ராஜாவின் 40 வருடங்களில் நாம் பார்த்த 5,000 வித விதப் பாடல்களைப் போல, பல வித மனிதர்களையும், பல கோடி குணாதிசயங்களையும் உருவாக்கிய இயற்கை, அடிப்படைக் கட்டமைப்பு சற்றும் மாறாமல் பார்த்துக் கொண்டுள்ளது ஒரு வியக்கத் தக்க விஷயம். 4 மில்லியன் ஆண்டுகளாய், மனிதர்களுக்கு இரண்டு கால்கள், இரு கைகள், ஒரு தலை இரு கண்கள், ஒரு வாய், இரு காதுகள், ஒரு மூக்கு என்று எதுவும் மாறவில்லை. எப்பொழுதோ, இயற்கை சிறு தவறுகளைச் செய்து…
Category: இதழ்-123
நாஞ்சில் நாடனின் ‘கம்பனின் அம்பறாத்தூணி’
காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும்.
எண்ணெய்யும் தண்ணீரும்
இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும் பறந்து கொண்டிருந்தேன். மின்னணுவியல் மற்றும் கருவியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றபின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வடிவமைப்பு அலுவலகத்தில் ஒரு வருடம் பணி புரிந்துவிட்டு அப்போதுதான் ONGCயில் சேர்ந்திருந்தேன். எனவே முதன்முதலாக ஒரு வாரப் பயிற்சிக்காக BHS என்ற ஒரு offshore பிளாட்பாரதிற்குப் போக வேண்டியிருந்தது. விமான வடிவமைப்பாளர் சிக்கொர்ஸ்க்கியின் தயவில் தொழிற்சாலைகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கைகளில் உருவாகி வரும் ஹெலிகாப்டர், யோசித்தால் சாதாரண விமானம் போல் இல்லாது வெறும் காற்றையே ஒரு கயிறு போல் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று செங்குத்தாக மேலே ஏற வல்லது.
யாமினி க்ருஷ்ணமூர்த்தி – பகுதி 6
யாமினியின் மன அமைப்பில், ஒரு பரிமாணம், காவ்யார்த்த, மேல் நிலைப்பட்ட, கவித்வமும், பாலுணர்வு பாவமும் கொண்டது. இப்பரிமாணம், அவரது துரித கதி நடன வெளிப்பாட்டிலும் தோய்ந்திருக்கும். அவரது துரித நடனங்களில் வெளிப்படுவது, ஏதும் ஆவேசமோ, வெறியோ இல்லை, மாறாக, ஒரு கவித்வம். இக்கவித்வத்தை, இந்திய பரதம், ஒடிஸ்ஸி போன்ற புராதன கலைவடிவங்களில் பரிச்சயமும் அறிவும் கொண்டவர்கள் மட்டுமல்ல, இவற்றிற்கு முற்றிலும் அன்னியப்பட்ட, புதிதாகக் காண வரும், ஆனால் தேர்ந்த கலைஉணர்வு கொண்டவர்களும் உணரமுடிந்திருந்ததால் தான்…
பவளமல்லி
எது என்னைத் தடுத்ததென்று தெரியவில்லை.சொல்லவில்லை. மீண்டும் நினைவுகளின் அலைக்கழிப்பு. இந்த முறை அம்மா அதிகமாக வந்து போனாள். ஜன்னல் வழியே பார்வையை ஓட விட்டேன். மழை வரும் போலிருந்தது. ஒரு காபி இதமளிக்கும் போல் தோன்றியது. ஓயாமல் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் மீது கம்பளி போர்த்தினாற் போல் அடக்க ஒரு காபியால் முடியக் கூடும்.
வருகை
புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட ப் பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாகக் கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்தக் கவலையும் இன்றித் தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்தது.
ருஷ்யன் சர்க்கஸ்
பிப்லப் முகர்ஜியை நான் முதல் முறையாகச் சந்தித்தது ஒரு ஞாயிறு நண்பகலில் எங்கள் ஊர் கோயிலில். என்னைப்போன்ற மாணவர்கள், மற்றும் கல்யாணமாகாத தனியர்கள் வாரக்கடைசியில் கோயிலுக்கு வருவதற்கு ஸ்ரீகணபதியின் தரிசனத்தை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது கோயில் கேண்டீனில் கிடைக்கும் தென்னிந்திய சாப்பாடு.
திருவரங்கன் உலா
இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.
2014 ஆஸ்கார் – சிறந்த குறும்-அசைபடம்
இந்த வருடத்திற்கான சிறந்த குறும்-அசைப்படம் (ஆறு நிமிட அனிமேஷன்) ஆக ஆஸ்கார் விருதை இந்தப் படம் தட்டிச் சென்று இருக்கிறது. பாஸ்டன் டெர்ரியர் நாய்க்குட்டியின் கதையைக் இங்கே பார்க்கலாம்.
இயற்கை என்னும் கலை
புகைப்படக் கலைஞர் நீல்ஸ் (Nils-Udo) குளத்தில் வெகு பொறுமையாக போதிய இடைவெளி விட்டு இலைகளைத் தூவுகிறார். அதன் ஓட்டத்தை படம் எடுக்கிறார். வேறு இடத்தில் கிளைகள், பழங்கள், காய்கள் எனக் கொத்து கொத்தாக இருப்பதை ஒருங்கிணைத்து கலையாக மிளிர வைக்கிறார். காலப்போக்கில் மாறும் சூழலையும் மரங்களின் அணிவகுப்பும் தாவரங்களின் “இயற்கை என்னும் கலை”
கவிதைகள்
வாய்ப்பின் சுடர் தேடி
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
வண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும்
கண்களைக் கூச மயங்கி நின்றார்
தனியும் தானும் அத் தையலும் ஆயினான்
ஒரு பாடல் தரும் வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் நெருக்கமாக உணரும்போது அது அவரவருக்கான அனுபவமாக ஆகிவிடுகிறது. ஒரே appதான், ஆனால் அவரவருக்காகவே தனித் தனி session!
அண்ட் ஸ்டில் தி எர்த் – ஒரு வாசிப்பனுபவம்
சமையலறையிலிருந்த உங்கள் மனைவி எப்போது காணாமல் போனாளென்றும் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் வீடு முழுதும் ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டருக்கிறது. உங்களுக்குப் பசிக்கிறது. ரெப்ரிஜரேட்டரில் எருமைப்பால் அல்லது பசும்பால் இருக்க வாய்ப்பில்லை. கடைகளில் தாய்ப்பால் மட்டுமே விற்கிறார்கள். சிந்தடிக் கோதுமை மாவு, செயற்கை வெண்ணெய் கலந்து சிந்தடிக் கேக் சாப்பிடலாம். ஆனால் சமையலறையில் பிணநாற்றம். உங்களுக்கு முடிவெட்டும் நாவிதரைச்சேர்த்து மொத்தம் நான்கு பிணங்களிருக்கின்றன. ராணுவ அதிகாரி மூன்று பிணங்கள்தானென்று வாதிடுகிறார்.
செல்லம்மாவின் குறுக்குவலி
ஜன்னல் இடுக்கிலிருந்த சாராயக்குப்பியில் செய்திருந்த மண்ணெண்ணெய் விளக்கை பற்றவைத்துவிட்டு மெல்ல எழும்பி வெளியே வந்தாள்.கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.அடுப்பில் சோற்றை வைத்துவிட்டு “ஏல சோத்தப் பாத்துக்கிடு.இந்தா வாறேன்”என்று கிளம்பினாள்.வடக்கு முனையிலுள்ள அவள் வீட்டிலிருந்து ஊரின் பிரதான தெருவை அடைய சிறிது தூரம் நடக்க வேண்டும்.வலிக்கு கடையில் மாத்திரை வாங்கிப் போடலாமா?அல்லது தெக்குத்தெரு மூக்கியிடம் காத்துக்குத்து பிடிக்கலாமா என்று யோசனையில் அருகிலிருந்த முருங்கமரத்தைப் பற்றி நின்றாள்.
மகரந்தம்
எமோடிகான் எனப்படும் ஸ்மைலி உருக்கள் கணனி வழியே எதையும் எழுதுவோர்கள் பயன்படுத்தும் ஒரு உத்தியாகிப் பல வருடங்களாகின்றன. ஆனால் இவை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பது அனேகருக்குத் தெளிவாக இல்லை. குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை, நீதித்துறையினருக்கு இவை குழப்பத்தைக் கொடுக்கின்றன என்று அமெரிக்காவில் இப்போது நடந்த சில சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
படிப்பு அறை – ‘தாத்தாவும் பேரனும்': ‘டோட்டோ-சான்’ – பகுதி 2
இப்படி ஒருவர் இருக்கிறார், இப்படி ஒரு புத்தகத்தை அவரால் எழுத முடிகிறது என்பனவும் மகிழ்ச்சியைக் கூடுதலாக்குகின்றன. நம்மில் எத்தனை பேரால் நம் துவக்கப்பள்ளி வருடங்களை நினைவு கூர முடியும்? அதுவும் அவற்றை விரிவாக, வண்ணங்களோடு, தம் ஆசிரியை, ஆசிரியர்கள் பற்றிய வருணனைகளோடும் அவர்கள் நம்மோடு நடத்திய பல உரையாடல்களின் சாரத்தோடு நினைவு கூர முடியும்? நம்மில் பலரும் தம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பெயரோடு நினைவு வைத்திருப்போம், ஆனால் அவர்கள் நம் வாழ்விற்குக் கொடுத்த கொடை என்ன என்பதை அத்தனை விவரமாகச் சொல்லத் தெரியாதவர்களாகவே அனேகமாக இருப்போம்.
ராய் மாக்ஸம் நேர்காணல்
முதல் சிப்பாய் கலகம் வரை கிழக்கிந்திய கம்பனியின் ஆட்கள் தான் கலெக்டர்களாக இருந்தார்கள். அதனால் ஊழல் சாத்தியம். பின் கிழக்கிந்திய கம்பனி நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டது. அதன் பின் மிக அர்ப்பணிப்புள்ள கலெக்டர்கள் அமைந்தார்கள். ஆனால் காலனி நாட்டை பிடிப்பதன் காரணம் அதன் நலன் கருதியோ அதை முன்னேற்றுவதற்கோ அல்ல. அப்படி நினைப்பது ஒரு வெகுளித்தனம் மட்டுமே. பொதுவாக இந்தியர்களைச் சுரண்டுவதில் சக இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஜாதியமைப்பு முதலியவற்றைப் பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம்.
விதியின் பிழை காண்: இறுதி பாகம்
ராணியின் கனவில் வந்தது போலவே, ஒரு குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பச்சைப் பசேல் என்று செடி கொடிகள். அவற்றின் இடையே உள்ள கல் பாதை தெரிகிறது. மறுபடியும் குழந்தையின் சிரிப்புச் சத்தம். பாதையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று நடந்து வருகிறது. தள்ளாடித் தள்ளாடி சிரித்தவாறே வருகிறது. சிரித்தபடி முன்னால் நிமிர்ந்து பார்க்கிறது. பார்த்து விட்டு அப்படியே நிற்கிறது.
காலப் பெருவெளி – கவிதை நூல் விமர்சனம்
வார்த்தைகளை உடைத்து வரிகளை நீட்டித்தல், கவிதை அதன் நிலையை எட்டிய பின்பும் விரித்தல் என கவிதையின் செழுமையை வறட்சியாக்கக் கூடிய விசயங்களால் கட்டமைக்கப்படிருக்கும் சில கவிதைகளுக்கிடையே இத்தொகுப்பில் கவனிக்கத்தக்க கவிதைகளாக மகேஷ்குமாரின் ”வலையில் விழாதவை”, ”ஒற்றை மரம்”, முளைப்பாரி, ராஜீரமேஷின் ”நான்”, மதிக்குமாரின் ”செய்தியாகாதவர்களின் கதை” பாலாவின் “நத்தையின் தலை மீதொரு சிறுவன்“ ஆகியவைகளை அடையாளப்படுத்தலாம்.
குளக்கரை
அதே நேரம் இஸ்ரேலில் என்னவென்று பார்த்தால், அங்கு ஆட்சி புரிந்த வலது சாரி அரசுடைய அரசியலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்கிறார், பயத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லும் அரசியலை ஒழித்துக் கட்டி, மக்கள் சுதந்திரமாக உலவும் அரசியலைப் பீடமேற்றுவோம் என்று குரல் கொடுக்கிறார். அதாவது இஸ்ரேலைப் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிசத்தின் யூத வெறுப்பு அரசியலுக்கும் தாரை வார்ப்போம் என்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.