பாஸனின் பிரதிமா நாடகம்

தந்தையின் ஆத்ம சாந்திக்கும், திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன செய்திதான் அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின் அணுகுமுறை அமைகிறது.இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற செயல்கள் இங்கில்லை .இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.

மகரந்தம்

மூட நம்பிக்கைகளும், ஒற்றைத் திரிக் கருத்துகளுமே நிரம்பிய மதம் எதுவானாலும் அது வாழ்வுக்கு விஷத்தைத்தான் அதிக பட்சமாகக் கொடுக்கும் என்பதே உகாண்டாவிற்கு நேர்ந்த கதை பற்றிய கட்டுரையில் புரிகிறது. ஒரு நாட்டில் விஷம் கக்கும் மதம் இன்னொரு நாட்டில் சுதந்திர ஜோதியாகத் தெரிவது என்பது நிச்சயம் இரண்டாவது நாட்டில் அதன் பிரச்சாரத் தந்திரம் வெற்றி பெற்றதாலிருக்கலாம் அல்லது அந்நாட்டு அறிவாளர்களுக்கு நிஜமாகவே புத்தி மட்டு என்பதாலுமிருக்கலாம். விவிலியத்தில் சொல்லி இருக்கிறதில்லையா, சில காசுகளுக்கு கருணாளரையே விற்கக் கூடியவர் அவரருகேயே உண்டு என்று…

ஒரு யானையும் நான்கு ஒற்றர்களும்

“சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு யானை காணாமல் போனதாகச் சொல்வதே தவறு. யானை களவுபோயிருக்கிறது. சதி நடந்திருக்கிறது’”

“யானை சங்கிலியை அறுத்துக்கொண்டும் போயிருக்கலாம்” – கள்ளச்சாவி

“தாளிட்ட கோட்டைக் கதவைத் தாண்டி யானை எப்படிப் போகும்?” – முகமூடி

“ஒருவேளை யானை கோட்டை மதிலை எகிறிக் குதித்துப் போயிருக்குமோ?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வியெழுப்பினான் ஒட்டுண்ணி.

தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்

தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் இப்படி செய்தியைத் தோண்டி வெளிக்கொண்டு வந்தால், அதன் முன்னோடியான பத்திரிகையுலகம் அந்த செய்திகளுக்குப் பின்னால் புதைந்துள்ள செய்திகளை ஆராய்ந்து போட்டி போட்டுகொண்டுவெளியிடுவதைப் பார்க்கும்போது இன்று தகவல் சாதனங்கள் சரித்திரம் எழுதுகின்றன என்றுதான்சொல்லத்தோன்றுகிறது.

கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு

அதாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.

நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு

உலகில் எப்படி எட்டாயிரத்து சொச்சம் மொழிகள் உருவாகின? மொழியியலாளர்கள் எவ்வாறு மொழிக்குடும்பங்களை சேர்க்கிறார்கள் என்பதையும் நாம் பேசும் மொழிகளின் ஆதி இருக்கிறதா என்றும் அலெக்ஸ் ஜெண்ட்லர் இங்கே சொல்லிக் கொடுக்கிறார். நாலாயிரம் வருடம் பழைமையான சிந்து சமவெளி எழுத்துக்களை எப்படிப் புரிந்து கொள்வது? அவிழ்க்க முடியாத புதிர் போல் “நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு”

காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 3

வெள்ளம் – தண்டனை – அதன் பின்னே, பறவைகள் கூட மறந்துவிட்ட, புழுதி மற்றும் வெப்பத்தின் விடாப்பிடியான தாக்குதல்களால் மூச்சுவிடவே அரிதாக இருக்கும் ஒரு மகோண்டோவை விட்டுச் செல்கிறது. அங்கு எஞ்சியிருப்பவர்கள் யார் ? சிவப்பெறும்புகளின் சத்தத்தால் தூங்குவதற்கே முடியாத ஓர் வீட்டில் தனிமையாலும் காதலாலும் (காதலின் தனிமையாலும்) ஒளிந்திருக்கும் மீந்தோர்களான ஆரேலியானோவும் அமரான்டா உர்சுலாவும் (Aureliano & Amaranta Ursula). இதன் பிறகு புத்தகத்தின் மூன்றாம் வெளி திறக்கிறது. இதுவே அதன் தொன்ம வெளி – அதன் உடன் நிகழ்வான, புதுப்பிக்கப்படக்கூடிய இயல்பை இறுதிப் பத்திகளுக்கு முன் புரிந்துகொள்ள முடியாது.

லெ குவின்: புனைவின் கலை (3)

அதை எழுதியபோது நான் கால்வினோ, போர்ஹெஸ் போன்ற எழுத்தாளர்களை நினைத்துத்தான் அப்படி எழுதி இருப்பேன். ஆனால் வகைமைப் பட்ட இலக்கியம் எழுதியவர்கள், நடை என்று ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, மிகவுமே தட்டையான, செய்தியாளர்களின் எழுத்தைப் போன்ற உரைநடையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று கதை எழுதிய ஆண்களின் குணங்களைப் பொறுத்து அப்படி அமைந்தது என்று நான் ஊகிக்கிறேன். மேலும், ஹெமிங்வேயைப் போன்ற, முழுக்க முழுக்க ஆணடையாளமுள்ள ஒரு எழுத்தாளரின் ஆடம்பரமாகவே மிகத் தெளிவான, தட்டையான நடையை அவர்கள் பெரிதும் விரும்பியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

ராணியின் பீடிக்கணக்கு

நூறு புகையிலைத்தூளுக்கு,கால் கிலோ புகையிலை கொடுப்பார்கள்.இலையை பணிய வைத்து,பீடிக்கு தகுந்த வடிவில் உருவாக்கப்பட்ட அளவுகோல் கொண்டு இலை வெட்டி,மீண்டும் பணிய வைத்து,நூல் கண்டில் நூல் உருட்டி,தேவையான தூளை வைத்து சரியாக உருட்டி,நூல்கொண்டு கட்டி,பொட்டுக் குச்சி கொண்டு தலைப்பாகத்தை மடக்கினால் பீடி தயார்.நூறு தூளுக்கு 22கட்டுகள்(சல்லிகள்) சுற்ற வேண்டும்.ஒரு சல்லிக்கு 24பீடிகள்.22 சல்லி சுற்றுவதற்கு நூற்றி இருபது ரூபாய் கூலி.ஆறு நாட்கள் சுற்றினால் 720 ரூபாய் லம்பாக கிடைக்கும்.

ட்ரல ட்ரல ட்ரல லலல

சிறுவயதில் கூச்சமாக இருந்தவனின் மனதில் இருந்த காமுக எண்ணங்களின் இரட்டைப் பிம்பம்தான் இந்த இரு சக்திகளா? தன்னையே இரு பாகமாகப் பிளந்து உள்நோக்கும் வகையில் இந்த இரு விசைகளா? கடவுளை விரும்பாதவன் ஆன்மீகத்துக்கு மாறுகையில் வந்த நம்பிக்கைச் சிதைவின் விளைவுகளா? காரண அறிவும், பொருள்விளங்காப் பேருணர்வும் மோதிக்கொள்ளும் சிதறலா? வறுமைய எதிர்கொள்ள முடியாத பேதைமையில் ஏற்பட்ட சறுக்கலா?

மாயா ஏஞ்சலோ: அஞ்சலி

கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மக்களின்  குடிஉரிமைப் போராளி எனப் பன்முகம் கொண்ட மாயா ஏஞ்செலோ தனது 86வது வயதில் மே மாதம் 29, 2014 அன்று காலமானார். தற்கால ஆஃப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர், அனைத்து சமூகக் குழுக்களின் அபிமானத்தையும் பெற்றவர். அவருடைய மிகப் பிரசித்தமான “மாயா ஏஞ்சலோ: அஞ்சலி”

ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1

எங்களைக் கீழே இறங்கி வரச் சொல்கிறான். சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் நான் அவனருகே போய் நிற்கிறேன். “பொய் சொல்லக்கூடாது. உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும். பார்க்க முடியவில்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். பார்த்தால் மட்டும்தான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்,” என்கிறான். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. வெகுதொலைவில் தெரியும் பனி போர்த்த சிகரங்களைக் காட்டி. “நடுவில் உள்ள மலையைப் பார்த்தீர்களா? அதன் உச்சியைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். என்ன தெரிகிறது?” நான் உற்றுப் பார்க்கிறேன், எதுவும் பிடிபடுவதாயில்லை. “வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை,” என்கிறேன். “நடுவில் உள்ள மலையின் உச்சியை கவனமாகப் பாருங்கள்,” என்று மீண்டும் வலியுறுத்துகிறான் அமித். இப்போது மறுபடியும் அந்த மலையைப் பார்க்கிறேன், இப்போதுதான் ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது…

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 1

கை கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை கால்களை பொறுத்திக்கொடுத்து அவர்களை முடிந்த அளவு நேர்ப்படுத்துவதுபோல், ஐம்புலன்களில் ஏதாவதொன்றை பிறவியிலேயோ அல்லது வாழ்வின் இடையிலோ இழந்தவர்களுக்கு செயற்கை உபகரணங்களை (Prosthesis) பொறுத்தி அந்த திறனை திரும்ப பெற்று தருவது மருத்துவத்துறையின் வெகுநாளைய போராட்டம். இந்தத்தேடல் அல்லது தேவை எல்லோருக்கும் எளிதாகப்புரியும் விஷயம். ஆனால் அந்த முயற்சியின் வழியாக நாம் பெற்றிருக்கும் அனுபவத்தைக்கொண்டு, நரம்பியல், மூளை முதலியவற்றை பற்றிய சம்பிரதாயமான ஆய்வுகளைத்தாண்டி, இதுவரை மனிதர்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதிய புலன்களை அமைத்துக்கொடுத்து புதிய திறன்களை மனித மூளைக்கு கொடுக்க முடியுமா என்பது எளிதாக எல்லோருக்கும் தோன்றாத ஒரு புத்திசாலித்தனமான கேள்வி.

துண்டிக்கப்பட்ட தலையின் கதைகள்

எப்போதுமே அந்த மரத்தை நோக்கி செல்வது பெண் தானா?
மாதுளம்பழம் கூட எனக்கு போதுமானதாய் இருந்திருக்கும்.
உன் தொண்டையைக் கிழித்த அந்த ஆப்பிளாக இருந்தேனென்ற
குற்றவுணர்வுகளும் எனக்கு இருந்திருக்காது.
ஏனெனில்
உன் உதடுகளிலிருந்து நான் பிறக்கவில்லை
உன் நெஞ்சிலிருந்து நான் பிறக்கவில்லை

கவிதையின் நேரம்

உழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும் கவிதை என்ற கலைவடிவத்தின் உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே இவ்வோயாத உழைப்பின் பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால் குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால் மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின் மூலம்.