காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2

நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதை தவிர்ப்பதற்காகவும்)….

ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்

தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?

மதுவின் பல்கலைக்கழகம்

“பேரின்பம் என்பது வனிதையரின் அழகல்ல. ஏராளமான மரங்களுடன்கூடிய வனம் தருவதே இன்பம். பெண்கள் தம் அழகில் கர்வம் கொண்டு இன்ப உணர்வில் ஏங்கும்போது இன்பத்தை அள்ளித்தரும் இன்ப ஊற்றான வனம் நீண்ட தடாகங்களைக் கொண்டு அதில் தாமரை மலர, வண்டுகள் ரீங்காரமிட மரங்களுடன் வாழ்வதே பேரின்பம்”,

வாசகர் மறுவினை

சுகாவின் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை படிக்க சுளுவாக இருந்தது. பேரமைதி கவிதை நன்றாக இருந்த்து. மைத்ரேயனின் அர்சுலா லெ குவின் பேட்டி, ஜைன்சன் அனார்க்கியின் சிறுகதை போன்றவை நன்றாக இருந்தன்.

கவிதைகள்

அந்த மலை முகடுகள்
வெகு நாட்களாக அங்கே படுத்திருக்கின்றன,
பள்ளிக்கு செல்வதற்கு முன்பும்,
செல்லும்போதும்,
சென்று முடித்தபோதும்.
பூமியின் எல்லையில் அவை
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

தினம் ஒரு புதையல்

மெள்ள காட்சியில் வைக்கப்படிருந்த ஒவ்வொரு டைனொசொரையும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலுடன் பார்த்துக்கொண்டு வந்தேன். நிஜம் இல்லை என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனதென்னவோ அடித்துக்கொள்ளதான் செய்தது. அத்தனை தத்ரூபம். தொழில் நுட்பம் மூலம் உயிரோட்டமாக அசைவுகளும் கொண்ட அந்த டைனொசொர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காடுகளில் நாம் உலவுவது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டன.

வன்மம்

“பழசெல்லாம் மறக்க முடியுமா பாய்? பழசெல்லாம் மறைக்க முடியுமா பாய்? கடந்த காலத்தை அழிக்க முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஆதங்கம் இருந்தது.

“முடியாது” என்று வெங்கடேஷ் உரக்க சொன்னான். “நாம்ப என்ன பண்றமோ அதுக்கு அனுபவிச்சே ஆகணும்”

மனைவியின் கதை

அப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம்

அர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)

அது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.

அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்

இரண்டு இயக்குநர்கள் இணைந்து தயாரித்த உயிரூட்டப்பட்ட சித்திரப் படம் இது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற படம். வில்லியம் ஜாய்ஸும், ப்ராண்டன் ஓல்டன்பெர்க்கும் இயக்கிய படத்தில், பலவகை சித்திரப்படப் பாணிகள் பயன்பட்டிருக்கின்றன. இருபரிமாண உயிர்ப்பூட்டல், குறும்சித்திரங்கள், கணனி உயிர்ப்பூட்டல் என்று பலவிதங்கள் இவை. இந்தப் படத்திற்கான “அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்”

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 4

அலுவலகத்துக்குள் இருக்கும் ஐம்பது கணிணிகளை இணையத்திலிருந்து மறைத்து ஒரே கணிணி போல ப்ராக்ஸி கொடுப்பது. இப்படிச்செய்வதால் இணையத்திலிருந்து தபால் பொட்டலங்கள் வந்து சேர ஒரு அலுவலகத்துக்கு ஒரு இணைய முகவரி இருந்தால் போதும். ஒரு வீட்டில் பலர் வசித்தாலும், வீட்டுக்கு என்று ஒரே முகவரியை உபயோகித்துக்கொண்டு வரும் கடிதங்களை பெயரை பார்த்து அவரவர் எடுத்துக்கொள்வது போல, அலுவலகத்துக்குள் இருக்கும் எல்லா கணிணிகளையும் இந்தபெட்டி அறிந்துகொண்டு வெளியுலகத்துடன் தான் மட்டும் பேசி, வந்து சேரும் பொட்டலங்களை சரியான கணிணிக்கு அனுப்பி விடுகிறது. இது ஒரு முக்கியமான வேலை. இப்படிச்செய்வதால்தான் IPv4 முகவரிகள் தீர்ந்து போய் முழிக்காமல் இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.

2014ன் இணையத்துக் குரல்கள்

ப்ளாக் ஹெர் (blogher.com) சார்பாக 2014ன் 110 பதிவர்களை 2014ன் இணையத்துக் குரல்களாகக் கொண்டாடுகிறார்கள். புகைப்படங்களுக்கு மட்டும் ஐந்து பிரிவுகள். உணவுகளையும் கலைப்பொருட்களையும் படம் பிடிப்பவர் ஒரு பிரிவு என்றால் செல்ஃபீ எடுப்பவர்களுக்குக் கூட இந்த வருட விருதுகளில் இடம் உண்டு. கீழே வாழ்க்கையின் ஒரு அங்கம் பகுதியில் “2014ன் இணையத்துக் குரல்கள்”

இருக்கும் இடத்தை விட்டு

“மெட்ராஸ்ல நீர் இருக்கும் இடம் கொஞ்சம் மேலே.. இங்கே பரம்பரையாக, கிணறுகளும், ஏரிகளும் தான் நீராதாரம். இப்போ, ஃப்ளாட்டுகள் வந்து, காங்ரீட் போட்டு எல்லாத்தையும் மூடியாச்சு. அதனால, அந்தக் குறைந்த ஆழத்துல கிடைக்கிற நீர நாம எடுக்கறதில்லை. அதை விட ஆழமா ஓட்டை போட்டு, பாறையத் தொளச்சு, அங்கிருக்கற உப்பு நீர எடுக்கறோம்.. இந்த ரிப்போர்ட்ல பார் – 8 அடியில் மணல் இருக்கிறது. அது கிட்டத் தட்ட 30 அடி வரை இருக்கு. அதுக்கப்புறம் – களிமண். அதனால, நான் சொல்றேன் – வெட்டு என்றார்..

“விக்டோரியாவும் அப்துல்லும்” – ஷ்ரபணி பாசு

அவருடைய அதிகாரிகள் பலரையும் இந்த நட்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதற்கான காரணங்களை ஆராய வைத்தது. பலரும் ராணி தெளிவாய் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார் எனத் தீர்மானித்தாலும் சிலர் வேறு காரணங்களை நினைத்தனர்.

ராணியின் ஐரோப்பியப் பயணங்களின் போது அவர் பின்னே தனி வண்டியில் பவனி வரும் இந்தியரை ராணியின் அரசு கைப்பற்றிய ஏதோவொரு இந்திய ராச்சியத்தின் இளவரசர் என்றும், தன் அரசின் வலிமையைக் காட்டுவதற்காக ராணி அவரை வலம் அழைத்துவருவதாகவும் பலரும் நினத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளிடையே கருத்து அரசியின் உளநிலை மனநிலை பற்றிய ஆராய்ச்சியாக இருந்தது. பிரதம மந்திரி ஸால்ஸ்பரி ஒரு கடிததில் இப்படிச் சொன்னார்: “மகாராணிக்கு தொடர்ந்த பரபரப்பு பிடிக்கும், இப்போது முன்ஷிதான் அத்தகைய பரபரப்பைக் கொடுக்க முடியும்.”

எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் தாகூரின் சிறுகதைகள்

விதியின் விளையாட்டினால் அப்போது வங்கத்திலும், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களிலும் கொடும் பஞ்சம் தலை விரித்தாடி மக்களை எலும்பும் தோலுமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. தாகூர் கிண்டலும் எகத்தாளமுமாக இவ்வாறு எழுதுகிறார்: ‘வைத்யநாத் நிறைந்து வழியும் தனது செல்வங்களின் நடுவில் அமர்ந்து கொண்டு யார் இதை ஒருநாள் உண்ணப் போகிறார்கள் எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கொலைப் பட்டினியிலும் பஞ்சத்திலும் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய நாடு தனது காலித் தட்டைப் பார்த்தபடி, என்ன சாப்பிடக் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது.’

பாஸனின் மத்யம வ்யாயோகம்

கடோத்: என்ன? நீயும் மத்யமனா?

பீமன்:  உம். நான் பாகுபாடு இல்லாதவன். ஏழை,பணக்காரன் என  வேறுபடுத்திப் பார்க்காதவன். மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் சகோதர வரிசையில் நான் நடுவில் இருப்பவன். [வட மொழியில் மத்யமன் என்பதற்கு     பாகுபாடற்றவன் என்ற பொருளுமுண்டு.]

தமிழ்க்கவிதைகளுக்கான ஆங்கிலப் பாலம்

கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

மகரந்தம்

சீனர்களுக்கு எண்கள் மீது அப்படி ஒரு காதல். சீனாவில் கார் வாங்க, விற்க 92.காம்; வலையில் விளையாட 4399.காம். ஆங்கிலம் என்பது சீனர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது என்றால், எண்கள் என்றால் வெண்ணெய் உண்பது போல் சுளுவானது. அதுவும் ஆங்கில இணைய முகவரிகளையும் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்களையும் ஹாட்மெயில்.காம் என நினைவில் வைத்திருப்பதை விட அதை ஒத்த சீன எண்களை ஞாபகம் வைப்பது சுலபம். அதிலும் ஒத்த ஒலியுடைய வார்த்தைகளும் எண்களும் இருப்பதால், சீனத்தை இணையத்தில் புழங்குபவர்கள் இடையே இது சுருக்கெழுத்தாகவே மாறிவிட்டது. 1 என்றால் “வேண்டும்”; 2 என்றால் “காதல்”