எதற்குத் தகுதியாக எதைச் செய்தல்? கவிஞன், காட்டும் கற்பனை உலகுக்குத் தக்கதாக மொழியைச் செய்கிறான். தான் கண்ட காட்சியை ரசிகனும் துய்க்க வேண்டிய அளவு அணிகளைச் செய்கிறான். சொல்லவந்த கருத்துக்கும், துய்க்கவந்த ரசிகனுக்கும், மனத்தில் காணும் தனக்கும் தகுந்தபடி மொழியை அவன் செய்யும் பொழுது அங்கு அலங்காரம் பிறக்கிறது. காவிய உலகில் கவிஞனே பிரம்மா. அவன் இஷ்டப்படிதான் படைப்பு. வெளி உலகின் மூல தத்துவங்களையும், முற்ற முடிந்த சித்தாந்தங்களையும் அவன் தன் காவிய உலகைப் படைக்கும் பொழுது…
Category: இதழ்-252
பிபூதிபூஷணின் மின்னல்
பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி.
தலைமைச் செயலகம்
மூளைக்கும், மனதிற்கும் வேற்றுமைகள் இருக்கிறதா? மனதின் ஒரு பகுதி மூளையா அல்லது மூளையின் ஒரு பகுதி மனமா? மனம், சித்தம், புத்தி இவைகளின் தள எல்லைகள் என்ன? இவற்றிற்கான அறுதியான பதிலை தெளிவாக அறிந்திருக்கிறோமா? சைவர்கள் ‘நினைவை’ ஆகாய அம்சம் என்றும், நினைவும், காற்றும் இணைவது ‘பாய் மனம் அல்லது பேய் மனம்’ என்றும், நினைவும் தீயும் புத்தி என்றும், நினைவும் நீரும் சித்தம் என்றும், நினைவும், நிலமும் அகங்காரமென்றும்…
மிளகு – மிர்ஜான் கோட்டை
”புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரென்று சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது? ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாயு நிறைந்த சிறுநீரை இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, ’இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.
பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?
மன்னர்கள் இரண்டுவகையிலாக நினைவு கூறப்படுகிறார்கள். முதலாவதாக, பல இராச்சியங்களை வென்று பெரும் நிலப்பரப்பை தன் குடைக்கீழ் கொண்டு, பன்னெடுங்காலம் ஆண்டவர்கள். இரண்டாவதாக, குறைந்த காலமே, குறுகிய நிலப்பரப்பையே ஆண்டாலும் கல்வியிலும், அருங்கலைகளிலும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றவர்கள். கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசன், முதலாம் “பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?”
அன்னை
அக்கா இரண்டாவது அடையைக் கொண்டுவந்து அவன் தட்டில் போட்டபோது நம்பீசன் அவளிடம் “இன்னொன்னும் போட்டுடுங்கோ. இன்னிக்கி ராத்திரி ஆத்திலே வெறும் மோர் குடிச்சாப் போறும்” என்றான்.
சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்
ரோமானிய தொன்மத்தில் வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis) நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும். 1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’ (foreign acacia) என்றழைக்கப்படும், தென் “சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்”
இதை என்னவென்று சொல்வது?
”சுற்றுச்சூழல்காரர்களின் ஆர்வக்கோளாறினால் தப்பித்தது. ஒரு மரத்தில கத்தியை வெச்சா, நாலு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வந்து நிக்கறாங்க. இது கமர்ஷியல் ஏரியா. இவ்வளவு வணிக வளாகங்களுக்கு நடுவில இங்க எதுக்கு தோப்பும் துரவும்? இந்தக் காட்டை எப்பவோ அழித்து இந்த இடத்தை கமர்ஷியலா டெவலப் பண்ணியிருக்கணும்…”
ராஜாவின் கீதாஞ்சலி
இளையராஜா, ’கீதாஞ்சலி’ என்ற ஒரு தனிப்பட்ட இசை வெளியீடு ஒன்றைச் செய்துள்ளார். அதைப் பற்றியது அல்ல இந்தக் கட்டுரை. என்னைவிட அழகாக இந்த இசை வெளியீட்டை விமர்சிக்கப் பலர் உள்ளனர். திரையிசையமைப்பாளராக இருந்தும், எப்படியோ எனக்கு கீதையைப் புரிய வைத்து விட்டவர் இளையராஜா. எதற்கு கீதையைப் புரிந்து கொள்ள “ராஜாவின் கீதாஞ்சலி”
தேவை ஒரு தங்கம்
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகள் பன்னாட்டுக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பில் நடந்த போட்டிகளில் ஆறு முறைகள் தங்கம் வென்ற மேரி கோமின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளின் வரிசையில், ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு மூன்றாம் இடம். ரஷ்யா 60 பதக்கங்களைம், சீனா “தேவை ஒரு தங்கம்”
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
“சஜிதா அத்தை எனக்காக ஆசையா வெயிட் பண்ணிருப்பாங்க. போக விடாம பண்ணிட்டீங்கள்ல?” என்று கறுவினேன். பதில் ஏதும் பேசாமல் அம்மா தன் வேலையில் கவனமாயிருந்தார். கையில் கிடைத்த சர்க்கரை டப்பாவை பலம் கொண்ட மட்டும் வீசிக் கீழே எறிந்ததில் அது உடைந்து பிளந்து சமையலறை முழுவதும் சர்க்கரை சிதறியது.
நான் விரும்புவது
மழையும், வெயிலும், அவற்றின் பற்றாமையும்
ஓர் அத்திப்பழத்திலோ அல்லது ஆப்பிளிலோ
உறைவது போல்
என் வாழ்க்கை என்னுள் வசிக்கவேண்டுமென
நான் விரும்புகிறேன்
பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”
புன்னகைக்கும் அப்பா
அம்மா அப்படி கேட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அம்மாவை பொருத்தவரை பஸ், ரயில், ஆட்டோ… ஏன், ஸ்கூட்டரில் வந்தால் கூட அதையே தான் கேட்டிருப்பாள். அப்பாவுக்கு சைக்கிள் விட தெரியாது. அவர் கூட எங்கு போனுனாலும் நட பயணத்தில் தான். அதனால் அம்மாவுக்கு நடக்கிறத தாண்டி எல்லாமே கார் பயணம் என்றாகிவிட்டது.
தடக் குறிப்புகள்
இது ரொம்பவே மோசம், தாங்க முடியாத சோகம்.
அவனுடைய இறுதிச் சடங்கில் நான் பேசப் போறேன், எனக்குச் சொல்லவேண்டியதெல்லாம் தலைக்குள்ளே முழுசாக இருக்கு, ஆனால் அவன் போய்ட்டதாலெ எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியாத மாதிரி இருக்கு, வக்காளி, எனக்கு உன்னைத் தேடறதுடா, நான் உன்னை எத்தனை விரும்பினேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கக் கூடாதான்னு என் மனசு எப்படி ஏங்கறதுன்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்ல.
“கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்
இந்தியாவை சிறுமைப்படுத்துவதற்கு எவ்வாறு கிருத்துவ மரபுகள் இடதுசாரி நுட்பங்களை உபயோகிக்கின்றது என்பதை மல்ஹோத்ரா சரியாக சுட்டிக்காட்டுகிறார். ஹிந்துக்கள், மேற்கத்தியர்கள் அனைவருமே கிருத்துவர்கள் என நினைக்கின்றனர். இது தவறு.
ரங்கா
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, எங்கள் மில்லையும், பக்கத்து இடத்தையும் பிரிப்பதற்காக இடையில் இருந்தது மதில் சுவரல்ல. சில தென்னைமரங்கள்தான். அதிலும் அவை நடப்பட்டதே ஒரு மரம் எங்கள் பக்கம் சாய்வாகவும் இன்னோர் மரம் அவர்கள் பக்கம் சாய்வாகவும் நடப்பட்டிருக்கும். இதுவே அவரவர் மரம் என்பதற்கு அடையாளம்.
கவிதைகள்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
எழுத்துசாமியும் பேச்சாண்டியும்
“என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ” என்று சொல்லி போனை வைத்துவிட்டார். எதிர் பார்த்ததுபோல பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார்.
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள்
பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
ஓர் அறம் நிறைந்த உலகம் இப்படியிருக்க, மறுபுறம் திரித்தல்காரர்களின் ஜாலங்களையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். இவர்கள், பல முறைகளைப் பல்லாண்டுகளாகப் பயன்படுத்திவந்துள்ளனர்.
டி மெல்லோ
அதுவா? (சிரித்துக்கொண்டே) என் பெயர் மணிவேல் – D. மணிவேல். ரொம்ப சாதாரணப் பெயராக இருந்தது. அதை ஆங்கிலத்தில் வெவ்வேறு ஸ்பெல்லிங்களில் போட்டுப் பார்த்தேன்: D Maniwel, D Monivel, D Monewel என்றெல்லாம். பிறகு அதையே ஒரு அனகிராமாக, ‘N’ க்கு பதிலாக, ‘L’ ஐ சேர்த்து, ‘de Mellow’ என்று எக்ஸாட்டிக்காக இருக்கட்டுமே என்று வைத்துக் கொண்டேன்.
ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்
காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”
சுவை & தொடக்கம்
மலைக்கோயில்
தரிசனம் முடிந்து கீழிறங்கும்
பக்தர்களுக்கென காத்திருக்கின்றன
கொழுத்த கோயில் புறாக்கள்
பகடை ஆட்டம்
“ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா?அந்த மாதிரி எனக்குத் தெரிந்த ஏதோ முகத்தை நினைவு படுத்துகிற ஏழு பேரில் ஒருவரோ என்னவோ நீங்கள்? “ சிரித்துக்கொண்டே சொன்னவள் தொடர்ந்தாள்.
அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு
உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.
2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.