சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்

சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.

மகோன்னதத்திற்கான ஆயத்தம்

சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை  நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக…

காசில் கொற்றம்

நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?

வாக்குமூலம் – அத்தியாயம் 7

பள்ளிக்கூடம் தொறந்த அன்னைக்கே பரிச்சப் பேப்பர் எல்லாம் தந்திருவாங்க. ஒவ்வொரு பீரியட் ஆரம்பிக்கும்போதும் பக்கு பக்குன்னு இருக்கும். மார்க் கொறைஞ்சா சார்வா பெரம்பால அடிப்பாரு. நான் விஞ்ஞானத்துலயும், தமிழ்லயும் தான் பெயிலாவேன். அண்ணன் எல்லாப் பாடத்துலயும் பெயிலாயிருவான். ஒரு வாரத்துல புராக்ரஸ் ரிப்போர்ட் வந்துரும். பெயிலான பாடத்து மார்க்குக்குக் கீழே செவப்பு மையால கோடு போட்டிருக்கும். அப்பாட்ட கையெழுத்து வாங்கணுமே. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெரு மகராசன், அவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டு சார்வா கிட்ட மாட்டிக்கிட்டான். ஹெட்மாஸ்டர் அவனை ப்ரேயர்ல கூப்புட்டு அடிச்சாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சு.

கயோட்டீ கதைகள்

“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”

“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.

பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்

கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.

ஏ பெண்ணே – 5

This entry is part 5 of 10 in the series ஏ பெண்ணே

உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம்,  அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட,  ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.

காய்ச்சல் மரம் (சிங்கோனா)

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2

லாபத்தை அதிகரிக்க ஒரு நிறுவனம் புதிய இயந்திரங்களிலும் பணியாட்களுக்கு நவீன வழிகளில் பயிற்சி அளிப்பதிலும் செலவிடலாம். அதைவிட சுலபமான வழி, அதே துறையில் இருக்கும் இன்னும் சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்தல். அப்படி உருவாகும் வலிய நிறுவனம் தன் பொருட்களின், பணிகளின் விலைகளை விருப்பம் போல் ஏற்றலாம். சட்டத்தின் கண்களில் அது குற்றம் இல்லை. இணைந்த நிறுவனங்களின் பொதுவான பதவிகள் என பலரைப் பணிநீக்கம் செய்யலாம். தொழிலுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக மலிவாக வாங்கலாம்.
இரண்டு அலைபேசி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தொடர்புகளின் விலையைக் கூட்டினால் அவற்றைப் பயன்படுத்தாமல் எதிர்ப்புகாட்ட முடியும். ஆனால், உடல் சிகிச்சைக்கு?

மிளகு – அத்தியாயம் இருபத்தேழு  

இன்னிக்கு விளையாடற மனசு. என் சங்கிலியைக் கழற்றி கேசரியோடு போட்டுட்டேன். பாவம் குழந்தை குட்டிக்காரி சிவராத்திரி அன்னிக்கு சுவாமி கொடுத்ததா இருக்கட்டும். ஏ பொண்ணு, காவேரி, உன் பக்திக்கு மெச்சி சிவன் உனக்கு இன்னொரு சங்கிலி பொன்னாலே செஞ்சு அனுப்பியிருக்கார். எடுத்துட்டு போ உன்னோடது ரெண்டு சங்கிலியையும்”.  
’இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது’ என்று பொருள் தரும் இந்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார் பரமன்.

நீலமலைக் கள்ளன்

This entry is part 8 of 9 in the series எங்கிருந்தோ

பக்தி, இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை. சித்திரக் கலை, ஆடற் கலை எதைச் சொல்ல எதை விட? சென்னை, தில்லி போன்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிதான புவனேஷ்வரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத கோயில் கட்டுமானங்கள் நடந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு மிஞ்சியிருக்கும் 500 கோயில்களில் முந்நூற்றிலாவது வழிபாடுகள் நடை பெறுகின்றன. பல கோயில்களில் சிவனே முக்கிய தெய்வம். ஆனால், சக்திக்கும், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும் அருமையான கோயில்களும் உள்ளன. எங்கள் கோயில்களில் ரேகா விமானங்கள் பிரசித்தி பெற்றவை. நேர்க்கோட்டில் புடைப்பாக காணப்படுவதை ரேகா விமானங்கள் என்போம்.

உயிரையும் தருவேன் உனைக்காண

இத்தொடரின் “வலிய காதல் வழிகிறதே!” என்ற 13வது செய்யுளை எழுதிய பேரரசர் யோசெய்யின் முதல் மகன்தான் இளவரசர் மொதொயோஷி. இவர் பட்டத்து இளவரசர் மட்டுமின்றிக் காதல் இளவரசரும் கூட. இவரது காதல்களைப் பற்றி “யமாதோவின் கதைகள்” என்ற 10ம் நூற்றாண்டுப் புதினம் பல்வேறு இடங்களில் பேசுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் கொசென்ஷு தொகுப்பில் 20 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இருபதும் மொதொயோஷி ஷின்னோஷு என்ற தனித் தொகுப்பாகவும் உள்ளது. கொசென்ஷூ தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதிலுள்ள குறிப்பின் மூலம்தான் இப்பாடல் யாரை நோக்கி எழுதப்பட்டது என்பது தெரியவருகிறது.

வலி மொஹம்மத் வலி

This entry is part 8 of 12 in the series கவிதை காண்பது

வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அன்றிரவு அச்சிறுவயதில் 
வானத்திலே மகிழ்ச்சியுடன் 
குதிரை வண்டியிலே 
பயணம் செய்தேன்  
எனக்கு இருக்கும் 
பாதுகாப்பு அதற்கில்லாமல் 
குதிரை வண்டி 
பெரியதாக இருந்தது 
எல்லோரும் மாடியின் 
உச்சிக்குப் போவதுபோல் 

”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.  

விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை

This entry is part 23 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய நாட்களில், புனைப் பெயரில் எழுதலாமா என்ற ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால், இன்று விஞ்ஞானத் திரித்தல்களைப் பற்றி வியாபாரங்கள் கவலப்படுவதே இல்லை என்ற அளவிற்கு இந்த நோய் பரவி விட்டதால், அதைக் கைவிட்டேன்.  இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள சில விஷயங்கள் சிலருக்கு நெருக்கமாகப் புரிய வாய்ப்புண்டு, மற்றவை, வாசகர்களின் வாழ்க்கையில் கட்டுரை சார்ந்த நிகழ்வைச் சந்தித்தால், அக்கட்டுரையுடன் ஒரு தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. டால்கம் பவுடர் திரித்தல்கள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த வாசகர், எனக்கு, தனிப்பட்ட முறையில், பவுடரைப் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுவதாக எழுதியிருந்தார். இப்படி எழுதிய இத்தனை கட்டுரைகளை வாசித்த வாசகர் சிலருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், அதை இந்த கட்டுரைத் தொடரின் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன்.