தற்காலத்திற்கும் டிம்பக்டூவிற்கும் இடையே

கர்ட் வானகட் கதைகளை அடிப்படையாகக் கொண்டு Between Time and Timbuktu: A Space Fantasy திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கவிதை பாடும் விண்வெளி வீரரை வானவெளிக்கு அனுப்புகிறார்கள். அவர் உலகெங்கும் தன்னை பிரதியெடுக்கிறார். படத்தை இங்கு பார்க்கலாம்:

தற்கால இராமாயணம்

இராமாயணம் எங்கெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் வசந்தா யோகநாதன் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின் வழியாக இந்தியாவின் ஆன்மாவையும் ராமாயணக் கதையையும் ஒருங்கிணைக்கும் காட்சிகளைப் பதிவு செய்து கோர்க்கிறார். எந்தப் புகைப்படத்திற்கும் நடிகர்களோ, செட்டப்புகளோ செய்வதில்லை. தற்கால கோலத்தையும் காலாகலத்திற்கும் நிலைத்த இதிகாசத்தையும் இணைக்கும் ஒளிப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

மகரந்தம்

நாம் எங்கிருந்து வந்தோம்? நான் என்பது எது? நாம் எங்கே போகிறோம்? – தத்துவவியலும் இறைநம்பிக்கையும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடை கொடுக்க முயல்கின்றன. மற்ற இனக்குழுக்களை விட, தான் சார்ந்த மதத்தின் விடையே சிறப்பானது என்பதை நிறுவ, அதிசக்தியாளர்களை ஒவ்வொரு மதமும் முன்னிறுத்துகிறது. அமெரிக்கத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால், தனக்கு தெய்வ விசுவாசம் இருப்பதாக பறைசாற்ற வேண்டும். அந்த நம்பிக்கை எவ்வளவு வினோதமாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சொல்லியே ஆக வேண்டும்.

மாதொருபாகன்

மாதொருபாகன், உமையொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் இந்தத் தெய்வங்களெல்லாம் ஏறத்தாழ ஒன்றே. சிவபெருமான் தன்னில் சரிபாதி இடத்தை இறைவிக்குக் கொடுத்ததான கருத்து அது என்றும் சொல்வோர் உண்டு. ஆண் பாதி பெண் பாதி என்றால். இரண்டும் சரிசமமான அளவில் இருக்கிறதென்றால் உமைக்கு இடம் கொடுத்ததாக வந்திருக்காது. இருவரும் ஒன்றானதாக அல்லது ஒன்றில் இடம்பிடித்ததாகவே வந்திருக்கும் அல்லவா?

புத்து மண்

“பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு இருந்துச்சு. யாரையும் இந்த பில்டிங் பக்கமே உடலே. எங்கபோகணும்.”
“செத்துப்போன பையன் இருந்த ரூமுக்கு..”
“அது ரெண்டாம் மாடியாச்சே.”
“ஆமா.. அதெப் பாக்கணும்ன்னு வந்தேன்.”
“போயிருவிங்களா.”

விதியின் பிழை காண் – ஆறு

நீங்கள் கண்ணயர்ந்தது எந்த நேரம்?
தென்னதரையன்: தெரியாது. ராணியின் அலறல் கேட்டு விழித்தேன். மூன்றாம் சாமம் இருக்கும்.
தருமன்: ஆமாம். சிறிது நேரத்தில் என்னைக் கூட்டி வந்தார்கள். நான் வந்தவுடன் ராணியை ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

உலகெலாம்…

நோலனின் ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு வகையில் கார்ல்சகனின் காண்டாக்ட் கதையின் தொடர்ச்சி எனலாம். இதற்கு முன்பே ஹாலிவுட்டிலிருந்து வெளிவந்த பிரபஞ்சத் தேடல் படங்களில் காணும் சில பொது அம்சங்களான பன்னுலகக் கோட்பாடு, விண்ணுயிர் தேடல், புழுத்துளையூடே அண்டப்பயணம் என்று இதிலும் அமைத்திருந்தாலும்…

இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 3

இசையை உருவாக்க ஒரு தளம் தேவைப்பட்டது. அது ஒரு பதிவாக்கும் ஸ்டுடியோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உயிரியலில் இந்த தளம், உயிரணு (cell) என்னும் சூழல். உயிரணுக்கள், ஒவ்வொரு உயிரினத்தின் நுண் உயிர் தொழிற்சாலைகள். ராஜாவின் ஸ்டுடியோவில் பாடல் பதிவின் போது எப்படி பல வேலைகள் துரிதமாக நடக்கிறதோ, அதைப் போலவே, ஒரு உயிரணுவில் ஏராளமான வேலைகள் நடந்து கொண்டே இருக்கும்.

துணை

விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு ஈ. காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஈ ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.
மெல்ல அசங்கியபடி பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.
கீழ்வீட்டின் நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார்.

'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி

1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.

இரண்டு விரல் தட்டச்சு

பொதுவாக, புனைகதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. புனைக்கதை அரை நிஜத்தைத்தான் கூறுகிறது. அரை நிஜம் நிஜமாகாது. ஆனால் புனைக்கதையின் ஒரு தனிக்குணமான அந்த அரைநிஜம்தான் புனைக்கதைக்கு உயிரூட்டுகிறது.

அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி'

“நான் செத்துப்போனா ரெண்டு நாளு வெச்சிருந்து ஊருல இருந்து ஆளெல்லாம் வரட்டுமின்னு இந்தக் காட்டுக்குள்ளயே என்ன பொதச்சுடுங்க, வெள்ளாமைக்கு எருவாயி வெருசா வெருசம் பயிராகவும் செடிகொடியாவும் மொளச்சு வந்து உங்க முகம் பாத்துக்கறன்”

குளக்கரை

இப்போது யூரோப்பில் பரவலாகத் தெரிய வரும் சொல் – பாகனியம். எப்போதோ கிருஸ்தவம் தன் இரும்பு ஆணி கொண்ட காலணிகளால் நசுக்கிக் கொன்றுவிட்ட ஒரு இசம் இது. ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாகப் பல மூலைகளில் இருந்திருக்கிறது. சமீபத்து ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களின் உபயமா அல்லது உலகில் பெரும் பணபலத்துடன் பரப்பப்படும் எவாஞ்சலியக் கிருஸ்தவத்துக்கு ஒரு எதிர் வினையா என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்லாந்தில் மறுபடி பழைய பாகன் தெய்வமான தோர் என்பாருக்குப் பெரும் செலவில் ஆலயம் ஒன்று கட்டப் போகிறார்கள்.

ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’

This entry is part 36 of 48 in the series நூறு நூல்கள்

எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் …

முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்

பல சமயங்களிலும் தீர்த்த யாத்திரைகள் செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் இந்து சமயங்களில் மேற்கொள்ளப்படும் தீர்த்தயாத்திரையில் என்ன ஒரு தனித்தன்மை என்றால், இவர்கள் எந்த இடங்களைப் புனிதமான இடங்கள் என்று எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறார்கள் என்பதுதான். பொதுவாக, பல சமயங்களில் அந்த அந்த சமயங்களை உருவாக்கியவரோடு தொடர்புடைய இடங்கள், அல்லது அந்த சமயத்தில் பிரதானமான முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத தலங்கள்தான் தீர்த்தயாத்திரை செல்லும் இடங்களாக இருக்கும். ஆனால் இந்து சம்பிரதாயங்களில்…

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாயிற்று

உலக வங்கி தேகநலம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களுக்கான தன் உதவியை நிறுத்தி விட்டதாகவும், அதற்குக் காரணம் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த ஊழல்தான் என்றும் செய்தி கிட்டியிருக்கிறது. நிதி அமைச்சர் உலக வங்கிக்குத் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருப்பதாகவும் செய்தி வந்தது. இந்த ஒரு விஷயத்தில் உலக வங்கி கொடுக்கும் அழுத்தம் தேவையானது என்று நாம் ஏற்றாலும், மொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் விதிகளும், முன் நிபந்தனைகளும், உலகளவில் முக்கியமான சக்தியாக எழுந்து கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அத்தனை பொருத்தமானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.