இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மை செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக்கொண்டன. இந்த பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். .அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டவிட்டன.. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.
Category: இதழ்-128
ஜெயகாந்தனின் பெண்கள்
தான் ஆண் என்ற மேட்டிமைத்தனம் சிறிதும் இன்றி “கணவன் என்றும் காதலன் என்றும் சகோதரன் என்றும் தந்தை என்றும் உன்னைச்சுற்றியுள்ள எல்லா ஆண்களுமே இராவணர்கள் மட்டுமே” என்று ‘சுந்தர காண்டம்’ நாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்த ஒரே ஆண்படைப்பாளி தமிழ் இலக்கியப்பரப்பில் ஜே கே ஒருவர் மட்டுமே…
குளக்கரை
ஏப்ரல் மாத Words Without Borders தமிழுக்கான சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. சங்க காலத்தில் ஐந்திணைகளாக நிலவெளி சார்ந்து பார்க்கும் தமிழ் இலக்கியத்தில், தற்காலத்திற்கேற்ப புலம்பெயர்ந்தவர்களின் அடையாளச் சிதைவு, குடியுரிமையில்லாத் தன்மை, அந்நியப்படுதல், புலம்பெயர் வாழ்வு, சிறைப்பட்ட அயல் வாழ்க்கை ஆகியவற்றை அளிக்க முனைந்திருக்கிறார்கள். குட்டி ரேவதி, திலீப் குமார், சுந்தர ராமசாமி, மாலதி மைத்ரி, இமையம், அசோகமித்திரன், சுகுமாரன், ஷர்மிளா சயீத், க்ருஷாங்கினி, அ. முத்துலிங்கம் …
வாசகர் மறுவினை
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும். சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம்…
நினைவுகளால் ஆனது
தன் பெண் வீட்டில் தங்கியிருப்பவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டை விலைக்கு வாங்கிய பாய் பற்றிக் குறிப்பிட்டு ஏதொ சொல்ல, வீடு, இரவில் சப்தமின்றி அறைக்குள் புகும் சர்ப்பம் போல் எங்கள் பேச்சினூடே நுழைந்து விட்டது. “எங்காத்தைப் போய் பார்த்தேளா” என்று அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார். அந்தச் சிரிப்பு அவரைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண, சில நொடி மௌனத்தை நிரப்ப கேட்கப்பட்ட கேள்வி மட்டுமே என்று அறிவித்தது.
உபசாரம்
இப்போது எல்லா ஊர்களும் ஒரே ஊராகி விட்ட பிறகு பந்தி ஜமுக்காளம் விரித்து, இலை போட்டு, தண்ணீர் வைத்து, உப்பு, சுண்ட வத்தல் வைத்துத் துவக்குகிற முறையான பந்தி பரிமாறுதல் காணாமல் போய்விட்டது. கூடவே உபசாரம் செய்பவர்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். கேட்டரிங் ஊழியர்கள் கடனே என்று பரிமாறும் வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிடப் பழகி விட்டது, மனம். ஆனாலும் சென்னையில் அவ்வப்போது சில ஹோட்டல்களில் உபசாரம் செய்பவர்களை ‘சப்ளையர்கள்’ உருவில் பார்க்க முடிகிறது.
கவிதைகள்
முகம்
நூல்தான்
திறந்தே
இருக்கும்
ஆனால்
திறந்த நூல்
அல்ல
காப்காவின் நாய்க்குட்டி (நாவல்)
ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்புடன் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. அபூர்வமான உடையணிந்து இசைக்கச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள்
ஈராக் விவசாயம் – போருக்குப் பின்
உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை.
ஜஸ்டின் எனும் ஒரு சிறு பெரும்பாத்திரம்
இப்படி யோசித்துக் கொண்டே போகையில் யதார்த்தத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விழைவு தவிர்க்க இயலாத பல அத்தியாவசிய கதாபாத்திரங்களை உங்கள் முன் நிற்க வைத்திருப்பதை உணர்கிறீர்கள் : கனவான், பாதிரியார், குதிரைக்காரன், கடைக்காரர், சவக்குழி தோண்டுபவன், இப்படிப் பல.. கதையில் பிரயாண விடுதி வருவதால் அதை நடத்துவதற்காக ஒரு விடுதிக்காரரை வைத்திருக்கிறீர்கள்; கதையில் வருபவர்கள் குதிரையோட்டுவதால் கதைக்களத்தில் எங்கேயாவது ஒரு கொல்லன் இருந்தாக வேண்டும். உங்களால் இம்மாதிரியான கதாபாத்திரங்களை பெரும்பாலும் தவிர்க்க இயலாது – ஒருகால் புனைவில் அவர்களின் இருப்பை நீங்கள் தவிர்க்க முயன்றாலும் கதை எழுதும்பொழுது கருத்தளவிலாவது அவர்கள் உங்களுள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான தவிர்க்கமுடியாமையும் கட்டுப்பாடும் சில நாவலாசிரியர்களுக்கு உவந்ததாக இருக்கலாம். ஆனால் …
நவீனப் பொருளாதாரத் துறையின் வெறுமை
கண்ணுக்குத் தெரியாத கரம் என்று ஸ்மித் சொன்னதாக எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் சந்தையின் இயல்பு என்று ஒரு பொதுத் தத்துவமாக அப்படிச் சொல்லவில்லை…..”த வெல்த் ஆப் நேஷன்ஸ்’ புத்தகத்தில் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம் ஒரே ஒரு முறைதான் பேசப்படுகிறது- ஆனால் சந்தையில் உள்ள இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம், தெய்வத்தின் சித்தமாகவோ அல்லது தானாய் தோற்றம் கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கையாகவோ, சுயநலனைப் பொதுநலமாக எப்போதுமே மாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஸ்மித் நம்பியது போல் சந்தைப் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத கரம் தெய்வச் சித்தம் என்றால், தெய்வம் சிலரை மட்டுமே நெறிப்படுத்துகிறது. தன்னலமிக்க நபர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு அநீதிகளைப் பட்டியலிடும் ஸ்மித், பொது நலனுக்கும் சுய நலனுக்கும் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத எண்ணற்ற சூழ்நிலைகளை கவனமாக முன்னிலைப்படுத்துகிறார்… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைச் செய்வது என்ற நிலையில் ஏற்படும் எதிர்மறை சந்தை விளைவுகளைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அவர்.
உத்தம வில்லனும், கமலஹாசனும்
படத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..
வேதங்கள்
ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன. இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.
இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.
மொழியாக்கங்கள் குறித்த உரையாடல்- பகுதி 2
மகாலிங்கம் என்பவர் சினுவா அச்செபேவின் “Things Fall Apart” என்ற நாவலை மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கடந்த காலத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதெமியினர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்த பல நூல்களும் தரமாக இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி வங்க மொழி நூல்களை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால், N. கல்யாணராமனின் “Farewell to Mahatma” மிக நன்றாக வந்திருக்கிறது. அடுத்து பதிப்பிக்கப்படவிருக்கும் பூமணியின் வெக்கை நாவல் மொழிபெயர்ப்பு மிக உயர்ந்த தளத்தைத் தொட்டிருக்கிறது. பத்மா நாராயணன் லா.ச. ராவின் அபிதா நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இவர்கள் இருவர் பெயரையும் சொல்லக் காரணம், இவர்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருக்கின்றனர்- பூமணியையும் லா.ச. ரா வையும் வாசிக்கத்தக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது என்ற மூடநம்பிக்கையை இவர்கள் தகர்த்திருக்கின்றனர். ரசித்து வாசிக்கப்படக்கூடிய சரளமான ஆங்கில மொழியாக்கங்களை அளித்திருக்கின்றனர். அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய நூல்கள் இவை.
எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி
ஒருசாதாரண வேலை நாளின் காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன் கையால் தடவி எடுத்து முதற்கண் நோக்கும் கைப்பேசியின் திரை, பிறகெழுந்து சோம்பல் முறித்து ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் மின்விளக்கு, பிறகு ஏறிச்செல்லும் காரின் முன்விளக்கு முதல் பின்விளக்கு வரை, வழியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகள், “எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி”
நட்சத்திரங்கள்
கடைசியாகக் கண் குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாகச் சவுதி அரேபியா கடற்பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, ‘போட்’-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமாபார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும் போலத் தனியனாகப் போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருந்து, சுமார் ஒருமணிநேரம் வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு வன்புணர்வின்மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும் (Natural Flow) சிசேரியனாகவும் (Forced Flow – Gas Injection/Water Injection) …
எண்ணெய்யும் தண்ணீரும்: வீணாகிறதா எரிவாயு?
கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு. 24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள்.
முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு
இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.
காணிக்கை
புத்தகத்தின் முதல் பக்கங்களில், நூலாசிரியரின் ‘காணிக்கை’கள் காணக்கிடைக்கும். தன்னுடைய புத்தகத்தை எழுத உதவியதற்காக சிலரை, அந்தப் பக்கத்தில் கௌரவிப்பார்கள். சிலர் மனைவிக்கு நன்றி வழங்கி இருப்பார்கள். அந்த மாதிரி 30 சுவாரசியமான டெடிகேஷன்களை இங்கேப் பார்க்கலாம்.
மகரந்தம்
இந்தக் கால காதலைப் பற்றி எழுதுமாறு நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைப் போட்டி வைத்தார்கள். 489 கல்லூரிகளில் இருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் பங்கெடுத்தார்கள். அவர்களில் வெற்றி பெற்றோரின் பதிவுகளை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள். உறவு என்பதை திருமணம், கணவன், மனைவி போன்ற சிமிழ்களில் அடைக்க விரும்பாத தலைமுறையை இந்தக் கட்டுரைகள் அடையாளம் காட்டுகின்றன. அந்த மாதிரி பந்தம் என்றோ, நட்பு என்றோ, பாசம் என்றோ சொல்லிக் கொள்ளாததால் ஏற்படும் சிக்கல்களையும் பேசுகின்றன.
சித்திரக் கலைஞர் கோபுலு
விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், அமுதசுரபி எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி, “சித்திரக் கலைஞர் கோபுலு”