இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.
Category: இதழ்-279
பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக
இந்திய தேசிய பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும், மக்கள் அனுபவித்த துயரை, பல எழுத்தாளர்கள், நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை “அம்ருத் மஹோத்ஸவ்” ஆக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் முன்னால் இருந்த சவால்களையும், அதில் நாம் கண்டடைந்த “பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக”
சாஹிர் லூதியான்வி
திரைப்பாடல்களில் இசைக்கு வரிகளா வரிகளுக்கு இசையா என்னும் பட்டிமன்றம் காலங்காலமாக நிகழ்கிறது. சாஹிர் தனது வரிகளுக்கு இசை அமைக்கப்படுவதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் எஸ்.டி. பர்மனுக்குக்கும் அவருடன் மனக்கசப்பு உண்டானது. ஒரு காலகட்டத்தில் தனது பாடலைப் பாடும் லதா மங்கேஷ்கருக்குத் தரப்படும் தொகையைவிட தனக்கு ஒரு ரூபாய் அதிகமாகத் தரவேண்டும் எனப் பிடிவாதமாகச் சொல்லியுள்ளார்.
மிளகு அத்தியாயம் முப்பது
வேறு ஒன்றுமில்லை இந்த உங்கள் வீட்டு மாடியில் இரண்டு விசாலமான அறைகள் இருப்பதைப் பார்க்கிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவ்வப்போது இங்கே வந்திருந்து கடல்காற்று வாங்கி மனதுக்குப் பிடித்த வைத்திய சாஸ்திர ஏடுகளை ஆராய விரும்புகிறேன். நான் பைத்தியநாத் அரச வைத்தியரிடம் வைத்திய சாஸ்திரம் பயில்வது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம் சென்ஹோர் பெத்ரோ. இரண்டு வீடு கடந்து பிரதானி நஞ்சுண்டையாவோடு சேர்ந்து இந்தியக் கவிதைகளை போர்த்துகீசிய மொழியாக்கம் செய்யவும் செயல்படுகிறேன். எல்லாவற்றையும் கவனிக்க, இந்த இரண்டில் ஒரு மாடி அறையை எனக்கு தற்காலிகமாக கொடுத்து விடக் கோருகிறேன். மாதம் நூறு வராகன் குடக்கூலி தருவேன். அதற்கு மேல் தேவை என்றாலும் தருவேன்”.
வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்
பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”
நாகலிங்கப்பூக்கள்
முன்புறத்தே வீதி நகர்ந்து கொண்டிருந்தது. யௌவனம் இறங்கிக் கொண்டிருந்த பருவத்தில் , திகழுக்கு எதனையும் இலகுவாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. மௌனத்தின் மீது திரளும் சிறிய சலனங்களால் அவன் சூழப்பட்டிருந்தான். “பூனை குறுக்காலை போனாக் கூடாதப்பா…” ஞானம்மாவின் குரல் பூனை கடந்து போன சொற்ப நிமிடங்களுக்குப் பிறகு வெளிப்பட்டது.
கந்திகோட்டா – பேரமைதியின் பள்ளத்தாக்கு
ஏறும் போது
கனத்த தோற்றத்தில்
இறுக்கமாகவும்
அழுத்தமாகவும் இருக்கும் மலை
இறங்கும்போது
குழந்தையாகி விடுகிறது
அதையும்
தூக்கிக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடிக்கிறது
புல்லரிசிப் பூஞ்சை
1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்
வாக்குமூலம் – அத்தியாயம் 10
வீடு மாதிரி, பள்ளிக்கூடம் தேவை, காலேஜ் தேவை, வாகனங்கள் தேவை, உணவு பயிரிட நிலம் தேவை, கோவில், மசூதி, சர்ச்கள் எல்லாம் வேணும். வியாபாரம் வேணும், தொழில் வேணும், நீர்நிலைகள் வேணும், காடு, மலை எல்லாம் வேணும். ஆனா, இலக்கியம் நவீன சினிமா எந்தளவுக்குத் தேவை? சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் இவங்களோட இசை எல்லாம் ரொம்ப பேருக்கு தேவைப்படாம இருக்கலாம். ஆனா இதுக்கும் உலகத்திலே இடம் இருக்கு.
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2
“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”
ஜப்பானிய துளிப்பாக்கள்
ஹைக்கூ (Haiku) என்பது மூன்று சொற்றொடர்களில், முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் எனப் பதினேழு நேரசை நிரையசைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பானிய மொழிக்கலவையாகத் தோன்றி, ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு ஹைக்கை என்று திரிந்து, பிறகு ஹைக்கூ என அழைக்கப் படலாயிற்று
துயர் கூட்டும் நிலவு
இந்த இலையுதிர்காலம் எனக்கு மட்டுமானது இல்லை என்றாலும்கூட இன்றைய நிலவு ஆயிரக்கணக்கான துயரங்களை என் இதயத்துள் கிளறுகிறது. இந்த எளிய பாடல் சீனமொழிப் பாடல் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. இவரது 25 பாடல்களில் பல சீனக் கவிதைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாக இருக்கின்றன.
கான மயிலாட, மோனக் குயில் பாட
இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது. ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை.
கல்லளை
அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.
மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
ராவோஜியும், ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாயும் சகதேவராவிடமிருந்து சேதுபிண்டாரியைக் காப்பாற்றுவது ஒரு அம்சம். பிரியம்வதா என்ன ஆனாள், சேதுபிண்டாரி எதனால் நாவலின் கரு பொருளுக்கு மையமானான் என்பதைக் கூறும் கதைப்பகுதி இரண்டாவது பாகத்தில் இருந்திருக்கலாம். நாவலில் முதல் பாகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. ஸ்ரீனிவாசம்மாவின் வரலாற்று அறிவு, சரித்திரப் பார்வை, பூகோள அறிவு, காடுகளைப் பற்றிய புரிதல் போன்றவை இந்த நாவலில் அழகாக வெளிப்படுகின்றன.
ஏ பெண்ணே – 8
மகள், தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த போதிலும், அம்மாவின் நெற்றியில் மென்மையாக முத்தமிடுகிறாள். எவ்வளவோ வருடங்களாக இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், சமீப காலமாகத்தான், இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததற்கு, ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. இவ்வளவு பெரிய உலகத்தையேனும் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் குடும்பக் கவலைகளிலும் பொறுப்புகளிலும் உழன்றே, வாழ்க்கை முடிந்து விட்டது.
அவள்
தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார்.
வானோர்கள்
ஆகாயத்தில் வெங்கடேஷ் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன். அப்பொழுதெல்லாம் மெட்ராஸில் கூட வானில் நட்சத்திரங்கள் துல்லியமாக தெரியும். நாங்கள் இருந்ததோ கும்மிடிபூண்டியை தாண்டி ஆந்திராவை தொட்டுக் கொண்டு. ஆரம்பாக்கத்தில் அமைந்து இருந்த ஒரு இரும்புத் தொழிற்சாலையுடைய மேலாளார்களின் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்து வந்தோம். இரண்டு சிறு சாலைகளும் மிகக் குறைவான விடுகளுமே அங்கு உண்டு. இரவு ஒன்பது மணிக்கு மேல் சில தெரு நாய்களும், இங்கொன்றும் அங்கொன்றுமாக பழுப்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும் சாலை விளக்குகளும், அதைச் சுற்றும் பூச்சிகளும் தான் கண்ணில் படும்.
பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும்
நீண்டகாலத் தாழ்வெப்பநிலை காரணமாகப் புவியின் கணிசமான நிலப் பரப்புகள் சில/பல மில்லியன் ஆண்டுகள் உறைபனியால் மூடிக் கிடந்த காலங்களில் ஐஸ் ஏஜஸ் (ice ages) எனப்படும் பனியூழிகள் சம்பவித்தன. பனியூழி என்ற சொல்லாடல், தோலாடை அணிந்த கற்கால மனிதன் உணவு தேடி, பனிபடர்ந்த விரிந்த நிலப்பரப்பில் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக அலைந்து திரியும் காட்சியை உங்கள் மனக்கண் முன் நிறுத்தக் கூடும். ஆனால் மனித இனம் தோன்றி ஓங்கி உயர்ந்தது எல்லாம் கடந்த 300000 (3 லட்சம் ) ஆண்டுகளுக்குள் தான். அதற்கு முன்பே பெரும்பாலான பனியூழிகள் முடிந்து விட்டன.
கசம்
ஏப்ரல் மாத கோடை மழையில் கவர்ச்சியாய் நனைந்திருந்தது நிலம். ஈரம் சொட்ட நனைத்திருந்தால் எதுவுமே கவர்ச்சிதான். ஈரம் சொட்ட நனைந்த ஆப்பிள். வெள்ளத் துளிகளை “பருக்களாய்” தாங்கி நிற்கும் ரோஜா. சொட்ட சொட்ட குளித்துக் கரையேறும் விடலைப் பெண், தெப்பக்குளத்தில் நனைந்திருக்கும் தாமரை. மழையில் நனைந்திருக்கும் மிதிவண்டி. என எல்லாமே கவர்ச்சிதான். ஆனால் ஜீப்புக்குள் இருந்த “இருவரும்” இம்மாதிரியான “லௌகீக ரசிப்புகளில்” ஈடுபட முடியாத அளவிற்குப் பரபரப்பாயிருந்தனர்.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்
பிணை
சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான்.
வருகை
சித்தப்பா ஒருநாள் காணாமல் போனார். எங்கெங்கெல்லாமோ தேடினார்கள். ஒரு பயனும் இல்லை. சித்தி துளி கூட கலங்கவில்லை. உறுதியாக இருந்தாள்.
‘’அவருக்கு எங்கயோ போகணும்னு தோணியிருக்கு. அதான் போயிருக்கார். நிச்சயம் திரும்ப வருவார்’’