மகரந்தம்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ருஷியப் படைவீரர்கள் நூற்றாயிரக்கணக்கான பெண்களை ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள். இந்த நடத்தையை சோவியத் அரசின் ஒரு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கண்டித்தார். அதற்குப் பதிலடியாக அன்றைய தலைவரான ஸ்டாலின், “உனக்குப் போர் வீரனின் மனம் புரியவே புரியாதா? அவன் அவனுடைய தாய் மண்ணை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தூரம் தள்ளி இருக்கிறான். நெருப்பிலும் இரத்தகளறியிலும் மரணத்திலும் புரண்டு வருகிறான். வரும் வழியில் பெண்களோடு சல்லாபிக்கும் சப்பை சங்கதி இது! இந்தக் கொண்டாட்டத்தை உணராவிட்டால் நீ கம்யூனிஸ்ட்டே அல்ல!” 1945-’46ல் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ருஷியக் குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்து இருக்கிறார்கள்.

யாமினி – பகுதி 8

அவரால் சமயத்துக்கேற்றபடி தன் நடன நிகழ்ச்சிக்கான  விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. மகரசங்கராந்தி போன்ற ஒரு பண்டிகைத் தருணம் என்றால் அவருடைய பாடாந்திரத்தில் சூரிய பகவானை வழிபடும் வகையில் ஒரு நடனமும், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் முத்துஸ்வாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டு கோள்களைப் புகழ்ந்து பாடும் ’நவரத்தினக் கிருதி” களும் இருக்கும். சந்திரனில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கால் பதித்த பின், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சியில் சந்திரனைப் பற்றிய ஒரு கிருதி யாமினிக்கு கைகொடுத்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மாநாட்டை ஒட்டிய நிகழ்ச்சி எனில்…

என் பங்கு

நான் ஒரு கடை முதலாளி. என் கடையில் பத்து இளைஞர்களும், பத்துப் பெண்களும் வேலை பார்க்கிறார்கள். சட்டம் இருவருக்குமே சமமான வேலைக்கு சமமான சம்பளம் தர வேண்டும் என்றெ சொல்கிறது.நானும் சட்டத்தை மதிப்பதனால், அதற்கு உடன் படுகிறேன்….ஆனால் பாருங்கள்… ஒரு முதலாளியாக நான் கவனித்ததில், ஆண்கள் வேலை செய்யும் அளவுக்குப் பெண்கள் வேலை செய்வதில்லை. மாதத்தில் குறைந்தது இரண்டு நாள் திடீரென லீவு போட்டு விடுகிறார்கள். இது போக, பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை. மாமியாளுக்கு நெஞ்சு வலி என ஏகப்பட்ட காரணங்கள்….இங்கே வந்த சமயத்திலாவது வேலை செய்கிறார்களா? …ம்ஹும்..உயரத்தில் இருக்கும் ஒரு பெட்டியை இறக்க வேண்டுமெனில் கூட வேலை செய்யும் ஆணைக் கூப்பிடுகிறார்கள். கனமான உருளையை உருட்ட வேண்டுமா? கூப்பிடு ஆண்பிள்ளையை…வேலை நேரத்தில் சட்டென ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திலிருந்து எதையேனும் எடுத்துவர வேண்டுமா? இந்த இளைஞர்களில் எவனிடமாவது வண்டிச்சாவியைக் கொடுத்தால் போதும் கொண்டு வந்து இறக்கி விடுவான். இந்தப் பெண்களும் இருக்கிறார்களே…….பெண்களை வேலைக்கு வைத்ததால் எனக்கு நட்டம்தான். …..
ஆனால் இப்போது ஆண்கள் பெண்கள் இவர்களுக்கு எப்படி நான் சமச் சம்பளம் தர முடியும்?

துப்புத் தெரியாத காட்டில் மேற்கு- ஜான் லெ காரீயின் அந்தகார உலகு

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக 2008ல் எழுதிய நாவல் எ மோஸ்ட் வான்ட்டட் மேன். அது சென்ற ஆண்டு ஆன்ட்டொன் கொர்பெய்ன் என்ற டச்சு இயக்குனரால் சினிமாவாக எடுக்கப் பட்டது. எ மோஸ்ட் வாண்ட்டட் மேன் ஜெர்மனியில் ஜிஹாதிகளின் தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப் பட்ட பொழுது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம் தான். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி உற்பத்தி நகரமாகவே மாறி விட்டிருக்கிறது.

எண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..

மணிக்கு மணி எண்ணை உற்பத்தி குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் மாதாந்திர உற்பத்தி இலக்குகளை பிடிக்க முடியும் என்பதால், இரவு நேரங்களில் எண்ணெய் வருவது நின்று விட்டால் மறுநாள் வரை பொறுத்திருந்து பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சத்தில் ஹெலிகாப்டரில் போய் இறங்கி சாவகாசமாய் என்ன ஆயிற்று என்று ஆராய்வதெல்லாம் சரி வராது. இரவோ பகலோ உடனே கிளம்பி பழுதுகளை சரி செய்ய ஓட வேண்டும். எனவே அடுத்த அரைமணிக்குள் …

குளக்கரை

தொழிலாளிகள் ஏன் தினம் வேலைக்குப் போகிறார்கள்? அவர்களைத்தான் யாரோ சுரண்டுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதே, பின் ஏன் வேலைக்குத் தினம் திரும்புகிறார்கள்? இப்படி ஒரு கேள்வி. இது மார்க்ஸைக் குடைந்ததாம், ஸ்பினோஸாவையும். இதை சிபாரிசு செய்யக் கொஞ்சம் தயக்கமாகவே இருக்கிறது. காரணம் இது தண்டம் என்பதால் அல்ல. நிறைய உருப்படியான விஷயங்களும், வாதங்களும், தகவல் தொடர்புகளும், சில தத்துவ விளக்கங்களும், வரலாற்று விளக்கங்களும் இருப்பதால் இது மதிப்புள்ள கட்டுரை. ஆனால் …

மாங்காச்சாமி

முன்பு இம்மாத சனிக்கிழமைகளில் வாசலில் சமராத்தனைக்காக பிச்சைக்கேட்டு நிறைய பேர் வருவார்கள். சின்னப் பையனாக நானும் தங்கை சுதாவுடன் ஒட்டுத் திண்ணை தூணைப் பிடித்து கொண்டு தெருவை இருபக்கமும் பார்த்தபடி இருப்போம். அரிசியை யார் போடுவது என்று இருவருக்குள் சண்டைகள் வரும். கொடுக்கும் அரிசியில் ஒவ்வொரு கோஷ்டியில் உள்ள நபர்களுக்கு சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும். அதிகம் குறைவாகப் போட்டாலோ கடைசி நபருக்கு இல்லை என்றோலோ அது பெரும் குற்றமாகிவிடும். யாருக்கும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிருஷ்ணன் பாடல்கள், கீர்த்தனைகள் என்று இருக்கும் ஒவ்வொரு கோஷ்டியிலும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் தனியாக வருவார்.

கடவுளை ஆச்சரியப்படுத்து

ஒருநாள் மறுபடியும் மனேஜரிடம் போனான். ‘அவள் என்னை நிராகரித்துவிட்டாள். ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை அதிகம். என் வேலையைத் திருப்பித் தாருங்கள்.’ மனேஜர் ‘உன் வேலையா?’ என்றுவிட்டுச் சிரித்தார். தையல்காரர் அங்கம் அங்கமாக அளவெடுப்பதுபோல அவனை உற்றுப் பார்த்தார். ‘இனிமேல் உனக்கு வாடிக்கையாளர்களுடன் பேசும் வாய்ப்புள்ள வேலை கிடையாது. சாலட் பாரில் வேலை செய். இங்கேயிருந்து ஒருவர் துரத்தப்பட்டால் அவரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில்லை. உன்னை மன்னித்திருக்கிறேன். இனிமேல் ஒரேயொரு தவறு செய்தாலும் உன்னை நிரந்திரமாக வெளியே அனுப்பிவிடுவேன்.’

நனவுதேசம்

வழக்கமான நூலில் இருந்து மாறுபட்ட ஒரு நூலின் வழி சிங்கப்பூர் என்ற தேசத்தை அறிந்து கொள்ள வைத்த இந்த ஐம்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் போது எப்படி ஷாநவாஸிற்கு மட்டும் இப்படியான நண்பர்கள் கிடைக்கிறார்கள்? அண்டை வீட்டுக் காரர்கள் உள்ளிட்ட எவரிடமும் இணக்கமாகப் பழகவும், அவர்களுக்குள் இருக்கும் அறிந்திராத – அறிய வேண்டிய தகவல்களை அடையாளம் காணவும், வாங்கவும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற இரண்டு கேள்விகள் மிஞ்சுகிறது!

அறம் செய்த அறம்

சில படைப்புகளை படிக்கும் போதே படைப்பாளிகளின் சூழ்நிலையைப் பற்றி மனதில் ஒரு வரி தனியாக, தொலைக்காட்சி சேனல்களில் அடியில் “முக்கியச் செய்திகள்” ஓடுவது போல் ஓடிக்கொண்டே இருக்கும். கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்துச் சில அமர்வுகளிலேயே தோன்றியது, கம்பனின் பார்வை ஒரு drone camera பார்வை அல்லது பெருங் கழுகுப் பார்வை என்று. எதையும் “உலகத்தோடு” அல்லது உலகம் யாவையுமாகத்தான் பார்க்கிறார். மேலும், கடலை ஒட்டிய பெரிய மலைத் துண்டின் உச்சி மேல் இருப்பிடம் அமைத்து அங்கிருந்து தினமும் கடலையை நோக்கி அமர்ந்துதான் கம்பராமாயணம் இயற்றியிருப்பாரோ என்று தோன்றியது.

காகங்கள் சுட்ட வடைகள்

பசி வயிறைக் கிள்ள ஆரம்பித்தது. வடைப் பொறித்து எடுக்கும் சப்தமும் வாசனையும் ஒருங்கே கலந்து வர, இவர்கள் அனைவரும் வடைப்பாயசம் சாப்பிடப்போவதை நினைத்து சப்புக்கொட்டினார்கள். மணி இவனைப்பார்த்து சொன்னான்:
”தம்பி, வடைப்பாயசம் வாங்குனவுடன, நம்மவூட்டுக்கு எடுத்துட்டுப்போய் திங்கலாண்டா. நேத்துத் தம்பா(இவர்களது எதிர்வீட்டுப்பையன், பெரியப்பள்ளிக்கூடத்தில் படிப்பவன்) எனக்கு முட்டாயி தராம காமிச்சு காமிச்சித்தின்னான். இன்னைக்கி நாம அவனுக்கு வடைப்பாயசம் தராம காமிச்சு காமிச்சித் திம்போம், என்ன?”

நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை

தண்ணீருக்குப் பிறகு மிக அதிகமாக நுகரப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. எண்ணெய் கூட தோண்டத் தோண்டக் கிடைக்கிறது. ஆனால், பூமியில் உள்ள மணல் வளம் திட்டமான அளவிலேயே இருக்கிறது. கட்டிடம் கட்ட இன்றியமையாதப் பொருளாக, மணல் அமைகிறது. அந்தக் காலப் பாணியில் கட்டப்படும் சிறிய வீடுகளுக்கு இருநூறு “நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை”

வாசகர் மறுவினை

கடலின் மையங்களில் எண்ணைத் தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படி பணிபுரிகிறார்கள், வெற்றி யினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டுவருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தை பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் …

அப்பாக்களும் பிள்ளைகளும்

தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் துவங்கி, அகவை 28 ஆகும் வரை, பதினாறு ஆண்டுகளாக, தன்னுடையப் பெற்றோருடன் உரையாடியதை, அவர்கள் அறியாமல், ரகசியமாக பதிவு செய்கிறார் மைக் கோஹன் (Mike Cohen) என்பவர். அந்த ஒலித்துண்டுகளில் இருந்து ஒரு சிறிய பகுதியை, கோஹனினின் தோழர் ராட் பெரி (Rodd Perry) “அப்பாக்களும் பிள்ளைகளும்”

ஈராக் எனும் குருக்ஷேத்திரம்

ஈராக்கில் ஆபத்துக்கு அஞ்சாமல் அங்கு மிகச் சமீபகாலம் வரை தொடர்ந்து பணியாற்றியவர் ஜெயக்குமார். இக்கட்டுரை அவரின் நேரடி அனுபவங்களையும், கிட்டிய தகவல்களையும் சார்ந்து எழுதப்படுகிறது. இனி கட்டுரையின் ஒரு பகுதி: ‘உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்கு திரும்பப்போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்.’

பர்மாவின் செட்டியார்கள்

கடனுக்கான வட்டி வந்து சேரவில்லை என்றால், அந்த நிலமும் அதன் விளைச்சலும் கடனுக்கு ஒத்தியாக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த ஏற்பாட்டிற்கு சட்டத்தின் வழி பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பை அளித்தது. கையில் பணம் இருந்த சீனர்களும், பர்மியர்களும், நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பர்மிய அரிசி வியாபாரத்திற்கு வங்கிக்கடன் வழங்குவதன் வழியாக பர்மிய வணிகத்தில் போட்டி போடத்தொடங்கினர். 1852-இல் 1000 ஏக்கருக்கும் குறைவான நிலமே வேளாண்மை நிலமாக பர்மாவில் இருந்தது. செட்டியார்கள் பர்மாவின் அரிசி வியாபாரத்தில் நுழைந்த அடுத்த 80 வருடங்களில் இது பத்துமடங்கு அதிகரித்தது

லீ குவான் இயூவுக்கு அஞ்சலி

சிங்கப்பூரில் அப்போது எவருமே அதிகபட்சம் சில தலைமுறைகளாகத்தான் அங்கே வசித்துவருகின்றனர். அதுவும் இன்றைய மலேசியாவோடு சேர்ந்த மலாயாவின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பித்தான். இவர்கள் அல்லது இவர்களது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் வரலாறுள்ள தங்கள் தோற்றுவாய் நாடுகளைக் கைவிட்டு இங்கு இடம்பெயரக்காரணம் தாங்களாகப் பெரும்பொருளீட்டிவிடும் ஆசையினாலோ அல்லது பிரிட்டிஷார் கொடுத்த (பொய்யான) உத்தரவாதத்தின் பேரிலோதான். ஒருவேளை குறுகியகாலத்தில் சிங்கப்பூர் சொந்தக்காலில் நின்று சமாளித்துப் பொருளாதார ரீதியில் வளரத்தொடங்காவிட்டால் இவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு புறப்பட்ட இடங்களுக்கே போய்ச்சேர …

இந்து திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்

நோன்பிருப்பது என்பது விரதத்தின் அங்கம்- இந்து திருவிழாக்களின் இரு முக்கியமான உறுப்புகளில் ஒன்று இது. மற்றொன்று எது என்றால், உற்சவம், அல்லது ஆனந்தக் கொண்டாட்டம் என்றாகும். இந்த இரண்டும் இந்து திருவிழாக்களுக்கு எளிய நளினத்தை, ஆழத்தை, ஆடம்பரமற்ற அலங்காரத்தை அளிக்கின்றன. தத்துவ நோக்கில் பார்க்கும்போது இந்து திருவிழாக்கள் அடிப்படையில் நான்கு புருஷார்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன என்பதைக் காணலாம். சாதாரண பூதவுடல் தரித்த பௌதிக இருப்பிலிருந்து மனிதரைக் காப்பாற்றி அனைத்து உழற்சிக்கும் அப்பாற்பட்ட …

டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு

தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – “கெடை காடு”

மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது.