தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்

முடி என்று அழைக்கப்படும் தலை அணி தலையின் மேல் ஆதிசேஷன் போல விரிந்திருக்க அதன் விளிம்பில் மணிகள் கோர்க்கப்பட்ட சிறு வெள்ளை குஞ்சரங்கள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கழுத்தை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அட்டிகை பாதி மார்பை மறைக்க, மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளி கங்கணங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்தது.

தெய்வநல்லூர் கதைகள் – 1

This entry is part 1 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும். 

அதிட்டம்

அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.

மார்க் தெரு கொலைகள் – 1

This entry is part 1 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன

ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை

பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.

கொடுக்கு

வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்

அதிர்ஷ்டம் தரும் என அவர்கள் நம்பும் பொருட்களை வைத்திருந்தவர்கள், தங்கள் விரல்களை, குறிச் சின்னத்தைப் போல வைத்திருந்தவர்கள், திறன் போட்டியிலும், புதிர்களை விடுவிப்பதிலும் மேம்பட்டிருந்தார்கள் என்று ஜெர்மானிய மனவியலாளர்கள் சொல்கிறார்கள். இங்கே நாம் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்- ஒரு அறிவியலாளர்- பகுத்தறிவுவாதி-அவர் ஒரு வீடு கட்டினார். நிலைப் படி வைக்கும் போது, அந்த ஊரில், அதன் கீழே, குதிரரை லாடத்தைப் புதைத்து வைப்பார்கள்; கட்டிட வல்லுனர் அதை வைக்க வேண்டுமா, நீங்கள் இதையெல்லாம் நம்பாதவர் அன்றோ என்று கேட்ட போது, ‘எதற்கும் இருக்கட்டுமே; வையுங்கள்’ என்று சொன்னாராம்! சடங்குகள் செய்யும் தளகட விளையாட்டு வீரர்கள், ஒப்பு நோக்க சிறப்பாக விளையாடியதாக ஆய்வுகள் சொல்கின்றன.

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்

ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு

முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம்

மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு  செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே,  நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே.

மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்

நம் மனதை கட்டுப்படுத்துவதே மிகவும் சிரமம் என்றபோதில்,  வெளிப்புற சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி, உங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு எதிராகச் செயல்படச் செய்தால் என்னவாகும்? இது ஒரு திகிலூட்டும் சாத்தியம். இவ்வாறான கற்பனைகள், நமது புனைகதைகளில் அடிக்கடி படம்பிடித்து காண்பிக்கப்படுகிறது. இது ஹாரி பாட்டரில் மூன்று மன்னிக்க முடியாத சாபங்களில் ஒன்றின் இலக்காகும். ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 இல் புனைகதை மொழியான நியூஸ்பீக்கின் நோக்கம் கூட இதுதான். இது பிரேவ் நியூ வேர்ல்ட் மற்றும் தி மஞ்சூரியன் கேண்டிடேட் போன்ற கிளாசிக்களிலும் ஈர்க்கிறது. 1950 களில், கம்யூனிஸ்டுகள் மனதைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களை உருவாக்கியுள்ளதாக, சிஐஏ மிகவும் கவலைப்பட்டது. அதற்காக, MK-ULTRA எனப்படும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தொடங்கவும் செய்தது

1/64,  நாராயண முதலி தெரு – 2

This entry is part 2 of 4 in the series 1/64, நாராயண முதலி தெரு

 பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.

தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி

சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது.

அறுவடை

கதிரவன் நேரில் வந்து சம்பிரதாயத்திற்கு விசாரித்து விட்டு, அடுத்த பூ போகத்திற்கான மேற்பார்வையை பூபதிக்கே மீண்டும் கைமாத்தி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டின் செலவுகள் இடிக்கத் தொடங்கியிருந்தது. பெண்களை கட்டி கொடுத்த இடத்தில் கையேந்தி நிற்க கூடாதென்பதில் நாயகமும், ராசமும் உறுதியாக இருந்தார்கள். அரிசிப்பானை தூரை தொட ஆரம்பித்திருந்தது. அரிசி தட்டுபாட்டை நாயகத்திடம் சொல்லாமல், இருக்கிற அரிசியை முடிந்த அளவிற்கு நீட்டித்து கொண்டு வரும் எண்ணத்தில் நாயகத்திற்கு மட்டும் வயிற்றுக்கு குறை வைக்காமல் பரிமாறி விட்டு, தனக்கு அரைவயிறும் கால்வயிறுமாக நிரப்பி ஒரு வாரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறாள் ராசம். 

டைபாய்டு மேரி

அச்சமயத்தில் டைபாய்டு இறப்புக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று வியாதிகளை உடனே ஆராயும் சிறப்பு அதிகாரிகள் இந்த  ஆயிஸ்டர் பே நோய்த் தொற்று விஷயத்தை  கையிலெடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்கள். எனினும் என்ன காரணத்தினால் தொடர்ந்து 7 பேருக்கு தீவிர டைபாய்டு தொற்று உருவானது என்று கண்டறிய முடியவில்லை. பல பக்கம் தட்டச்சிடப்பட்ட அறிக்கைகள் இந்த மர்ம நோய்த் தொற்றை குறித்து வெளியிடப்பட்டன எனினும்  காரணமென்று எதையும் அவர்களால் குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை

அதிரியன் நினைவுகள் – 12

This entry is part 12 of 22 in the series அதிரியன் நினைவுகள்

மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.  விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர்.  சைப்ரஸில் குடியிருந்த  கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி

அதாவது வீடு என்பது உறவோடும் பொறுப்போடும் கட்டிவைக்கும் ஒரு கட்டடம் என்றுதானே பொருள்? வீடு ஒரு பெண்ணுக்கு மறுபெயராக உள்ளது. இல்லத்திற்கு விளக்கு இல்லாள். இல்லத்தைப் பார்த்து இல்லாளைப் பார் போன்ற கூற்றுகள் எல்லாம் வீட்டை நடத்துபவளும் வீட்டுக்கு முக்கியத் தூணாக நிற்பவளும் பெண்தான் என்பதைக் குறிக்கின்றன.  இவற்றைக் கணக்கில் கொண்டு ‘காலாதீத வ்யக்துலு’ நாவல் குடும்பத்தை பற்றி என்ன சொல்ல வருகிறது என்று பார்க்கும்போது ஆர்வமூட்டும் அம்சங்கள் புரிகின்றன.

கஞ்சுகம்

அதாகப்பட்டது நீங்கள் வனத்துள் 
மடுப்படுக்க விரும்புகிறீர்கள். பைன்மர முட்கள்
விலங்குகளின் கூர்மையான ரோமத்தைப் போல்.
ஏரி ஒன்று மரங்களின் பொய்த்தோற்ற 
சுரங்கப் பாதையின் முடிவில். 
மீன்கள் துள்ளுகின்றன ஆனந்தமாக
நீரின் அகன்ற மேற்பரப்பில். 
அந்த மலைப்பூனை மற்றும் கரடி.

மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்

முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி  இருக்கிறது.வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.

சைக்கிள்

உள்ளறையில் விதவிதமான பழைய சைக்கிள்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பாதி கம்பீரத்தோடு நின்றிருந்தன. பள்ளிக்கூடத்தில் சும்மா தரப்பட்டவையும் நிறைய கடைக்காரரின் கைக்கு வந்திருந்தன‌. ஆனால் அவையெல்லாம் தண்ணீரடிக்க லாயக்கில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கேரியர் தடிமனாக இருந்த ஒரு சைக்கிளை சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டான். எண்ணெய் தேய்த்த மினுமினுப்பில் கருகருவென காளையின் தோரணையில் இருந்த அது அவனுக்குப் பிடித்துப் போனது. அடித்து பேரம் பேசப் பேச படியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தீர்ந்து ஒரு வழியாய் ஆயிரத்து ஐநூறுக்கு முடிந்தபோது தான் இவனுக்கு நிம்மதி வந்தது. 

‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்

இந்த நாவலை, _”பன்முக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் அத்தனை கலைஞர்களுக்கும்”_ சமர்ப்பித்துள்ள நூலின் ஆசிரியர், _”தஞ்சை வட்டாரத்தில் மரபார்ந்த கலையான கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது ஒரு காலத்தில் உன்னத கலையாக இருந்தது. காலப்போக்கில் அது தனது அழகியலை இழந்து வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்டது. அந்த கலையில் திறன்மிக்க கலைஞர்களாக இருந்தவர்கள் காலச்சூழலில் அடையாளமற்று போனார்கள். அவர்கள் குறித்து நான் தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், ஒரு நீண்ட கலை மரபுக்கு அவர்கள் ஆற்றி வந்த கலை சேவையை போற்றும் வகையில் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன்”_ என்று இந்த நாவல் எழுதத் தொடங்கியதற்கான நோக்கத்தை எழுத்தாளர் கூறுகின்றார்.

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கதிர் அறுத்த
தரிசு நிலங்களில்
காற்சுழற்றி விளையாடும்
குழந்தையின் கொலுசுமணிகள்.
வெறிச்சோடிய வீதிகளில்
கருக்கா நெல்மணிகளோடு
சண்டு புடைக்கும்
தண்டட்டி கெழவிகள்.

இன்றையப் போர்விமானங்களின் தோற்றம்

ஜெட் இயந்திரங்கள் டர்பைன் என்னும் வடிவமைப்பைக் கொண்டன. ஒரே படித்தான வலிமையுள்ள பிஸ்டன் இயந்திரங்களைவிடச் சிறியதாக இருந்தாலும் , அதிக ஒலி எழுப்புவதாலும், சுழற்சி நிமிடத்துக்கு 10,000க்கு மேல் உள்ளதாலும், அதன் வேகத்தைக் குறைத்துக் கார் சக்கரங்களுச் செலுத்த இயலாததாலும் அவற்றைக் காரில் உபயோகப்படுத்த இயலவில்லை. விமானத்தின் காற்றாடிகள் நிமிடத்திற்குச் சிலநூறு சுழற்சிகளே கொண்டவை. ஆனால், ஜெட் இயந்திரத்துடன் ஒரு காற்றழுத்த இயந்திரத்தை (air compressor) ஒன்றாக இணைத்துச் இயக்கினால், மிகவும் வேகத்துடன் காற்றை அவை வெளியேற்றும்.

உபநதிகள் – 5

This entry is part 5 of 15 in the series உபநதிகள்

நீங்க சொல்ற முதல் கட்சியில நான். என் தம்பி இரண்டாவதுல. எதிர்ல அப்பா அம்மா இருக்காங்களே அந்த வீட்டிலதான் நாங்க வளர்ந்தோம். எங்கேயாவது போகணும்னு அப்பா சொன்னா அவன் டக்னு கிளம்பிடுவான். நான் தாத்தா பாட்டிக்குத் துணையா இருக்கேன்னு வீட்டிலயே தங்கிடுவேன். எனக்கு எல்லா வேளையும் வீட்டு சாப்பாடு போதும், அதே அவனுக்கு வாரம் ரெண்டு தடவை ஓட்டல்ல விதவிதமா சாப்பிட்டாகணும். ஆதவி என்னை மாதிரி இருக்கா…” என்று சொல்லும்போதே காரின் ஆட்டத்தில் வினதாவின் கண்கள் மூடிக்கொண்டன. 

ரிஷிகேஷ்

This entry is part 11 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…

இன்வெர்ட்டி-வைரஸ்

மணி இப்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டான். திருநெல்வேலி டவுன் பக்கத்தில்  அன்சர்  கிளினிக்கில் வேலை. எனக்கு  இப்போது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. எங்களுக்கும் அதே ஊரில் தான் வேலை என்றாலும் அம்மா அப்பாவை அடிக்கடி பார்க்க முடியவில்லை.  அன்றைக்கு நானும் என்  கணவரும் உணவகம் சென்ற போது   தான் மணியைப்  பார்த்தேன். அவன் என்னைப்  பார்க்காமல் யாரோ ஒரு  பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரின் உடல் மொழியை பார்த்தாலே தெளிவாக தெரிந்தது இது வெறும் நட்பல்ல என்று.

தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை

ஒளியை கொண்டு சூழலை உணரும் கருவி. மனித கண்களுக்கு புலப்படாத புறஊதா (Ultraviolet) மற்றும் அகச்சிவப்பு (Infrared) அலைகளை சுற்றிலும் தெறித்து பரப்பி, சூழலில் உள்ள பொருளின் மீது படித்து பிரதிபலித்து (Reflection) திருப்பி பெறுவதே இதன் வேலை. பிரதிபலிக்கும் அலைகளை கொண்டு வாகனத்தை சுற்றி ஒரு முப்பரிமாணம் வரைபடத்தை (3D map) செயற்கை நுண்ணறிவின் செயலாக்க கருவி (Processing Unit) உருவாக்கும்.

உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்க உதவும். இதன் மாபெரும் குறை என்பது மழை, பனி போன்ற சூழலில், காற்றில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை சிதறடிப்பதால் (Scatter) முடிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாது.

கோடைநிலா எங்கே?

இயற்கையைப் போற்றும் இன்னோர் எளிய பாடல். கோடைகால இரவுகள் எப்போதும் குறுகியவை. மாலை வந்துவிட்டதே என்று மகிழ்வதற்குள் விடிந்துவிட்டதே என்ற குறிப்பால் நீண்ட நேரம் இரவின் இதத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. இதனுள் ஓர் அழகியலாக அவ்விரவை அழகாக்கிய நிலவை விடியலின்போது காணமுடியாமல் போவதை, அதற்குள் மேல்வானில் சென்று மறைந்திருக்க இயலாதே!

கோடைத் தெருக்களில்

இன்னும் மெழுகு பூசை
நடைபெறாத
மாம்பழங்களும்
கோடை ஆரஞ்சும்
முழுதாகவோ
சட்டையுரித்த
துண்டங்களாகவோ
கோசாப் பழங்கள்

முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்

இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்த கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளை கவனப்படுத்தும் இதழாக வெளியிட ஆசைப்படுகிறோம்.
2000க்குப் பிறகு எழுத வந்த ஆசிரியர்களின் புனைவு நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளியிடப் போகிறோம்.