அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 14 in the series அதிரியன் நினைவுகள்

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.

’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம்

’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்‌ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.

இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்

இந்தியா ஆங்கிலேயர் வரவுக்கு முன்னர் 56 பகுதிகளாகப் பிரிந்து அரசர்களால் ஆட்சிசெய்யப் பட்டுவந்தாலும், உணர்வால் ஒன்றியிருந்தது – இருக்கிறது. வீட்டிலோ, கோவிலிலோ எந்தவொரு நற்செயலையும் தொடங்கும் முன்னர் இந்தியா முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழியில் (சங்கல்பம்), “ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே..” என நாவலந்தீவான (மூன்று திசைகளில் கடலாலும், வடக்கில் இமயமலையாலும் தீவாகத் தனிப்படுத்தப்பட்ட) இந்தியாவின் 56 பகுதிகளையும் ஒரு குடைக்கீழ் கொணர்ந்து ஆட்சிசெய்த பரத மன்னனின் பெயரைச் சொல்லிப் பாரத நாடும், பரதக் (துணைக்) கண்டம் என்னும் இந்தியாவின் மக்களாகிய நாங்கள் செய்யப்போவது இச்செயல் என்று குறிப்பிடுகிறோம்.

கடுகு

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

நேரம் எனும் கள்வன்

நம் வீட்டுக் குழாயில் நாம் பெறும் தண்ணீர் இவைகளில் ஒன்று. இன்று நாம் குழாயைத் திறந்து பயன்படுத்தும் நீரை, 19ம் நூற்றாண்டில், 20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் அவ்வளவு எளிதாகப் பெற முடியவில்லை. உலகின் செழிப்பான நாடுகளிலும் அப்போது இதுதான் நிலை. அந்தக் காலத்தில், வீட்டிற்குத் தேவையான நீரைக் கொணர்வதும், சேமிப்பதும், மீண்டும் நிரப்புவதுமே ஒரு தனித்த வேலையாகிப் போனது. இந்தக் கருத்தை, ‘அமெரிக்க வளர்ச்சியின் ஏற்றமும், இறக்கமும்’ (The rise and fall of American Growth) என்ற நூலில் பொருளியலாளர் ராபர்ட் ஜெ கோர்டன் (Robert J Gordon) சொல்லியிருக்கிறார்.

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…” “அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”

ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு

மாலதி சந்தூர் சொந்தமாக நாவல்களை எழுதியதோடு கூட சுவாதி பத்திரிகையில் பாத்தகெரடாலு என்ற தலைப்பின் கீழ் முன்னூற்றைம்பது ஆங்கில நாவல்களை அறிமுகம் செய்துள்ளார். அவை முன்னர் பாத்தகெரடாலு என்ற பெயரோடே பிரசுரமாயின. அது இப்போது 160 உள்நாட்டு வெளிநாட்டு மொழி நாவல்களின் அறிமுகம் – நவலா மஞ்சரி என்ற பெயரில் ஆறு தொகுதிகளாகக் கிடைக்கிறது. உலக நாவல் இலக்கியத்தை தெலுங்கு வாசகர்களுக்கு அத்தனை சரளமாகவும் சுந்தரமாகவும் அறிமுகம் செய்த மாலதி சந்தூரின் முயற்சி அசாதாரணமானது.

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி

உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.

தொடர்பிற்கு வெளியில்

மூத்தவன், தான் திருமணமாகாமல் இருக்கும்போது வேறு ஜாதிப் பெண்ணை கட்டிக்கொண்டான், தனக்கு அடுத்திருக்கும் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாதவன்’ என்ற பெரிய மாமாவின் பராதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அம்மா அத்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிற்பகலில் நான் அத்தையின் மடியில் படுத்திருந்தேன்.நான் தூங்கிவிட்டதாக எண்ணி, “பெரியவருக்கு என் மேல வேறக் கோவம். கல்யாணத்துக்கு முந்தி நான் அறிவொளி வவுப்பு எடுக்கப் போயிட்டு இருந்தேன். ஒருநா.. இவரு பெட்டிக்கடையோரமா சிகரெட் பிடிச்சுட்டு நின்னாரு..பெரியத்தானாச்சேன்னு சிரிச்சேன். அன்னைல இருந்து கரெக்ட்டா நான் வர்ற நேரம் ஆஜர் ஆகிருவாரு.. பாவமா இருக்கும்,” என்றாள் அத்தை

உத்தரகாசி

This entry is part 5 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்

பிரிவினும் உளதோ பிரிதொன்று?

மிகவும் எளிமையாக நேரடியாகப் பொருள்கொள்ளத் தகுந்த பாடல். இதுவரை இத்தொகுப்பில் இடம்பெற்ற காதல் பாடல்களிலிருந்து சற்று வேறுபட்டது. காதலன் சந்திக்க மறுத்த துயரைக் காதலி வெளிப்படுத்தும் பாடலோ ஆணொருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலில் விழும் பாடலோ அல்ல. ஏறத்தாழ நம் “முதல் மரியாதை”யில் வரும் நடுத்தர வயதுக் காதலை ஒத்தது. சாய்ந்துகொள்ளத் தோள் தேடும் ஆண்மகனுக்கு ஆறுதல் கிடைக்காத நிலையை உரைப்பது. எனவே வயதில் இளையோருக்குப் புரிவது சற்று சிரமம் என்ற முன்னுரை ஒன்றும் இப்பாடலுக்குக் காணக்கிடைக்கிறது.

மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

ஆறு கவிதைகள்

சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.

அத்திம்பேர்

This entry is part 4 of 4 in the series 1950 களின் கதைகள்

குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான். 

‘நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம்

மைஃபிட்னஸ்பால் செயலி மூலம் உங்கள் கலோரி அளவில், எத்தனை சதவிகிதம் கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு உணவுகள் இருக்க வேண்டும் என்று குறிக்கோள்களை நீங்கள் திட்டமிட்டு, நீங்கள் தினமும் உண்ணும் உணவை கண்காணித்தால், மைஃபிட்னஸ்பால் செயலியே (கட்டண பதிப்பு) எந்தந்த உணவில், எவ்வளவு கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு , நார்ச்சத்து உணவுகள் இருக்கிறது என்பதைத் தெரிவித்துவிடும். வெள்ளை அரிசி, மாவுச் சத்துப் பொருட்களில் கார்போ ஹைட்ரேட்ஸ் அளவு அதிகம். இந்த உணவுகளை உண்ணக்கூடாது என்றில்லை, குறைவாக உண்பது நல்லது.

ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

பிரேமா மூடிய கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அடுத்த பாடலை ஓடவிட்டாள். அவள் காதுகளில் ஒரு ரயில் மெதுவாக டுடுன் டைன்டுடுன் டுடுன் டைன்டுடுன்… என்று தீனமாக ஆரம்பித்து வேகமெடுத்து பாலத்தில் ஓடும்போது பாடலில் ஓ சாயா…(O saya) என்று ரஹ்மானின் குரல் ஆரம்பித்தது. ரயில் இன்ஜின் ஓசை, இரும்புடன் இரும்பு சேர்ந்தோடும் ஓசை, ஓடும் ரயிலில் கதவைத் திறந்து வாசலில் நின்று தலையை வெளியே நீட்டி மனம் விட்டுக் கத்தினால் வரும் ஓசை போன்ற அர்த்தம் இல்லாத ஓசைகள் அந்தப் பாடலில் இசையானது.

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது

எந்த வண்ணப்படம் விற்கும் என்பதை சரியாக யாராலும் சொல்ல முடியாது. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து அருமையாக படம் பிடித்து மேலேற்றினால், அந்தப் படத்தை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முதலில் விற்ற என்னுடைய படங்கள் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. மாறாக, என்னைத் தவறாக சந்தையை கணிக்கத் தூண்டியது. என் தன்நம்பிக்கையை குலைக்கவும் செய்தது. ஏன், அசட்டுத்தனமாக இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்குப் போடேன் என்று பல தருணங்களில் நினைக்க வைத்தது. நான் எந்தப் படங்கள் சிறந்தவை என்று எண்ணியிருந்தேனோ, அவை அதிகம் விற்றதே இல்லை!

அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்

முக்கியமாகக் கருதத் தக்கவைகள் என்னென்ன, எதிர்கால தொழில் நுட்பம் எது, வியப்பான, விசித்திரமான படைப்புகள், சாதனங்கள், சேவைகள் என்னென்ன, அனைத்துக்கும் மேலாக 2023-ல் சந்தையில் நீங்கள் வாங்கும் விதத்தில் கிடைக்கப் போகிற பொருட்கள்/ சேவைகள் என்ன என்று வகைப்படுத்தித் தருவது. இதற்கான சி என் இ டியின் செயல்பாடு இவ்வாறாக இருந்தது.

ஆமிரா கவிதை

அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்

புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்

ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்

முதல் தனிமை

பூச்சரத்தின்
அடுத்தடுத்து முடிச்சுகளில்
பூக்களை
வரிசைப்படுத்தி
தூக்கிலிடுகிறேன்
அதன் செடிகளுக்கு
நீருற்றுகிறேன்
பூக்களுக்கு அது
இரக்கமற்ற கொலை