ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது.

பரதக் கலைஞர் சங்கர் கந்தசாமியுடன் ஒரு மாலை உரையாடல்

மலேசியாவைச் சேர்ந்த சங்கர் கந்தசாமி ஒரு சுவாரஸ்யமான பரதக் கலைஞர். இந்த 47 வயதில் நாட்டிய அரங்கில் உயிரோட்டமும் துடிப்பும் சக்தியும் ததும்பும் அவரது பிரசன்னம் பிரமிப்பூட்டும் ஒன்று. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஒருவரே தனியாக ஆடும் நிகழ்ச்சிகளில் கூட சலிப்பு ஏற்படாமல் புதுமைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் அவரது கலைத்திறனும் சிருஷ்டிகரமும் ஆச்சரியப் படுத்துபவை. தனித்துவமிக்க நர்த்தகராகவும், நாட்டிய ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் : “அந்த அழகியலின் அடிப்படை ஆண் அல்லது பெண் கலைஞரின் தன்னுணர்வு தான், instinctive feeling. சிவனுடைய தாண்டவமோ, அல்லது விஷ்ணுவின் காம்பீர்யமோ அல்லது கால்களை வீசி குதித்து ஆடுதலோ ஆண்மை ததும்பும் விஷயங்கள். அவை ஒரு நர்த்தகரின் உடலம் (frame) மீது இயல்பாகக் குடி கொள்கின்றன. அவற்றை பெண் கலைஞர்களும் செய்யலாம் தான். ஆனால் செய்தால் அந்த அளவுக்கு இசைவதில்லை. பரதத்தில் “வேஷம்” என்பது இதை சமன் செய்வதற்காகத் தான் இருக்கிறது.”

பாஸனின் பஞ்சராத்ரம்

இளம் வயதில் பெற்றோர் குழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விட்டால் அவன் செய்யும் தவறுகளுக்கு குருதான் பழிக்கப் படுவார் எனவும் தன் மாணவன் இந்த யாகத்தின் மூலம் தனக்குப் புகழைத் தேடித் தந்து விட்டான் என்றும் குரு துரோணர் சொல்கிறார். தனக்கு அவன் குருதட்சிணை தர வேண்டும் எனகிறார். எதையும் அவருக்குத் தருவதாக உறுதி அளித்து விட்டு விருப்பத்தைச் சொல்லுமாறு  வேண்டுகிறான். அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு இருக்க இடமின்றி தவிக்கும் பாண்டவர்களுக்கு உரிய பாதி ராஜ்யத்தை அவர்களுக்குத் தந்து விட வேண்டும் என்பதுதான் தனது தட்சிணை என்கிறார்.

பனிச் சிலை விழாக் கொண்டாட்டம்

குளிரும் பனியும் அதிகமான இடங்களில் என்ன செய்யலாம்? பனிச்சறுக்கு விளையாடலாம். சீனாவில் பனிகளால் ஆன சிலைகளைச் செதுக்குகிறார்கள். டிசம்பரில் துவங்கி மூன்று மாதங்களுக்கு எல்லோரையும் வரவேற்கிறார்கள். வண்ணமயமாக விளக்குகளையும் வாணவேடிக்கைகளில் வெடிகளையும் கொளுத்தி வருகையாளர்களைக் கொண்டாட வைக்கிறார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் செதுக்கிய சிற்பங்களை இங்கே பார்க்கலாம்.

விதியின் பிழை காண் – பகுதி 5

அந்தப் பழங்காலக் கோவில் எரிந்து புகைகிறது. அங்கங்கே குள்ளர்களின் சடலங்கள் விழுந்து கிடக்கின்றன. புகையினூடே மூன்று வீரர்கள் நடந்து வருகிறார்கள். வீரர்கள் இரு பக்கமும் பார்த்தவாறே வருகிறார்கள். அவர்களில் முன்னால் வருபவன் அச்சுதன். அந்த வீரர்களில் ஒருவன் முந்திய நாள் நாம் குற்றாலீஸ்வரர் கோவிலில் பார்த்தவன். காட்டில் குள்ளர்களைக் கொடுமை செய்தவன்.

வாசகர் மறுவினை

இரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு…

ராஸ்ப்பெர்ரிகள்

நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.

இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.

இது ஐபிஎம் மில் உலகெங்கும் உள்ள பிரச்சினையா அல்லது அமெரிக்கா அல்லாத இடங்களில் உள்ள பிரச்சினையா? இதில் என்ன அளவு மிக்க உயர் கல்வி பெற்றவர்களின் ஆதிக்கம் உள்ளது? நேற்று உயர்கல்வித் தகுதி பெற்றவர்களின் தகுதிகள் இன்று பயனற்றவையாக ஆகும் நிலை பல துறைகளில் பல தொழில் முகங்களில் ஆகி விட்டது. காட்டாக கெமிகல் ஃபிஸிக்ஸ் அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்ற துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் இன்று கிட்டத்தட்ட வேலைக்காகாதவர்களாகப் பல கெமிகல் நிறுவனங்களிலும், மருந்துதயாரிப்பு நிறுவனங்களிலும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் குறுக்கு வெட்டாக இருக்கும் பல இன்றைய தொழில் நுட்பத்துறைகளுக்குப் பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சுமித்ரா – அந்தம் இல் மனம்

சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத்தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தம்முள் கொள்ளும் சக்தி படைத்தனவாகத் தெரிகின்றன.

மகரந்தம்

அமைதி மார்க்கம் நமக்குப் புதுப்புது செய்திகளாகக் கொடுக்கத் தவறுவதே இல்லை. …..
இன்றைய செய்தி- மார்க்கத்தின் பாதுகாவலர்களான தாடிக்கிழவர்களை ஒருவர் விமர்சித்தார் என்று அவருக்கு அந்த நாட்டு அரசு 1000 கசையடிகளைப் பரிசாக வழங்கி இருக்கிறது. அன்னாருடைய மனைவி ‘தனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீதி கிட்டும்’ என்று சொல்கிறார். பாதுகாவலத் தாடிக்கிழவர்கள் மார்க்கத்தின் புத்தகத்தை வைத்துக் கொண்டுதானே ‘நீதி’ வழங்கி இருக்கிறார்கள். அந்த ‘நீதி’தான் 1000 கசையடிகள்….

இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – 2

திரைப்படப் பாடகி சுவேதா மோகன், தாய் சுஜாதாவைப் போல இருப்பது பெரிய விஷயமல்ல . ஆனால், அவரது பாடும் குரல் சுஜாதாவைப் போலவே இருப்பதும் இயற்கை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பின்பற்றுவதைக் காட்டுகிறது. ஆனால், அதை சரியாக விளக்குவது என்பது, இன்றுவரை இயலாத காரியம். இதே இயற்கை, சில விஷயங்களை, உடனே செய்வதில்லை. உதாரணத்திற்கு, சுவேதாவின் குழந்தைக் குரல் தாய் சுஜாதாவைப் போல இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரு 17 வயதுக்குப் பின், எப்படி இது நடக்கிறது?

ஷமிதாப் – அரசின்மைவாதியின் அராஜகம்

ஒரு முறை நான் என் ஸ்டாஃப்பிங் மானேஜரிடம், ஏன் கிளையண்டுகள் அதிகரிப்பதில்லை என்று கேட்டேன். “கிளையண்ட் மட்டன் பிரியாணி கேட்கிறார், நாம் வெண்பொங்கல் தருகிறோம்,” என்றார் அவர். இந்த ஆல்பத்தின் வெண்பொங்கல் “பிட்லி” பாடல்தான். பொறுப்பில்லாத சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் முன்வரிசையில் உட்காரும் படிப்பாளி. இதில் ராஜாவின் முத்திரைகள் பல இருக்கின்றன, எனவே இதை ரசிப்பதில் பிரச்சினை இல்லை. அமிதாப் பாடியுள்ளவற்றில் மிகச் சிறந்த பாடல்கள் என்ற பட்டியலில் இது நிச்சயம் இடம் பெரும், அவரும் ஓரளவு பரவாயில்லையாகத்தான் பாடியிருக்கிறார்.

படிப்பு அறை – 'தாத்தாவும் பேரனும்'; 'டோட்டோ-சான்'

விசித்திரமான விஷயம் என்னவென்றால், மொழி பெயர்ப்பில் எனக்குக் கிட்டிய அத்தனை மகிழ்ச்சி மூல நூலில் அப்போது கிட்டவில்லை. மூல நூல் வேறொரு உலகை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றாலும், அதுவும் நன்றாக இருந்தது என்றாலும், மொழி பெயர்ப்பும் அது விரித்த உலகும்தான் என் மனதில் ஆழப்பதிந்திருந்தன. பின்னாளில் மொழி பெயர்ப்பை மறுபடி தேடிப்படித்த போது மொழி பெயர்ப்பு என்பது எனக்குமே ஒரு பிடித்த கலையாக, நானும் பயில்கிற ஒரு விஷயமாக இருந்ததால், இந்த முறை அந்த மொழி பெயர்ப்பின் போதாமைகள் புரியத் துவங்கி இருந்தன. ஆனாலும் அப்புத்தகத்தின் வாசகர்கள் யாரென்று யோசித்து அவர்களுக்கு வாசிப்பு சௌகரியம் இருக்க வேண்டுமென்று கருதி வல்லிக்கண்ணன் அந்த மொழி பெயர்ப்பைச் செய்திருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.

மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்

This entry is part 42 of 48 in the series நூறு நூல்கள்

கன்னடத்தில் நவீன இலக்கிய முன்னெடுப்புகளின் முக்கிய பங்களிப்பாளரான லங்கேஷ் அவர்களின் எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்திருப்பது முக்கியமான முயற்ச்சியாகும். இதை மிக அழகான தரத்திலும் வடிவத்திலும் பதிப்பித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியளப்பது. இப்புத்தகத்தில், இரண்டு விதமான கவிதை சரடுகள் ஓடுகின்றன. ஒன்று லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும், இன்னொன்று திரு. நல்லதம்பி அவர்களின் புகைப்படங்கள் மூலமாகவும். கன்னட மொழியில் நல்ல பரிச்சயம் உடையவரும், கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவருமான திரு.நல்லதம்பி அவர்கள், தமிழுக்கு இது போல மேலும் பல முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

தடம் சொல்லும் கதைகள் – 14

பழைய கலைப் பொருளில் வேலை செய்யும்போது அதன் ஒரிஜினல் தன்மை கெடாமல் சீரமைப்பது மிக அவசியம்,” என்கிறார் புனரமைப்பு மற்றும் அரும்பொருள் காட்சியகம் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பட்நாகர். “எங்கள் மாணவர்களுக்கு முதலில் நான் சொல்வது, பழுதுகளை மட்டும் முதலில் சரி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு அழகிய சிலையில் அல்லது ஓவியத்தில் இருக்கும் ஓட்டைகள், கறைகள் இவை அந்தப் பொருளின் அழகை கெடுக்கின்றன. இப்படிச் சரி செய்யும்போது ஒரிஜினல் அழகு கெடாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியம். நாங்கள் போடும் ஒட்டுகள் வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும்.

இந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்

இந்து பண்பாட்டிலும் சமயங்களிலும் பன்னிரெண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் தண்டிக்க அனுமதி கிடையாது. தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, குழந்தைகள் தவறு செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கள்ளமற்ற குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தண்டிப்பது இந்து சமூகத்தில் கண்டிக்கப்படுகிறது. தண்டிப்பதே தவறு என்று விதிப்பதால், இச்சமயங்கள் குழந்தைகளைக் கொலை செய்வது மாபாதகம் என்றும் விதிக்கின்றன.

உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8

இன்று ஆடு மாடு வளர்ப்பை விடக் கோழி வளர்ப்பே பெருகிவிட்டது. பெரிய பெரிய கூண்டுகளில் குஞ்சுகளை 10,000, 20,000 என்று வாங்கி எடை உயர்ந்த கோழிகளாக வளர்க்க அக்குஞ்சுகள் மீதே ஆண்டிபயாடிக் பூச்சி மருந்துக்கலவையை மழை போல தெளிக்கப்படுகிறது. கோழிகள் எடை கூடியதும் விற்பனைக்கு வரும். கொதிக்கும் நீரில் கோழியை அமிழ்த்தி இறகுகள் நீக்கப்பட்டு முழுக்கோழி உரித்த நிலையிலும் கிடைக்கும். துண்டுகளாகவும் கிடைக்கும்.