வாசகர் மறுவினை

எதை நோக்கிச் செல்கிறோம் என்ற நினைவாவது உள்ளதா? மனித உணர்வுகளும், உறவுகளும் மாறி – வெறும் பணம் பண்ணும் ஜடங்கள் மட்டுமே மிஞ்சும்.

2014ன் 14 புத்தகங்கள்

சென்ற ஆண்டின் சிறந்த தத்துவம் சார்ந்த புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். விவேகமும், படைப்பூக்கமும் கொண்டு அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை வாழ அழைக்கும் உளவியல் நூல்களை அறிமுகம் செய்கிறார்கள்.

பரபரப்பான ஊழியர்: கிவா ரோபோ

அமேசான்.காம்-இல் அதிகம் உழைப்பவர் இவர்தான். இருபத்து நான்கு மணி நேரமும் ஓய்வின்றி சுழல்கிறார். இண்டு இடுக்கெல்லாம் நுழைகிறார். கேட்டதைத் தருகிறார். கீழே போடுவதில்லை. உடம்பு சரியில்லையென்று படுத்துக் கொள்வதில்லை. தொழிற்சங்கம் துவங்கி போராடமாட்டார். ஒரு வினாடிக்கு 426 பொருள்களை விற்கும் அமேசானுக்கு உறுதுணையாக இயங்குகிறார்.

விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி 2

அச்சுதன்: அரையா, இங்கே நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கி வருகிறாய் போலிருக்கிறது?
தென்னதரையன் (முறைத்தவாறே): அச்சுதரே, நான் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அரசர் கூடாரத்தில் உங்களைப் போல அடைந்து கிடக்கும் பழக்கம் எனக்கில்லை.

வாசகியாயிருத்தல்

ன் இந்த பயணம் என்றும், ஒரு எழுத்தாளனை சந்திக்கத்தான் வேண்டுமா என்றும் யோசனையாக இருந்தது, என்றாலும் வாசிப்பின் மீதான விருப்பத்தின் ஆழம் தான் இந்த பயணத்திற்கு என்னைத் தூண்டியது. வாசிப்பு இன்றைக்கு நேற்று ஆரம்பித்த பழக்கமில்லை, முதன்முதலில் நூலகத்திற்கு சென்றபோது எனக்கு எத்தனை வயதென்று நினைவில்லை, 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.

ஏற்றப்படாத விளக்குகள்

அப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…

பொருளாதார சிந்தனைச்சோதனைகள்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸில்ராட், நீதி, நியாயம் என்றெல்லாம் சமூகம் நமக்கு போதிப்பதை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் பூர்வமாக வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்வது லாபகரமானது என்று ஆய்ந்து பார்க்க முடிவெடுத்தார். இந்த ஆய்வுக்காக 1980 வாக்கில் அவர் ஒரு போட்டியை அறிவித்தார்.

மகரந்தம்

எண்களை எப்படிப் பார்க்கிறோம்? ’க’ என்றால் தமிழில் ஒன்று; ரோமன் எழுத்துக்களில் ஆங்கில ஐ (I) போட்டால் ஒன்று; எல்லோருக்கும் தெரிந்த எண் ”1”. அதே எண் 1, 10 என்னும் எண்ணில் இருந்தால் பத்தைக் குறிக்கும். ரோமன் எழுத்தில் X (எக்ஸ்). நேரத்தை எப்படி கணக்கிடுகிறோம்? ஒரு வினாடி; இரண்டு நிமிடம்; மூன்று மணி நேரம். உடலுக்கு இந்த கணக்கெல்லாம் தெரிவதில்லை. மூளைக்குத்தான் இந்த கடிகார நேரம். அதே போல் இசையும் வேறொரு உலகத்தில் இயங்குகிறதா? நேரம் உணர்தலை இயல்பாகவே அகநிலையாக -நம் வாழ்வில் ஒரு அங்கம் என்பதை இசை நிரூபிக்கிறது. நம் மூளையில் இசையின் மாய வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி இசையமைப்பாளர் ஜோனதன் பெர்கர் விவரிக்கிறார்.

பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ.

எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6

இயற்கையில் நெல் விதைக்கும்போது பச்சை கட்டிப் பயிர் எழும்பத்தாமதமாகலாம். இதைத் தசிர்க்க தொழு உழவு செய்யும்போதே பலவகையான மரத்தழைகளை வெட்டிப் போட்டு குலை மிதித்து 2 நாட்கள் அழுகியபின் பரம்பு ஒட்டி விதைக்க வேண்டும்.

திம்புவின் சோர்டன்கள்

சில ஓவியங்களில் அதை வரைந்தவர் தன் கற்பனை வளம் முழுவதையும் கொட்டி வரைந்திருப்பார். சொர்க்கம் போன்று ஒரு இடத்தைக் கற்பனை செய்தால் அங்கே காவல்காரர்கள் உட்பட அனைத்து விவரங்களும் அந்த வேலைபாட்டில் இருக்கும். பூடான் அரசரின் மாளிகையில் கழுகு முகத்துடன் கூடிய ஒரு கடவுள் தோற்றம் இடம் பெற்றிருக்கும். ராவண் என்றொரு உருவமும் உண்டு. ஆனால் இது ராமாயணத்தின் வில்லன் ராவணன் அல்ல.

லோலா மான்டஸ்: ரியாலிட்டி ஷோக்களின் சிலந்திப் பெண்

இனி வரப்போகும் பிளாஷ்பேக் காட்சிகளின் கச்சிதமான, தூய சினிமாஸ்கோப் வண்ணங்களுக்கு எதிரிடையாய் இங்கு சர்க்கஸ் காட்சியில் நீல நிறத்தில் தகிக்கிறாள் லோலா. ”கேளுங்கள், கொடுக்கப்படும்,” என்று அவளைத் தோலுரிக்கத் தயாராகிறார் ரிங் மாஸ்டர் – லோலாவைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று பார்வையாளர்களை அழைக்கிறார்.. லோலா கடந்து வந்த பாதையின் உண்மைகள், பீட்டர் உஸ்தினோவின் அப்பழுக்கற்ற நடிப்பின் குரூர பற்றின்மையால் தொடர்ந்து மட்டறுக்கப்படும் நிகழ்கால அரைகுறை உண்மைகளுக்கு அருகில் இத்திரைப்படம் நெடுக தொடர்ந்து இருத்தப்படுகிறது

பாடுதும் காண் அம்மானை-2

பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின் விருப்பமாகப் பாடப்படுகின்றன.

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள் , திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூடராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவுகூ̀றப்படுவதில்லை.

காளிங்க நர்த்தனம்

மாணிக்கத்திற்கு முப்பதோ முப்பதைந்தோ வயதிருக்கலாம். இந்திரா சவுந்தரராஜன் கதைகளின் வழியாக சித்தர்களின் உலகம் அவனுடைய பதின்ம வயதுகளில் பரிச்சயமானது. அங்கிருந்து கோடு பிடித்தாற்போல் மேலேறி ஜோசியம், சித்த மருத்துவம், யோகம், தியானம், யக்ஷி வசியம், ரசவாதம் என எதையெதையோ எங்கெங்கோ சென்று பயின்று வந்தான். புத்தகங்களைப் படித்து அவனே என்னென்னவோ முயன்றும் பார்த்தான். மண்டையோடுகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவன் ஏதோ வலிப்பு நோய்க்கு பற்பம் செய்கிறேன் என்று கிளம்பியது வரை ராமலிங்கப் பிள்ளை அவனை பெரிதாகக் கண்டித்ததில்லை

யாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து

நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு

பாதாம் மாமி

பருப்பு நன்னா திடமா இருக்கு. அப்பாவும் இப்படிதான்.எது உசத்தியோ அதைத்தான் தருவிப்பார். நகை,துணி,பண்டம் பாத்திரம் எல்லாம் அவருக்கு உசத்தியா இருக்கணும். குங்குமப்பூ காச்மீரத்திலிருந்து நேரா வீட்டுக்கு வரும். கண்ணில இமை காப்பதுமாதிரிதான் என்னையும் எங்கக்காவையும் அவர் வாழ வச்சார். இதுக்கு அதுக்குன்னு எல்லாத்துக்கும் பணியாட்கள் இருந்தாலும் சமைக்கறது மட்டும் நானும் எங்கக்காவும் மட்டும்தான். அம்மாவுக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சே சமையல் பழகிடுத்து. தீபாவளி வந்துட்டா நாந்தான் பாதாம் ஹல்வா கிளறணும். அப்பெல்லாம் படி கணக்குத்தானே. இத்தனை படின்னு கிளறினா சோழவந்தான் முழுக்க வாசனையா இருக்கும்.பண்ணையாட்கள் எல்லோருக்கும் தீபாவளி ஸ்வீட் என்னோட பாதாம் ஹல்வாதான். “