பாகிஸ்தான் போகும் ரயில் – புத்தக அறிமுகம்

இது போன்று இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த துயர சம்பவங்களை குஷ்வந்த் சிங் எழுதி இருப்பார். அழுகை வரும். புதிதாக திருமணமான பெண். கணவனுடன் தனியாக இருக்கும் ஆசைகளை அசைபோட்டபடி பேருந்தில் செல்கிறாள். அவள் ஆசையாய் அவள் கணவன் கட்டிலில் உடைப்பதற்காக கண்ணாடி வளையல்களை கழட்டாமல் இருக்கிறாள். ஓரிடத்தில், இஸ்லாம் மதத்தவர் பேருந்தை நிறுத்தி ஆடைகளை அவிழ்த்து முசல்மான் என்பதை நிரூபிக்க சொல்கிறார்கள். இவன் முசல்மான் இல்லை என அறிந்ததும் …

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 3

மூன்று சேவைகளுக்கான இந்த குணாதிசயங்களை மேலும் போட்டு குழப்பிவிட பல்வேறு புதிய சேவைகளும் தேவைகளும் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் உங்கள் கணிணியில் யூட்யூப் தளத்தில் இருந்து ராஜராஜசோழன் படம் பார்க்க ஆரம்பித்தால், தொலைக்காட்சி சேவைக்கான தேவைககள் உங்கள் கணிணிக்கு பொருந்தும். கணிணியிலிருந்து ஸ்கைப் வழியாக ஊரில் இருக்கும் பாட்டியுடன் பேச ஆரம்பித்தால் தொலைபேசி சேவைக்கான தேவைகள் கணிணிக்கு பொருந்தும். மாறாக எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ சாதனங்களை உபயோகித்து டி‌வி மற்றும் இணையம் வழியாக பூமிக்கு அந்தப்பக்கம் இருக்கும் பங்காளியுடன் ஊடாடும் வீடியோ கேம் விளையாடினீர்களானால், தொலைபேசியின் “என் பொட்டலங்கள் எங்கும் நிற்கக்கூடாது” என்ற அவசரம் தொலைக்காட்சிக்கு வந்து விடுகிறது!

பாஸனின் 'கர்ணபாரம்'

கர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த  கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.

தடம்  சொல்லும் கதைகள்

“அது சிறு புள்ளியாகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பாக்கி இருந்த நாங்கள் – 26 பேர் கொண்ட குழு – அவரவர் முகாமிற்கு அமைதியாக திரும்பி வேலை பார்க்க ஆரம்பித்தோம். மனசு கொஞ்சம் கனத்துதான் இருந்தது. வெளி உலகுடன் எங்களுக்கு அந்த ஹெலிகாப்டர்தாம் கடைசி இணைப்பு. அதுவும் போய்விட்டது. இனி அடுத்த 6 மாதத்திற்கு – அடுத்த வேனிற்காலம் வரும்வரையில் வெளியுலகுத் தொடர்பே எங்களுக்கு கிடையாது.” என்று அவர் விவரிக்கையில் என் மனம் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து பார்த்தது – 6 மாதம், அந்தக் கடும் குளிர் பிரதேசத்தில் பெங்குவின்கள் மட்டுமே துணையோடு – எப்படி இருக்கும்?

நெருப்பும் புகையும் கண்டறிவான்

வெண்மை நிறத்தில் வட்ட சதுரமாக, கவனத்தை கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த கருவியைப் பார்க்கும்போது, சூரியகாந்தி பூவின் அழகான பாங்கு நம் நினைவிற்கு வருகிறது. மற்ற தெர்மொஸ்ட்டட்களைப் போலவே இவையும் அளவிற்கு அதிகமான புகையோ அல்லது கரிமம் ஓருயிரகம் (carbon monoxide) வாயுவோ உணர்ந்தறியப்படும்போது, நம்மை எச்சரிக்கின்றன. இது தான் இக்கருவிகளின் முக்கிய வேலை ஆகும். எனவே பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஒரே காரணத்தினால் மட்டும் இதை $129 விலை கொடுத்து வாங்கிவிட முடியுமா என்ன!?

ஆலிஸின் அற்புத உலகம்

லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland) புனையப்பட்ட அற்புத உலகை ஓவியமாக்கி இருக்கிறார்கள். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு புதுமையான உலகத்தைக் காணும் ஆலிஸ் சிறுமியின் கதையை மனமயக்கும் விதமாக வரைந்து அசல் கதையின் பூடகமான கேள்விகளை உணர்த்துமாறு வடிவமைத்து இருக்கிறார்கள்.

மண்புழு மன்னர்

உடுமலைக்கு அருகில் சுண்டைக்காய்ப் பாளையம் உள்ளது. அங்கு சுண்டைக்காய் கிடைக்காது, செல்வராஜ் நாயுடு கிடைப்பார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இயற்கை விவசாயிகள் பத்து பேரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அப்பட்டியலில் இவர் நிச்சயம் இடம் பெறக்கூடியவர்.

தாபசாந்தி – எம் டி வாசுதேவன் நாயரின் வாராணசி

வாராணசி: முரணுரைகளின் நகரம்: எந்நேரமும் சிதையில் பிரேதங்கள் புகையும் நகரம், அமைதியை மனிதர் அறியும் நகரம்: மாண்ட மிருகங்கள் மிதந்து செல்லும் கங்கை நதி, அனைவரின் பாபங்களையும் கரைக்கும் கங்கா ஜலம்: காமமும் மரணமும் அருகிருக்கும் நகரம். நீண்ட காலத்துக்குப்பின் இந்த நகருக்குத் திரும்புகிறான் சுதாகரன். ஒரு காலத்தில் தன் நண்பனாகவும் ஆசானாகவும் இருந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் அழைப்பை ஏற்று வாரணாசி வந்தடையும் சுதாகரனுக்கு இப்போது வயது 60.. இந்தப் பயணம் சுதாகரனின் கடந்த காலத்துக்குச் செல்லும் பயணம், அதன் தாக்கங்கள் அவனது நிகழ்காலத்தை பாதித்திருப்பதை உணரும் அறிவுப் பயணம்.

கடைசிக் கனவு

என்னை இன்று கொலை செய்யப் போகிறார்கள். சரியாகச் சொல்லப் போனால் தூக்கிலிடப் போகிறார்கள். தூக்கில் தொங்கும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைத் தூக்கிலிடுகிறவனின் மனநிலை எப்படியிருக்குமென்பது தெரியும். நானும் இதற்கு முன்னால் அந்த பொறுப்புமிக்க பணியைச் செய்தவன் தான்.

மகரந்தம்

உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், ஜனநாயக நாடாகவும் கருதப்படும், தன்னை அப்படியே உலகுக்கு முன் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா உண்மையில் எப்படி இருக்கிறது? நடைமுறையில் ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை வைத்துத்தான் இப்படிக் கேள்விகளுக்குப் பதில் காண முடியும். சில நடப்புகளை வைத்து ஒரு நாட்டையே எடை போட முடியாது என்பது உண்மைதான். ஆனால் இங்கு கொடுக்கப்படுவது ஏதோ சில நடப்புகள் மட்டும் அல்ல. பல லட்சம் பேர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் சில நடப்புகளைப் போன்றன ஏற்கனவே கடந்த சில வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்பது அமெரிக்காவின் கடந்த சில வருட நிதி நிலைமையையும், அது சார்ந்த பல குளறுபடிகளையும் பற்றிய செய்திகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கவிதைகள்

வீடுகளுக்கிடையே
சிக்கியிருக்கும் மரங்களுக்குமேல்
பறவைகள் சிறு கூட்டமாக
செல்கின்றன.
வானம் விளக்கணைத்து
காத்திருக்கிறது
இமையாது ஒளிரும்
ஜன்னல்களுக்கு வெளியே.

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான் – மறுவினை

சொல்வனத்தில், “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்” என்று சுந்தர் வேதாந்தம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர், அதில் இருந்த சில கருத்துக்களைக் குறித்து என்னுடைய கருத்துக்களையும் கேட்டார். அப்படித் தான் நான் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுந்தர் அவர்கள் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், சுந்தர் அவர்களின் கட்டுரை, சட்டம் பற்றியது. அதில் சில முக்கியமான கருத்துப் பிழைகள் உள்ளதால், அதனை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.

என் தோட்டம் வளர்ந்த பிறகு

கடுமையான வறுமையையும் உலகின் எல்லாவிடங்களில் இருந்தும் பட்டினியை நீக்கவும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முயல்கிறது. அதற்கான பொதுமக்களின் உரையாடலை பொதுப்பரப்பில் பரவலாக்க சண்டான்ஸ் நிறுவனமும் குறும்படங்களைக் வெளியிடுகிறது.. ஆவணப்படங்களைப் பரவலாகப் பலரிடமும் கொண்டு செல்வதிலும் சண்டான்ஸ் தீவிரமாக இயங்குகிறது. அப்படி எடுக்கப்பட்ட படங்களை இங்கு பார்க்கலாம். மேற்கு வங்காளத்தில் பெண்களை “என் தோட்டம் வளர்ந்த பிறகு”

காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 1

மேலே தரப்பட்டுள்ள மேற்கோள்களில் முதலாவது  காப்ரியல் கார்சியா மார்கேஸின் நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவலின்  பிரசித்தி பெற்ற ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  அதில், உறக்கமின்மை என்ற கொள்ளை நோயால் தாக்கப்பட்ட பின் மக்கோண்டோ என்ற ஊரே  ஞாபக மறதியால்  பாதிக்கப்படுகிறது. இந்த நோய்மையிலிருந்து மீள  ஆரேலியானோ புவெந்தியா என்பவர்  வலுவானதொரு  சூத்திரத்தை உருவாக்குகிறார்: ஊரிலுள்ள அனைத்துப் பொருட்கள் மீதும்  அவற்றின் பெயர்களை குறியிடுகிறார் – மேஜை, நாற்காலி, கடிகாரம், சுவர், கட்டில், பசு, ஆடு, பன்றி, கோழி. சதுப்பிற்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் மக்கோண்டோ  என்ற குறிப்பலகையையும் , அதை விடப் பெரிதாக, பிரதான சாலையில், கடவுள்  இருக்கிறார்   என்று அறிவிக்கும் மற்றொரு பலகையும் எழுப்பினார்கள்.

பேட்டிகள் – சில குறிப்புகள்

நாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம்? ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்? புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது?

இங்கிலீஷ்

ஒரு வெயில் ததும்பிய மதியவேளை. மாணவர்கள் மூன்று, மூன்று பேராக கைகளைக் கோர்த்துக்கொண்டு பள்ளியிலிருந்து நடக்க ஆரம்பித்தோம். எனது இடது கையைப் பிடித்துக்கொண்டு வந்த பையன் யார் என்று நினைவில் இல்லை. ஆனால் வியர்வை ஈரத்துடன் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு வந்த மாலதி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறாள். இது ஏன் என்று என் கள்ளங்கபடமற்ற(?) மனதிற்கு இன்றும் புரியவில்லை. நடந்து சென்ற நாங்கள் மருதையாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்துக்குக் கீழிருந்த மணலில் எங்களை குழு குழுவாக உட்கார வைத்து புளிப்புமிட்டாய் கொடுத்தார்கள்.

அர்சுலா லெ குவின் – புனைவின் கலை

நான் யோசிப்பது என்னவென்றால், அதை ஒரு மத வழிப் பார்வை என்று சொல்ல முடியாது, ஏனெனில் மதம் என்ற சொல்லே பிரச்சினையானது- நான் டாவோயியத்திலும், பௌத்தத்திலும் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அவையும் எனக்கு நிறைய அளித்திருக்கின்றன. இப்போது, டாவோயியம் என்பது என் புத்தியின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. அப்புறம் பௌத்தம் என்பது குறித்து என் ஈடுபாடு தீவிரமாக உள்ளது. அதை மத வழி புத்தி என்று நாம் அழைக்கவில்லை என்றால், ஆன்மீகம் என்று அழைக்க வேண்டி வரும். அதுவோ மிகவும் இரண்டுங்கெட்டதாக, பட்டும் படாமலும் இருப்பது போலத் தெரியும். மதம் என்பது சில பெரும் பிரச்சினைகளைக் கையாளப் பார்க்கிறது, அதில் எனக்கு மிகவே ஈடுபாடு இருக்கிறது.