டிசம்பர் நாற்காலிகள்

அபிஷேக்குக்குப் பதுங்கிப் பாய்வதில் நம்பிக்கை இல்லை. திரை விலகிய கணத்திலேயே ‘வலசி வலசி’ என்று ராகமாலிகையில் இறங்கி ஒவ்வொன்றுக்கும் ஸ்வரம் பாடி வீடு கட்டி அடித்தார். சொகசுகா ம்ருதங்க தாளமு உண்மையிலேயே சுகம், சொகுசு ! அந்த ஸ்ரீரஞ்சனியில் அவர் அள்ளி வீசிய ஸ்வரக் கோர்வைக்களுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அப்ளாஸ் பொரிந்தது…

வள்ளியும் நானும்

ஊருக்கு மேற்குப் பக்கமுள்ள பரும்புக்காட்டில் இந்த நடுநிசியில் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பக்கமுள்ள புளியமரத்திலிருந்து ஆந்தை ஒன்று இப்போதுதான் அலறி முடித்தது. கையில் இரண்டு லுங்கிகளும்,ஒரு மேல்பனியனும், சட்டையும் பொதியப்பட்ட ஜவுளிப்பை உள்ளது.ஊருக்குள் நாய்கள் குரைப்பது கேட்கிறது. கிளம்பி விட்டாள் போலும்.

நன்றியறிவிப்புகள் – பீடர் வாட்ஸ்

இது நாள்பட்ட விவகாரம். மூன்று பதிப்பாசிரியர்கள், மூன்று குடும்பத்து சாவுகள், சதையை அரித்துச் சாப்பிடும் வியாதியோடு கிட்டத்தட்ட சாவுக்கு அருகில் வந்த போராட்டம். குற்றவாளிதான் என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு திருமணம்.
இப்போது இது.

மதங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றன –சுரண்டலில்

எது மனித சமூகத்திற்கு அதன் நீட்சிக்கு உதவியாக இருந்ததோ அதை தெய்வமாக நினைத்திருக்கலாம். பெண் அங்கே முன்னிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கு ஒரே காரணம் அவளின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் திறன். அதை ஒட்டியே பெண் தெய்வங்கள் தோன்றி இருக்க வேண்டும். ஆதி தெய்வம் என பெண் போற்றப்பட அதுவே காரணமாக இருந்திருக்க முடியும்.
இப்படியாகத்தானே பெண் தெய்வமாகி இருக்க முடியும்?
பின் எப்போதிருந்து ஆண் உச்ச தெய்வமாகவும் அவன் மனைவியாக தொழுபவளாகப் பெண் தெய்வங்கள் என்றாயிற்று?

கனவின் பயணம்

இந்த ரினிவலோடு என்ன பாடு பட்டாவது கார் வாங்க வேண்டும் என்ற தன் கனவு விதையை முளைக்க வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். இந்தியாவில் இருந்து எடுத்து வந்த அந்தக் கனவு விதையை மீண்டும் கனவு விதையாகவே இந்தியாவிற்கு கொண்டு செல்லக் கூடாது என முடிவு செய்தான். ஊருக்குப் போகும் முடிவை ஒத்தி வைத்து விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து வாங்கினான். இந்த இரண்டாண்டு சம்பாத்தியம் அக்காவுக்கு நகையும், தனக்கு காரும் வாங்க மட்டுமே என திட்டமிட்டுக் கொண்டான்.

மகரந்தம்

இங்கிலாந்தில் இப்போது சூரியன் உதித்து அஸ்தமிக்கிறது என்பதோடு மட்டுமல்ல, அஸ்தமித்தபின் இங்கிலாந்தின் தெருக்கள், ஊர்களில் ஒளிரும் தெருவிளக்குகளும் இப்போது மங்கி, அணையும் நிலையில் இருக்கின்றன என்று இச்செய்தி அறிக்கை சொல்கிறது. வருமானம் அதிகம் இல்லாத நிலைக்கு வந்திருக்கிற பிரிட்டிஷ் அரசு, சமீபத்தில் தன் வருடாந்தர வரவுசெலவுக் கணக்கில் துண்டு விழுவதைத் தவிர்க்கவியலாமல், ஏற்கனவே கொண்டுள்ள கடன் பளுவையும் சமாளிக்க இயலாமல், தன் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க முயல்வதாகப் பாவலா காட்டுகிறது.

மார்கழி கணங்கள்

மார்கழியின் கலைக் கொண்டாட்டங்களை, உலக கலை ரசிகர்களுக்காக ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிறது, margazhi.org தளம். இத்தளத்தில் சார்பாக நடத்தபடும் ‘மார்கழி மனநிலைகள்’ புகைப்பட போட்டியின் முதற்கட்ட வெற்றியாளர்களின் படங்களின் தொகுப்பு இதோ.

விதியின் பிழை காண் – பகுதி 3

நாகை : நாமே குழந்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால் என்ன?
தருமன் : எப்படி? என்னிடம் தான் சக்தி எதுவும் இல்லையே? இந்தப் பாட்டியும் தாத்தா கொடுத்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.

அஃகம் சுருக்கேல்

This entry is part 37 of 48 in the series நூறு நூல்கள்

தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.

கெட்ட வார்த்தை பேசுவோம்

“கெட்ட வார்த்தை பேசுவோம்” – தொகுப்பில் “ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உறுப்புகள் புணரும்போது பொருள்படும் வழக்கிலுள்ள ஒற்றைச் சொல்லின் பெயர்கள்” எனப் பல சொற்களையும் – கூத்துக்கலை முதற்கொண்டு, சங்க இலக்கியத்தில் அச்சொற்களின் பயன்பாடுகள் என்று நுட்பமாக அணுகிச் சமூக யதார்த்தத்தில் அதன் பயன்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1

இந்து சமயங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் காட்டிலும் தனி மனித வளர்ச்சி, பரிணாம மாற்றம், வீடுபேறு ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. சடங்குகள் முக்கியம்தான், ஆனால் தனிமனித வளர்ச்சியை நோக்கி சிரத்தையுடன் சாதனை செய்வது அவசியம் என்று கருதப்படுகிறது. தனி மனித பரிணாம மாற்றத்துக்கு எட்டு ஆன்ம குணங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த சமயங்கள் நம்புகின்றன. சமயத்தையும் சம்பத்தையும்விட இந்த எட்டு குணங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.

மனைமாட்சி – ஒரு பகுதி

எட்டாவது படிக்கும் இந்த வயதில் இவளுக்கு எங்கிருந்து இத்தனை முதிர்ச்சியும் பொறுமையும் சாதுர்யமும் கூடி வந்திருக்கிறது என்று அடிக்கடி அவன் வியப்பதுண்டு. விபரம் தெரிந்த நாளிலிருந்து சாந்தியை எதிர்பார்க்காமல் அவளே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டிருந்தாள். குளித்து தலைபின்னி இருவருக்குமான மதிய உணவு டப்பாக்களை தயார் செய்து தண்ணீர் நிரப்பி புத்தகப் பைகளை தயார் செய்து தங்கையின் காலணிகளை அணிவித்து தானும் தயாராகி எந்த நிலையிலும் பதட்டமில்லாமல் பள்ளிக்குப் புறப்படத் தெரியும் அவளுக்கு. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொள்ளும் வேளைகளில் இன்னொரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு மீனாவை சமாளிக்கவும் தெரியும்.

சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்

ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?

ஏ ஆர் ரெஹ்மானின் 'மில்லியன் டாலர் புஜம்'

தமிழ்ப்பாடல் இடம் பெற்ற படம் என்பதை விட; இந்தியர்களின் சாதனை குறித்த படம் என்பதை விட; கஷ்டப்பட்டு முன்னேறிய திறமைசாலிகளின் படம் என்பதை விட – இந்தப் படத்தை ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வித்தியாசப்பட்டு நிற்கும் படம் என்றும் பார்க்கலாம். திரைப்பட இசை என்பது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அந்தக் காலம். அதன் பின் அடக்கி வாசித்து, திரையில் நடக்கும் விஷயங்களை காட்சிப்படுத்துவதை தூக்கலாகக் காண்பிப்பது சமீபத்திய காலம். வருங்காலத்தில் திரை இசை எப்படி இருக்கும்? ’மில்லியன் டாலர் ஆர்ம்’ திரையிசை போல் இருக்கும்.

இரண்டு பறவைப் படங்கள் : துபாய் திரைப்பட விழா

குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாத ஒரு சமூகத்தினர் சென்னையின் மையப் பகுதியில், சுழித்தோடும் சாக்கடைக் கழிவு நதிக்கு அருகாமையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத நம் அரசு வீட்டிற்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்குகிறது. இம்மாதிரி அபத்தங்களை கொதிப்பாக, பிரச்சாரமாக சொல்லாமல் மிக இயல்பாக சொல்லியிருப்பதில் இத்திரைப்படம் தனித்துவம் பெறுகிறது. தங்களுக்கு வாய்த்த வாழ்வைப் பற்றி சதா புகார் கூறிக்கொண்டிருக்காமல் அவ்வாழ்விலும் கிடைக்கும் உயிர்ப்பான தருணங்களில் கதாபாத்திரங்கள் நிறைந்து தளும்புகின்றன.

எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.