ஒளிப்பதிவாளர் கம்பன்

வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையில் மதியன்ன நகையிழந்த முகத்தானை
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின்று இடைவீழ விம்முற்று நின்றொழிந்தான்

அசோகமித்திரனின் செகந்திராபாத் உலகம்: முடிவிலாப் பயணம்

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோர் பலதரப்பட்ட தடங்களில் எழுதிச்சென்றபோது, அசோகமித்திரன் ஒரு பனித்துளியையே பிரம்மாண்டமாக மாற்றினார். சென்ற இதழில் சொல்வனத்தில் கல்யாணராமன் குறிப்பிட்டது போல “Eternity is contained in the moment”என்பார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு, அவருடைய கதைத் தருணங்களில் பொதிந்திருக்கும் வரலாறும், சமூக அமைப்பும் அரசியலும் தெரியவரும்.”

வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள்

வாசிப்பு அனுபவம் என்று நான் அழைக்கும் விஷயம், நாம் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு வெகு காலம் முன்னரே துவங்கிவிடுகிறது. நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் புரட்டிப் பார்த்தல், முன்னட்டை அமைப்பைப் பார்த்து வசீகரிக்கப்படுதல், அதன் பைண்டிங், எழுத்துருக்கள், ஓவியங்கள், எவ்ரிமேன்ஸ் லைப்ரரி எடிஷன் வாங்குவதா அல்லது பெங்குவின் மாடர்ன் கிலாசிக்ஸ் எடிஷன் வாங்குவதா என்ற இருப்பியல் சார்ந்த அகச்சிக்கல், விலையுயர்ந்த ஒரு புத்தகம், ஒரு பேச்சுக்கு பரூஸ்ட்டின் In Search of Lost Time நாவலின் மிகச் சமீபத்திய மொழிபெயர்ப்பின் ஆலன் லேன் பாக்ஸ் எடிஷன் என்று வைத்துக் கொள்வோம், அதை வாங்குவதற்கு முன் நிகழும் மனத்தடுமாற்றங்கள்…இவை ஒவ்வொன்றும் அவற்றின் துணை நினைவுகளோடு ஒரு சுருதிக் கோவையாக உருவாகி நாம் இறுதியில் புத்தகத்துடன் சுருண்டு படுக்கையில் வாசிப்பின் அடக்கமான சேம்பர் ம்யூசிக்காக வளர்கிறது.

பாஸனின் தூதவாக்யம்

பாண்டவர்களின் தூதனாக கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லும் தன்மையால் நாடகத்தின் மையக் கரு. .போரைத் தவிர்க்க எந்த நிலைக்கு போகவும் பாண்டவர்கள் தயார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், கௌரவர்கள்தான் போருக்குக் காரணம் என்பதை அறிவிக்கும் முயற்சியிலும் இந்தத் தூது நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எதிராளியின் தவறான அணுகு முறையைக் காட்டுவதன் மூலம் நடப்பைப் புரிய வைக்கும் முயற்சியான இது நூறு போர்களை வெல்வதற்கு இணையான அரசியல் சாதுர்யம் கொண்டது. அதுவே இங்கு பாண்டவர்களின் தூதனால் நடைமுறைபடுத்தப் படுகிறது.

கொல்லைப்புறத் தோட்டங்கள்

சுபேந்து ஷர்மா பொறியியலாளராக டொயோட்டாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது உங்கள் வீட்டின் பின்புறத்தில் காடுகளை வடிவமைத்து உருவாக்கித் தருகிறார். அதிகம் பராமரிப்பு தேவைப்படாத சுயமாக தழைத்தோங்கும் பச்சைமயமாக உங்களின் கொல்லைப்புறம் எப்படி மாறும் என்பதை அறியலாம்.

ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி

தனது 102வது வயதில் சமீபத்தில் மறைந்த ஜோரா ஸேகல் இந்திய நாடக/திரைப்பட உலகில் மிகவும் விரும்பப்பட்ட/ரசிக்கப்பட்ட கலைஞர். இவரது கலையுலகப் பயணத்தின் நீளம் ஏறக்குறைய 80 வருடங்கள் உதயசங்கரின் நாட்டியக் குழுவில் தொடங்கி, ப்ருத்விராஜ் கபூரின் ப்ரித்வி தியேட்டர் நாடங்களில் தொடர்ந்து, பிரிட்டனின் நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும் பிரபலமான “ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி”

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும்

அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. என்னுடைய அலுவலகத்தில் 6,000 டாலருக்கு விளையாட்டு கணினி வாங்கும் சிலரை அறிவேன். இவர்கள் பேசுவதே, வித்தியாசமாக இருக்கும். தண்ணீரால் குளிர்விக்கப்பட்ட கணினியில் இரவில் 10 மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதைப் பற்றி பெருமை கொள்ளும் விந்தை மனிதர்கள். இது என்ன வீடியோ விளையாட்டு பற்றிய கட்டுரையா?

ஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்

அவன் எழுதிய கதைகள் ‘அட்லாண்டிக் மந்த்லி’ மற்றும் ‘சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ போன்ற சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன. ஆனால் அவன் ஹாலிவுட் வந்த போது அவன் புத்தகம் எதுவும் பதிப்பித்திருக்கவில்லை. எஃகு ஆலைகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு எழுதும் வாய்ப்புக்காக ஒரு படத் தயாரிப்பாளரைத் தேடி வந்தான். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார். ஆனால் அவனுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட நியூ யார்க்கின் அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். இருந்தும் பன்னிரண்டு வாரங்கள் பணி செய்தான். ஒவ்வொரு வாரமும் தான் அதுவரை வாழ்நாளில் பாத்திராத அளவு பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டான்.

வாசகர் மறுவினை

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு வாசித்தமை குறித்து……
வியந்து படிக்க ஆரம்பித்த நான் வியப்போடவே முடித்தேன்.
சகோதரி அம்பையை மெச்ச எனக்கு இலக்கிய அனுபவம் போதாது. ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

உன் கேள்விக்கு என்ன பதில்?

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் – அவற்றுக்கு நான் வழங்கிய பதில்கள் ஆக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல, சுவாரசியம் நிறைந்தவையும்கூட. சில கேள்விகள் பத்திரிக்கைகளில் வந்தவை, பிற தொலைபேசிமூலம் கூறப்பட்ட பதில்கள்.

சர்வர் சுந்தரம்

என்னை பற்றி புரளி பேசுவதற்கு என்று ஒன்றும் பெரிதாக இல்லை. அந்த ஒரு புரளியை தவிர! ‘பெருசு மாசத்தில திடீர்னு ஒரு நாள் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்கேயோ கிளம்பிடராற்பா. எங்க போறார்னு யாருக்குமே தெரியாது.’

பொட்டுப்பாட்டி

அப்போதுதான் மூட்டப்பட்ட செங்கல் சூளையிலிருந்து வெளிவரும் கரும்புகையென அந்த சிறிய ஓலைக்குடிசை கரும்புகையை கக்கிக்கொண்டிருந்தது. அதனூடே இருமல் சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடந்தவாரம் நரியங்குளத்துக் கரையில் பொறுக்கிக் கொண்டுவந்த விறகுக் கட்டின் கடைசி சுள்ளிகள்தான் எரிந்துகொண்டிருந்தன. கறிவைத்து முடிக்கும்வரை இந்த விறகு போதுமா போதாதா என்று குழம்பியவளாய் விறகுக் கட்டையும் அடுப்பையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள் பொட்டுப்பாட்டி.

சிந்தனைச்சோதனைகள்

வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?

மகரந்தம்

கணித ஆசிரியர்களுக்கு உதவித் தொகை அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்கு பிடித்த தலைப்புகளான மரபணு புதிர்கள், வாழ்க்கை தோற்றம், மன இறுக்கத்தின் வேர்கள், கணித மற்றும் கணினி எல்லைகளை விரிவாக்குதல், அடிப்படை இயற்பியல் மற்றும் அகிலத்தின் துவக்க அமைப்பு என நிதிநல்கை நீள்கிறது. அவருக்கு மறதி இருந்தது. பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவரின் கணினி நிரலாக்கங்கள் பயனில்லாதது. கணிக் குறியீடுகளை மறக்கிறார். அதனால் வேலையை விட்டு நீக்கப்பட்டார். தனது வாழ்க்கை தோல்விகளுக்கு பின் அவரால் இதை செய்ய முடியும் என்றால், இன்றைய இளைஞர்கள் என்ன சாதிக்கலாம் என்னும் செய்தி தெளிவாக உள்ளதை விவரிக்கும் கட்டுரை.

வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை

பொய்க் குதிரை – புதுமைப்பித்தன்

ரஸ்தாவில் ஒரு திருப்பம்; சற்று இருள் படர்ந்த வெளிச்சம்; பாதசாரித் திண்ணையிலே, அல்ல அதன் கீழே ஓர் ஓலைப்பாயின் சுருள்; எதேச்சையாகக் கண்கள் அதன்மீது படிகின்றன. ஓலைப்பாய்ச் சுருளா! ஓர் ஏழைக் குழந்தையின் தொட்டில்; சுருட்டிய பாயில் குழந்தை சுகமாக உறங்கியது. உறக்கமா? சீச்சீ, என்ன நினைப்பு! அதன் தாயின் கஷ்டம் என்னவோ! கமலத்திற்கு ஒரு குழந்தை இருந்தால்..நினைப்பில் என்ன குதூகலம்…!

வந்தாரங்குடி புத்தக விமரிசனம் – வாசகர் எதிர்வினை

ஆனால் இந்தப் போராட்டத்தை கண்மணி முற்றிலும் வன்னிய சாதியினரின் போராட்டமாக சுருக்கித்தான் விட்டார், வன்னியரல்லாத சமூகங்கள் இந்த நிகழ்வை எப்படி எதிர் கொண்டன என்பது குறித்த பதிவுகளே இந்த நாவலில் இல்லை.

ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி

இசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது? வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.

நடீன் கோர்டிமர் [1923 – 2014]

காலனியாதிக்கத்தின் கோரப்பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டுப் பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் திரிபுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையைச் சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீன பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும் நடீன் கோர்டிமர் ஒவ்வொரு வகையான வாழ்வைப் பற்றியும் மிக விரிவாகப் பதிந்துள்ளார்.