வாக்குமூலம் – அத்தியாயம் 1

நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?

பானுகூல் சமையலறை ராகங்கள்

இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்:

சிலுவைப் பாதை

இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. அங்க ரொம்ப அமைதியா இருக்கும். சின்ன சத்தம் கேட்டாக்கூட பயமா இருக்கும்.எந்த சிஸ்ட்டருக்காவது ஒடம்பு சரியிருக்காது. யாராச்சும் செத்து போவாங்க. எல்லாரும் ரொம்ப வயசானவங்க. ரொம்ப கஸ்ட்டப்படுவாங்க..பாவமா இருக்கும். அழுகையா வரும். இங்க மாதிரி ஜாலியா இருக்க முடியாது.”

மிளகு அத்தியாயம் இருபத்தொன்று 

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

லீலாதேவி

அன்று காவேரியைப் பார்த்த போது கங்கையைத்தான் நினைத்துக்கொண்டேன். கங்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது ஆனால் நீர்தானல்லவா ? பாரத தேசத்தில் ஓடும் நீரெல்லாம் கங்கைதானே. நீர் அமைதியாய் நடப்பது- கங்கை காவேரி எதுவாகட்டும் – மனம் குளிர்ந்து நிறைந்துவிடுகிறது. ஆனால் ஆச்சர்யம், எப்படி கங்கையில் எங்களுக்கு இருந்த அதே வரவேற்பு இங்கு காவேரியிலும். எனக்கு தமிழ்நாட்டை நினைத்தாலே நினைவில் முகங்கள்தான் எழுகின்றன. அவ்வளவு முகங்கள். மணிக்கணக்காகக் காத்திருந்து, குழுமி, தொட முயன்று ஆசீர்வதிக்கச் சொல்லி எத்தனை முகங்கள். மனித வெள்ளம்தான் மனதில் எழுகிறது காவேரியை மீறி தமிழ்நாட்டை நினைத்தாலே.

மல்லிகா ஹோம்ஸ்

சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது

எரியும் காடுகள் – 2

This entry is part 2 of 4 in the series எரியும் காடுகள்

துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.

தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி

This entry is part 43 of 48 in the series நூறு நூல்கள்

எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை.  இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு.  ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.

வெட்டிவேர்

வெட்டிவேர் ஆசியாவை தாயகமாக கொண்டது. வெட்டிவேரின் வட இந்திய, தென்னிந்திய என்னும் இரு வகைகளில் வட இந்திய வகைகள் வழக்கம் போல் மலர்ந்து கொண்டிருக்கின்றன. 
கோடைகாலத்தில்  தென்னிந்தியாவெங்கும் உலை போல் கொதிக்கும் காலநிலையில் இருந்து மக்களை காப்பாற்றி குளிர்விக்க வெட்டிவேர் மற்றும் நனனாரி சர்பத்துகளும், தர்பூசணியும், இளநீரும் எப்போதும் கிடைக்கும். வீடுகளில்  பானை தண்ணீரில் நன்னாரி அல்லது வெட்டிவேர் போட்டு வைத்து நல்ல வாசனையும் குளிர்ச்சியுமாக நஅருந்தப்படும்.. வெட்டிவேர் தட்டிகளில் நீர் தெளித்த இயற்கை குளிரூட்டிகளும் பரவலாக புழக்கத்தில் இருக்கின்றன.  

நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?

This entry is part 17 of 23 in the series புவிச் சூடேற்றம்

நல்ல வேளையாக, சில கிழ விஞ்ஞானிகள் இந்த விஷயத்திலும் விஞ்ஞான ரீதியில் உதவ முன் வந்துள்ளார்கள். குறிப்பாக, யோகான் ராக்ஸ்ட்ரோம் (Johan Rockstrom) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, மற்ற பல விஞ்ஞானிகளுடன் கடந்த 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து, தங்களது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்திற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், இந்தப் பகுதியை அவசியம் படிக்க வேண்டும்.

குருதி நிலம்

உலகில் ஒரே ஒரு தனித்த மனிதன் 22 ஆண்டுகளாக பிரேசிலின் ரான்டோனியாவில், (Rondonia) மரத்தில் வசிக்கிறார். அவர் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. கோடாரியைக் கொண்டு மரங்களில் வசிப்பிடம் அமைத்துக் கொள்கிறார். முன்னர் கீழே விழும் பெரும் மரக் கிளைகளைக் கொண்டு குடிசை கட்டிக் கொண்ட அவர் தற்போது மரங்களிலேயே இருக்கிறார். கிட்டத்தட்ட 50 வயது, முற்றானத் தனிமை; அவரை அணுகக் கூடாது என்றும், அவரை நாகரீக மனிதனாக்கும் முயற்சியும் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

துயரிலும் குன்றா அன்பு

தூரத்து வடகிழக்குத் திசையில் இருக்கும் ஷினோபு நகரத்தில் மொஜிஜுரி முறையில் வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் என் உள்ளம் காதலால் கலங்கிக் கிடக்கிறது. ஆனால் அதன் காரணமாகவெல்லாம் நான் உன் மீது வைத்த காதல் மாறிவிடாது.

துவாரகையில் இருந்து மீரா

This entry is part 2 of 9 in the series எங்கிருந்தோ

நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.

அல்லாமா இக்பால்

This entry is part 2 of 12 in the series கவிதை காண்பது

இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது