எமெர்ஸன் கல்லூரியின் அசாதாரணச் செயல்பாடுகளில் ஒன்று காலாண்டு இதழாக அது வெளியிடும் ப்ளாவ்ஷேர்ஸ் (Ploughshares) என்கிற இலக்கிய இதழ். … இதன் 47 ஆம் ஆண்டான 2021 ஆம் வருடத்தில், கடைசிக் காலாண்டுக்கான இதழாக, பனிக்காலத்துப் பிரசுரமாக வந்த இதழில் கிட்டிய சில கவிதைகள் இங்கே கொடுக்கப்பட்டவை. நிறைய இதழ்களுக்கு, புகழ்பெற்ற எழுத்தாளர்கள்/ பதிப்பாசிரியர்கள், அழைப்பின் பேரில் வந்து பதிப்பாசிரியராக இருந்து இதழை வழி நடத்திக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.
Category: இதழ்-269
உசைனி
“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது.
ஜப்பானியப் பழங்குறுநூறு
பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
மிளகு – அத்தியாயம் இருபது
பிராணிகளின் வகுப்பு என்ற எகானமி கிளாஸ் தான் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இலவசமாக வந்தால் எக்சிக்யூட்டிவ் கிளாஸ் அதே செலவுக்கு கிடைத்தால் சர்க்காருக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. இப்போதோ சங்கரன் கேட்காமலேயே மேலேற்றப் பட்டிருக்கிறார்.அவர் உயிர் இருந்தாலும் போனாலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. முன்னாள் அரசுத்துறை காரியதரிசி, மற்றும் அரசு ஆலோசகர். இது போதாது அதிகபட்ச பாதுகாப்பு தர.
இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்
இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.
எங்கிருந்தோ
இந்த மண்ணில் இராமாயணமும், மகாபாரதமும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. தமிழக மல்லையில் அர்ச்சுனன் தவம் சிலையெனக் கவர்ந்தால், குஜராத்தின் பாவ் நகரில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து லிங்கங்களை வழிபட்ட இடம் கடலினுள் காணக்கிடைக்கிறது. பெரும்பாலும் காலை 10 மணி முதல் மதியம் நான்கு மணிவரை கடல் உள் வாங்குகிற நேரம்; கிட்டத்தட்ட 1.5 கி மீட்டர் கல்லில், கூழாங்கற்களில், சறுக்கும் மணலில் மனிதர்கள்,நடந்து வருகிறார்கள். கடற் பறைவைகள் காத்திருக்கின்றன. கடல் நீரெடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். தொன்மத்தையும், ஆன்மீகத்தையும் இணைக்கும் இந்த சடங்கின் இனிமை அழகு, அதன் வெள்ளந்தித்தனம் அருமை. இயற்கையும், வரலாறும், புராணமும் சங்கமிக்கும் முக்கூடல்.
கண்ணுக்குள் நூறு நிலவா… இது ஒரு கனவா…
வெள்ளெழுத்து என்பதற்கு சாளேஸ்வரம் என்பது போல் இவற்றிற்கு நமது மூத்தோர் பரிபாஷையில் என்னென்ன பெயர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களை பார்ப்பதற்காக காத்திருந்தபோது எதிரே அகலத் திரையில் கண் மருத்துவம் பற்றி, கண்களில் எத்தனை விதமான நோய்கள் வருகிறது, அவை ஒவ்வொன்றையும் கையாளும் சிறப்பு மருத்துவர் யார் யார் என விவரித்து ஒரு காணொளி ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக இன்று மருத்துவத்தில் உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனியாக படித்த சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கண்ணில் பலவகையான நோய்களும், அதற்கென தனித்தனியாக சிறப்பு மருத்துவர்களும் இருப்பதை இந்த மருத்துவமனை செய்திகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.
எரியும் காடுகள் – 1
நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.
பிரம்மாஸ்திரம்
’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.
’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’
ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்?
ஸர்கம் கோலா
குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.
முகாமுகம்
அப்போது நோர்வே பேச்சுவார்த்தை சமாதான காலம். நான் வவுனியா நிலப்பாதையூடாக வருவது கண்காணிக்கப்படுவதையும் பொட்டம்மான் விரும்பவில்லை. காட்டுவழியால் புத்தளத்துக்கு போய் அங்கிருந்து மீன்பிடிப்படகில் நீர்கொழும்பு போனேன். நீர்கொழும்பு கடற்கரையில் ஜெகனை சந்திக்கும்போது இரவு பதினொரு மணியிருக்கும். ஒரு வெள்ளைவானில் அப்போதே கிளம்பினோம். ஜெகன் சரளமான சிங்களத்தில் வான் சாரதியோடு உரையாடிக்கொண்டிருந்தான். ஜெகன் என்னைத்தட்டி நான் விழித்தபோது கொக்கட்டிச்சோலை இரவு திருவிழா போல இருந்தது. நாங்கள் இறங்கினோம் ஜெகனிடம் இரண்டு பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டை காவும் பைகள் இருந்தன. ஒன்றை என்னிடம் தந்தான்.
விதைக்குள்ளும் இருப்பது
கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால் அந்த பத்து வயதிற்குள்ளிருக்கும் காட்சனுடன் நேற்றிரவு செய்ததை நான் துளியும் விரும்பவில்லை என்பதும் அவன் உந்துதலும் நம்பிக்கையும் அதற்கு தூண்டுதலாக இருந்ததையும் உணரமுடிகிறது. அதிகாலை மூன்று மணிக்கு நிலவற்ற , இருள் கருமேகங்கள் சூழ்ந்து கிடக்கும் இந்த நீண்ட நெடிய வானை ஜன்னல் வழி பார்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்திருக்கிறேன். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் கம்பியின் நிழலாக என்னை துண்டு துண்டாக பிரித்திருந்தது.
ஹஸ்ரத் மோஹானி
உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.
எனக்கு ஓர் அறிமுகம்
நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.
நிறமாலை
இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.
ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)
ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.
அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள்
நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
வாசக அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது எனப்படும் இந்த ஆண்டில் இந்திய மக்களும், தமிழகத்து மக்களும் கடந்த ஈராண்டுகளாக அனுபவித்த பெரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, சமூகத்தின் பொதுநலம், அன்றாட வாழ்க்கை, மேலும் பண்பாட்டு இயக்கங்களில் சிறந்த அனுபவங்களையும், மேம்பட்ட வளங்களையும் பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.