வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்

மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.   பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”

சங்கப்பெண்கவிகள்

This entry is part 2 of 2 in the series கவிதாயினி

தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள்

அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 21 in the series அதிரியன் நினைவுகள்

பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை

காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ

இந்த ஹைக்கூ, ‘கொரோமோ’ நகரத்தின் (Koromo city) மக்களுக்கான ஒரு பிரியாவிடை அஞ்சலிக் கவிதையாக இயற்றப்பட்டது. அந்த நகரத்தின் மக்கள் க்யோஷி அவர்களுக்கு காளான்களைப் பிரியாவிடைப் பரிசாக அளித்தார்கள். போரின் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, க்யோஷி, கொரோமோ-வில், மூன்று வருடங்கள் வாழ்ந்தார். ‘பகல் நட்சத்திரம்’ என்பது சூரியனைக் குறிக்கும் எனவும், காளான் என்பது ‘பூஞ்சை’ (fungus) என்பதும் யாருக்கும் உடனே புரியும்.

காற்றினும் கடியது அலர்

மறைத்தாலும் மறையாதது காதல் என்பதால் அதனால் அலர் எழுந்துவிடுகிறது. ஆமாம், அந்தக் காலத்தில் காதலை ஏன் மறைக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்? இசேவின் கதைகள் தொகுப்பும் கென்ஜியின் கதைகள் தொகுப்பும் இதற்குத் தரும் விடை காதலர்களுக்கு இடையேயான பதவி வேறுபாடு. காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அதில் ஏதும் சிக்கல் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது. 

மிளகு  அத்தியாயம்  ஐம்பது

ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம்

ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 1960ல் வெளிவந்த ராகஜலதி நாவலின் உள்ளே, இந்த நாவலின் எழுத்தாளர் லதா எழுதிய இதர நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ஆறு நாவல்களின் பெயர்களை    குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று ஜீவன ஸ்ரவந்தி. மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவலின் கதை நகருகிறது. “ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்”

இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

கேட்டதும் கண்டதும்

அந்த வீட்டுக்குப் பெரியவா வந்தா. அப்போ வீட்டுக்காரரோட பரிச்சயம். பெரிய காம்பவுண்டு  உள்ளே நாலஞ்சு வீடுகள்.  ஒரு ரூம், சின்ன கிச்சன், அதை விடச்  சின்ன பாத்ரூம்ன்னு வீடு. வாடகைன்னு நானா கொடுக்கறதுதான். கொடுக்காட்டாலும் கேக்க மாட்டார். அப்படி ஒரு மனுஷன். “வாடகையை விட்டா ஒத்தக்கட்டைக்கு வேறே என்ன பெரிய செலவு?  சாப்பாடுதான்.  மாசா மாசம் பென்ஷன் வரது. இங்கே மாசத்திலே பதினஞ்சு நாள் தக்ஷணையோட சாப்பாடும் கிடைச்சுடும். பாத்தேளா, தக்ஷனைன்னதும்தான் ஞாபகம் வரது. ஐநூறு ரூபாயை வாத்தியாருக்கு வாபஸ் கொடுக்கணும்” என்றபடி கையிலிருந்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.

உபநதிகள் – 11

This entry is part 11 of 14 in the series உபநதிகள்

“ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஒப்பற்ற கதாபாத்திரங்களுக்கு அக்காலத்து மேடை நடிகர்கள் எப்படி உயிர்கொடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒளிப்பதிவு வரும்வரை அந்தக் கலைஞர்களின் சாதனைகள் நீரில் வரைந்த கோலங்கள். நான் எழுதிய வார்த்தைகளும் விவரித்த காட்சிகளும் வெறும் எலும்புக்கூடு. அவற்றை உயிருடன் பார்க்கும்போது நடிப்பு என்பது எப்படிப்பட்ட அருமையான கலை என்பதை உணர்கிறேன். நான் மந்தாகினியை சில மாதங்களுக்கு முன் சந்தித்து சிறிது நேரமே அவளுடன் பழகினாலும் அவள் என் தங்கை.

நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே

இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது

குட்ஸூ

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

குப்பைத் தொட்டி

ப்ளீஸ்.. அப்பா தான் புரிச்சுக்கல.. நீயாச்சும் புரிச்சுக்கோ.நீ எல்லாரயும் மாதிரி கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஒரு ஐடி கம்பெனில பொட்டி தட்ட மாட்டேன்னு எவ்வளவு வீம்பா லா படிச்சே..  இப்ப வாய்க்கா, வரப்பு தகராறுல அண்ணன் தம்பியையும், டைவர்ஸ் கேஸ்ல புருஷன் பொண்டாட்டியையும் பிரிச்சுட்டு திரியற.. கேட்டா லா என்னோட passionன்னு சொல்லத் தெரியுதுல.. அது எனக்கு இருக்கக்கூடாதா?”

நாங்கல்லாம் மதுர காரங்ய…!

ஒவ்வொரு தெருவிலும் எப்படி இத்தனை காபி வடை கடைகள்? காலை துவங்கி நள்ளிரவு வரை எப்படி விடாமல் எல்லா கடையிலும் ஒரு கூட்டம் எதையேனும் சாப்பிட்டபடியே இருக்கிறது? இன்று நேற்றா? பத்து இருபது ஆண்டுகளாகவா?  போன நூற்றாண்டிலிருந்தா? என்றிலிருந்து தோன்றியது இத்தகையதொரு பழக்கம்? நம்புவதற்கு கடினமெனினும், சங்க காலம் தொட்டு “மதுரைக்காரர்கள்” இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்! மதுரை மக்களிடம் பிரத்யேக உணவு மரபணுக்கள் ஏதேனும் இருக்குமோ? சொல்ல முடியாது… இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மரபணு ஆராய்ச்சியில், “மதுரை மரபணு” என்றொன்று கண்டறியப்படலாம்.

கடாரம் கொண்டான்

பாட்டி என்றால் நார்மடிப் பாட்டி இல்லை. நாகரீகப் பாட்டி. சுருக்கங்கள் இல்லாத ரவிக்கை அணிந்து இருக்கிறாள். காதில் வைரத்தோடு துலங்க கம்பீரமாக, தாத்தா போன இந்த பத்து வருடங்களில் ஓரிரண்டு சுற்றுகள் பெருத்தும் நிறத்தும் இருக்கிறாள்.”ஏன் பாட்டி.. நீ நல்லவளாத் தான இருந்தே? ராமாயணம் வியாசர் விருந்துன்னு படி படின்னு படிச்சுண்டு இருந்தே.. இந்த கூட்டத்தோட சேர்ந்து இப்படிக் கெட்டுப் போயிட்டியே..”

கேள்வி கேட்கும் பெண் குரல்கள்

திருதராஷ்டிரா,
அந்த மங்கலான விழிகளில்
அவன் சாபத்தை நீ சுமக்கிறாய்.
உன் தாய்
அவனிடமிருந்து அந்த இரவில்
துணுக்குற்று விலகினாள்.
அவன் சுவாசம்
வேர்களின் வாசமாயிருந்தது.
அவன் மார்பு வெளிறியிருந்தது.
அவன் காதலன் என்பதைக் காட்டிலும்
அரக்கனென்று தோன்றியது.

தெய்வநல்லூர் கதைகள் – 7

This entry is part 7 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

பிரேம் முதலில் செந்தில் அணியில் இணைவதாகவே இருந்திருக்கிறார். காரணம் அவர்கள் தெண்டில் தலைமையில் உமையொருபாகன் கோவிலுக்கு வெள்ளி தோறும் செல்லும் வழக்கத்தில் இருப்பதும், தெண்டில் கொண்டுவரும் திருநீறை அவர்கள் அணியினர் அனைவரும் தினமும் காலை நெற்றியில் அணிந்து கொள்வதும் அவரைக் கவர்ந்திருந்தது. ஆனால் ஓட்டக்கை அதன் காரணத்தை பறைசாற்றியதும் பிரேம் ஆர்வமிழந்து விட்டிருக்கிறார் – “அது பைரவர்ட்ட  வச்சி வாங்கிட்டு வந்த திருநாறு , அத வச்சிக்கிட்டோம்னா நம்மள எந்த நாயும்  வெரட்டாது,கடிக்காது.” அடுத்ததாக, சிங்கி சொன்ன நடுநிலை ஒப்பந்தத்துக்கான முக்கிய ஷரத்து பிரேமை விலக்கம் கொள்ள வைத்து விட்டிருக்கிறது – “பொம்பளப் புள்ளயள்ட்ட இருந்து எடுக்க பண்டத்துல ரெண்டுநாள் மட்டும் ஒனக்கும் பங்கு உண்டு.”

பத்து வயது ஆகையில்

ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக
சன்னல் அருகே இருக்கிறேன்
பின்மதிய வெளிச்சத்தைக் கவனித்தபடி.
அத்துணை அழுத்தமாக அது விழுவதில்லை
எனது மர வீட்டின் பக்கவாட்டில்,
வாகனக் கூடத்தின் மேல்
இன்றைக்குப் போல் என்றைக்குமே
எனது மிதிவண்டி சாய்ந்து நின்றதில்லை
அனைத்து ஆழ் நீல வேகமும் வடிந்து போய்.

வெந்துயர்க் கோடை

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை.

பிரிவு

கறை படிந்த நம் கரங்களை
அழுத்தி துடைத்துவிட்டு
மீண்டும் ஒரு புது உலகம்
வரைந்திருக்கலாம்
ஆனால் வேறு ஒன்றாக
நிகழ்ந்துவிட்டது
ஒரு கனவைப்போல.

கடிதம்

கண்ணு, இந்த கொஞ்ச நாள்லியே என்னமா எளச்சி போயிட்டடீ?. முந்தியெல்லம்கூட ஒனக்கு இப்படி ஒடம்புக்கு முடியாம போயிருக்குதான்!. ஆனா, கூட கூட போனாக்கா ரெண்டு நாளு. பேரு வெட்டி வந்துருவியே?.. ஏண்டி, இந்த தடவ ஒடம்புக்கு ரொம்ப முடியிலியா?. நா வந்ததுகூட தெரியாமா கண்ண மூடியே கெடக்குறியேடீ?. அது சரி! நாந்தான் எனக்கு புள்ளிங்களே கெடையாதுன்னு சொல்லிட்டன்!. எனக்காவ நீயும் அவுங்கள ஒரேடியா ஒதுக்கி வெச்சி, பெத்த மனம் பித்துன்றத பொய்யாக்கிட்டியேடீ!. இப்படி முடியாம இருக்கறப்பகூட அவுங்கள பத்தியெல்லாம் ஏங்கிட்ட ஒரு வார்த்த பேசுனது இல்லியே!.