பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார். அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார். மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.
Category: இதழ்-289
விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி
பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும். ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ). முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன். அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்). தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.
வாயுக்கூண்டும் ஊதுபைகளும்
சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங், “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது. “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை; அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றி…
இது வேற லெவல்…!
சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”
மித்ரோ மர்ஜானி – 8
தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும் மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால், இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.
மிளகு அத்தியாயம் நாற்பது
சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.
தைலம் ஆட்டுப் படலம்: கம்பராமாயணம்
நகர் நீங்கிய இராமன் பின் பின் தொடரும் பெருந்திரளை நேர்த்தியுடன் கையாள்வது, சுமந்திரனை எந்தையே என விளித்து அவன் தசரதனிடத்தில் இருந்து ஆற்ற வேண்டியனவற்றை ஆற்றுப் படுத்துவது, பரதனைக் குறித்து உய்த்துணர்ந்து அவனுக்கு வேண்டியது சொல்லி அனுப்புவதென ஆட்சிப் பொறுப்பையேற்காத ஓர் ஆட்சியாளனாகவேத் திகழ்கிறான்.சுமந்திரனிடம் அவனாற்றும் அறம் குறித்த உரை காவியம் முழுமையும் அவனொழுகும் அறத்திற்கான வரையறையெனக் கொள்ளலாம்.
தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும்
அன்றாடத்தில் தன்னிச்சை – வாகனங்கள் ஓட்டத் தெரியாதவர்கள் இனி யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். இது சார்ந்து புது பயன்பாடுகள் உருவாகும். உதாரணம் – குழந்தைகளை பள்ளிக்கு இட்டு செல்ல, கூட்டி வர, பெற்றோர், அயலவர், பொது போக்குவரத்துக்கு அவசியப்படாது. இரவு போன்ற நேரங்களில், உரிமையாளருக்கு ஊர்தி பயன்படாத போது, வெறுமனே இருக்காமல், தானே வாடகை ஊர்தியாக செயல்பட்டு பணம் ஈட்டி தருவது போன்ற வருமானத்திற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம்.
திக்குதல்
திக்குதல் என்பது ஊனமல்ல
அது பேச்சின் ஒரு முறை.
திக்குதல் என்பது,
சொல்லுக்கும் அதன் பொருளுக்குமிடையேயான மௌனம்,
அது வார்த்தைக்கும் செயலுக்குமிடையேயான
தடுமாற்றம் போன்றது.
உபநதிகள் – 1
ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க…
அதிரியன் நினைவுகள் – 8
எனது இராணுவ வெற்றிகள் மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில் பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன் கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள் செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.
பிரசவ வரிகள்
படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவாடைகளின் கீழேயிருந்து உடல் மாமிசத்தின் வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.
ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?
இந்தத் துறையில் தோல்விகள், என்னை வெவ்வேறு புதிய முறைகளை கறகத் தூண்டுகிறது. உதாரணத்திற்கும் vector images என்ற கணினி மூலம் (படம் முழுவதும் கோண கணக்குதான்) முற்றிலும் உருவாக்கும் புதிய கலையை நான் 2020 முதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முன்னம் சொன்னது போல, அதில் பெரும் வெற்றி இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், குளிர்காலத்தில் அதிகம் வெளியே சென்று படம் பிடிக்க முடியாத நிலையில், கணினி மூலம் உருவாக்கப்படும் வண்ணப்படங்கள் என்றோ விற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன், இந்தக் கலையில் இன்னும் கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
காணொளிகளின் கொண்டாட்டம், திண்டாட்டம்
2018 முதல் காணொளிகளைத் திருத்தம் செய்யும் இந்த நிறுவனத்தின் பல செயலிகள், டிக்டாக், வலையொளி, (Youtube) திரைப்படங்கள், தொலைக்காட்சி படைப்புகள் போன்றவற்றிற்கு முக்கிய வரமாக இருந்து வருகின்றன. ‘த லாஸ்ட் ஷோ வித் ஸ்டீபன் கால்பேர்ட்’ (The Last show with Stephen Colbert) படத்தின் வரைகலையில், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) என்ற படத்தின் அசத்தலான காட்சித் தாக்கத்தில் இவர்களின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
உத்தரகாசி -குப்தகாசி
இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
மாநகரம்
இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.
அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி
பயம்
கடந்து வந்த காட்சிகளை,
சிகரமெனத் தொட்ட மலையுச்சிகளை,
நெடிது வளைந்தோடிய பாதைகளை,
கானகங்களை – தொடர்ந்தோடிய
கிராமத்து வயல்வெளிகளை,
நினைந்து கிறங்குகிறாள்;
கிறங்கித் தயங்குகிறாள்..
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
மிக நுட்பமான, அதி உன்னதமான கருதுகோள்களை நாசாவின் முன்னேறிய கருதுகோள் அமைப்பு ( என் ஐ ஏ சி -Nasa Institute for Advanced Concepts) வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. தன் எதிர்காலக் குறிக்கோள்களுக்கான கூர்மையான தொழில் நுட்பங்களை அது ஆதரிக்கிறது. சனி கிரகத்தின் சந்திரனான டைடனில் (Titan) பறக்கும் கடல்- விமான ஊர்தியைப் (Sea-Plane) போன்ற ஒரு கருவியைப் படைப்பதற்கும், செவ்வாயில், உயிரினங்களின் குடியேற்றத்திற்கான தானே வளரும் செங்கற்களை உருவாக்கும் கருத்திற்கும் நாசா சமீபத்தில் நிதி அளித்துள்ளது. திரவ வானத் தொலைநோக்கி, (Fluid Telescope) ஆயிரக்கணக்கில் செயற்கைக் கோள் அடங்கிய மெய்நிகர் தொலைநோக்கி, பூமி 2.0 கண்டுபிடிக்க வானக் கண்காணிப்பகம் போன்றவைகளும் இந்தப் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்ள உதவக்கூடும் என்பதால் இவைகளுக்கும், என் ஐ ஏ சி அமைப்பு நிதி அளித்துள்ளது. இந்த முதல் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் $1,75,000 கிடைத்துள்ளது; அவர்கள் ஒன்பது மாதங்களில் அந்தந்தக் கருத்துக்களின் சாத்தியங்களை நிரூபிக்க வேண்டும்.
நிஷ்காம யோகி நாவல்
நிஷ்காம யோகி என்ற நாவல் 1956 ல் பிரஜாவாணி பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. பிரஜாவாணி பதிப்பகத்தாரே அதனை வெளியிட்டனர். கைதி நாவலைப் பிரசுரித்த காங்கிரஸ் பத்திரிக்கையை மாநிலக் கமிட்டி இனி நடத்த இயலாது என்று தீர்மானித்த பின் வட்டிகொண்ட ரங்கையா அதனை எடுத்து பிரஜாவாணி என்று பெயர் மாற்றி நடத்தினார். 1954 ல் வட்டிக்கொண்ட ரங்கய்யா மதராசிலிருந்து குண்டூருக்கு இடம் மாறி வந்தபோது பிரஜாவாணி அலுவலகமும் குண்டூருக்கு வந்தது. வட்டிகொண்ட விசாலாட்சியின் நாவல்கள் பிரஜாவாணி பதிப்பகத்தின் மூலமே வெளிவந்தன. 1998ல் வட்டிகொண்ட ரங்கய்யா மரணமடைந்தார். அவருடைய ‘திவ்ய ஸ்ம்ருதிக்கு’ அர்ப்பணிப்பாக நிஷ்காம யோகி நாவலை மீண்டும் பதிப்பித்தார் விசாலாட்சி.
பூனைகளின் குருதியாறு
துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில் செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’
மலையாற்றின் இலையணை
மலையாற்றில் ஓர் அழகான தடுப்பணையைக் காண்கிறேன். காற்று மட்டுமே உலவும் ஆளரவமற்ற இவ்வனத்தில் யார் எதற்காக இந்தத் தடுப்பணையைக் கட்டினார்கள்? ஓ! காற்றுடன் போரிட்டு வீழ்ந்த மேப்பிள் இலைகளின் உடற்கூட்டமா இது?
எச்சத்தாற்பாகம்படும்
பதினொன்றரை மணிக்கு இண்ட்ரோல் பெல் அடித்தார்கள். அப்போது என் அப்பாவை நான் பார்க்கவில்லை. பள்ளிக்கூட ஆசிரியரோ மாணவரோ ஆண்கள் யாருக்கும் கக்கூஸ் கிடையாது. ஹெட்மாஸ்டருக்கும் இல்லைதான். பேருந்து செல்லும் சாலையோரம் தான் எல்லோருக்குமே எதற்குமே. பெண்பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டிடத்திற்குப்பின்புறம் சிமெண்ட் ஷீட் போட்டு ஒரு மறைப்பு கட்டி வைத்திருந்தார்கள். அதனுள்ளாக என்ன வசதியிருக்குமோ யார் அறிவார்.
குற்றம் கழிதல்
வெள்ளிக்கிழமைகளில் வேலைத்தள நண்பர்கள் மதியம் சாப்பிட டவுண்ரவுணிலிருக்கும் பலவிதமான உணவகங்களுச் செல்வது வழக்கம். கவிதா வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது கிழமையே ஹலன் அவளுக்கு லன்ஞ் இன்வரேஷன் அனுப்பியிருந்தாள். எங்கு செல்வதென்றாலும் சந்திரனோடு செல்லப் பழகியிருந்த கவிதாவிற்கு உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மனம் சந்தோசத்தில் துள்ளியது. இது ஒருவகை புதிய அனுபவம். வேற்று இனத்தவர்களுடன் ஒன்றாக ரொறொன்டோ மத்தியில் இருக்கும் நவீன உணவகத்திற்குச் சென்று மதிய உணவு உண்பதை நினைக்கும் போது த்ரில் ஆக இருந்தது. இருந்தாலும் தான் கொண்டுவந்திருக்கும் சாப்பாட்டை என்ன செய்வது, எப்படியான உணவகத்திற்கு செல்லப் போகிறார்கள், எவ்வளவு காசு முடியும் இப்படிப் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தாலும், “ தாங்ஸ் வில் ஜொயின்” என்று பதில் போட்டாள்.
புல்வெளி, காடு, இடை.. வெளி &பீலித்தனிமை
கண்கள் முழுதும் முதலில்
பசுமையைப்
பருகவேண்டும்..ஆயிற்று
அடுத்து புல்மணம் நிறைந்த
காற்று..
ஆம் நன்றாகவே இருக்கிறது..
கிச்சுக்கிச்சு மூட்டுகிறது..
சிலஅடி நடந்தவுடன் காலில்
கண்களறியா முட்கள்
குத்தத் தொடங்குகின்றன