அந்நியனின் அடிச்சுவட்டில்

என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”

நாடும் சுவை,  தேடும் தொல்லியல்

தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.

நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம்  என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின்  ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய  ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று  புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.

தெய்வநல்லூர் கதைகள் – 2

This entry is part 2 of 3 in the series தெய்வநல்லூர் கதைகள்

பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி  தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.

மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து

பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிட்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்க கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”

சர்க்கரை பூஞ்சை

எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை  பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான ஒய்னும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. 

நவீனப் போர்விமானங்கள்

பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.

மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 3 in the series மார்க் தெரு கொலைகள்

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்

அதிரியன் நினைவுகள் – 13

This entry is part 13 of 14 in the series அதிரியன் நினைவுகள்

பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார்,  அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய  பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ்  நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ்,  மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற  சிறு கூட்டம்  காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான்  குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை

புல்நுனியில் பனிமுத்து

மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில்白露に風の吹きしく秋の野はつらぬきとめぬ玉ぞ散りける கனா எழுத்துருக்களில்しらつゆにかぜのふきしくあきののはつらぬきとめぬたまぞちりける ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞர் அசாயசு காலம்: கி.பி 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி (பிறப்பு இறப்பு பற்றிய குறிப்பான தகவல்கள் இல்லை). இத்தொடரின் 22வது பாடலை இயற்றிய புலவர் யசுஹிதேவின் மகன் என்பதைத் தவிர இவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதும் தெரியவில்லை. “புல்நுனியில் பனிமுத்து”

உபநதிகள் – 6

This entry is part 6 of 7 in the series உபநதிகள்

சிறுகதை முதல் வரியிலேயே சூடுபிடிக்கணும், முக்கால்வாசி இருக்கும்போதே முடிஞ்சிடணும். நீ எழுதினது முழுவதையும் சேர்த்து வச்சுக்கோ! எதிர்காலத்தில உதவும். ஆனா, போட்டிக்கு அனுப்பற கதை சனிக்கிழமை காலையில தொடங்கி நோம் சோம்ஸ்க்கியை ஆதவி மட்டம் தட்டறதோட முடிந்துவிடும். அதாவது கதையின் கால நீளம் இருபத்தியாறு மணி

காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்

இந்திரா என்றால் கூட பயம்தான். தன் விருப்பு  வெறுப்புகளை அவளிடம் அவனால் கூற முடியாது. அவனுக்குப் படிக்க வேண்டிய வேலை இருந்தாலும் அவள் வா என்றால் அவளிடம் இருக்கும் அச்சத்தால் அவள் பின்னால் செல்வான். கல்யாணியோடு அவனுடைய சினேகம் பற்றியும், காதல் விவகாரம் பற்றியும் விமர்சனம் செய்த சக மாணவியிடம் தகராறு செய்கிறான். அதாவது உலகத்திற்குத் தன்னை எப்போதும் நல்லவனாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற குணம் அது. உண்மையில் அவனுக்கு என்ன வேண்டுமோ அவனுக்கே தெரியாது.

இன்று நேற்று நாளை 

மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே. 

அய்யனார் ஈடாடி கவிதைகள்

நூலாம்படைகள்
அறுந்து தொங்கும்
இலையுதிர்ந்த புங்கை மரத்தில்
முட்டி மோதும்
மீன்கொத்திகளின்
கூட்டுச்சண்டையிலிருந்து
வெகுண்டெழுப்பும் பெருத்தொலிகள்
தெறிக்கும் உச்சி வெயிலில்
கதவுதிறந்த வரவேற்பரையில்
வகுடெடுத்த கொடிப்பிச்சியின்
நெடு நிழலில்

உள்ளும் வெளியும் பாகம் -2

எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது

1/64, நாராயண முதலி தெரு – 3

This entry is part 3 of 4 in the series 1/64, நாராயண முதலி தெரு

சுந்தரவல்லி ஓர் அலங்காரப் பிரியை. சிமிட்டி நிறத்திலான சின்னாளம்பட்டுப் புடவையை மடிசாராக உடுத்திக் கொண்டாள். வசுதா திருமணத்தின் போது செலவோடு செலவாக வாங்கிய ‘கல்யாணி கவரிங்’ சங்கிலி, வளையல்களை அணிந்து கொண்டு, ‘ஆஃப்கான் ஸ்நோ’வையும் ‘குட்டிக்கூரா பவுடரை’யும் பூசிக் கொண்டாள், சிறிய கைக்குட்டையை இடுப்பில் செருகிக் கொண்டு, காதோரம் தலைமுடியை ஸ்டைலாகச் சுருட்டி விட்டுக் கொண்டாள். நான்கு மணிக்கே புறப்படத் தயாராகி விட்டாள்.

இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.

ஆயுதம்

டீக்கடைக்காரன் அவசரமாய் டீயை ஆற்றினான். டீ வழிந்து தரையில் விழுந்தது. “சேகர்ணா” என்று சொன்னான். பாதி வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. சேகர் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்தான். பொருந்தாத பாண்ட் சட்டை அணிந்திருந்த வேலு மேசைமேல் கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்திருந்தான்.  தலைமுடி கலைந்து, தூங்காத கண்களுடன் அவன் முகம் வாடிப்போய் இருந்தது.  

பிடி நிலம்

அதே போன்று அவருடைய காட்டில் வேலையென்றால் கலியனும் சேர்த்து உரிமையெடுத்துக் கொள்வான். எந்த பருவத்தில் எந்த பயிர் செய்யலாம், போன முறை வைத்த உரத்தின் வீரியம் எப்படி, தேங்காய் சிரையெடுக்கும் நாள் பக்குவம் என விவாதிப்பதோடு அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டுவான். கூலிக்கு பார் ஒதுக்கும் போதெல்லாம் வியர்வைத் தண்ணீர் மூக்கு நுனியில் திரண்டு மண்வெட்டியில் ஒழுக ஒழுக இருபுறமும் வாரி இழுத்துச் சேர்க்கையில் மாது பின்னாலிருந்து கட்டியை எடுத்து எறிந்து ‘யே.. சாமி.. கொஞ்சம் மெதுவா தான் போப்பா.. என்னமோ உன் சொந்த காடாட்டம் இந்த வேகம் காட்டுறியே?’ எனக் கிண்டலாக இறைவான்.

காசி

This entry is part 12 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.

ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்

தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”

முதுமை

ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.