அம்பை – ஒரு எதிர் அணுக்க மதிப்பீடு

அம்பை எழுத்தாளர் என்பதைத் தாண்டி களத்தில் இயங்கும் ஒரு பெண்ணியலாளர். அவரது ‘ஸ்பாரோ’ அமைப்பு பெண் குரல்களை அனுபவங்களை ஆவணப்படுத்தும் செயலை பல்லாண்டுகளாக செய்து வருகிறது. அதில் அவருக்கு எவ்வித கோட்பாட்டு சார்பும் இல்லை. இதனால் ஸ்பாரோ அமைப்பின் ஆவண சேகரிப்பு இந்திய பெண்களைக் குறித்து அறிந்திட சிறப்பான தரவு பொக்கிஷம். குறிப்பாக அவர்கள் வெளியிட்டுள்ள, அதிகம் வெளியே தெரியாத விடுதலைப் போராட்ட பெண் மாந்தர் (அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது விடுதலை போராட்டத் தியாகிகளின் மனைவியர், சகோதரிகளாக இருக்கலாம்), அறிவியல் துறையில் பெண்கள், இலக்கியத்தில், நிகழ் கலைகளில், கிராம கலைகளில் பெண்கள், குடும்பங்களில் உள்ள பெண்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள

நந்தினி

திடீரென மரத்தின் இலை மறைவிலிருந்து சரசரவென இறங்கியது பெரிய குண்டு அணில். தரைக்கு வந்ததும் கும்பிடுவது போல முன்னங்கால்களை எம்பி உயர்த்திக்கொண்டு நின்றது. மூக்கை சிலிர்த்துக்கொண்டு மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. சீரியல் வளையங்களை அள்ளிக்கொண்டு உட்கார்ந்து தரைமீது கையை விரித்தபடி முகம் மலர்ந்து ”வா வா” என்றாள். சில நொடிகள் தயங்கி நின்று எதையோ உறுதிப்படுத்திக்கொண்டு விட்டது போல உடலை தாழ்த்தி அவளை நோக்கி தாவி ஓடி வந்தது அணில். வளையங்களை முன்னங்கால்களால் பொறுக்கி வாயில் வைத்து கவ்விக் கொண்டுபோய் மரம் தரையைத் தொடும் இடத்தில் வைத்தது. திரும்பி வந்து அவளுக்கு அருகில் சிதறிக்கிடந்த எல்லா வளையங்களையும் பொறுக்கிக்கொண்டு போய் மரத்துக்குக் கீழே வைத்தது. வளையங்களை வாய் நிறைய கவ்வி எடுத்துக்கொண்டு மரத்திலேறி இலைகளுக்குப்பின் காணமலாகியது.

கோட்டை

மாட்டை வைத்துக்கொண்டு நாங்கள் பட்ட பாடு யாருக்கும் தெரியவில்லை. உலகிலேயே நாங்கள் மட்டும்தான் கறந்த பாலைக் குடிப்பது போல எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். நாங்கள் பல நாட்கள் எங்கள் அண்டை அயல் வீட்டாருக்கு இலவசமாக மோர் கொடுத்திருக்கிறோம். மோருக்கு முதலில் பாலைக் காய்ச்சவேண்டும். பால் ஆறிய பிறகு துளி தயிர் விட்டு அதைத் தயிராக்க வேண்டும். அப்புறம் தயிர் கடைய வேண்டும். மிகுந்த நேரமும் பொறுமையும் தேவைப்படும் பணி அது.

தாக்கல் சொல்லும் தான்தோன்றித்தனம்

இது தேர்தல் காலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேட்பாளர்களளைப் பார்க்க கூட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கே விடிய விடிய எல்லோர் பேசுவதையும் கேட்பார்கள். துண்டு சீட்டில் விளம்பரம் அடித்து ஒட்டுவார்கள். சுவரெங்கும் ஓவியம் வரைந்தார்கள். இணையம் வந்த பிறகு இந்த முறை மாறுகிறது. வேட்பாளரை ட்விட்டரில் சந்திக்கலாம். ஃபேஸ்புக் மூலமாக வினா எழுப்பலாம். ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பேட்டியில், அதுவும் சில மணித்துளிகளே நீடிக்கக் கூடிய நேர்காணலில், நிருபர் ஒருவர், தமிழக முதல்வரை கேள்விகளால் துளைப்பார்….

கவிஞர்களின் நாவல்கள்

யூமா வாசுகியின் “மஞ்சள் வெயில்” படித்து முடித்த சில நாட்கள் அந்த நாவலில் கையாளப்பட்டிருந்த மொழி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைக் காதல் தான் கதை. ஆனால் அது சொல்லப்பட்டிருந்த விதம் நாவலைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் (இரவு இரண்டு மணி வரை) படிக்கச் செய்தது அதன் மொழியே என்று இப்போது தோன்றுகிறது.

ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்

உலக சினிமாவில் அவ்வப்போது அந்தக் கலையை முன்னெடுத்துச் செல்லும் சில படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகும். அவை பெரும் திரளான மக்களின் அபிமானப் படங்களாக இல்லாமல் போகலாம். ஆனால் துறை வல்லுநர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட படைப்புகளாகவோ, அல்லது ஏராளமான இளம் கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பனவாகவோ அமைந்து துறையில் ஒரு புது “ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்”

ஒரு குடும்பம் சிதைகிறது – எஸ்..எல்.பைரப்பா

எழுதப்பட்டு பலகாலத்திற்கு பின்னர் இன்று அது ஒரு பெண்ணிய பிரதியாக நிலைபெற்றிருக்கிறது என்கிறார் ஜெயமோகன். மனிதர்கள் மனிதர்களை கொன்றொழிப்பது எத்தனை விசித்திரமோ அப்படி பெண்ணின் இழிநிலைக்கு அவளே காரணமாவதும் பெரும் விசித்திரம்தான். அன்பும், தாய்மையும், கருணையும், புத்திசாலித்தனமும் ததும்பும் நஞ்சம்மா ஒரு முனை என்றால் மறுமுனையில் குரோதமும் முட்டாள்தனமும் நிரம்பிய கங்கம்மா.

உயிர் பெற்றெழச் செய்யும் பெண்கள்

பெண்கள் தினத்திற்காக கார்னெகி கவுன்சில் தங்களுடைய பேட்டிகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். சிங்கப்பூர் முதல் சொமாலியா வரை உலகெங்கும் மாற்றத்திற்கு வித்தாக உள்ளவர்களையும் அவர்களின் பேட்டியையும் இங்கே காணலாம்.

சார்புகள் – நுண்கணிதத்தின் நுழைவாயில்

நீங்கள் பைக் அல்லது காரில் பயணிக்கிறீர்கள். உங்களுடைய வேகம் எப்படி கணிக்கப்படுகிறது? நீங்கள் பயணித்த தூரத்தை, பயணம் செய்த நேரத்தால் வகுத்தால் கிடைப்பது வேகமாகும். நீங்கள் ஸ்பீடாமீட்டரைப் பார்க்கும்போது அது 40 கி.மீ. வேகத்தில் செல்வதாக காண்பிக்கிறது. இங்கு நீங்கள் ஸ்பீடாமீட்டரை பார்க்கும் கணத்தில் வண்டி செல்லும் தூரம் சூன்யம்தான். அதாவது பயணித்த தூரம் மற்றும் நேரம் இரண்டுமே சூனியம்தான். இங்கும் 0/0 தான் கிடைக்கிறது. ஆனாலும் எப்படி ஸ்பீடா மீட்டர் 40 கி. மீ. எனக் காண்பிக்கிறது?

ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி? – 2

தொடர்ந்த சில பல நாட்களில் இந்த உயிரணுக்கள் மற்ற மாதிரிகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை என்று ஆய்வகத்திலிருந்த அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹென்றியேட்டாவின் வயிற்றில் எந்த மருந்து மாத்திரை கதிர்வீச்சு சிகிச்சைகளுக்கும் பணிந்து விடாமல் ஒரு கால்பந்து அளவுக்கு வளர்ந்த அந்த கொடிய புற்றுநோய் உயிரணுக்கள் அதே அசுரவேகத்துடன் ஆய்வகத்திலும் வளர ஆரம்பித்தன. அது மட்டுமில்லை. சாதாரணமாக நன்கு வளருவதாக கருத்தப்படும் உயிரணுக்கள் கூட இரு பரிமாணங்களில் மட்டும்தான் வளரும். அதாவது ஒரு தட்டிலோ குடுவையிலோ அவை வளரும்போது கிடைமட்டமாக ஒரு அடுக்கு பாத்திரத்தின் சுற்றளவு வரை வளர்ந்துவிட்டு போதும் என்று நிறுத்திக்கொண்டுவிடும். ஹென்றியேட்டாவின் உயிரணுக்களோ அடுக்கடுக்காக மூன்று பரிமாணங்களிலும், ஊட்டச்சத்து கிடைக்கும்வரை, வைத்த பாத்திரங்களை பொங்கல்பானைகளாக கருதி வளர்ந்து பொங்கி வழிந்து கொண்டே இருந்தன. உயிரியல் ஆய்வகங்களின் வழக்கப்படி இந்த உயிரணு வரிசைக்கு கொடையாளரின் பெயரின் முதலெழுத்துக்களை சேர்த்து ஹீலா செல் வரிசை என்று பெயர் வைக்கப்பட்டது.

அரை நூற்றாண்டு கண்ட ‘காதலிக்க நேரமில்லை’

* திருமணத்துக்கு முன் காதல் தோல்விகளைக் ‘காவிய'(!) மாக்கிய ஸ்ரீதர், தேவசேனாவைக் காதலித்து மணந்த பின் ரசிகர்களுக்கு அளித்த ‘கல்யாண பரிசு’ (ராசி கருதி ஸ்ரீதர் ‘ப்’ பை விட்டு விட்டார்)ம், ரசிகர்களை அழைத்துச் சென்ற ‘தேன்நிலவு’ம் ‘காதலிக்க நேரமில்லை.’
* எந்த எதிர்பார்ப்புகளுக்கும் ஆளாகாத அன்றைய தமிழ்த் திரை மூவேந்தர்கள் இல்லாத, பிரபல காமெடியன்களோ, வில்லன்களோ, கதாநாயகிகளோ நடிக்காத காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கொண்டாடியது.

ஆர். ஏ. மஷேல்கர்

பாஸ்மதி அரிசி என்றாலே புலாவ் ஞாபகமும், வட இந்தியாவும் நினைவில் வந்து போகும். இப்படி இருக்கையில் திடீரென்று அமெரிக்க நிறுவனம் ஒன்று பாஸ்மதி அரிசியின் மேல் காப்புரிமை கோரினால் இந்தியா சும்மா இருக்குமா? 1998 ம் வருடம்; டில்லி. பாஸ்மதி காப்புரிமை குறித்து சர்ச்சை ஆரம்பித்தவுடன் இது பற்றி இந்தியாவின் நிலை மற்றும் பின்புலம் பற்றி செய்தி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி ஆர். ஏ. மஷேல்கரை அப்போதுதான் சந்தித்தேன்.

எழுத்துரு வாதம், பிரதிவாதம் – ஒரு விவாதம்

உருவகமாக கிரியாஉக்கி மூலம் ரசாயணத்தின் அகங்களை கொப்பளிக்க வைக்கும் அறிவியல் முறையை சொல்லலாம். இங்கே அந்த கிரியாஉக்கி ஒருநோக்கு படைத்த மெய்மையை வந்தடையும் இலக்கை கொண்ட சிந்தனையாளர்களின் தர்க்கமே. இந்த பகுத்தறிதலால் இதர நலிந்தக் கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது தான் இந்த முறையின் இயல்பு. அப்படி மெலிந்த தன் கருத்துக்களை நிராகரிக்கப்பட்டு தர்க்கம் ஒருவரை கடந்து செல்ல முற்படும் பொழுது அவர் இதை தனிப்பட்ட தோல்வியாகவோ, அவமானமாகவோ, தாக்குதலாக எடுத்துக் கொள்வது, அதனால் பிறர் மீது தனிப்பட்ட முறை தாக்குதல் நடத்தி அவரையும் நிலைகுலையச் செய்து தர்க்கத்திற்கே பங்கம் விளைவிப்பது, போன்றவை இந்த அறிதல் முறையின் மிகப் பெரிய கவனச் சிதறல். சில மாதங்களுக்கு முன் எழுந்த எழுத்துரு விவாதம் தமிழகத்தின் சிந்தனைத் தளங்களில் தன் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டியது.

என் நண்பன் ஐராவதம்

அங்கு பெரியவர் ரா.வீழிநாதன் அவர்கள், “சாதனா சமாஜ்” என்று ஒரு சபையை நடத்தி வந்தார். அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனை 2 மணி நேரம் நடக்கும். அங்குதான் நான் ஸ்வாமிநாதனை முதலில் சந்தித்தேன். பதினைந்து நிமிடம் அவன் லா.ச.ரா, தி.ஜானகிராமன் முதலிய பிரபல தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது நாவல்களையும் பற்றிப் பேசினான். நானோ முழு சூன்யம். “நாளைக்கு ஸ்கூல் இல்லை. எங்கேயாவது வெளியே போவோம்,” என்றான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்தான். நாந்தான் அவற்றைச் சரியாய் உபயோகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்குக் குடும்பச் சுமைகள் அதிகம். ஆனாலும் ஸ்வாமிநாதன் என்ற அந்த நண்பன் என்மீது விடாமுயற்சிகள் செய்து வந்தான்.

கவிதைகள்

கனவை உடுத்தபடி
இரவிலசையும் நதி
தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின்
நான் வெளியேறிவிடுகிறேன்.
துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும்
தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும்

அத்திமரம்

மரம் அவனைவிட நான்கு மட‌ங்கு பெரியதாக இருந்தது. மரத்தின் உச்சிவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டான் உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த‌ நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்தது. மரத்தைச் சுற்றி, ஒரு அவசரத்தில் அமைக்கப்பட்டிருந்தது போலிருந்த‌ கல்தளத்தில் மண்ணை நன்கு ஊதிவிட்டு அமர்ந்துகொண்டான். அமர்ந்ததும் அதன் தொடர்ச்சியாக ஆசுவாசப்படுத்தும் தோரணையில் மூச்சை வேகமாக வெளியேற்றி சுற்றுமுற்றும் பார்த்தபடி கால்களை இருமுறை தேய்த்துக்கொண்டான். சின்ன மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டவைகளில் இதுவும் ஒன்று. அணிந்திருந்த புதிய தோல் செருப்பின் தன்மை அழகாக, தடித்த தரையில் தேய்க்கும்தோறும் ஏற்படும் ஒலி கிளர்ச்சியாக இருந்தது. நடந்துவந்தபோது அது ஏற்படுத்திய கிளுகிளுப்பு அவன் மனதிலிருந்து இன்னும் அடங்கவில்லை.

காலத்தின் கட்டணம்

ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார். ரிசர்வ் வங்கியில் “காலத்தின் கட்டணம்”

அமெரிக்காவில் கதிரொளி ஆற்றலின் பிரும்மாண்டங்கள்

அக்டோபர் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது சோதனைக் கட்ட நிலையில் இருக்கும் 3500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையம், சரியாக இயங்குமேயானால், உருவாக்கபடும் மின்சாரமானது இந்த வருட முதல் பாதியில் கலிபோர்னியா மாநிலம் முழுவதுமாக உபயோகப்படுத்தப்படும். இவ்வாறாக சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் மிகப்பெரிய நிலையமாக ஐவன்பா விளங்கும். இதனால் சுமார் 377 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு கிட்டத்தட்ட கலிபோர்னியாவின் 140,000 வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். இதை போன்ற ராட்சத அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளில் முளைக்கத் தொடங்கியுள்ளன. குத்து மதிப்பாக இதே போன்று 232 மின் உற்பத்தி நிலையங்கள் பலதரப்பட்ட கட்டங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

The Wolf of Wall Street – திரைப்படம்

ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். கடுமையாக உழைத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி, தனக்கும் பணம் சேர்க்கும் கனவோடு, அனுபவமில்லா இளைஞனாக ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் சேரும் ஜோர்டானுக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறார் முதலாளி. முதலீட்டாளனை ஏமாற்றி, மேலும் மேலும் பங்குகளை வாங்க, விற்க வைத்து, இரண்டு முறையும் தரகு பெற்றுக் கொள்வதே அடிப்படைப் பாடம். முதலீட்டாளனை, தன் முதலை வெளியே கொண்டு செல்ல விடாமல், மேலும் மேலும் அச்சுழலில் அமிழ்த்துவதே ஒரு பங்குச் சந்தைத் தரகன் செல்வந்தராகும் வழி என்னும் “உண்மையை” எடுத்துச் சொல்லி, தொட்டுக் கொள்ள கோக்கேயினையும் இதர போதைப் பொருட்களையும் பழக்கிவைக்கிறார். தாய் முலையறியும் சேய் போலப் பிடித்துக் கொள்கிறான் ஜோர்டான்.

மகரந்தம்

மேற்கில் மிருக வளர்ப்பு என்பது அனேகமாக எல்லா நகரங்களிலுமே தடை செய்யப்பட்டிருக்கிற ஒன்று. நாய்கள், பூனைகள் போன்ற சில வளர்ப்பு மிருகங்களுக்கு விலக்கு இருக்கும். ஆனால் அவையும் பெருமளவு நகர அனுமதி பெற்ற மிருகங்களாக இருக்க வேண்டி வரும். சமீபத்தில் அமெரிக்காவிலாவது ஓரளவு இந்தத் தடைகள் விலகி வருகின்றன. பலர் பலவித முன்னாள் குடியானவ வாழ்வுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் கோழி வளர்ப்பை மேற்கொள்ள முனைகிறார்கள். .

வாசகர் மறுவினை

சொல்வனம் 100 வது இதழ் நல்ல கட்டமைப்போடு வெளிவந்திருக்கிறது. அசோகமித்திரனின் படைப்புகளைக் குறித்த கட்டுரைகள் முக்கியமானவையாக தோன்றுகிறது. ஒரு இலக்கிய இதழ் நூறாவது பிரதி காண்பது மகிழ்ச்சியான விசயம் தான்.

காகசஸ் மலைக்கைதி – பகுதி 4

‘நல்லது,’ என எண்ணினான் ஜீலின், ‘இப்போது எனக்கு வழி தெரிந்து விட்டது; ஆகையால் தப்பிச் செல்ல வேளை வந்து விட்டது.’ அவன் அன்றிரவே தப்பி ஓடிவிட எண்ணினான். இரவுகள் இருளாக இருந்தன- அது தேய்பிறை நிலவாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகத் தார்த்தாரியர்கள் அன்று இரவே வீடு வந்து விட்டனர். அவர்கள் வழக்கமாக மாட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டும், உற்சாகமாகவும் திரும்பி வருவர். ஆனால் இந்த முறை மாட்டு மந்தைகள் இல்லை. அவர்கள் கொண்டு வந்தது …

சாதனை மன்னர் கரும்பாழ்வார்

இந்த படிக்காத பட்டிக்காட்டு விஞ்ஞானி, ஒரு கிலோ சர்க்கரை எடுக்க 1800 லிட்டர் தண்ணீர் போதும் என்று புள்ளிவிவரம் தந்துவிட்டு, வேளாண்துறை யோசனைப்படி ரசாயனக் கரும்பு விவசாயி ஒரு கிலோ சர்க்கரைக்கு 22000 லிட்டர் தண்ணீர் செலவழிப்பதாகக் கூறும் இவர், இந்த முறையில் தண்ணீர் 8 சதவிகிதம் மட்டுமே போதும் என்கிறார்! நீர்ச்சிக்கன வழிகாட்டியாக நிற்கும் இவரைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கரும்புப் பயிருக்குச் சொட்டு நீர் விட்டுவிட்டனர்..

அறிவியலும் பழந்தமிழ்ப் பாடல்களும்

பழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோகி, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.

வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை

ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன் (Chabon) ஒரு இடத்தில் “cabinet of mysteries that was the life of an ordinary man” என்று சொல்வது போல்…

மான்பெண்

பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.

தாது வருஷப் பஞ்சம்

பஞ்சங்களை நினைவு கூரும் ஒரு சில அடையாளங்களை இன்றும் சென்னையில் காணலாம். ஒரு உதாரணம், இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் – இதன் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சர்வ ரோகச் சாக்கடையாகச் சுருங்கி விட்டது. கொள்ளை நோய்களும், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் பஞ்சங்களின் உடனடி விளைவுகள். குறிப்பாக, பஞ்சத்தின் முக்கிய விளைவு மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பஞ்சத்தைத் தொடர்ந்து சென்னையில் அடிமை வாணிபம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்

வெய்யில்தோய்ந்த உன் முத்துச்சிற்பி உடலை வெகு காலம் நேசித்திருக்கிறேன்.
பிரபஞ்சமே உனக்கு சொந்தமென்று கூறும் அளவிற்கும் நான் செல்வேன்,
நான் உனக்கு மலையிலிருந்து கொண்டு வருவேன் மகிழ்சியான பூக்களை, நீலமணிகளை,