மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று 

Put புட் ஒப்பந்தத்தை  ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால்,  எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால்,  வாங்கறது  அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. 

ஸ்வர்ண சீதா என்ற நாவல்

சுவர்ண சீதா நாவலில் அனுமன் அந்த வேலையைத் தொடருவதாகவும் பாறைகளின் மேல் எழுதி கடலில் பாதுகாப்பாக வைப்பதாதாகவும் கூறப்படுகிறது. ஹனுமத்ராமாயணம் என்று ஒன்று இருப்பதாகவும், அனுமான் ராமனை அருகிலிருந்து பார்த்தவர் என்பதால் ராமனுடைய வாழ்க்கையை மலைப் பாறைகளின் மீது எழுதினார் என்றும் வால்மீகி ராமாயணத்திற்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று அதைக் கடலில் போட்டார் என்றும் உலக வழக்குச் செய்தி ஒன்று உள்ளது

 மரியா சிபில்லா!

1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.

தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.

பரிசு

பனிச் சிறுத்தைகளை படம் எடுப்பது மிகக் கடினம். முதலில் கண்களுக்கே எளிதாகத் தென்படாது. அவற்றுக்கு “ மலைப் பேய் “ என்றே பட்டப் பெயர் உண்டு. அவை பனி படர்ந்த மலைகளில் சுமார் ஒன்பதாயிரம் முதல் பதினெட்டாடிரம் அடி உயரத்தில் வசிப்பவை. குளிர் காலத்தில் மலையில் சற்று கீழே இறங்கி வரும். உருவத்தில் புலிகளை விட சிறியவை. உடலில் இருக்கும் சாம்பல்  நிறத் திட்டுகள், பனியிலும் பாறைகளின் பின்னணியிலும் அவை இருப்பதையே மறைத்து விடும். இந்தியாவில் இமைய மலைத் தொடரில் சுமார் நானூறு பனிச் சிறுத்தைகள் இருப்பதாகத் தகவல். நிறைய புகைப் பட நிபுணர்கள் அவைகளைத் தேடித்தேடிப் படம் எடுப்பதற்கு அவை எளிதில் காணக் கிடைக்காததே முக்கிய காரணம்.

உபநதிகள் – 14

This entry is part 14 of 15 in the series உபநதிகள்

சில நாட்களாக அடுத்த வீட்டுக்குக் குழந்தைகள் நடந்தோ ஊர்தியிலோ வரவில்லை. சிறுபொழுதுக்குப் பிறகு அவர்களை அழைத்துப்போகவும் இல்லை. அந்த வீட்டில் நடமாட்டமும் இல்லை. அதன் பாதிப்பு அவனுடைய மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே நிசப்தம்! அவன் கூச்சலைக் கேட்பதற்கு யாரும் இல்லையே என்பதால் அதைச் செய்யப் பிடிக்கவில்லையா? அவனுக்குக் கத்த வேண்டும் என்கிற ஆசையே போய்விட்டதா? சேச்சே அப்படி இருக்காது.

இச்சா, இனியா, காயா, பழமா- இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி

தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

கப்பை

யாரையும் வீட்டில் அழைப்பதோ அவர்கள் வீட்டிற்குச் செல்வதோ எனக்கு அறவே பிடிக்காத செயல். பழக்கத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவாறு எடைபோட்டுத் தொடர்வது, பிறகு அதே நபரின் பின்புலம் வசதி குறித்தறிந்த பின் நடத்தையில் ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துபவர்களின் ஆபாசத்தில் அருவறுப்படைந்து, சிலரை விட்டு விலகியுமிருக்கிறேன். ஆதலால், யாராக இருந்தாலும் சந்திப்பு வெளியில் தான்

என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து
வெளிவந்தேன்.
அப்போதிலிருந்து
குறைவான நேரங்களிலே
தவறாக இருந்தேன்.
இப்போது ‘அது தன்னடக்கம் என்று கண்டேன்’.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3

This entry is part 3 of 4 in the series கணினி நிலாக்காலம்

அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம்

புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்

புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ராபர்ட் அற்புதராஜ்

அந்த நாள்! அப்போதுதான் பத்தாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது. அன்று பள்ளி முடிந்ததும் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சியாட்டம் ஆடினோம். ராபி எதிரணியில் ஆடினான். தாயைப் பிரியாத குழந்தைபோல பந்து அவன் காலைவிட்டு நகராமல் இருந்தது. எல்லைக்கோட்டில் நின்றிருந்த அலெக்சாண்டர் சார் ராபியின் ஆட்ட நுணுக்கங்களை சத்தமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். தடுப்பாட்டக்காரனாக மாற்றப்பட்டிருந்த என்னைக் கடந்து ராபி ஒரு கோல் போட்டிருந்தான். சில நிமிடங்களில் ராபிக்கு மறுபடியும் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. காற்றில் பறந்துவந்த பந்தைப் பாதத்தில் தாங்கி நிறுத்தினான். வலப்பக்கம் நகர்ந்து இடப்பக்கம் ஓடி தடுக்க வந்த ஒருவனை ஏமாற்றினான்.

அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ

தேடலும் மறத்தலும்

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை

சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை  பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது.

முனி பள்ளம்

அங்கத்தான், 1949’ல ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் ஆயிருக்கு. நீர் மின் நிலையத்துக்கு தண்ணீ கொண்டு போற பெரிய சுரங்கப்பாதை வெட்டிகிட்டு இருந்திருக்காங்க. அது மழை சீசன். ஒரு நாள் மத்தியானம் மேக வெடிப்பு ஏற்பட்டு எதிர்பாராத, கடுமையான மழை. தொடர்ந்து  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு கல்லு மண்ணு பாறையெல்லாம் தண்ணியோட அடிச்சிட்டு  வந்து கட்டிட்டிருந்த குகையோட வாசலை மூடிடுச்சு! அப்ப உள்ளே கிட்டத்தட்ட 600 பேர் வேலை செஞ்சிட்டு இருந்திருக்காங்க”

கு.அழகர்சாமி கவிதைகள்

பிறந்த தேதி, ஊர்,
பெற்றோரின் பெயர்கள்,
என் பெயர், மொழி,
நிறம், இனம்
என்றெல்லாம்
என்னைப் பற்றிய
எத்தனையோ விவரங்கள்
பகிர உள்ளன-
ஒன்றைத் தவிர-
என் இறந்த தேதி