ஆற்றுக்குச் செல்லும் பாதை நெடுக இருபுறமும் தென்னை மரங்கள், வாழை, கரும்பு. அதிஷ்டானத்தைக் கடந்துதான் சென்றோம். மயிலின் அகவல் திரும்பியபக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரே இரண்டு மணல் லாரிகள் கடந்து போயின. எச்சரிக்கைப் பலகை இங்கு ஆற்றில் ஆழம் அதிகம், சுழல் உள்ள பகுதி, பலபேர் பலியான இடம் என்று பயமுறுத்தியது. ஆறு எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாணல் மண்டிக்கொண்டு வருகிறது. ஒரு சின்ன மணல் பள்ளம். ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்திருக்க வேண்டும். ஏறினால் மணல் மேடு. ஒரு காலத்தில் பள்ளமாகும். அங்கு ஒரு குடும்பம் திதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாணல் குச்சங்கள். மணல்மேடு மறுபடியும், மேடுதோறும் திதி முடித்துச் செல்லும் மனிதக்கூட்டம் விட்டுச் செல்லும் கழிவுகள், வாழைப்பழம், இலை, காய்ந்த பூ இத்யாதி… பக்கத்தில் சின்ன நீர்த்திட்டு.ஆங்காங்கே வெள்ளித் தகடுகளாக சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது காவிரி.
Category: இதழ்-288
கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்
வீடுகளிலும், நகராட்சிகளிலும் இந்த பி எஃப் ஏவைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுமணிகள் போன்ற துகள் நிரம்பிய கரிப் பொருள் வடிகட்டியும், (Granular Carbon Filters) தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையும் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவை செலவு பிடிப்பவை மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் கடினமே. (நம் ஊரில் மணற்படுகையும், கூழாங்கற்களும் நீர்த்தொட்டிகளில் பயன்படுத்தி, குழாயின் வாயில் துணியில் முடிந்து வைத்துள்ள படிகாரத்தைக் கட்டி குளிப்பதற்கும், தோய்ப்பதற்கும் உபயோகிப்பார்கள்; வெட்டி வேர், நன்னாரி வேர் போன்றவற்றை குடிக்கும் நீரிலும் போடுவார்கள். செப்புப் பாத்திரங்களைப் பயன் படுத்துவார்கள்- எங்கேயோ கேட்ட நினைவு!)
தெளிவு
“சரி… ஒங்க பெரியப்பா ஊரவிட்டு போனது தெரிஞ்சதும் ஒங்க ஆச்சிதான் போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வாங்கன்னு சொன்னா. அங்க போனா கம்ப்ளைன்ட வாங்க மாட்டேனுட்டாங்க. எழுபது வயசுக்கு மேலானவங்கள காணாமுன்னு கேஸ் பதிஞ்சா ஆளு கெடைக்கிற வரைக்கும் நிலுவையிலேயே இருக்கும். பல தடவ ஆளுங்க அம்படறதேயில்ல. அந்த மாதிரி பல கேஸுங்க அப்படியே கெடக்குன்னுட்டாங்க”
வட்டிகொண்ட விசாலாட்சி
மதராஸில் இருந்தால் ஆந்திர தேசத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்லும் வாய்ப்புகள் இருக்காது என்று அவர் கருதினார். அதுவே உண்மையாயிற்று. பரம்புரம் என்ற ஊரில் நடந்த இலக்கிய பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் இருந்து பிடிவாதம் பிடித்தாலும் கூட விசாலாட்சி நினைத்ததை சாதிக்க இயலாமல் போனார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெற்றிகரமாக அவரை வெளியேற்ற முடிந்ததாக கணவர் மகிழ்ந்தார். தனக்கு விருப்பமான சாகித்ய சங்கத்தில் பணி செய்யும் சுதந்திரதத்தை தன்னிடமிருந்து பிடுங்கி கட்டுப்படுத்திய கணவர் மீது அதிருப்தியில் இருந்த விசாலாட்சி உரைநடை இலக்கியத்தின் மீது பார்வையைத் திருப்பினார். 1951ல் இருந்து கதைகளும் நாவல்களும் எழுதத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை பெண்களின் கோணத்தில் பார்த்து அன்றைய இயக்கங்களையும் போராட்டங்களையும் மதிப்பிட்டு அவர் படைத்த கதைக்கருக்கள் அதற்கு முன்பு யாரும் எழுதாதவை.
வயோதிகம்
யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.
வோல்காவின் வால்
நாங்கள் என்ன தான் திட்டத்தை இரகசியமாக வைத்திருந்தாலும், அது கசிந்து விட்டது. பெரும்பான்மை நாய்களுக்கு இந்த திட்டத்தின் தாக்கம் தெரியவில்லை. அவர்களின் கவனம் எப்போதும் அன்றாட உணவு தான். சில அறிவு ஜீவிகளுக்கு திட்டம் புரிந்தது. ஆனால் சரியா தவறா என்று முடிவு எடுக்க இயலவில்லை. ஒரு சிறு பான்மையினருக்கு திட்டம் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ஏனென்றால் பலருக்கு அந்த காவலர்களுடன் நல்ல நட்பு. மனிதர் போட்ட உணவை உண்டு துரோகம் செய்வது கண்டிப்பாக நாய்க்குணம் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.ஆனால் வோல்காவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆனால் அத்தனை குழுக்களும் விழித்திருந்து உறு துணையாக இருப்பது என்று முடிவு எடுத்தன.
நிலவு ஒரு பனியாகி
யொஷினோ என்பது இன்றைய நரா மாகாணத்தின் யொஷினோ நகராகும். இப்பாடல் இயற்றப்பட்டபோது அது கிராமமாக இருந்தது போலும். தலைநகர் கியோத்தோவுக்கு அருகில் யொஷினோ என்ற பெயரிலேயே மூன்று இடங்கள் இருக்கின்றன. இப்பாடலில் வரும் யொஷினோ கிராமம். முன்னர்த் தலைநகராக இருந்த யொஷினோ நகரம், இவ்விரண்டுக்கும் அருகிலேயே அமைந்துள்ள யொஷினோ மலை. இம்மூன்று இடங்களுமே பழங்குறுநூறு செய்யுள்களில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒழிக தேசியவாதம்!
தசாப்தங்களாக முன்பிருந்த கருத்தை முற்றிலும் மறந்துவிட்டு ஹிந்து இந்தியன் இவற்றிற்குள்ள பாகுபாட்டை அழித்துக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வசிக்கும் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று கூறுமளவிற்கு சென்று விட்டனர். இது முற்றிலும் தவறான நோக்கு என்பதை நான் திருப்பித்திருப்பி சொல்ல வேண்டிய தேவையில்லை. இது நயமானதல்ல என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்களும் கிருத்துவர்களும், தங்களை கேட்காமலேயே ஹிந்துத்துவ பிரிவில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒருவரும் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை. அரை குறை அரசியல்வாதிகள், இப்பொய் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இன்றியமையாதது என்றால், அவர்கள் வாயிலிருந்து வரும் பொய் அவர்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக்கு மாறானது என்பதை உணர்த்த வேண்டும். பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இப்பொய்கள் எதிரிகளை முட்டாள்களாக்குவதற்காக கூறப்படுவது தங்களையே முட்டாள்களாக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதை உணர வேண்டும். ஹிந்துவும் இந்தியனும் ஒன்றல்ல எனும் உள்ளுணர்வு மிக அத்தியாவசியம்.
பொன்டெங்
“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.
மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.
அதிரியன் நினைவுகள் – 7
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில் சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.
மித்ரோ மர்ஜானி – 7
தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!
கு.அழகர்சாமியின் குறுங்கவிதைகள்
உற்று நோக்குமென்னை
உற்று நோக்கி
கடுகு விழிகளை
உருட்டி
வளைத்த கம்பியாய்
வாலை நிமிர்த்தி
ஓடாது நிலைக்கும்
ஓணானின் எதிர்ப்பில்
தெரிந்தது
சபிக்கப்பட்ட வீடு
வைக்கோம், “என் வாழ்க்கையில் இவ்வளவு உறுதியாக இதுவரை இருந்ததே இல்லை, என் நண்பரே” என்று பதிலுரைத்தான். “நான் முன்னமே சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன், வாடகையை குறைக்கத்தான்போகிறேன்”.
ஐயா நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நீங்கள் இதற்காக இம்மாலையே வருந்துவீர்கள். வாடகைதாரர்களின் வாடகையை குறைப்பதா? இதுவரை கேள்விப்பட்டிராதது ஐயா. வாடகைதாரர்கள் இதைப்பற்றி அறிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் அயல் குடியிருப்பாளர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? நிஜமாகவே…
கங்கோத்ரி
வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.
பசி
நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாம அந்த விளக்குகளை நோக்கி ஓடினேன். நினைத்தபடியே ஒரு மலாய்க்கார ஆடவர் சில உணவுப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். அவசரத்துக்கு நாசி கோரேங்கும் பொறித்த கோழியும் வாங்கித் தின்றுவிட்டு…… தின்றுவிட்டுத்தான்…(சாப்பிட்டு விட்டல்ல என்று தெளிவுபடுத்திக் கொள்கிறேன்) பேருந்துக்குத் திரும்பினேன். என் ஒருவனுக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், நான் ஏறியதும் பேருந்து நகரத் தொடங்கியது. பசி தன் வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தது. சாலையில் மெதுவாய் ஊரத் தொடங்கிய பேருந்து, சற்று நேரத்தில் வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். சீனக் குமரிகள் இன்னும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஊனுண்ணித் தாவரம் – வீனஸ்
சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது. அவற்றின் வளர்ச்சிக்கு நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம் அவை சரி செய்து கொண்டன.
என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்
சில பங்களிப்பாளர்களின் வெற்றியைப் பார்த்து, நான் உருவாக்கிய வண்ணப்படங்களின் தோல்வி ராஜா இந்த வகை. வீட்டில் இருக்கும் பெரிய ப்ளாஸ்டிக் ப்ரஷ்கள், சிறிய டார்ச் விளக்குகளின் அழகிய ப்ளாஸ்டிக் டிசைன்கள், ஏன் சில பெயிண்ட் அடிக்கும் ப்ரஷ்களின் நுனிகள் என்று இவ்வகை பொருட்களை மிக அருகாமையில் படம் (macro photography) பிடித்தேன். இவற்றுக்கு கணினி மூலம், பல வண்ணங்களை உருவாக்கி, ஒரு அழகிய இணையதள பினணியாகப் பயன்படுத்தலாம் என்பது என் கணிப்பு. கணிப்புடன் நின்ற ஒரு பெரும் தோல்வி இது!
நான் என் உடலின் வேகம், மொழி அல்ல
மொழியின் மேன்மையை நேரத்தின் தொன்மையில் அறிகிறோம்,
ஆயின் நான் என் உடலின் வேகம்
மொழி அல்ல