அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள்.
Category: இதழ்-284
கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு
நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம்.
பனி இறுகிய காடு
வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.
கிரியை
ஒரு நிமிடத்தில் சாலை சீதோஷ்ணம் மாற ஆரம்பித்தது. ஊர்தி ஓரமாக ஒதுங்க, நடந்து போன மக்களும், ஆடிக் கொண்டிருந்தவர்களும் சாலையின் இடப்புறமாக வரிசை கட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். வெடி வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நெற்றி வழிய திருநீறு பூசி ஈர வேட்டி அணிந்து மீசை, தலை சிகை மழித்துக் காணப்பட்ட ஆள் ஆம்புலன்ஸைப் பார்த்து ‘வழி விட்டாச்சு, வேகமா ஆஸ்பத்திரி போங்க’ என்று உரக்க முழங்கினான். தடைகள் விலக சீரான வேகத்தில் ஆம்புலன்ஸ் ஜீவனுடன் ஜீவனற்ற ஊர்தியைத் தாண்டிப் போனது.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ நொறுங்குவது போல மனம் ஊசலாட்டம் கொண்டது. உணர்வு, புத்தி, திட்டம் என்று வகுத்துப் பார்த்த யோசனை நீடிக்கவில்லை. உணர்வு மேலோங்கியது. சகலமும் துறந்தவன் பர்ஸில் சில ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தான். நான்கைந்து விஸிட்டிங் கார்டுகளை லைட்டர் துணையுடன் சாம்பலாக்கி எழுந்தவன், ஒரு கேரி பேக்கில் பர்ஸை வைத்துக் கட்டி எழுந்தான்.
வாக்குமூலம் – அத்தியாயம் 15
பொங்கல் டயத்துல கடைகள்ள வெள்ளை அடிக்கிற மட்டைகள் விப்பாங்க. அது பனை மட்டை. அதை மாரியப்பன் வாங்கிட்டு வருவான். ஒரு பக்கம் கல்லை வச்சு மட்டைய நைப்பான். சுண்ணாம்புல நீலத்தக் கலந்து அடிச்சா வீடு பளீருன்னு ஆயிடும். எல்லா அறைகளையும் அடிச்சம் பெறவுதான் அடுப்பாங்கரைய அடிப்பான். ஏன்னா அடுப்படிச் சொவர் எல்லாம் பொகை பட்டு கருப்பா இருக்கும். மொதல்லயே அடுப்படி அடிச்சா நல்ல சுண்ணாம்புத் தண்ணியெல்லாம் கருத்திரும்ன்னு கடைசியிலதான் அடிப்பான். வெள்ளையடிச்சதுமே வீட்டுக்குப் பொங்கல் களை வந்துரும்.
திலிப் சித்ரேயின் இரு கவிதைகள்
பாலையின் மீது பனிமூட்டம் போல்
மரங்களின் அமைதியில்லா ஆன்மாக்கள் தொங்குகின்றன.
மரங்களின்மையின் காட்டில்
பறவைகளின்மை கீச்சிடுகிறது.
தேவியின் வாளும், தேவ தண்டமும்
தமிழ் இலக்கணங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்திணைகளாக நிலத்தை பிரிக்கிறது.ஐந்திணைகளுக்கும் தெய்வம்,மக்கள் என தனித்தனியாக உள்ளார்கள்..இதை விளக்கும் இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருந்தது.அதில்,பாலை நிலமென்பது குறிஞ்சியும் – முல்லையும் திரிந்து கெடுவதால் உருவாகிறது..தவறான ஆட்சியால் நாடு பாழ்படுவதை போலவே,மாறிய பருவமுறையால் செழிப்பான வனங்கள் பாலைவனமாக மாறுகிறது என்று குறிப்பிடப்படுகிறது..
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
அவர் எழுதிய த்ரி வர்ண பதாகை என்ற நாவல் சமூக சீர்திருத்ததில் ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இருவரில் ஒருவர் முஸ்லிமையும் ஒருவர் ஹரிஜனனையும் திருமணம் செய்து கொள்வதும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டச் சம்பவங்களையும் கதைப் பொருளாக கொண்டது. அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு நடத்திய விதம், மேலும் இரு இளம் பெண்கள் குல மதத்துக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கமளித்ததாக கதையை நடத்தியுள்ளார் ஆசிரியை
சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கெல்லாம் பல்துறை இணைவுப் (interdisciplinary) படைப்பால் மட்டுமே விளக்கம் தர முடியும் . அதையேதான் (அவர் எழுதிய) காபிடல் அண்ட் ஐடியாலஜி (போதுமான அளவு பாராட்டுப் பெறாத நூல்) என்னும் பகுப்பாய்வு மற்றும் முறையியல்சார் (analytical and methodological) திருப்புமுனைப் படைப்பு வழங்கி இருக்கிறது “சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?”
காசு, பணம், துட்டு, மணி, மணி
பணமாகப் பெற்று அந்த நீர்மைப் பணத்தை அதிக வருவாய் தரும், ஆனால் உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் வங்கிகள் போன்றவற்றிற்கு ஒரு தனி நபர் சந்திக்கும் நிதிச் சிக்கல்களை, கூட்டாகச் சந்திக்கும் நிலை பொதுவாக ஏற்படாது. பலவாறாக, அது, சமச்சீர் பேணுவதாக நினைத்து, உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்து விடும். அதாவது நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஒரே நாளில் அவசரத் தேவையென பணத்தை எடுக்க நேரிடாது என்பது நம்பிக்கையாகும்.
பணம் பணம்…
இனிமேலும் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டுமா? செய்வதில் என்ன தவறு? உடல் வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான வருமானம் சம்பாதிக்க வேலை. அது முடிந்ததும் மீதி நேரத்தில் மன வாழ்க்கையை வளர்க்க தியானம். அத்துடன், பல வருஷப் பழக்கத்தை ஒரே நாளில் விடமுடியாது. மூளையின் இரு பாதிகளுக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக…
மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.
மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3
தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”
பிரதிபிம்பம்
பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.
“இதை எவன் வாங்குவான்?”
ரவி நடராஜன், விஞ்ஞான உலகிலிருந்து, வெறுத்துப் போய், தமிழ் சீரியல் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார் என்ற வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்! இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது தமிழ் சீரியல்கள் நினைவிற்கு வந்தால், அது மிகவும் இயற்கையான விஷயம். ஏஜன்சிக்கும், வண்ணப்படக் கலைஞருக்கும் இருக்கும் தொடர்பு, தமிழ் சீரியல்களில் ““இதை எவன் வாங்குவான்?””
சொல்லவல்லாயோ, கிளியே?
அவர் கண்டிபிடித்த இந்த நாட்டில் ஏற்கெனவே பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மாறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் இன்று அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதும், தொழில்நுட்பம் இன்று மேம்பட்டுள்ளது என்பதும், வானை முட்டும் கோபுரங்களும், திறன் பேசிகளுமாக உலகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதும் அவருக்கு ஆச்சர்யமாக இருக்கும். மேலும், அவரை, பலர் ஒரு சாதனையாளர் என நினைக்கவில்லையென்பதும், சிலர் அவர் மிருகத்தனமான வன்முறையைக் கையாண்டு பூர்வ குடிகளைக் கொன்றார்/அல்லது அடிமைப்படுத்தினார் என நினைப்பதும் அவருக்கு அவமான உணர்வினை ஏற்படுத்தும். 500 வருடங்கள் என்பது ஒருவரை பற்றிய சிந்தனையை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது என அவர் நினைப்பார்.
பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள்
அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில் 200 கிமு – கிபி 700 காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி 15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து.
நாடு கடத்தப்பட்ட லூலூ
அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.
அதிரியன் நினைவுகள் -3
அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல.
ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
கொசென்ஷூ தொகுப்பின் 1102வது பாடல் ஹெய்கேவின் கதைகள் என்ற புதினத்தில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. எல்லா விஷயங்களிலும் தெளிவாகச் சிந்திக்கும் தந்தைக்குத் தனது மகன் விஷயத்தில் மட்டும் அன்பு கண்ணை மறைத்தது என்ற புகழ்பெற்ற கவிதைதான் அது. கென்ஜியின் கதை புதினத்தை எழுதிய முராசாகி இவரது கொள்ளுப்பேத்தி ஆவார். இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் மிகா சமவெளியின் அருகில்தான் இவர் வசித்து வந்திருக்கிறார். இரு வெவ்வேறு காலகட்டங்களில் தலைநகர்களாக இருந்த நராவையும் கியோத்தோவையும் பிரிக்கும் கமோ ஆற்றின் கரையில்தான் இச்சமவெளி அமைந்துள்ளது.
உயரவாகு
அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்
உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.