அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
Category: இதழ்-275
மன்னார்குடி சாவித்ரி அம்மாள்
மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.
பார்வை
பொது வாழ்விலை ஈடுபட வேணுமெண்டு எப்ப நினைக்கிறமோ, அப்பவே எங்கட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிலை இருந்து வெளீல வந்திட வேணும்., நான் வந்திட்டன். ஆனா, பொது வாழ்விலையிருந்து ஒரு காலமும் எங்கட சொந்த வாழ்க்கைக்குத் திரும்ப ஏலாது, அப்பிடியொரு பார்வை, அவனிட்டை இருந்து மட்டுமில்ல, வேறை எங்கை, எங்கயோவிருந்தெல்லாம் வருது. அந்தப் பார்வை என்னை வாழ விடாது. அவனுக்கு என்ரை வாழ்த்துக்களை சொல்லி விடுங்கோ. இன்னும் ஒண்டை நான் சொன்னதாய் சொல்லுங்கோ. ஒரு பெண் ‘ரேப்’ பண்ணப்படுறதை விடப் பயங்கர வலி, அதுக்காகப் புருஷன் நடந்து கொள்ளுற விதம், அது ஆத்திரம், ஆவேசமாய் இருந்தாலும் சரி,அனுதாபம், அவமானம் எதுவெண்டாலும் சரி, எல்லாம் ஒண்டு தான்….
செந்தணல்
சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.
மிளகு அத்தியாயம் இருபத்தாறு
சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள். அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.
அழகர்சாமி கவிதைகள்
காலி செய்து சாமான்களை
வாகனத்தில் ஏற்றினேன்.
தமக்குள் அனுசரித்து
உட்கார்ந்து கொண்டன
சாமான்கள்.
விடுவதாயில்லை
’வசித்த வீடு’.
கூட்டிப் போகச் சொல்லும்.
சித்தத்திருத்தி
சூதானமாய்க் கூட்டிப் போனேன்
ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு
என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்
வாக்குமூலம் – அத்தியாயம் 6
சித்தப்பா வேல பார்த்தது ஶ்ரீவைகுண்டத்துல. இப்போ இதை திருவைகுண்டம்னு சொல்றாங்க. ‘ஶ்ரீ’, ‘ஸ’ இதெல்லாம் கூடாதுன்னு அரசியல் கட்சிக்காரங்க சொல்றாங்க. சமஸ்கிருத எழுத்துகள் வேண்டாம்ங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, காலங்காலமா ஜனங்க சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ப் பேருகளை மாத்துறது என்ன ஞாயம்னு தெரியலை. பஸ்ஸை பேருந்துன்னு தமிழ்ப்படுத்தினாங்க. ஆனால் இந்த 2022-ல எத்தனை பேரு பேருந்துன்னு சொல்றாங்க?
நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1
வேலைக்காக நாஷ்வில் வந்ததில் இருந்து மளிகை சாமான்கள் வாங்க ப்ரஷாந்த்துக்குப் பிடித்த கடை பப்ளிக்ஸ். அலுவலகத்தின் பக்கத்திலேயே ஒன்று. தனியாகவோ இல்லை நிவேதிதா ஊரில் இருந்தால் அவளுடனோ வாரம் ஒருமுறையாவது போவது வழக்கம். காரில் இருந்து இறங்கி, கடைக்கு நடந்தபோதெல்லாம் அந்த சிகிச்சையகம் அவன் கண்ணில்படும். பப்ளிக்ஸின் இடப்பக்கம் வரிசையாக பலரக உணவகங்கள், முடித்திருத்தகம், வளர்ப்புப் பிராணிகளின் தேவைகள், அலைபேசி… கட்டடத்தின் வலப்பக்க மூலையில் சிகிச்சையகம் மட்டும். அதன் கதவில்..
பூரணம்
காந்தி ஒரு சிறு மேடையில் கண்மூடி அமர்ந்திருக்க அவர் முன் மூன்று பெண்கள். அவர்கள் முன் இரண்டு மைக். காந்தி கண் மூடியிருப்பதிலும் அப்பெண்கள் வாய் திறந்திருக்கும் விதத்திலும் அது பஜனையின் போது எடுக்கப்பட்ட படம் எனத் தெரிந்தது. இரண்டு பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தனர். மூன்றாவதாக இருக்கும் பெண்ணை பார்த்ததும் சிறு அதிர்ச்சி. எதிர்பாராத கணத்தில் ஒன்று அறிவுக்கு வெளிச்சமாவதன் அதிர்வு. பாட்டியேதான். அம்மாவின் அம்மா. எனக்கு ஒன்பது வயதானபோது பாட்டி இறந்து போனாள். அப்போது பதிந்த ஒரு மென் ஞாபகத்தை வைத்துக்கொண்டு எப்படி பாட்டியின் இள வயது புகைப்படத்தை இனங்கண்டேன் எனத் தெரியவில்லை
தந்திரக்கை – பாகம் 3
அவள் கல்லூரியில் படிக்கப் போய், திருமணம் செய்து, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் -அல்லது கட்டுப்பாடுகளுக்கு எந்த விருப்பமும் இல்லாமலும், அதன் பெரும் பகுதியில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமலும், குடும்பவாழ்வில் அமிழ்ந்து போன, அந்த நகரின் முதல் எல்லைப்புற புற நகர்களைக் கடந்தபோது விடிகாலை ஆகி இருந்தது. நகரம் அசைவற்று முன்னே கிடக்கும் நகைகளைப் போல இருந்தது, எப்போதோ ஒரு சமயம் பொலீஸ் சைரன் ஒலியும், தீயணைப்பு வண்டிகளின் ஆரவாரமும், நாய்களை ஓலமிடச் செய்தன. அவள் தன் வீட்டு நிறுத்துமிடத்தில் ப்யூயிக்கை நிறுத்தினாள், வீடு அப்படிக் கைவிடப்பட்டதான, அவாந்தரமான தோற்றம் அளித்ததைக் கண்டு துணுக்குற்றாள். நீ காணாமல் போனபோது, உன்னைத் தொடர்பு கொள்ள ஒரு வழியும் வைக்காதபோது, என்ன ஆகுமென்று நினைத்தாய்? அவள் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அங்கேயே சிறிது நேரம் நின்றாள்
ஊனுடல்
ரிசார்ட்டிலிருந்து வெளியேறி, கடற்கரை மணலில் நடந்து குடிலை அடைவதற்குள், கடற்காற்று அவன் ஆடைகளுக்குள் புகுந்து குளிரேற்றி விட்டது. தீவுக்குள் அவன் முதலாளி கொடுத்த அறையில் தங்கியிருந்த போது இரவில் புழுங்கிக் காய்ந்தது. பகலில் மண்டை பிளக்கும் வெயிலில் அவன் செங்கல் அடுக்கி சிமெண்ட் பூச வேண்டும். இரவில் பத்து பேருடன் ஒற்றை அறையில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ரிசார்ட்டிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐனியும் இங்கு இருக்கிறாள். அவள் பணிபுரியும் இடத்தில் வேலை என்றால், அது மேகங்களில் உறங்குவது போலத்தான். அதற்கு என்ன வழி என்று அவளிடமே கேட்க வேண்டும்.
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
அவர்களிடம் கேட்டுக் கொண்டேன் கவிதையொன்றை எடுத்து
வண்ணப் படத்தைப் போல
வெளிச்சத்தில் தூக்கிப் பிடிக்குமாறு
அல்லது செவியை அதன் தேன்கூட்டில் அழுத்தும்படி.நான் சொன்னேன் எலியொன்றைக் கவிதைக்குள் விடுமாறு,
பிறகு அது நுண்ணாய்ந்து வெளியேறுவதைக் கவனிக்கும்படி,
மெய்யை அப்புறப்படுத்து
ரஃபெயேல்… கொஞ்சம் ஒதுங்கும் சுபாவியாக, கவிதை எழுதுபவனாக, தனிமையைப் பூட்டிக் கொள்பவனாக வளைய வந்தான். தலை சாய்த்து மென்மையாக சிரித்து என்னை அழகாக்கினான். மெருகூட்டினான். என் வனத்தை எனக்குப் புரிய வைத்தான். அவன் மீதான ஈர்ப்புக்கான காரணமென்ன? வழமையான ஐரோப்பியனின் குணாதிசயங்கள் ஏதுமின்றி மாறுபட்டவனாக, வேறுபட்ட இந்தியத்தனத்துடன் வளைய வந்தான். அது தான் ஈர்த்ததா? பனி சூழ்ந்த இரவில் கரம் பற்றி கண் கலங்க நின்றானே, அதுவா? ஏதேதோ பட்டியலிட்டாள். சிந்தனை வரிசைகளற்று ஓடியபடி இருந்தன. தற்கால லௌகீகம் உசுப்பியது.
ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காளி என்பவள் அளப்பரிய ஆற்றல் உள்ளவள்- ஊழிப் பெருந்தீ. அவளை அனைத்துமாக வழிபடுவது காலந்தோறும் பழகிய ஒன்று. அவள் நவீன யுகத்தில், பெண் விடுதலையெனக் கருதப்படும் பேதைப் போதைகளின் ஆதிக்கத்திலில்லை- தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் படைப்பாளி காளியின் வாயில் ‘சிகரெட்டை’ வைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை ஃபெமினிசம் என அவர் நினைத்திருப்பாரேயானால் அவருக்கு எந்தக் கொள்கையிலும் தெளிவில்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.
அம்மண(ன)ம்
அந்த அறையில், உயிருள்ள சதைப்பிண்டங்களைத் தவிற மற்றவைகளெல்லாம் ஆடை அணிந்திருந்தன. நாற்காலிகள், மேசைகள், கதவுகள், சன்னல்கள், சுவர்கள் மற்றும் எல்லாம். ஏன் பரிமாறப்பட்ட ரொட்டிகள் கூட துணியால் மூடப்பட்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை? உண்பவர்கள், சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், ஆபிசில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை ஜீவன்களும் எதற்காக இங்கு நிர்வாணமாய் இருக்கிறார்கள்? எதற்காக இந்த நிர்வாண உணவகம்? என்ற கேள்விகளை என் மனம் டைப்படித்தது.
யூகலிப்டஸ்
இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட ’யூகலிப்டஸ்’ மிக அழகிய காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்.
பின்கட்டு
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே புவியியல் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். தற்போதைய ஓசகா மாகாணத்தின் நாம்பா எனும் பகுதிதான் இங்கு நானிவா விரிகுடாவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் நாணல்கள் வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மூங்கில் போன்று இருக்கும் அந்த நாணல்களின் இரு கணுக்களை இணைக்கும் பகுதி சற்றுத் தடிமனாகவும் சிறியதாகவும் இருக்கும்.
அதனால்தானா?
“கோர்ட்டுக்குப் போய் அலையட்டும் கம்மனாட்டி. வக்கீல் பீஸ் அழட்டும். ராஸ்கல். நன்றி கெட்ட நாய்” என்று அப்பா பழி வாங்கிக் கொண்டிருந்தார். இந்த நாள்களில் ஆதி தன்னை வந்து பார்த்து அனுதாபமாக நாலு வார்த்தை சொல்லவில்லை என்பது அவருக்குப் பெரிய விஷயமாகப் போய்விட்டது. என்னாலும் கூட ஆதியின் மௌனத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நானாக எதற்கு அவனிடம் அப்பாவை வந்து பார் என்று சொல்லவேண்டும் என்று என் மனதிலும் குமுறல் இருந்தது.
இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா
இன்ஷா அல்லாஹ் கான் (1752 – 1817) வங்காளத்தின் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இரண்டாம் ஷா ஆலம் காலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய காலகட்டத்தில் டில்லிக்கு இன்ஷாவின் குடும்பம் குடிபெயர்ந்த்து.முதலில் ராணுவத்தில் பணிபுரிந்து, பின்னர் தன்னுடைய மொழித் திறனாலும், கவிதை எழுதும் ஆற்றலாலும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நகைச்சுவையாக்க் கவிதையில் சொல்லும் திறனாலும் அரசவையில் இடம் பெற்றார்.
ராகாங்கராகம்
அம்மா சமையலறையில் காய்ச்சும் பாலின் மணம் வழக்கம் போல இல்லை; அம்மா வேறெதோ செய்யப் போகிறாள்- ஒருக்கால் திரட்டிப் பால் காய்ச்சுகிறாளோ? இல்லை, அம்மா அதில் எலுமிச்சையைப் பிழிந்தாள்; பால் திரிந்தது “என்னதிது’ என்று அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். திரிஞ்ச பாலை துண்டுல வடிகட்டி அம்மா செஞ்ச ரஸகுல்லா எனக்குப் பிடித்தது. ‘பாலயே திரிச்சுட்டே’ என்று அப்பா கிண்டலாகச் சொன்ன போது எனக்கு சிரிப்புடன் கூடக்கூட மற்றொன்றும் மனதில் எழுந்தது; முதலில் கலக்கமாக இருந்தது. ஏதோ ஒன்று எச்சரித்தது. அதையும் மீறி குரலொன்று ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது, அம்மா, அப்பா, பாலுவிடம்..அவன் ஒருத்தன் தான் மற்ற நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களின் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான். ‘அத்தால போயி ஆட்றதுதான, சும்மா சும்மா எங்கள சுத்திட்டிருக்கே’ என்று சொல்லும் பிற நண்பர்களின் வாயை அடைப்பதும் அவன்தான். ஆனால், அவனுக்கும் என் வயதுதானே, அவனுக்கெப்படித் தெரியும்?
ஓநாய் பிரியாணி – குறுங்காவியம்
இறந்த பின்னும் நடமாடிக்கொண்டிருக்கும் ஓநாய் மனிதர்கள்
ஆயிரத்தாண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கிறார்கள்
வாழும் பிணங்களான
ஆட்டு மனிதர்களின் உலகத்தை
கடவுளின் அங்கீகாரமும் சர்வாதிகாரமும் பெற்ற
உலக ரட்சகன் நான் (மட்டுமே)
என்பதை வெவ்வேறு விதமாகச் சொல்கிற
ஒவ்வொரு ஓநாய் மனிதனுக்கும் பின்னால்
அவனை நம்பும் ஆட்டு மனித மந்தைகள்
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!