2022

சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை.  *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”

நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise

“இந்த சித்திரம் மிகவும் அமைதியானது, அதே சமயத்தில் மூச்சை இழுத்துப்பிடிக்க வைப்பது. ஒரு கொந்தளிப்பான ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. அது ஒரு கிறிஸ்மஸ் ஈவ் நாள், ஆனால் அங்கிருந்து (நிலவில், அத்தனை தொலைவிலிருந்து) வியட்நாமில் ஒரு கோரமான போர் நடந்துகொண்டிருக்கிறது அல்லது ஐரோப்பாவைப் பனிப்போர் பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அல்லது பாபி கென்னடியின் படுகொலைகளை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அந்த தொலைவிலிருந்து, மானுடர்கள் கண்களுக்கு புலப்படாதவர்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் தேசிய எல்லைகளும் கூட. இன, கலாச்சார, அரசியல், ஆன்மீக ரீதிகளாக நம்மைப் பிரிக்கும் எதுவும் இச்சித்திரத்தில் இல்லை. இதில் நாம் காண்பது, ஒரு குழைவான கிரகம் பிரபஞ்சத்தின் தனிமையில் இருப்பதை மட்டுமே.

மிளகு – அத்தியாயம் பனிரெண்டு

“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்கத் தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் அந்த மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் சாகுபடிக்கு புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்களிலே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”.

ஹேர்கட்

முடிவெட்டுபவள் அவன் தலையைக் கீழே தள்ளி உச்சந்தலையில் வெட்டத் துவங்கினாள். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்குச் சென்னை சென்றிருந்தபோது காய்கறிக் கடையில் பெயரற்ற சலூனின் முதலாளியைத் தற்செயலாகச் சந்தித்தான். முகத்தில் வயதான சுருக்கங்கள். அவரின் வெள்ளைப் பஞ்சு சட்டை நைந்திருந்தது. ஒருவாறு புன்னகைத்து, “பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு தம்பி… எப்படி இருக்கீங்க? முடி வெட்டணுமா?” என்றார். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமர் விழித்தான்.

மேலெழும் கோள வடிவ வானம்

எதிர்ப்படும் ஒரு சிறு இடைவெளி
பயண யானைகள்
குழம்பி நிற்கின்றன
காடு
வெறுமனே கட்டாந்தரை மேல் தொட்டி செடியாக
மாறி வெகுகாலம் ஆகிவிட்டதை
அவை அறியாது

இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்

மற்ற தொழில்மயமான நாடுகளைப் போலவே கனடாவும் குறைவான விலையில் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே அங்கு குறைந்த விலையில் இன்சுலின் கிடைப்பதற்குக் காரணம். கனடாவைப்போல் மருந்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யாததும், லாப நோக்குடன் செயல்படும் மருந்து உற்பத்தி, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் அராஜகப் போக்குகளே அமெரிக்காவில் இன்சுலின் விலை ஏற்றத்திற்குக் காரணம்.

இவர்கள் இல்லையேல்

1984க்கு பிறகு தான் எனக்கு ஃபூலோவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தோம். சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு அறியும். அந்த துயர நினைவுகளை நான் நினைத்துப் பார்த்து, காயங்களை புதிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்நாட்களில் ஃபூலோ எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். “வேலைக்காரர்களிடம் சொல்லி, வீட்டு வாசலில் மாட்டியிருக்கும்ஸாஹிபின் பெயர் பலகையை கழற்றி விடுங்கள் பீஜி. சர்தார்களுக்கு இப்போது நேரம் சரியில்லை” என்பாள்.

புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8

This entry is part 8 of 23 in the series புவிச் சூடேற்றம்

புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னம், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட முன்னதாக வந்த வசந்த காலம், முன்னமே முடிவதால் நீள்கிற கோடைப் பருவ காலத்தால், நதிகள் நீரின்றி ஆகி, காடுகளை வறண்ட நிலமாக்கிவிடுகின்றன. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன.

பெருந்தொற்றின் பாடுகள்

காலம்
இரவும் பகலுமாய் ஊரும்
குருட்டு நத்தை.
….
குறைந்தபட்சமாய் வாழ்வதில்
உடற் சுமையைத் தவிர
கூடுதல் சுமையில்லை.

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30

This entry is part 5 of 10 in the series கி.ரா. - அ.ரா.

ரயிலடியில் தொடங்கி ஒரு சதுரத்தில் சின்னச்சின்னத் தெருக்களில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஸ்வொல்தாக்களின் வீடுகள் உண்டு. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இன்னும் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள். அவர்களின் முன்னோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி அங்கேயே தங்கியிருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தங்களைப் பிரெஞ்சுக் குடிகளாக க்கருதிக்கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அந்த குடும்பத்தில் பெண்ணெடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவர் இப்போதும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று பிரான்ஸுக்குப் போய்விடலாம். அந்த வசதியைப் பெற்றவர்களேயே ஸ்வொல்தாக்கள் என்று அழைப்பார்கள்.

பண்டைச் சீன இலக்கியம் (Pre -Qin காலம்)

கின்வம்சத்துக்கு முந்திய நூல்களில், Classic of Mountains and Seas தான் கிட்டத்தட்ட நூறு பழமையான தொன்மங்களின் விவரங்களைக் கொண்ட மிகு வளமான மூலநூல். கீழ்காணும் நான்கு மிகவும் பரிச்சயமான கதைகளையும் அது உள்ளடக்கி இருக்கிறது….இந்த அழகிய கட்டுக் கதைகள் அளித்த வளமான உள்ளூக்கம், பிற்கால இலக்கியம் மீது நீண்ட கால தாக்கம் கொண்டிருந்தது.

லினன்

ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும் தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு நிலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கிறது….பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.

கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்

க்ரிப்டோ, அரசின் நிதி மேலாண்மைக்கும், அரசின் நாணயத்திற்கும் விடப்பட்டுள்ள சவால்தான். ஆனால். இத்தகைய க்ரிப்டோ நாணயங்களுக்கு அடிப்படை மதிப்புகொண்ட இணைச் சொத்துகள் கிடையாது. மேலும், முகமறியா வணிகத்தில் அரசு இழக்கும் வரி அதிகம்; முக்கியமான அரசுத் துறைகள் கொந்தர்களுக்குப் பலியாகிச் சந்திக்கும் இழப்புகளும் அதிகம். இதை முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது, இதனால் ஏற்படும் சூழலியல் நட்டங்களை எவ்விதம் ஈடுகட்டுவது என்பவை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச

உலகம் சீன அரசாளர்களை தம் மக்களை அடக்கியாள்வோராகப் பார்ப்பதை மாற்றுவதற்கு சீனா செய்யும் முயற்சிகள் இந்த வலைஒளிகள். இது அயலகத்தில் இருப்போரை சீனாவின் செயல்பாடுகளில் இரக்கமும், ஆமோதிப்பும் கொண்டவர்களாக மாற்றும் ஒரு பெரிய திட்டம் என்றே சொல்லலாம். பல நிழல் கணக்குகள் மூலமாக இத்தகைய வலைஒளி நிகழ்ச்சிகளைப் பெருக்கிக் காட்டுமாறு தன் தூதர்களுக்கும், அரசின் செய்தித் துறையினருக்கும் சீன அரசு கட்டளையிட்டுள்ளது.