துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : மிகச் சுருக்கமான அறிமுகம்

அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயப் பழங்குடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இந்த தொழில்நுட்ப, அரசியல் வேறுபாடுதான் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டது; இன்றைய சர்வதேச சமத்துவமின்மைக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் இவ்வேறுபாடு எப்படி ஏற்பட்டது?

அம்மாவின் தேன்குழல் – புத்தக முன்னுரை

பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது.

பொங்குது மனசு

பொங்கல் விழான்னாலே உங்களுக்கெல்லாம் பொங்கல், கரும்பு, பொங்கப்பானை, மாடு, எல்லாம்தானே நினப்புக்கு வரும்..?
ஆனா எங்களூர்காரங்களுக்கு கழுத நினப்புக்கு வரும்.
ஆமா மதுரைக்காரய்ங்யளுக்குத்தான். பொங்கல் விழாவ ஒட்டி கழுதைப் பந்தையம், ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, சேவக்கட்டு, பிள்ளைங்களுக்கு ஓட்டப்பந்தையம், லெமன் ஸ்பூன் லருந்து கபடி, ஒயிலாட்டம்..ன்னு தூள் பரக்கும்.

டிசம்பர் நாற்காலிகள் – 2

நாம் மயிலாப்பூர் வந்திருப்பதால், காலாற – வயிறாற ஒரு food walk போகலாம். பண்டைய மறந்து போன சுவைகளின் கடைசி standing bastion, மயிலை ராயர் மெஸ். இதுவும் பாஸ்தா-நூடுல்ஸ் கடையாக மாறுவதற்கு முன் அவசரமாக ஒரு முறை போய்ப் பார்த்துவிடுங்கள். பாசாங்கு இல்லாத காஃபி, இட்லி, பொங்கல், அடை, கத்தரிக்காய் கொத்சு… த்சு, த்சு ! பேயாழ்வார் சன்னிதி அருகே, முட்டுச் சந்தில் ஒரு A0 காகிதத்தின் பரப்பளவே இருக்கும் இந்தப் புகை படிந்த மெஸ்ஸைக் கண்டுபிடிக்க, லோக்கல் ஆட்கள் உதவி இல்லாமல் முடியாது.

தேநீர் மகாத்மியமும் ஜப்பானியர்களும்

காலையில் எழுந்ததும் பில்டர் காபியுடன் செய்தித்தாளில் தலையை மூழ்கி வெளிவந்தால்தான் நம்மவர்களுக்கு அன்றைய பொழுது ஒழுங்காக ஆரம்பித்தது என்று ஆகும். இந்த இரண்டில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும் பிரளயமே வந்தாற்போல் இருக்கும். நம் ஊர் பக்கம் இப்படியென்றால் வட இந்தியாவில் காபி இடத்தை தேநீர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை ஜப்பானில் தேநீர் போடும் முறைகள், தேநீர் ரகங்கள், மற்றும் அதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்கள் என்று ஒரு கண்காட்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயத்தில்தான் சென்னையில் பரவலாக டீ மட்டுமே குடிக்கும் வட இந்திய தகவல் தொழில் நுட்ப இளைஞர்களும் அதிகமானார்கள்.

மொழிபெயர்ப்பு கவிதைகள்

கேரா பென்ஸனின் படைப்புகள் நியூயார்க் டைம்ஸ், பாஸ்டன் ரிவ்யூ, பெஸ்ட் அமெரிக்கன் பொயட்ரி, ஃபென்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. சில கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். நியூயார்க், பென்ஸில்வேனியா போன்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதுடன் “சிறைக்கைதிகளுக்கு கவிதை” இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்

இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்

பூமி ஒரு உருண்டையான கோளாக இல்லாமல் ஒரு கன வடிவத்தில் (Cube Shaped) இருந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேட்டிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பூமியின் மேல் நடக்கும்போது நாம் தட்டையான ஒரு தளத்தின் இறுதிவரை நடந்து சென்றபின் 90 டிகிரி கோணத்தில் உள்ள அடுத்த பக்கத்திற்கு தாவ முடியுமோ?

வாசகர் மறுவினை

தமிழ்நாட்டு இலக்கியங்களில் காணப்படும் மைதுன உறுப்புகளை இந்தப் பதிவு பட்டியலிடுகிறது. ஆனால், மைதுன உறுப்புகளின் பெயர் ஏன் “கெட்ட” வார்த்தையானது என்பது பற்றி பெருமாள் முருகனோ, இப்பதிவின் ஆசிரியரோ யோசிக்கவில்லை. கிராமங்களில் நடைமுறையில் சகஜமாகப் பேசப்படும் பாலியல் சொலவடைகள் பற்றி கி. ராஜநாராயணன் உட்படப் பல உண்மையான இலக்கியவாதிகள் பேசி இருக்கிறார்கள்.

இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1

பலரைப் போல, நானும், இன்றிருக்கும் அணு அளவு சிந்தனை, உயிர் தொழில்நுட்ப துறையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்ததாக நம்பி வந்தேன். சொல்லப் போனால், உலகின் முதல் பல்துறை விஞ்ஞானம் என்று உயிரியல் தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். இன்று, நாம் பாட புத்தகங்களில், எளிமையாக சொல்லி தரப்படும் அணு அளவு உயிரியலுக்குப் (microbiology) பின்னால் உள்ள ஆரம்ப கால போராட்டங்களை, அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை.

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2

உலகெங்கும் உள்ள மற்ற தத்துவ, சமய அமைப்புகளோடு ஒப்பிட்டால், மனிதனை மையப்படுத்தும் அமைப்புகளில் இந்திய தத்துவ சம்பிரதாயங்கள் அல்லது இந்து சமய முறைமைகளை மட்டுமே முதன்மையாகச் சொல்ல முடியும் என்று சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். ஆனால் அதுதான் ஏன்? ஆணோ, பெண்ணோ, மனிதன் தன் வாழ்வில் சாதிக்கக்கூடியது என்ன, வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? மனிதனின் கவலை இதுவாகத்தானே இருக்கின்றது?

அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே: ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமைகள் இருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை அமெரிக்காவில் நிலவியது. அந்த இழிநிலையை “அமைதிக்கான நோபல் பரிசு”

விதியின் பிழை காண் – பகுதி 4

பட்டத்திப் பாட்டி: உன்னிடம் நாலைந்து முறை சொல்ல வந்தேன். நீ இந்தக் காலத்துப் பிள்ளை. பாட்டிகளிடம் தெருவில் நின்று பேச மாட்டாய்.
நாகை: பாட்டி, அவர் என்னிடமே பேச மாட்டேன் என்கிறார். எப்பொழுதும் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்.

மகரந்தம்

பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ, ராணுவம் போன்றன எப்படி வெறும் மாஃபியாக்கள், எப்படி பாகிஸ்தானிய மக்களை அவை அடக்கி ஆள்கின்றன என்று நியுயார்க்கரில் ஒரு கட்டுரை. இது ஒரு பயங்கர ஜோக். ஏனெனில் அமெரிக்க மக்களை அமெரிக்க தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும், உளவு நிறுவனங்களும், கிருஸ்தவ சர்ச்சுகளும், இனவெறி அரசியல் நடத்தும் இரண்டு கட்சிகளும், இன்னும் ஏதேதோ பயங்கரங்களைக் கண்டுக்க ஆட்களே இல்லாமல் நடத்தும் பெரும் பன்னாட்டு (அமெரிக்க வேர் கொண்ட) நிறுவனங்களும் அமெரிக்கரை ‘அடக்கி’ ஆளவே செய்கின்றன. என்ன அடக்குதல் அங்கு மிகச் சிக்கலான வகையில் உடனே காணப்பட முடியாத வகைகளில் செய்யப்படுகிறது. ஆனாலும் அமெரிக்கப் பிரச்சார நோக்கங்களைத் தாண்டிய ஒரு அரை உண்மை இதற்கு உண்டு.

தேடல் முகப்பு

இணையத்தில் தேடுதல் என்றால் கூகுள்.காம் என்னும் வழக்கம் மலையேறி, பொதுவாகத் தேடுதல் என்பதற்கு இன்னொரு பெயர் ‘கூகுள்’ என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். அவர்களின் போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் வழங்கும் ‘பிங்’. அவர்களின் முகப்புப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அழகிய ஒளிப்படத்தை வெளியிடுகிறார்கள். சென்ற 2014ம் ஆண்டின் சிறந்த புகைப்படங்களை “தேடல் முகப்பு”

காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.

எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…

பை பை MSD

எம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன் கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்தபத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமானஓட்டமோ (lap of honour). சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா?

மூன்று களவாணிகள்

மூவரும் ஏதோ தீர்மானித்தவர்களாய் குளத்துக்கரை கடந்து செட்டியார் தோப்பு வேலிக்குள் பட்டு நின்ற கள்ளியை முறித்து பாதை செய்து நுழைந்தனர். நுழைந்த இடத்தில் கடலைச்செடிக்கு அப்போதுதான் நீர் பாய்ச்சப்பட்டிருந்தது. பாத்திக்குள் மிதிக்காமல் வரப்பையடைந்து அருகிலிருந்த பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டனர். காட்டுப்பூச்சிகள் நிசப்தம் கலைத்தன.

உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 7

தூரத்தில் பனங்காடு தெரிந்தது. இரண்டு பர்லாங்கு நடந்தால் ஊர் வந்துவிடும். சித்துக்காடு சாலை வந்தபோது இருட்டி விட்டது. பனங்காட்டைத் தாண்டி அக்ரகாரம் செல்ல வேண்டும். நடுவில் ஒற்றையடிப் பாதை. பனங்காட்டைத் தாண்டி விட்டால் பயமில்லை. கொள்ளிவாய்ப் பிசாசு நடமாடுவதாக வேறு பேச்சு. யாராவது அரிக்கேன் விளக்கோடு நடந்தால் அது பிசாசாகதான் தெரியும். “ராமா, ராமா, ராமா,” என்று ஜெபித்தால் பிசாசு ஓடிவிடும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் வழி.

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.