கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.
Category: இதழ்-274
அணங்கு கொல்?
அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”
அகர்ஷனா கவிதைகள்
பாதம் அழுத்தாமல் அடியெடுத்து
பாம்பு வால் ஆட்டி
நிமிர்ந்த காதுகளை கூர் சீவி
கெண்டைக் காலில் வந்துரசுகிறது
செங்காவி வண்ணம் என்னுள்
பாய்ச்ச முயற்சிக்கும் முனைப்பில்.
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.
தன்னறம்
அவ்வாகனங்கள் மறையும் இடத்திலிருந்த மரத்தடியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் “உதவி” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடல் பருத்து தலைமயிர்கள் கலைந்து அவள் தோளிலிருந்த ஒரு கனமான பை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவளுக்குப் பின்புறம் ஒரு சிறு பெண் மர நிழலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை மடியில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என் முன்னால் நின்றிருந்த ஒரு கனரக வாகனத்திலிருந்து சட்டென வெளியேறிய கண்ணுக்குத் தெரியாத வெப்ப புகை ஏற்படுத்திய கானல் நீரில் அவர்கள் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்திற்குச் செல்வதுபோல இருந்தது. முன்னால் இருந்த அனைத்து வாகனங்களும் நகர நானும் முன்னகர்ந்து விரைந்தேன். எனக்குள் அவர்கள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருந்தார்கள்.
நீதி வழுவா நெறிமுறை
எக்ஸ் :அப்ப, ஜன நாயகம் படுத்துருதில்ல. அப்பன், ஆத்தா, மகன், மகள், மருமகங்க, பேரன், பேத்தி, மச்சினன், நாத்தானாருன்னு குடும்ப நாயகம்தான நாடு பூரா நடக்குது.
வொய் : எல்லா ஸ்டேட்லயுமா அப்டி நடக்குது?
எக்ஸ் : அதுவாய்யா கேள்வி? முக்காவாசி அப்படித்தான் நடக்குது. வொறவுமுறயில கண்ணாலம் கட்டி சொத்த பெருக்கறமாரி, நாட்ட இவனுங்களே கூறு போட்டுக்குறாங்க. இத விட நீதிபதிகள அமத்தறதுல கூட சொந்த பந்த நீக்குப் போக்கு நடக்குது.
வாக்குமூலம் – அத்தியாயம் 5
எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
செய்தித்தாள் போடும் பையன்
நாளின் தொடக்கத்தை
சைக்கிள் மணி அடித்து
விழிக்கச் செய்தான்
இரவில் குளித்த காலை
இன்னும் ஈரமாக இருந்தது
அப்படியே இருக்கப் போவதில்லை எதுவும்
அடுத்த நாள்
அதே போல் தான் என்றாலும்
அது ஒரு புதிய நாள்
இன்னும் விடியவில்லை
பொக்கிஷமான ஒன்று
முழுதாக மறையப் போகிறது
நான்கு சுவர்கள்
நான் ஸ்கூல் படிக்கும்போது அவுங்கதான் எனக்கு ஆறு வருஷம் தமிழ் டீச்சர். அவங்கள புடிக்காத ஸ்டூடன்சே அப்ப எங்க ஸ்கூல்ல கெடயாது. அம்மா பெரிய அறிவாளியெல்லாம் இல்ல. ஆனா அவுங்க தமிழ் கிளாஸ் இன்ட்ரஸ்டின்ங்கா இருக்கும். இன்னிக்கும் நான் தமிழ் நாவல்ஸ்லாம் படிக்க அவுங்க தான் இன்ஸ்பிரேஷன். அம்மா நல்ல ஒயரம். அந்த பவளக்கல்லு மூக்குத்தி அவுங்க நீளமான மூக்க கிள்ளிக்கோன்னு இன்னும் எடுத்துக்காமிக்கும். அவுங்க காட்டன் பொடவ கட்டி அதுக்கு மேட்சிங்கா ஆக்சசரீஸ் போட்டு ஸ்கூலுக்கு வருவாங்க. அத பாக்கறதுக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனா என்னவிட அம்மா கொஞ்சம் கலர் கம்மிதான். நான் அப்பா மாதிரி கொஞ்சம் வெள்ள கலர்.
கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்
இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
சடைப்பூ
கூடப்படிக்கிற பிள்ளைகள், ஆயா னு எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.குண்டுமல்லியும் கனகாம்பரமும் வரிவரியாய்க் கண்ணை மலர்த்திச் சிரிப்பது போலிருந்தன.நடுவில ஒரு பட்டு ரோஸ் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ல.கையில் வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதற்கே நாள் போதாது போல.
இகபானா மலர்களின் வழி
உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின் மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள், குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.
ஏ பெண்ணே – அத்தியாயம் 3
நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.
உணவு, உடை, உறையுள், … – 3
. நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
தந்திரக் கை – 2
ஆனால் சிங்கங்களும் சரி, மிருகக் காட்சி சாலையும் சரி, அவளுக்குக் காண முடியவில்லை. அவள் தொலையவில்லை, இல்லவே இல்லை, ஒரு நிமிஷம் கூட இல்லை. அவள் சூரியஒளியில் சிரித்தபடி, வழியில் அவளை நோக்கிக் குதித்து வந்த நாய்களைக் கொஞ்சியபடி, நடந்து போய்க் கொண்டு மகிழ்வாக இருந்தாள். நாய்களின் சொந்தக்காரர்கள் அவளுடைய பெற்றோர் எங்கே என்று கேட்டால், அவள் போகிற திக்கில் உறுதியாகச் சுட்டி, ‘அதோ, அங்கேதான்,’ என்று சொல்லி விட்டு, அவர்கள் அதைப் பற்றி ஏதும் யோசிக்கு முன்னர், சிரித்தபடி மேலே நடந்து போனாள். ஒவ்வொரு கிளை பிரியும் சாலையிலும், அவள் நின்று கவனமாகக் கேட்பாள், என்ன ஒலி கேட்டாலும் அது சிங்கங்களெழுப்பும் ஓசை என்று எடுத்துக் கொண்டு போனாள். ஆனால் சிங்கங்கள் இருக்குமிடம் கிட்டே வரும்பாடாக இல்லை. அது கடைசியில் மிக எரிச்சலூட்டுவதாக ஆயிற்று.
தேன் கூடுகளின் வீடு
என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த கரடுமுரடான புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருக்கிறேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுக்கிறேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டுமிருகங்களையுமே நான் வெறுக்கிறேன். பிசுபிசுப்பான தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுக்கிறேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை மனிதனிடம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
தேர்வு
இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா?” என்று திடுக்கிட்டாள் பத்மா.
“ஆமா. சந்தையிலே மாடு பிடிக்கற மாதிரியெல்லாம் வந்து என்னை யாரும் பாக்கக் கூடாது. ஐ கான்’ட் லீவ் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் எ ஸ்ட்ரேஞ்சர். நான் ஆளைப் பாத்துப் பேசிப் பழகினத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.”
“சரி, சரி. இப்ப எதுக்கு வீணான பேச்செல்லாம். கல்யாணம், கார்த்தி எல்லாம் வேளை வந்தா யார் தடுத்தாலும் நிக்காது” என்று சூரி கோபத்துடன் இருவரையும் பார்த்தார்.
புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
நாம் எவ்வளவு முயன்றாலும், இந்த விஷயத்தில், இயற்கையைப் போன்ற அளவை நம்மால் எட்ட முடியாது – அது ஒரு 4 பில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட விஷயம்! இயற்கையின் இந்த அருமையான சேவையைக் குலைத்த நம்மால், அதற்கு உதவவும் முடியும். முதல் காரியமாக, இயற்கையிடம் மிஞ்சியிருக்கும் கரியமில வாயு உள்வாங்கும் அளவை மேலும் குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். இன்னொரு யதார்த்தையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மனிதர்கள், நிலப் பிராணிகள். கடல் நமது வீடல்ல. அதனால், 17% உள்வாங்கும் கடலுக்கு உதவுவதை விட 24% சதவீதம் உள்வாங்கும் நிலத்திற்கு மேலும் உதவுவது நமக்கு சாத்தியம்!
பேயவள் காண் எங்கள் அன்னை
இன்று நீர் கங்கை ஆறெங்கள் ஆறே! ஹூக்ளி என்பது இங்கு அதன் பேரே! என் ஆன்மீக குரு மற்றும் கணவருமான ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு இந்த ஹூக்ளியின் மேற்கரையில் 40 ஏக்கரில் மிக அழகிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் எனக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும், தனித்தனியே கோயில்கள் உள்ளன. வளாக முகப்பினுள்ளேயே என் கோயில்! பரமஹம்சருக்கு இவ்விதம் ஆலயம் அமைத்து சமூக நல்லிணக்கதிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென விவேகானந்தர் விழைந்தார். உலகம் முழுதும் பார்த்தவராதலால், இந்தியாவில் பின்பற்றப்படும் மும்மதங்களான இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகியவற்றைச் சுட்டும் படியும், முன்னர் நிலவி வந்த பௌத்த, சமண சமயங்களைக் காட்டும் வகையிலும் அவரது கோயில் கட்டுமானம் இருக்கிறது
அஜீஸ் பானு தாராப் வஃபா
அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
கனவிலேனும் வாராயோ?
அரசராக முடிசூட்டிக்கொள்ள இயலாத துணைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் அரச குடும்பத்தினருடன் தலைமுறை தலைமுறையாக மண உறவு கொள்ளும் குடும்பத்தில் பிறந்தவர். நம் சோழர்களுக்குக் கொடும்பாளூர் வேளிர்களும் பழுவூர் வம்சத்தினரும் அமைந்தது போல ஜப்பானின் அரசர்களுக்கு இவர்கள். இவரது வாழ்வின் உச்சம் பெற்ற பதவியாக அரசரின் மெய்க்காவல் வலங்கைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்.
ஓஸிமாண்டியாஸ்
பழம்பெரும் நிலத்திலிருந்து வந்த
பயணி ஒருவன் கூறினான்
‘அந்தப் பாலை நிலத்தில்
கல்லில் செதுக்கிய
பெருத்த இருகால்கள்
உடலில்லாமல் நிற்கின்றன.
அதனருகில்
முறைத்த பார்வையும்
சுழித்த உதடும்
கொடும் கட்டளை பாவனையும்
அன்பின் தனிமை
ஞாயிற்றுக் கிழமைகளிலும் என் தந்தை
அதிகாலையில் எழுந்து
விறைக்கும் குளிரில் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.
வார நாட்களின் உழைப்பில்
வெடித்துப் போன விரல்களினால்
குவித்திருக்கும் தணல்களை
எரிய விடுகிறார்.
யாரும் ஒருபோதும்
அவர்க்கு நன்றி சொன்னதில்லை.
கவிதை பற்றி மூன்று கவிதைகள்
அன்பு, பிரியம், பாசம், நேசம்,
கருணை, நேயம், மனிதம்
ஆகிய சொற்களைக்
கவிதைகள் தோறும்
வாரி வாரி இறைத்துச் செல்கிறான் கவிஞன்