குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்
Category: இதழ்-114
ஜப்பானில் இந்திய வணிகம்
கடந்த சில வருடங்களாக நிறைய இந்திய மென்பொருள் வல்லுனர்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் நாடுகளில் வரவழைத்துள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளும் சேர்ந்துள்ளன. ஏற்கனவே அரசு ரீதியில் இந்திய ஜப்பானிய அரசுகளுக்கிடையே நிறைய பரிமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்கு போட்டியாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும்…
நினைவுப் பிழைதானோ!
ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் தங்கள் கோணங்களிலிருந்து கூறும் உத்தியை நிறைய கதைகளில் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் கூட அவ்வுத்தி வெகு காலமாக கையாளப் பட்டிருக்கிறது (ரசோமான் தொடங்கி). பார்ன்ஸ் இக்கதையில் கையாளும் உத்தி அதனின்று சற்று வேறுபட்டது. ஒருவன் தன் வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது, அதைக் கூறும் விதத்தால் அப்பதிவு எவ்வளக்கெவ்வளவு உண்மை, உண்மை இல்லையெனின் அது சொல்பவரின் ஞாபகக் கோளாறா அல்லது அவன் வேண்டுமென்றே திரிக்கும் கதைகளா என்று படிப்பவரை சிந்திக்க வைக்கும் உத்தியைக் கையாண்டிருக்கிறார் ஜூலியன் பார்ன்ஸ்.
சொல் மறைப்பதென்ன
உதாரணத்திற்கு கேரட். அதைப் பார்த்தவுடன் நம்மில் பலரைப் போல் அனிச்சையாக, அவரால் கேரட் என அடையாளம் கண்டு சொல்ல இயலவில்லை. மாறாக அதை ஒரு புதிய பொருளாக பார்க்கிறார். நீளமான, சற்று ஒல்லியான ஒரு பொருள், அதன் ஒரு முனையில் இழைக்கொத்து. என்னவாக இருக்க முடியும்? பெயிண்ட் பிரஷ் என தவறாக ஊகிக்கிறார்.
யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்
புல்வெட்டும் எந்திரங்கள் சைனாவில் செய்து, வட அமெரிக்காவில் 400 டாலருக்கு சிரிக்கின்றன. ஒன்றை மறந்து விடக் கூடாது. சாதாரண காரில் சத்தியமாக இவற்றை ஏற்ற முடியாது. எடையும், வடிவமும் முற்றிலும் காருக்குச் சரிவராத மோசமான எந்திரம்! நானோ காரில் சுமோ குத்துசண்டைகாரர்களை ஏற்றுவதைப் போன்ற விஷயம் இது. இவ்வகை எந்திரங்களை பழுது பார்ப்பது புதிய எந்திரம் வாங்குவதை விட அதிக செலவாகும்.
பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்
யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன…
ஹாங்காங்: வருங்காலத்திற்கான போராட்டம்
2017ல் ஹாங் காங் தேர்தல் வரப்போகிறது. தங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் வாக்குச்சீட்டில் இடம்பெற வேண்டும் என்று சீனா அறிவித்தது. தங்களுக்கான தலைவர்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கோரும் போராட்டத்தை ஹாங்காங்வாசிகளும் மாணவர்களும் நடத்தி வருகிறார்கள். தொடர்புள்ள முந்தைய பதிவு: தடம் சொல்லும் கதைகள் – 5
புவி வெப்பமடைய யார் காரணம்?
கரிம உமிழ்வுகளினால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகள் பொறுப்பு? தி கார்டியன் கொடுக்கும் வரைபடத்தைக் கொண்டு மாசுபடுத்தும் சர்வதேச சக்திகள் யார் என்று கண்டுபிடிக்கலாம். சீனாவின் பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிடலாம். புவி வெப்பமடைதலின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளைக் கண்டறியலாம். “புவி வெப்பமடைய யார் காரணம்?”
டால்ஸ்டாய் மொழிகள்
மேற்கோள்கள்
தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்
இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’ தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள். நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை.
கணிதசிந்தனைச்சோதனைகள்
ஹில்பர்ட் தனது கற்பனையில் கட்டிய விடுதியில் உள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை முடிவிலி! அதனால் விடுதியின் விளம்பர வாசகமே, “ஹில்பர்ட் ஹோட்டலில் இடமில்லையாவது..?” என்பதுதான். எங்கள் விடுதி நிரம்பி இருந்தாலும், வரும் விருந்தினர்களை எப்போதும் திருப்பி அனுப்ப மாட்டோம் என்பது அவர்கள் தரும் உத்திரவாதம். விடுதி இருக்கும் ஊரில் ஒரு பெரிய கணித மாநாடு நடப்பதால் ஒரு வாரம் அத்தனை அறைகளும் புக் செய்யப்பட்டு…
நற்றமிழ்ச்சுளைகள்
12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது.
யாமினி க்ருஷ்ணமூர்த்தி – 2
பரதத்தில் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால்…
ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்
“ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.
மஹா நதி – நீலகண்டப் பறவையைத் தேடி – வாசிப்பனுபவம்
நாவலின் ஒவ்வொரு சம்பவத்திலும், கட்டத்திலும் மனிதரிலும் ஒட்டி இயல்பாக, எத்தனை தட்டினாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கடற்கரை மணலாக இயற்கை. மகேந்திர நாத், பெரியவர், பார்வையிழந்தவர், சூரிய உதயத்தைக் காண பல வருடங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேரன்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார். வழியிலிருக்கும் எல்லா மரங்களின் பெயர்களையும் சொல்கிறார். பூ, மீன் எல்லாவற்றையும் வாசனை உணர்ந்தே சொல்லிவிடுகிறார்.
மகரந்தம்
ஐஸிஸ் பயங்கரவாதக் கும்பலை ஒழிக்கிறோம் என்று கிளம்பியுள்ள அமெரிக்க அரசு முதல் சில தினங்களில் எத்தனை செலவழித்துள்ளது? முதல் நாள் சிரியாவில் வீசிய குண்டுகளுக்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஆன செலவு இந்தியாவின் சந்திராயன் சாடிலைட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆன பயணச் செலவை விட அதிகமாம். ஒரு நாள் குண்டு வீச்சுக்கு அமெரிக்காவுக்கு ஆன செலவு 79 மிலியன் டாலர்கள். இந்திய செவ்வாய் கிரகப் பயணச் செலவு $74 மிலியன் டாலர்கள். இந்தச் செலவைத் தவிர வேறு செலவுகளும் அமெரிக்க விமானப் படைக்கு உண்டு. அவற்றில் அந்த ஏவுகணைகளுக்கு ஆகும் செலவைக் கணக்கிலெடுத்தால் எப்படி இருக்கும்?