாளர் சாதாரண உலகத்துக்குத் திரும்புகிறார். இதனால் எழுத்தாளர் நேர்காணல் என்பது எப்போதும் சுவாரசியமாக இருக்கும். எந்த உலகத்தின் எழுத்தாளர் நமக்குத் தெரிவார்? படைப்புலகம்? இவ்வுலகம்?

விலக்கமும் துலக்கமும்

இந்தக் கதையில் நாம் பார்ப்பது ஏறத்தாழ ஒரு டெம்ப்ளேட் சூழல். பத்தாவது படிக்கும் சிறுவன் தன்னை விட இரு வயது மூத்த பெண்ணிடம் முதிராக்காதல் கொள்கிறான், அந்த காதல் எந்த நகர்வுமற்றதாய் இவன் மனதில் மலர்ந்தவாறே முடிவுக்கு வருகிறது- அதற்கு புறக்காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அந்தக் காரணம் இவன் காதலுக்கு மட்டுமல்லாமல் கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.

மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றி

வருடாவருடம் சென்னையில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பதாகவும் செய்தி நமக்குக் கிட்டுகிறது. அவை அனேகமாக இலக்கியப் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நமக்கு எளிதில் புரியாத ஒரு விஷயம். இத்தனைக்கும் தமிழில் இன்றும், நேற்றும் எழுதிய இலக்கியாளர்கள் அப்படி ஒன்றும் புத்தியைக் கலக்கும் தீவிரம் கொண்ட எழுத்தை எழுதி வாசகர்களை அயர்த்துபவர்கள் இல்லை. ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவெல் பெக்கெட், யூஜீன் இயானெஸ்கோ, ஃப்லோபேர் அல்லது கார்ல் ஓவெ க்னௌஸ்கார்ட் போல இயல்பான வாசிப்பைச் சவாலாக ஆக்கித் தருபவர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையே மிக மிகக் குறைவு. அவர்களில் 90% போல மிகவும் சுலபமாக அணுகக் கூடிய நடையும், வாசகர்களுக்குப் பரிச்சயமான எதார்த்த உலகின் பல பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டும், கதை மாந்தரைக் கொண்டும்தான் இந்த இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இப்படி அன்னியப்பட்டு நிற்க…

தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை – லி யூவான்

மலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது.

ஆத்ம சாட்சி

கறுத்துப்போன அலுமினிய ஏனத்தை அடுப்பில் ஏற்றி விட்டு கணபத் அடுப்பை எரிய விட்டான். பிறகு உருளைக்கிழங்கை உரிக்கலானான். உருளைக்கிழங்கு மசியலும், சுடச்சுடச்சோறும் கணபத்தைப் பொறுத்தவரையிலும் இதைவிட மேலான பதார்த்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. குஸூமி சில நேரங்களில் அவனை ‘சோற்றுப் பண்டாரம்’ என்று கேலி செய்வாள்.

அடிமை வர்த்தகம்

அடிமை வர்த்தகத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்திருக்கும் காணொளி. குறிப்பாக, ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கண்டத்துக்கு வளர்ந்த இந்த தொழிலைப் பற்றி இரண்டு நிமிடக்காணொளியை இங்கே பார்க்கலாம்

மகரந்தம்

ஒரு கோணத்தில் உலக மக்களுக்குப் பெரும் அமைதி கிட்ட வேண்டும் என்று முயலும் அமைதி மார்க்கத்தினரின் படுகொலைப் பட்டாளங்களுக்கும், உலக மக்களுக்கு ஈடில்லாத கருணை கிட்டவேண்டும் என்று முயலும் ஒரு திமிர்வாத ஏகாதிபத்தியத்தின் படைகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு இதெல்லாம். இரண்டும் உலக மக்களையும் உலக மனித நாகரீகத்தையும் யார் இறுதியாகக் குழி தோண்டிப் புதைப்பது என்ற போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

உழுதுண்டு வாழ்வோம்! – பகுதி 2

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், இந்தியா தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? மிகத் துரதிருஷ்டவசமாக, இந்திய மனநிலையில், அரசு நிறுவனக் கொள்கைகளில், strategic Doctrine என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் சிறந்த நிபுணர்களான சுப்ரமணியம் போன்றோர் இதை வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார்கள்.

பிரான்சு: நிஜமும் நிழலும்

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன்.

விடுதலையுணர்வு

இத்தனை சுதந்திரமாக இருந்தாலும், என் முகத்தில் நோயிலிருந்து மீண்ட களைப்பு தெரிகிறதா? அகத்தின் துள்ளல் முகத்தில் தெரியவில்லையா? மனதுக்கும் உடலுக்கும் இடையில் உணரமுடியாத திரை உள்ளதா? அவ்வாறு இருக்கும் எனில், என் உணர்திறன் இன்னும் தேவையான குறைந்தபட்ச அளவைக்கூட எட்டவில்லையோ? நான் உழைத்தாக வேண்டும். உணர்திறனை கூர்மைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கேள்வியை கேட்பவர்களுக்கு, முகத்தில் தெரியும் அக அழகைக் காண முடியவில்லையா? அவர்களை குறைகூற எனக்குத் தகுதியில்லை. தேவையும் இல்லை.

கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்

பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்!

தமிழ் இசை மரபு

ரமா மாத்யா இயற்றிய (கி.பி. 1550, ஆந்திரம்) ஸ்வரமேள கலாநிதி ‘ஏக ராக வீணா’ (ஒரு ராக வீணை) ’சர்வ ராக வீணா’ (எல்லா ராகங்களுக்குமான வீணை) என்பனவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை மட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி வீணை உருவாக்கும் வேலைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மாறி, இறுதியில் பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது, ஆயினும் அத்தகைய யாழ்கள் பலகாலம் நீடித்திருந்தன. இன்றைய வீணை ’சர்வராக’ வீணையாகும்.