நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு
Category: இதழ்-296
‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். “‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’”
தமிழ் நாவலின் விரியும் எல்லைகள்
ஆவணப்படுத்துதல் நாகரிக வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம். சினம், வன்மம், வீரம் முதலியவை மனித வரலாற்றில் தேவையான அளவு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. பகைவரை வெற்றி கொள்வதற்கான கருவிகளாக இவை கருதப்பட்டன. இதற்கு மாறாக ஒத்துழையாமையைக் கருவியாகக் கொண்டு பகைவரை வென்றெடுக்கும் முறையை மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த மெய் காக்கும் போராட்டம் என்னும் இந்த ஒத்துழையாமைத் தத்துவப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தன் சொந்த அனுபவமாக அமைத்து மூன்று பாகங்களாக சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் (1997) நாவல் ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் புதியதொரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறது.
மூங்கில் காடு
“புல் கொண்ட விழைவுதான் மூங்கில்..புற்களைத்தான் முதன்முதலாக இந்த நிலத்தில் உயிராக படர்ந்தனவாம். அவை சூரியனை நோக்கி தவம் இருந்தன. சூரியன் தன் அதிகாலை ஔியால் புல்வெளியை தொட்டுப்பரவி பசும் ஔியே உருவாக நின்றாராம். எதற்கான தவம் என்று புற்களை எழுப்பி கேட்டாராம்..பரவுவதைப்போலவே நாங்கள் உயர்ந்து வளர வேண்டும் என்று புற்கள் கேட்டதாம். வேகமாக பரவி நிலத்தை மூடிவிடும் நீங்கள் உயரமாக வான் நோக்கி எழுந்து வளர வேண்டும் என்றும் வரம் கேட்பது சரியா என்றாராம். மிச்சமுள்ள தாவரங்களுக்கு நிலம் இல்லாமல் போகாதா என்றாராம்? இல்லை நாங்கள் தான் முதலில் உங்கள் ஔியை வாங்கி உயிரானோம். காலகாலமாக தரையில் வளர்ந்து மடியமுடியாது என்று புற்கள் ஒருசேர சொல்லயதும் சூரிய தேவர் புன்னகைத்து அப்படியே ஆகட்டும் நீங்கள் உங்கள் விழைவுபடியே உயர்ந்து வளருங்கள். ஆனால் மடிவதற்கு முன் இருதிங்களில் உங்களின் இந்த விழைவு பெருகும். அப்போது நீங்கள் வான்நோக்கி எழுந்து இப்போது போலவே அனைவரும் ஒன்றாய் பூத்து இந்த நிலத்தில் உயர்ந்து நின்று ஒன்றாய் மடிவீர்கள்..” என்று வரம் அளித்தாராம்.
ஒழிக தேசியவாதம்-2
விவாதத்தின் போது ஏமாளிகள், சோம்பல் ம்மிக்கவர்கள் என்பதற்கு பதிலாக மந்தமானவர்கள் (தமஸிக்)என்ற வார்த்தையை கூறினேன். வெடித்தெழுந்த ஒருவர், நான் எல்லா இந்தியர்களையும் மந்தமானவர்கள் எனக் குற்றம் சாட்டுகிறேன் என எச்சரித்தார். தொடந்து நடந்த வாக்குவாதங்களின் போது இவ்வரியை விடாமல் திருப்பி திருப்பி சொன்னார். இத்தகைய அரசியல் பிரமை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்தியர்களுக்கும் பொதுவானது. முஸ்லிம்களை தட்டித் தடவி சமாதானம் செய்வது இந்தியாவை போலவே ஐரோப்பாவிலும் மிகையாக உள்ளது. அதே சமயம், முஸ்லிம்களுடன் சமாதானமாக செல்வதை மறைக்க வேண்டி நீண்ட காலமாக செத்துக் கிடக்கும் காலனீயத்துக்கு எதிராக காட்டப்படும் போலி வீராப்பை நம்பாதவர்களும் இந்தியாவில் பலர் உள்ளனர். அதில் முதன்மையானவர் மறைந்த எஸ்.ஆர். கோயல், ஒரு உண்மையான தேச பக்தர்.
தேவகுமாரன்
அத்துடன் அந்த வேலையைவிட்டது. தெருவில் நான்கு ‘ரைட்டர்’ பெயர் பலகை தொங்க அரசு தேர்வு நடத்தத் துவங்கியது. விடைக் குறிப்புகள் கொண்டு சிறுகதைகள் திருத்தப்பட்டன. அடிக்கு மூன்று சொல் இருக்கும் பட்சத்தில் கவிதை என்று வரையறுக்கப்பட்டு கணினியில் code செய்து திருத்தப்பட்டன. அதுவுமின்றி என் வாழ்க்கையில் ஒரு புத்துணர்வு, அவன் எனக்கு கிடைத்தான். குழந்தைகளை திறம்பட எழுதுபவர்தான் நல்ல எழுத்தாளராமே. சொல்பவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. எனக்கு அப்படியா? எனது மொத்த வாழ்க்கையிலும் குழந்தைகளை தூக்கியதே ஐந்தாறு முறைதான்.
உபநதிகள் – 8
தற்போதைய சமுதாய அமைப்பின் உருவாக்கலில் அவள் தாய் கங்காவைப்போல கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒருசிலர் அளவுக்குமேல் பணம் சேர்க்கிறார்களா? அந்த அளவு என்ன? அதை நிர்ணயிப்பது யார்? இயந்திர சமுதாயத்தினால் தான் எங்கோ உட்கார்ந்து யூ.எஸ்.ஸைக் குறைசொல்லும் அவள் கட்டுரைகள் பலருடைய பார்வைக்கு எட்டுகின்றன. அந்த அமைப்பை ஒரே நாளில் இடித்துவிட முடியுமா? அப்படி நிஜமாகவே நடந்தால் அது தன்னைப் பாதிக்காது என்கிற தைரியத்தில் எழுதியிருக்கிறாள். யூ.எஸ்.ஸில் பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். பி.பி.ஏ. பட்டம் வாங்கியவளுக்கு இதுகூடவா தெரியவில்லை?
மார்க் தெரு கொலைகள்- பகுதி 4
‘அதுதான் சாட்சியம்; என்ற டூபான், ஆனால், அது சாட்சியத்தின் விசித்திரமில்லை, நீங்கள் குறிப்பான, தனித்துத் தெரியும் ஒன்றை கவனிக்கவில்லை. காரணங்கள், சாதாரணத் தளத்திலிருந்து மேம்பட்டு முக்கியங்களைக் காட்டும் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளவேயில்லை. இருந்தும், சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். முரட்டுக் குரலில் ஒத்த கருத்தினைச் சொன்ன சாட்சியங்கள் அந்த’ க்றீச்’ குரலைப் பற்றி சொன்னவை-அவர்கள் ஒத்துப் போகாமலில்லை-ஆயின், அதிலுள்ள விசித்திர வர்ணனைகளை எண்ணிப் பாருங்கள்- இத்தாலியர், ஆங்கிலேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் அனைவருமே, அது ஒரு அயல் தேசத்தவரின் குரல் என்று சொன்னார்களல்லவா?
தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்
1962 லேயே கட்டி ஆஞ்சநேய சர்மா என்பவர் லதாவின் இலக்கியம் பற்றி ‘சாஹிதீ லதா’ என்ற புத்தகம் எழுதினார் என்றால் இலக்கிய துறையில் பிரவேசித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆவதற்கு முன்பே லதா எத்தனை தூரம் வாசகர் உலகத்தை கவர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. அதற்குக் காரணமான மூலசக்தி தன் காலத்துப் பெண் எழுத்தாளர்களை விட மாறுபட்டு அவருக்கு கிடைத்த பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் என்று கூறவேண்டும். அதுவே அவருடைய நாவல்களை சமகாலத்து பெண் நாவல்களை விட மாறுபட்டவையாக நிலைநிறுத்தின.
பார்வையற்றவனின் பார்வை
என் கெடுவாய்ப்பின் துன்பத்தை
பெருமூச்சு விட்டு
நீங்கள் வருந்துவது
பலமுறை என் செவிகளில் விழுகிறது.
ஆனால்
எப்போதும் என்னால் அறிய முடியா
இழப்பை
நிச்சயமாய் பொறுமை கொண்டு சுமப்பேன்
அதிரியன் நினைவுகள் -15
தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று ஒரு கணக்கீடு இருப்பதாகவும் நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில் ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர்.
கனி மரம்
உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன
மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார். அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.
இறை நின்று கொல்லுமோ?
மறக்கப்பட்டாலும் காதலன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் அகப்பாடல். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் கைகூடியபோது ஒருவரை ஒருவர் மறக்கமாட்டோம் எனக் கடவுளின்முன் உறுதியேற்கின்றனர். பின்னர்க் காலப்போக்கில் காதலன் காதலியை மறந்துவிடுகிறான். காதலன் தன்னை மறந்துவிட்டான் என்ற கவலையைவிடக் கடவுளின் கோபம் உறுதிமொழியை மீறீய காதலனுக்கு ஏதாவது தீங்கு விளைவித்துவிடுமோ எனக் கவலைப்படுகிறாள் காதலி.
சகோதரி நிவேதிதையின் பார்வையில் இந்தியா
தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண் கிருஷ்ணப்ரேமி மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.
வாசம்
சில நிமிடங்கள் கொடுமையான மௌனம் என் அறையில் நிலவியது. நெடிய மௌனத்திற்கு பிறகு அவள் பேசலானாள். “எங்க வீட்ல என்னை வெளியே போக சொல்லிட்டாங்க. எங்க போறதுன்னு தெரியாமல் கால் போன போக்கில் போயிக்கொண்டிருந்தேன். வழியில் மழையில் தெப்பலாக நனைந்துவிட்டேன். சாப்பிட்டு ரெண்டு மூணு நாளாகிவிட்டது. பசி தாங்க முடியல. மயக்கமும் சோர்வுமாக இருக்கு. தலை சுத்துச்சு. மேற்கொண்டு நடக்க விடவில்லை. இங்க வரும் பொது மழை சரியா பிடிச்சிக்க ஆரம்பித்தது. உங்க வீட்டில் ஒதுங்கினேன். நீங்கள் என்னை தேடி வெளியே வந்த பொது, குளிர் பொறுக்காமல் உள்ளே புகுந்துவிட்டேன்”, என்று நடுங்கி கொண்டே விட்டு விட்டு சொல்லி முடித்தாள் .
தெய்வநல்லூர் கதைகள் -4
மறுநாள் காலையில் சிவாஜி வீட்டிற்கே வந்து அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய மு மாரியப்பன் பதட்டத்துடன் சொன்னார் – “ஏல, நம்ம சுனா கானா மருந்தக் குடிச்சிட்டாம்ல. ஜவஹர் டாக்டர் ஆசுபத்திரிக்கு இப்பதாம் தூக்கிட்டு போனாக. வாரியா, போயி பார்ப்போம் “. இவர்கள் சென்று பார்க்கையில் சுனா கானா எனும் சுப்பையா கணேசனின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. வாழ்க்கையில் பீடி தவிர வேறெதுவும் குடிக்காத, எங்களைக் குடிக்கவிடாத , தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பண்டத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட, தன் துக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாத பிரியம் மிக்க நண்பர் சுனா கானா இவ்வாறாக மீண்டும் ஒருமுறை மீள வரமுடியா விதத்தில் எங்களிடமிருந்து சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டார்.
ஆமிரா கவிதைகள்
சிசு ஜனிக்கிறது
தொப்புள்கொடி அறுபட
சொல்லின் முடிவின்மை சூழ
தாதி அதை/அவனை/அவளை
கையில் ஏந்தி
தாயின் அருகில் கிடத்துகிறாள்
மலரிலிருந்து கனிந்து விடுபட்ட விதையென
அது/அவன்/அவள்
பிறப்பின் தவிப்பை மென்று செரித்து
சிதறும் கணங்கள்
சில நேரங்களில் சீயக்காய் உடல் முழுவதும் படர்ந்து விடும். பெரிய அறையைப் போல குமரேசனின் தாத்தா 50களிலே கட்டிய அந்த குளியலறை குமரேசன் காட்டும் வித்தைகளுக்கு ஒத்துழைத்து விடும். ஆள் இடுப்பு அளவு உயர கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் தலையை முக்கி நீரில் மிதக்கும் முடியைக் கண்களைப் பிதுக்கிக் கொண்டு இரசிப்பான். தொட்டியின் உள்ளிறங்கி தண்ணீரில் முடியை மிதக்க விடுவான். அதே வேளையில் கால் பெருவிரலைக் கொண்டு தொட்டியின் தக்கையைத் தள்ளித் தள்ளி விட்டு தொட்டியிலிருந்து தண்ணீரை வெளியேற்றி மகிழ்வான். பெரிய ஆள் பாதி அளவிற்குப் போடப்பட்டிருக்கும் தொட்டி கரை மீது ஏறிக் கொண்டும் அமர்ந்துக் கொண்டும் தான் சாகசம் புரிய ஏற்ற இடமாகவே கற்பனைக்குள் உருமாற்றியிருந்தான்.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
ஒரே ஒரு கற்பனை
அல்லது ஒரு விருப்பம்
சொல்லவைக்கிறது ஒரு வார்த்தை
எழுதவைக்கிறது ஒரு எழுத்தை
எனது கவனத்தால் அதற்கு
கிடைக்கும் சுதந்திரத்தை
இழக்கச் செய்கிறேன் நான்
வார்த்தைகளின் பயன்பாடு
அதே வார்த்தை
நான் கொள்ளும்
அர்த்தத்தின் முன் போரிடுகிறது
சர்க்கஸ்
முதல் முறை தவறியது
அடுத்த முறை
வெகு அருகில் சென்று தவறியதும்
அரங்கம் பிரார்த்திக்கத் தொடங்கியது
இம்முறை அவளே பந்தாகி
சுழன்று மேலேறியவுடன்
அரங்கமே திரண்டெழுந்து
கூடையுள் அமர்ந்து
இரங்கியது.