குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு.
Category: இதழ்-263
சோயாவும் டோஃபுவும்!
சோயா பால், சுத்தமாக்கப்பட்டு ஊறவைத்த சோயா விதைகளை அரைத்த விழுதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விழுது சூடாக்கப்பட்டு சோயாவின் கடும் நெடிக்கு காரணமான lipoxidase என்ஸைம்கள் நீக்கப்படும். பின்னர் வடிகட்டுதல் மூலம் கசடுகள் நீக்கப்பட்ட சோயா விழுதில் சர்க்கரை மற்றும் நீர் கலக்கப்பட்டு, அதன் நறுமணமும் நுண் சத்துக்களின் அளவும் மேம்படுத்தப்படும். பின்னர் இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கொழுப்புக் கட்டிகளை அரைத்து, கலக்கி, மிருதுவாக்கப்பட்ட பால் சந்தை படுத்தப்படுகின்றது…. விலங்குப்பாலுடன் ஒப்பிடுகையில் சோயாபாலில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் அதே அளவில் இருந்தாலும் பிற முக்கியமான நுண் சத்துக்கள் மிக குறைவாக இருப்பதால் அவை தயாரிப்பின் போது சேர்க்கப்படுகின்றன.
குல தெய்வம்
கோவிலின் பீடத்திலிருந்து எழுந்த சாமியாடி சுடுகாடு நோக்கி கடிவாளமற்ற காட்டு குதிரையென மயான கொள்ளை சடங்கிற்கு இருளில் பறந்தோடும் மின்மினியென ஓட ஆரம்பித்தான். அடக்குவார் யாருமில்லாத அவனை பின் தொடர்ந்து ஓடிய கூட்டத்தில் தானில்லை என்பது சோகமான மனநிலையை சுந்தரத்திற்கு கொடுத்தது. அம்மையின் காதுகளில் மெல்ல பூச்சையைப்போல நக்கி “அம்மா , நானும் போறம்மா , பயக்க எல்லாவனும் என்ன பயந்தோணி பக்கடா பண்ணிப்பீய நக்குடான்னு சொல்லுவானுங்க நாளைக்கி. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்மா. கூட்டத்தோட போயிட்டு கூட்டாத்தோட வந்துருவேம்மா” என்று அவளை மேலும் நெருங்கி அணைத்துகொண்டான்.
அகோரம்
ஏழாவது நாள், லீ மயக்கத்திலிருந்து மீண்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் மனைவியைப் பற்றிக் கேட்டபோது, டாக்டர் ஈஸ்வரின் அணி நிலைகுலைந்து போனது. தடுமாற்றத்தில் அவரின் மனைவி யாரென்றுத் தெரியாமல் திகைத்தனர். உடனே கம்ப்யூட்டரில் தேடிப் பார்த்து, ஒரே முகவரியிலிருந்து, அவரின் மனைவி யாரென்பதைக் கண்டுப் பிடித்தபோது, எமியின் மரணம் அவர்களுக்கு என்றோ மறந்து போயிருந்தது. உடனே டாக்டர், ஒரு ஃபைலைப் பார்க்கும் பாவனையில் அருகிலிருந்த தாதியிடம் ‘எமி நலமுடன் இருப்பதாக’ எழுதிக் காட்டச் சொல்லி முணுமுணுத்தார். அந்தத் தாதி, ஒரு வெள்ளைத்தாளில்,‘Dia sihat. Dah balik rumah..’ (அவர் நலமாக இருக்கிறார். வீட்டிற்கு போய்விட்டார்) என்று மலாய் மொழியில் எழுதிக் காட்டினாள்.
விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10
கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புவிச் சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பெரிதாக, இந்த உலகம் எதையும் மாற்றவில்லை. மாறாக, தொல்லெச்ச எரிபொருட்களுக்கு மேலும் அடிமையாகிக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞானிகளின் பார்வையில், நேரம் சற்று கடந்துவிட்டாலும் இன்று தொடங்கி மனித இனம் தன்னைக் காப்பற்றிக் கொள்ளமுடியும்வ்
தீர யோசித்தல் – இறுதிப் பாகம்
ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கே தெளிவில்லாத தன் துவக்க நிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொண தொணக்கலாம், அல்லது தன் முன் நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது.
மிளகு அத்தியாயம் பதினான்கு
“எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11
ஒரு முறை, அவளுடைய தம்பி, ” நீ என் உண்மையான சகோதரியாக இருந்தால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பு. என் அக்கா எனக்கு சைக்கிள் வாங்கி தந்தி ருக்கிறாள் பாருங்கள் என்று நான் இங்கு எல்லோரிடமும் பெருமையடித்து க்கொள்ள முடியும்” என்று எழுதினான். மரியத்துக்கு இதைக்கேட்டு, சந்தோஷத்தில் சிரித்து மாளவில்லை. அவளுடைய பெற்றோரும் “உன் பெயரில் பசு வாங்குகிறோம். ஐநூறு ரூபாய் அனுப்பு”என்று கட்டளை இடுவார்கள். ..எத்தனையோ அக்காக்கள், தங்கைகள் மற்றும் அத்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும், மருமகள்/ மருமகன் களுக்காகவும், உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்க.ள்ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?
கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போன்றவர்கள் தங்களின் நிலப்பரப்பிலிருந்து வந்த முன்னோடியாகக் கி.ராஜநாராயணனைக் கொண்டாடியதை நேரில் கண்டிருக்கிறேன். இவர்களில் பலரும் கி.ரா.வைப் பார்க்கப் புதுவைக்கு வந்து போவதுண்டு. அவர்களில் ஒருசிலரின் வருகையின்போது நானும் உடன் இருந்திருக்கிறேன்.
காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021
தடுப்பூசிகளைத் தவிர வாய் வழி உட்கொள்ளும் மாத்திரையான ‘மோல்னுபிராவரை’ (Molnupiravir) ‘மெர்க்’ (Merck) அறிமுகம் செய்தது. அக்டோபரில் (2021) அது தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நோயின் தாக்கத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிட்சை பெற வேண்டிய அவசியம் பாதியாகக் குறையும் என்று சொன்னது. ….நவம்பர் மாத நடுவில், அமெரிக்காவை முந்திக் கொண்டு பிரிட்டிஷ் கூட்டரசு (U K) இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவும் அந்த் மாத இறுதியில் அனுமதி வழங்கியது.
முன்னர் ‘மெர்க்’ அழுத்திச் சொன்னது போல். கிருமியோ, இறப்போ, சரி பாதியாகக் குறையவில்லை எனத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், 30% கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மெர்க் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம். அதற்கு அத்தனை அரசியல் தாக்கம் உள்ளது!
சாவைப் படைத்த எழுத்தாளன்
‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’
நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’
நீலகண்டப் பறவையைத் தேடி
மஞ்சள் பூ பூத்திருக்கும் சிறு கடுகுச் செடி முதல் பேராலமரம் வரை நிலத் தாவரங்களும், நதிப்படுகையின் கோரைப்புல் முதல், ஏரியின் ஆழத்தில் உள்ள கிழங்குக் கொடிகள், நாணல் வரையான நீர்த்தாவரங்களும் கதைக்குப் பங்களிக்கின்றன. அது போன்றே எலி, தவளை முதலான சிறு விலங்குகளிலிருந்து யானை போன்ற பெருவிலங்கு வரை பல்வேறு விலங்குகளும் நாவலெங்கும் இடம் பெற்று கதையோட்டத்திற்கு உதவுகின்றன. சிறு மின்மினிப்பூச்சிகள், வயல் நீரில் வட்டமிடும் சிறு நீர்ப்பூச்சிகள், ஜிஞ்ஜி போன்ற குளிர், பனி இரவுகளில் ஒலியெழுப்பும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவையை முழுங்கும் பானசப்பாம்பு போன்றவை கதை நெடுக நடமாடுகின்றன.
ரயிலில் ஏறிய ரங்கன்
அம்மா சொல்வது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு சொன்னது. அந்த ரயில்ல வர்ற அத்தன பெட்டிக்காரவுகளும் எனக்கு ஃப்ரென்ட்ஸ்…..அவுகளப் பிடிச்சி என்னைக்காச்சும் ஒரு வாட்ச்மேன் வேலையாச்சும் வாங்கிப்புட மாட்டேன்? அட…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வைக்கிற வேலையாச்சும் கிடைக்காமயா போய்டும்…? அஞ்சாங் க்ளாஸ்வரைக்கும் படிச்சவன்தான நான்…பெறவுதான போதுண்டான்னுட்டாக வீட்ல…எட்டு க்ளாஸ் படிக்கணுமாமுல்ல…பியூனாகுறதுக்கு….வாட்ச்மேன் ஆகி அப்புறம் உயருமாமுல்ல…அதுல பியூன் ஆகலாம்னு ஒருத்தர் சொன்னாரு….அந்த அய்யா கூட கலெக்டர் ஆபீஸ்ல தாசில்தாரா இருக்காருன்னு சொன்னாங்க