எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.
Category: இதழ்-282
தம்பதிகளின் முதல் கலகம்
லலிதா! உன்னை சமர்த்திசாலி என்று நினைத்தேன். ஆனால் இப்படிப்பட்ட பைத்தியக்காரி என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன் முட்டாள் தனத்திற்குத் தகுந்த பிராயசித்தம் அனுபவிக்காமல் போக மாட்டாய். இப்போதைய தகராறில் தப்பெல்லாம் என் பேரனுடையது தானா? அல்லது உன் தப்பு ஏதாவது உள்ளதா? உனக்கு உன் சுதந்திரம் பற்றித் தெரிந்த அளவுக்கு உன் கடமை பற்றி தெரிந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். கடமையை உணர்ந்தவர்கள் இப்படிப் பேசவே மாட்டார்கள். அவன் எத்தகைய கோபக்காரன் ஆனாலும் நீ உன் சாந்த சுபாவத்தால் அவனுடைய தாமச குணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்
காட்டு மல்லி
அன்று இரவு சிவநாதத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. இந்த ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆபீஸில் வேலை அதிகமானாலும் ஆபீஸர் திட்டினாலும் வீட்டில் சச்சரவுகளின் அழுத்தம் அதிகமானாலும் அந்த ஏரிக்கரைக்குச் சென்று மணிகணக்காக படுத்துக் கிடப்பதில் எல்லாவற்றையும் மறந்து போவான். அந்த ஏரிக்கரையை பார்த்த உடனேயே மனது அமைதியாகிவிடும். ஆனால் அவனுடைய அந்தராத்மா அவனைத் திருப்பி கேள்வி கேட்டது. “உனக்கு மனசாந்தி அளித்து கவலையை நீக்கியது குருவனின் குடும்பம். அவர்களுடைய மனப்பொருத்தமும் அவர்கள் திருப்தியோடு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் உனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா?” என்று அவனை விமரிசித்தது.
மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?
எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.
தொள்ளாயிரம் பாட்டிகள்
ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.
மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு
“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள்,
1957-2
பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள். முதல் படிவத்தின் (இன்றைய கணக்கில் ஆறாம் வகுப்பு) முதல் பாடம், ஆங்கிலம். வகுப்பில் பெரும்பாலோர் சுற்றுவட்டாரத்து கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள். அதுவரை காதில் விழுந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே அறிந்த அவர்களுக்கு அம்மொழியின் முதல் அறிமுகம். அதனால் ஆசிரியர் கேட்கிறார்.
அதிரியன் நினைவுகள்-1
அதிரியன் நினைவுகள் அல்லது Mémoires D’Hadrien, புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியை மார்கெரித் யூர்செனார் (MargueriteYourcenar) என்பவரால் 1951 எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். ரோமானிய அரசன் தமது முதிர்ந்த வயதில் தமக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளவிருந்த மார்க் ஒரேல்(Marc Aurèle) என்கிற வாலிபனுக்கு எழுதும் மடலாக சொல்லப்பட்டுள்ள இப்படைப்பு ஆசிரியரின் கற்பனை. ரோமானிய பேரரசன் அதிரியன் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அத்தனை அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதாக, விமர்சிப்பதாக நாவல் விரிகிறது. 2002ஆம் ஆண்டு நார்வே இலக்கிய வட்டம் எக்காலத்திலும் வாசிக்கப்படவேண்டியவையென உலகின் 54 நாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய 100 படைப்புகளை பட்டியல் இட்டுள்ளது, அவற்றில் இந்நாவலும் ஒன்று
சோசலிசத்துக்கான நேரம்
ஏற்றத்தாழ்வை ஆழமாக்கும் போக்கைக் கொண்ட முதலிய மனோபாவம் பெருந்தொய்வின் (Great Depression) பின்விளைவாக தற்காலிகமாக தலைகீழ் மாற்றம் பெற்று அகண்ட நடுத்தர வர்க்க உருவாக்கலை சாத்தியமாக்கியது. ஆனால் பின்னர் வந்த உலகமயமாக்கல் (globalisation)காலத்தில் முதலியம் பழிவாங்கும் விதமாகத் திரும்பி வந்து தன் வழக்கமான போக்கைத் தொடர்ந்தது.
மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
மிங்கு, தீபாவளி நேரத்திலே எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துக்காவது இல்லே அது போல நேரங்களிலாவது ஸ்கர்ட்டும் ப்ளவுசும் உன்னை மாதிரி குமருகள் உடுத்த ஆசைப்பட்டா, ரொம்பவும் கண்டிக்கக் கூடாது தானே. முழுக்க உடம்பு மூடின உடுப்பு அதெல்லாம்னு மிங்குவுக்கு தெரியும் தானே. அதுவும் துணியும் செய்நேர்த்தியும் மட்டும் தான் போர்ச்சுகீஸ். தைத்து உடுப்பாக்கி தந்தது நம்ம தையல்காரங்க. பிடவை கூட இடுப்பு தெரியும். ஸ்கர்ட் போட்டா முழுசாக மூடி இருக்கும்”.
வாக்குமூலம் – அத்தியாயம் – 13
சபரி மலைக்கிப் போறாங்க. மகர ஜோதி பாக்கப் போறாங்க. எதிர்த்த மலை உச்சியில ஆட்கள், ஜோதி தெரிய வேண்டிய அந்தக் கருக்கல் நேரத்துல, தீப்பந்ததைக் கொழுத்திக் காட்டுதாங்க. அந்த இருட்டுல ஆட்கள் இருக்கது தெரியாது. அந்த நெருப்பத்தான் மகர ஜோதின்னு சொல்லுதாங்கன்னு இவங்க அப்பா சொல்லுதாஹ. மகர ஜோதி அன்னைக்கி எதிர்த்த மலையில என்ன நடக்குன்னு ஆட்கள் போயிப் பாத்திருக்காங்க. அங்க போயிப் பாத்தா இதுதான் நடந்திருக்கு. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிறதுக்காக, நம்பிக்கை ஏற்படுகிறதுக்காக இதெல்லாம் செய்தாங்கன்னு ரவியோட அப்பா சொல்லுதாங்க. இது நெசமோ, பொய்யோ? யாரு கண்டது? நமக்கு அடியும் தெரியாது, முடியும் தெரியாது.
சுரணை குறைந்த பகலிரவுகள்
ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்
ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
1929ல் பிரசுரமான சம்பகமாலினி என்ற நாவலை எழுதிய ஆ ராஜம்மா அப்போtது திருவல்லிக்கேணி லேடி வெல்டிங்டன் பயிற்சிக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடம் இரு மொழிகளிலும் சந்திரமௌலி, மதுவன பிரசாதம் முதலிய படைப்புகளை செய்திருந்தார். சம்பகமாலினி ஒரு வரலாற்று நாவல், ஜனமஞ்சி சுப்ரமண்ய சர்மா இந்த நாவலை எடிட் செய்தார். ஆந்திர நாரிமணிகளுக்கு இந்த நாவல் அர்ப்பணம் செய்யப்பட்டது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களானாலும் பிற பெண்களானாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை சாமர்த்தியத்தோடு உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த நாவலின் நோக்கம். அவ்வாறு உபயோகித்து கொண்டு வெற்றியடைந்த இரு பெண்களின் கதை இந்த நாவல். அவர்கள் தாயும் மகளுமாக இருப்பது சிறப்பு.
புத்தியும் இதயமும்
விவரித்துச் சொல்லமுடியாதபடி நாம் தனித்திருக்கிறோம்
என்றென்றைக்கும் தனித்திருக்கிறோம்
அது அப்படியாக இருக்கவே
விதிக்கப்பட்டிருக்கிறது,
அது வேறெப்படியும் இருக்க
என்றைக்கும் விதிக்கப்படவில்லை –
மரணத்துடனான போராட்டம் தொடங்குகையில்
கடைசியாக நான் பார்க்க விரும்புவது
என்னை சுற்றித் தெரியும்
வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1
புகைப்படக் கலை மிகவும் விலையுயர்ந்தது என்ற எண்ணம் எல்லோரிடமும் 1970 -லிருந்து 1990 -கள் வரை இருந்தது. கையில் அதிக சாசில்லாத, ஆனால், தொழில்நுட்ப ஆர்வலர்களான பரம், நான் மற்றும் சில நண்பர்கள் இணைந்து, ஃபிலிம் சுருளை கழுவும் வேலை மற்றும் படங்களை அச்சிடுவது என்று ஸ்டூடியோ வேலைகளிலும் இறங்கினோம். இப்படித் தொடங்கியப் பயணம், மெதுவாக ஒரு கலைப் பாதை நோக்கி நகரத் தொடங்கியது உண்மை.
க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)
இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன் இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது.
மைதா
கேடுவிளைவிக்கும் உணவுகள் என்று இணையத்தில் தேடினால் வரும் 10 உணவுகளில் பெரும்பாலும் முதலிரண்டு இடங்களில், மைதா, பரோட்டா இரண்டும் இருக்கும்
ஆனால் மைதா உடலுக்கு கேடுதருவது என்பதற்கு அடிப்படையாக எந்த அறிவியல் ஆதாரங்களும் காட்டப்பட்டதில்லை. இது குறித்த முறையான ஆய்வுகளும் செய்யப்பட்டதில்லை.
யாருற்றார்,யாரயலார்?
பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர்.
தோற்றங்கள்
உறவினரோ நண்பரோ வரும்போது அவர்களோடு அம்மா கொண்டிருந்த பிணைப்பு, அவர்களுடனான சந்திப்பு எல்லாம் ஒருகணத்தில் நினைவுக்கு வந்தது. திரைப்படத்தில் நினைவோட்டத்தைக் காட்டும்போது ஒரு வினாடியில எப்படி இத்தனையும் ஞாபகம் வரும் என்று கேலியாக கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, திரைப்படத்தில் குறைவாகவும் மெதுவாகவும் காட்டுவதாகத் தோன்றியது. சந்திரனுக்கு நினைவுக்கு வருபவை அனைத்தும் வருபவருக்கும் தோன்றும்போலும். அதனால்தான் இவன் அழும்போது அவருக்கும் கண்ணீர் வருகிறது.
கொடிவழிச் செய்தி
பழங்கால ஜப்பானிய வழக்கத்தில் திருமணம் முடிந்தபின் மனைவி தன்வீட்டில் இருக்கத் தலைவன் அங்குச் சென்றுவருவான் என்று பார்த்தோமல்லவா? இப்பாடலில் உன்னை என்னிடம் அழைத்துவரும் எனக் குறிப்பிட்டிருப்பது பாடியவர் ஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பாடுவதுபோல் இயற்றப்பட்டிருப்பதால்தான். கொசென்ஷூ தொகுப்பில் இப்பாடலுக்கு எழுதப்பட்டிருக்கும் முன்னுரையும் இதை உறுதிப்படுத்துகிறது.
நான்கு கவிதைகள்
வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அவன் ஒன்றை
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான்,
தேவை இருந்தது.
அவனை அடைய அதுவே வழி.
இப்பொழுது மொழி மட்டுமே அவன்.
அவன் சொல்தான் அவனது காலம்.
முன்பு இருந்ததும்
தற்போது எழுதப்போவதும்
ஒன்றல்ல என்று
நிரூபணம் செய்ய முற்பட்டான்.
சப் செய் (SUP SEI)
உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!.
வாழ்வும் தாழ்வும்
அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.