லத்தின் அமெரிக்காவின் பாதை

லத்தின் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்கக் கண்டம் கடந்த நூற்றாண்டில் பெரு நேரமும் அமெரிக்கா, யூரொப்பிய நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட சர்வாதிகாரிகள், இனவெறியர்கள், கிருஸ்தவத் தீவிர வாதிகள், தவிர மோசமான ராணுவம் ஆகியவற்றிடம் சிக்கித் திண்டாடியது. மக்கள் அந்தக் கண்டம் முழுதும் வறுமையில் வாடினார்கள், கடும் வன்முறையில் சிக்கித் “லத்தின் அமெரிக்காவின் பாதை”

கவிதைகள்

நிறைய புதிய முகங்கள் பார்க்கிறேன்
நிறைய புதிய குரல்கள் கேட்கிறேன்
நான் வசிக்கும் அதே தெருவின் கடைக்கோடிவீட்டின்
ஹார்மோனிய இசைவகுப்புகளின் ஸ்வரவரிசைகள்

குளக்கரை

திறந்த சமுதாயம் வேண்டும் என்று வாதிட்ட பாப்பர், இடது சாரிக் கொள்ளி எறும்புகளுக்குக் கடுமையான எதிரி. அவரை இழித்துரைக்காத இடது சாரியினர் அன்று குறைவு. ஆனால் அவருமே ஒரு ஜெர்மன் இடது சாரிதான். உதவாக்கரை லெனினிய இடது சாரிகளுக்கு எதிராகவும், தடாலடி மார்க்சியருக்கு எதிராகவும் நின்ற பாப்பர், அறிவியல் அணுகல் என்பதை உலக அணுகலாக்க முயன்றார். அவருடைய சமகால அடார்னோ பாப்பரின் அறிவியல் அணுகல் என்பது சாத்தியமற்ற சமூகவியல் ஆய்வுகள், அலசல்களில் இந்த அணுகல் ஒருவித அடாவடி சான்றடிப்படை வாதத்துக்குக் கோவில் கட்டுவதாக அமையும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிரான முயற்சியாக அறிவியலைப் பயன்படுத்த விடாமல் போகும் என்றும் வாதிட்டாராம்.

மகரந்தம்

அமெரிக்க நீதி முறை நிறைய வக்கிரங்களைக் கொண்டது. அதுவும் பெண்கள் தம் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கைகள் எடுத்தால் அவற்றை அமெரிக்க நீதி முறை கடுமையாகத் தண்டிக்கிறது. இந்த லட்சணத்தில் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சகிப்புத் தன்மை பற்றி பாடம் போதிக்க முன்வருகிறார். மெரில் ஸ்ட்ரீப் என்னும் நடிகையும், ப்ரீடா பிண்டோவும் இந்தியாவுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று லெக்சர் அடிக்க முன்வருகிறார்கள். இந்த வழக்கைப் பற்றிப் படித்தால் தெரியும் என்ன வகை வன்முறைகளை அமெரிக்க நீதி முறை கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்று. இதே போன்ற இன்னொரு வழக்கில் ஒரு கருப்புப் பெண் 20 வருடம் ஜெயில் தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டார்.

இந்து சம்ஸ்காரங்கள்

எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. இவை ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன

எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்

இப்படி நோண்டிக்கொண்டே போனால் இறுதியில் அந்த 2000 மீட்டர் தூரத்தையும் கடந்து எண்ணெய் பேசினை தொடும்போது உள்ளே சுமார் 2000 பி‌எஸ்ஐ அழுத்தத்தில் இருக்கும் கச்சா எண்ணையும் எரிவாயுவுமான குழம்பு பீரிட்டுக்கொண்டு பூதமாய் வெளிவரும். ஒரு ஒப்புமைக்கு சாதாரண கார் சக்கரத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் வெறும் 40 பி‌எஸ்ஐ மட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்! எனவே அதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து ஜாக்கிரதையாக அந்த கிணற்றை இறுக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

யாமினி – பகுதி 7

சில சமயங்களில் அவருள் இருக்கும் சிறுமி (எப்பொழுதும் அவருள் வளர மறுத்த ஒரு குறும்புக்காரப் பெண் உண்டு) தனது வயதுக்கு மீறிய அறிவாற்றலைக் காட்டத் துடிப்பது போல இந்தத் திறமை கடவுள், குரு மற்றும் பார்வையாளர்களை வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்ட அலாரிப்பின் போதுகூட செல்லமாய், குறும்பாய் தன் தலையைத் தூக்கும். அந்தக் குழந்தை, தன் திறமையைக் காட்டி பெருமை அடித்துக்கொள்ளவில்லை, அவள் குழந்தையாய்த் தான் இருக்கிறாள், அவ்வளவே. பார்வையாளர்களின் மனநிலையைப் பொறுத்து இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கலாம் அல்லது எரிச்சலூட்டலாம்.

சலவை

சாந்திக்கு ஒரு ‘சிவில் என்ஜினீயர்’ 20000 மாத சம்பளத்தில் திருச்சியில் திண்டாடுவது பிடிக்கவில்லை. சவுதியால் நம் திருமணம் தள்ளிப் போகும் என்று கூட மிரட்டிப் பார்த்து விட்டான். அவள் மசியவில்லை. இந்த நிறுவனத்தில் தன்னை மரியாதையாக நடத்துகிறார்கள். கொஞ்சம் அனுபவம் பெற்றால் சென்னையில் பெரிய ‘பில்டர்’ நிறுவனங்களில் வேலைக்குப் போகலாம். சவுதி போனால் இப்படி மலைக் கோட்டை ரயிலில் ஏறி மறு நாள் காலை அப்பாஅம்மாவை , மாலை சாந்தியைப் பார்க்க முடியுமா?

Ecce Homo (இவன் மனிதன்!)

ரெடிமேட் டைக்களைத் தூக்கி எறிந்துவிட்டு டை கட்டிக் கொள்ளும் கலையை மணிக்கணக்காகப் பழகினான். கடிகாரம் கட்ட தங்கத்தாலான இரட்டைவடச் சங்கிலி வேண்டுமென்று லக்ஷ்மி அண்ணனுக்கு கேட்டெழுதினான். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்களுக்கு பெரிய கண்ணாடியொன்றிற்கு முன் நின்று  கொண்டு டையையும் தலை வகிடையும் சரி செய்து கொண்டான்.
பேச்சுக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக பெல்லின் Standard Elocutionist என்ற பாடப் புத்தகத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் அசரீரியைப் போல் அவனுக்குள் ஒரு எண்ணம் ஒலித்தது. “ஆங்கிலத்தில் பெரிய பேச்சாளராகி எனக்கு என்னவாகப் போகிறது. நடனத்தால் அல்ல எனது ஆளுமையால் மட்டுமே நான் கனவானாக முடியும். வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கும் பணத்தை நானிங்கு ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு படிக்க வந்தேன், அதை ஒழுங்காகச் செய்வதே என் கடமை” என்று தனக்குத் தானே புத்திமதி கூறிக் கொண்டான்.

நேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்

எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. பல்லாயிரக் கோடிப் பேர்களை எங்கே வைத்துக் கொள்வோம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறதே… ஏன்? யாருமே பட்டினியலோ பற்றாக்குறையினாலோ சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?

வாசகர் மறுவினை

ஆனால் வாசிக்கும் சில நூறு பேரில் பலர் இதையெல்லாம் இங்கிலிஷில் சுலபமாகப் படித்து விடலாமே எதற்குத் தமிழில் எழுதுவது என்று கூட நினைப்பாராயிருக்கும். நம்மில் பலருக்கு இதையெல்லாம் தமிழில் கொணர்வதின் சமூகக் கட்டாயம் என்னவென்று இன்னும் தெளிவாயில்லை. மாணவரும், இளைஞரும் இரட்டை மொழிப் பரிச்சயம் உள்ளவரென்பதால் அதில் உலகளாவிய ஒரு மொழி இன்னொன்றை அடித்துப் போட்டு விடுகிறது. அந்த மனத் தடையையும் நாம் உடைத்து முன்னேக வேண்டி இருக்கிறது.

மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று

ஒரு பத்தி இந்தக் கட்டுரை இறுதியில் இப்படி முடிகிறது. இதில் வரும் மார்க்ஸ் என்ற பெயர் தவறான திக்கில் நம்மைச் செலுத்தக் கூடும். மேற்கில் எழுத்தாளர்கள் சில சமயம் ஒரு மனிதரின் ‘கடைசிப் பெயர்’ என்று அழைக்கப்படும் குடும்பப் பெயர்/ குழுப் பெயரையே அம்மனிதரின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக “மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று”

காதலாகி…

சின்னாளில் அவனுடன் பணிபுரிந்த மார்வாடிகளும், மராத்தியரும், பீஹாரிகளும், பெங்காலிகளும் அவன் உறவாகிப் போயினர். அங்குதான் அவன் ஒரு சிவராத்திரியன்று பாங் என்ற அதிபோதை பானத்தை முதலில் ருசிபார்த்ததும். பகாசுரப்பசியில் உண்டுவந்து சுருண்டுறங்கிய ஞாபகம். உடல் என்ற கிளிக்கூண்டை விட்டு உலகைச் சுற்றிவந்த அற்புத அனுபவத்தை அடுத்தநாள் கிருஷ்ணாவிடம் தொலைபேசிப் பகிர்ந்து கொண்டபோது அன்றுமாலை மனைவியுடன் அவனைப் பார்க்க வருவதாய்ச் சொன்னான் கிருஷ்ணா.

பங்களாதேஷ் பயணம்

இந்த அனுபவங்கள், பங்களாதேஷ் குறித்தான என் முன்முடிவுகளை மாற்றியது. கற்றவர்கள், திறமையாளர்கள் என்ற ஒரு தட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் திறமைக்கு , பாலின வேறுபாட்டைவிட, மதத்தைவிட மதிப்பிருக்கிறது. ஒருவேளை உலகளாவிய போட்டியை சந்திக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் மேலாளர்கள் கொண்டு வந்த நல்ல நிர்வாகப் பழக்கங்கள் காரணமாக இவ்விளைவுகள் இருக்கலாம். இதே ஆரோக்கியமான சூழல் மத்திய ரகத் தட்டில், கீழ்த்தட்டில் இருக்குமா என்று தெரியவில்லை.