சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.

தனியாய் ஒரு போராட்டம்

முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். “நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?” அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்.”]

குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி

இந்திய பாரம்பரியங்களின் கவர்ச்சியை வெளி உலகிற்கு மதபோதக உணர்வுடன் எடுத்துச் செல்வதும் ஹிந்துத்தனம் அல்ல. ஒரு மதபோதகர் மற்றொரு மதத்தினரை பார்த்த மாத்திரத்திலேயே அவரது உணர்வு மட்டுமல்லாமல், முகபாவமும், உடற்வாகும் மாறிவிடும். இவரை எந்த இடத்தில் தட்டினால் நான் சொல்லப் போவதை உடனே ஏற்றுக் கொள்வார் என்பதைதான் சிந்திப்பார். ஹிந்துக்கள் இவ்வாறு சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிற மதத்தினர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் வாயிலிருந்து வருவதை கேட்பதில்தான் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மத உணர்வை அழித்து அவ்விடத்தில் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கில்லை. பிற மதங்களின் சாராம்சமும் இந்து மதத்தினுடையது போல் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களது அனுமானம்தான் இதற்கு காரணம்.

மிளகு: அத்தியாயம் பதினைந்து

சமணர்கள் ஒரு பூச்சி புழுவுக்குக்கூடத் துன்பம் உண்டாவதைப் பார்க்கவும் சகியார். இரவில் ஊரும் ஜந்துக்கள், பறக்கும் பூச்சிகள் நிறைய இருக்கும், ஆகாரம் பண்ண வாயைத் திறந்தால் உள்ளே போய் இறந்துவிடக் கூடும் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.

”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”

This entry is part 8 of 10 in the series கி.ரா. - அ.ரா.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும்.

பள்ளி ஆய்வாளர்

பள்ளி ஆய்வாளர் பதில் பேசவில்லை. இந்த மாதிரி பள்ளிகளை மாவட்டம் முழுவதும் துரத்தித் திரிவது அயர்ச்சியான வேலையாக இருந்தது. அழுக்கடைந்த நகரங்களில், சிதிலமான பகுதிகளில், அவருடைய வாகனம் செல்லமுடியாத தூரத்து மூலைகளில் கிடக்கும் கிராமங்களில். அப்புறம் அந்த பள்ளிக்கூடங்கள் இருக்கும் அவலமான நிலை. இவை எல்லாம் அவருடைய மனதை அழுத்தின. இந்த மூன்று ஆண்டுகளில் இவையெல்லாம் அவருக்குப் பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இப்போதும் வலியேற்படுத்தத்தான் செய்கிறது.

பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம்

தா.நா.குமாரசுவாமி வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்தபோது கூகிள் போன்ற இந்நாளைய வசதிகள் எதுவுமில்லை. எல்லா அத்தியாயத்திலும் பரிபாடல், திருக்குறள், தேவாரம், பெருங்கதை, திருக்கோவையார், சூளாமணி, கம்பராமாயணம், குறுந்தொகை, பெரியாதிருமொழி போன்றவற்றிலிருந்து ஓரிரு பொருத்தமான வரிகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை, வெறும் மொழிமாற்றம் மட்டுமல்ல, பிறமொழி வாசகனுக்கும், ரசனை கெடாமல் அந்த படைப்பைக் கொண்டு சேர்ப்பது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த புத்தகம்.

ஒரு நாள்

“எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளக்கிறம், விரும்பின எல்லாத்தையும் வாங்கித்தாறம், நீ என்னடா எண்டால், களவெடுக்கிறியா, நாயே! பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம் எண்டிட்டினம், இனி என்ன, களவெடுத்துத்தான் சீவிக்கப்போறியோ?” உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவன் அலற அலற, அவன் புயத்தில், முதுகில் என மாறி மாறி தன் கை வலிக்கும்வரை அடித்தாள். ஏதோ சொல்ல முயன்றவனை “வாயை மூடு நாயே” என அடக்கினாள். அங்குமிங்குமாக நடந்தபடி சத்தமிட்டு அழுதாள், அவனைப் பிடித்து உலுப்பினாள். ஏற்கனவே வாங்கிய அடிகளால் சிவந்துபோயிருந்த அவனின் கன்னத்தில் மீளவும் அறைந்தாள்.

சிக்கரி

காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது, காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும் புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

பிருஹன்னளை

பெரிய அக்கா (லதா மங்கேஷ்கர்)பெடர் ரோட்டில் குடியேறிய புதிதில், அவரிடமும் யாரோ ஒரு பிருஹன்னளையை வேலைக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னது எனக்கு நினைவு வந்தது. ” பத்மா, அவன் மிகவும் விசுவாசமானவன். நான் ரெக்கார்டிங் முடிந்து வரும்வரை எனக்காக உறங்காமல் காத்திருப்பான். உடை மாற்றிக்கொள்ள துணிகளை தந்துவிட்டு, சாப்பாட்டை சூடு செய்து பரிமாறுவான். வேலையிலிருந்து திரும்பும் கணவனிடம், மனைவி, அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொள்வதைப் போல, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.

நான்கு கவிதைகள்- கு.அழகர்சாமி

உண்ண வெறுமையும்
தின்னத் தனிமையும்
கேட்க மவுனமும்
நோக்க அத்துவானமும்
நினைக்க நோய்மையும்
சுகிக்க சூன்யமும்…

அறியமுடியாமையின் பெயர் ராமன்

சிருஷ்டிக்கு முன் எங்கும் இருளும் நீரும் மட்டும் நிறைந்திருந்த ஒரு பிரளய காலத்தில், மஹாவிஷ்ணு இந்த உலகனைத்தையும் விதையென தன் வயிற்றில் அடக்கி கொண்டு, நீரில் தனது கால் கட்டை விரலைச் சுவைத்தபடி ஒரு ஆல் இலையில் சிறு குழந்தையாக மிதக்கிறார். அந்த குழந்தை சுற்றி இருக்கிற நீரையும், இருளையும் பார்த்து திகைக்கிறது. இவையெல்லாம் என்ன? என்று அதன் மனதில் முதன் முதலாக ஒரு கேள்வி எண்ணமாக எழுகிறது.
மஹாவிஷ்ணுவாகிய குழந்தை மட்டுமல்ல, அறியமுடியாமையை நோக்கிய இந்த கேள்வியை நாம் அனைவரும் எதோ ஒரு கட்டத்தில் எதோ விதத்தில் சந்திக்கிறோம்.

இருள் 

அழகை ஆராதிப்பவனில்லை என்று சொல்லிக் கொண்டு வருபவனும் அவனது பெற்றோரும் வீடு வாசல் தாவர சொத்துக்களை மதிப்பிடும் அலுவலர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜாதகத்தில் கொஞ்ச தோஷம் என்று கழிக்கப்பட்டாள். எரிச்சலுற்ற அவள் வருகிற வரன்களைக் கழித்துக் கட்ட ஆரம்பித்தாள்.காலம் அவளிடம் ஏற்படுத்திய வடுக்களின் வலி அவ்வப்போது வாய் வழியே வந்து சீறும்.

உங்கள் நிலம்

உங்கள் நிலங்களில்
நீர்நிலைகள் நிறைந்தேயிருக்கின்றன
சுரந்து பெருகும்
மீனுண்ணும் பறவைகளின்
அழைப்பினிசையால்
உங்கள் முகங்கள் மலர்ந்திருக்கின்றன

மறுசுழற்சி விவசாயம்

This entry is part 11 of 23 in the series புவிச் சூடேற்றம்

• அறுவடைக்குப் பின், நிலத்தை தரைமட்டம் ஆக்கத் தேவையில்லை
• ஒரு பயிரை அறுவடை செய்த பின், இன்னொரு பயிரை விதைக்க வேண்டும்
• விவசாய நிலம் சிறியதாக இருந்தால், பக்கத்து நிலச் சொந்தக்கார்ர்கள், தங்களுக்குள் ஒரு பயிர் ஏற்பாட்டைச் செய்து கொண்டால், அது மண் வளத்திற்கு நல்லது
• கால்நடைகள் அவசியம். கால்நடைகள், இயற்கை உரத்திற்கு உதவுவதோடு, அவற்றின் கால்கள் மூலம், நிலத்தில் வாழும் சின்ன உயிரினங்களுக்கு பலவகைகளில் உதவுகின்றன.

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

யாயும் ஞாயும்

தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”

மொபைல்  தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G

யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது.