தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் போஸ்டர்களையும் கூட ஆன்ட்ரி தர்கொஸ்கி எவ்வாறு கலைநயத்துடன் மிளிர வைக்கிறார் என்பதைத் தொகுத்திருக்கிறார்கள்:
Category: இதழ்-102
அமர்: வாழ்க்கை
பதினான்கு வயது சிறுவனின் ஒரு நாள் நடவடிக்கைகளை படம் பிடித்திருக்கிறார்கள்.
இடமற்ற இடத்திலிருந்து, இடத்தைப் பற்றி…
நானும் வேர்கள் இல்லாததால்தான் நான் பிறந்த இடத்தை விட்டு, சென்னை என்ற இடமற்ற இடத்துக்கு வந்திருக்கிறேனோ? ஒரு மனிதனின் முன்னோர்கள், அவர்களின் மூதாதையர்கள் வழி வழியாக வாழ்ந்து, அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நிலம், உடமைகள் யாவும் அவனுக்குக் கையளிக்கப்படும் இடம் எதுவோ அதுதான் அவனுக்குரிய இடம். அவனது வம்சாவளியின் வரலாறு, அவனது முன்னோர்களின் கல்லறைகள் போன்றவை இருக்கும் இடமும் கூட. அந்த இடத்திலிருந்து அவன் பிதுக்கப்பட்டு வெளியே வேறு இடம் நோக்கித் துப்பபடும் போது அவனுக்கு வாய்க்கும் இடம்தான் இடமற்ற இடம் (non-place). பின் நவீன யுகம் மனிதனுக்குப் பல இடமற்ற இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி
தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும்.
அந்தரங்க ஆனந்தம்
புத்தகங்கள் மீது தீராப்பசி கொண்ட எந்த குழந்தையும் கனவு காணும் ஒன்று அவளுக்கு வாய்த் திருந்தது, புத்தகக்கடை உரிமையாளரான தந்தை. அதை அவள் ஒன்றும் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லைதான். நாங்கள் அவள் அளவிற்கு கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை. எங்கள் பிறந்தநாள்களுக்கு மலிவான சிறிய புத்தகத்தை கூட கொடுக்காமல், தன் தந்தையின் கடையிலிருந்து புகைப்பட வாழ்த்தட்டைகளை அவளே நேரில் கொண்டு வந்து கொடுப்பாள்…
கடன்
ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம்.
கவிதைகள்
அது சாராவின் கையெழுத்துதான்
சந்தேகமில்லை.
ஆண்டுகள் ஆனபின்னும்
ஆவியாக ஆனபின்னும்
சாரா இன்னும் மாறவில்லை.
வைரமணி நீரலைகள்…
முதலில் பருப்பு வேகும் வாசனை, குக்கர் விசில், பின் வெங்காயம் வறுபடும் வாசனை, முருங்க இலை நெய்யில் வறுபடும் வாசனை, சற்று நேரம் கழித்து சாம்பார் கொதிக்கும் சத்தமுடன் சாதம் வேகும் வாசனை என்று சமையல் மெல்ல, மெல்ல விடிந்து உச்சி வேளையாக வசந்தாக்கா பாத்திரங்களை ஷெல்பின் அடியில் அடுக்க ஆரம்பித்தார்.
காகசஸ் மலைக் கைதி – 5
எல்லாம் முழுவதுமாக அமைதியான உடன், ஜீலின் சுவற்றினடியே குழியினுள் சப்தமின்றித் தவழ்ந்து வெளியே போய், கஸ்டீலினிடம் ரகசியக் குரலில், “வா!” என்றான். கஸ்டீலினும் தவழ்ந்து வெளியே வந்தான்; ஆனால் வரும்பொழுது அவனது காலில் ஒரு கல் இடறவே, சப்தம் ஏற்பட்டது. எஜமானனிடத்தில் துஷ்டத் தனம் மிகுந்த ஓல்யாஷின் என்ற பெயர் கொண்ட, புள்ளிகள் நிறைந்த ஒரு காவல் நாய் இருந்தது. ஓல்யாஷின் இந்த சப்தத்தைக் கேட்டதும் குரைத்தபடி குதிக்க ஆரம்பிக்கவே, மற்ற நாய்களும் அதனுடன் சேர்ந்து கொண்டு அதையே செய்தன.
திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்
” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “
என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்…
ஒற்றன்
மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’
அஞ்ஞாத வாசம்
“ஹா! ஹியர் கம் த த்ரீ மஸ்கிடியர்ஸ்” என்று ஜூல்ஸ் அருகிலிருந்த மோகனாவிடம் சொல்ல, பதிலுக்கு “டிட் யூ மீன் டு சே த த்ரீ ஸ்டூஜஸ்?” என்றபடி புன்னகைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்து கொண்டான் ராஜன். கூடவே வந்த வின்சென்ட்டும், சின்டியும் ஆளுக்கொரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு அமர்ந்தனர். அந்த காஃபெடேரியாவில் அத்தனை கூட்டம் இல்லை. அங்குமிங்குமாக சிலர் சிதறிக் கிடந்தனர். அவர்கள் மேசைகளில் எல்லாம் பண்டங்கள் இருந்ததோ இல்லையோ, மடிக்கணினிகள் இருந்தன…
சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
ஆனால் வெகு சீக்கிரம் நாலைந்து வருடங்களுக்குள் அவரது வெளிப்படையான தைரியமும், கபடமற்ற எண்ணங்களும், மனதில் பட்டது எதையும் அதன் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது வெளிப்படுத்துவதும் என்னை மிகக் கவர்ந்தன. அவரிடம் எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டன. பெரிய செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தவர் தில்லி தலைநகரமாக நிர்மாணிக்கப்படும் கால கட்டத்தில் கட்டிட குத்தகைகாரராக சம்பாதித்தவர் அவருடைய தந்தை. குஷ்வந்த் சிங் அந்தச் செல்வத்தின் படாடோபம் சற்றும் இல்லாதவர்…
தி க சிவசங்கரன் என்ற தி க சி
தி க சி யின் மரணம் அவர் நினைத்தபடியே நடந்தது என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. தனது மரணம் சமீபித்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார்கள். 29.12.13 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் திருநெல்வேலி சென்றிருந்த போது, அவர்களது 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டில், சந்தித்தோம். பழங்கள் (இனிப்பு கூடாது என்பதால்) காரவகைகளுடன் சென்றிருந்தோம். எதையோ படித்துக் கொண்டிருந்த தி.க.சி. எங்களைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “வாங்கய்யா” என்று வரவேற்றார்கள். மிகவும் மெலிந்திருந்தார்கள் என்றாலும் முகத்தில் அயர்ச்சியோ சோர்வோ இல்லை.
என் கையில் கையினால் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். “படியுங்க” என்றார்கள். அந்த பேப்பரில் “இதயம் பலவீனமாக இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசவேண்டாம். கடலைமாவு பலகாரங்கள் கொடுக்கவேண்டாம். அதிக நேரம் பேசவைக்காதீர்கள்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
படித்துவிட்டு நிமிர்ந்த என்னைப் பார்த்து சிரித்தார்கள். “டாக்டரோட யோசனைகள்” என்றார்கள்.
மகரந்தம்
சினிமாவைப் பற்றி என்பதை விட அதன் பின்னணியில் என்னென்ன கிறுக்குத் தனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். உலகெங்கும் பெண்கள் மீதான வன்முறை குறித்து ஏராளமான தகவல்களும், செய்திக் குறிப்புகளும், கடும் விமர்சனங்களும், பெண்களின் போராட்டங்களும் எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில்தான் உலகெங்கும் பன்னாடுகளிலும் பெண்களுக்கெதிரான சட்டங்களும் அடக்கு முறையை நாடும் பழம்பெருமை இயக்கங்களும் தலையெடுத்திருக்கின்றன.
வாசகர் மறுவினை
கதையைப் படித்து முடித்ததும், அவர் இளமையில் வசித்த ‘லான்சர் பாரக்’ சென்று தற்போதைய நிலையைப் பார்த்து எடுத்த சில புகைபடங்களை சொல்வனத்திற்காகப் பகிர்ந்து கொள்கிறேன். பழைய கட்டிடங்கள் அடுக்கு
மாடிகளாக ஆகியிருந்தன. காலனியிலுள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய படி இருந்ததைப் பார்த்ததும் 18 ம் அட்சக்கோடுகளில் அவ்ர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதைப் படித்தது நினைவில் வந்தது.
மொழிபெயர்ப்பு கவிதைகள்
எனினும் சிலசமயம் அது வருகிறது
கருப்புக் கோழியாக
உருண்ட சிகப்புக் கண்ணுடன்