கிண்ணத்தை ஏந்துதல்

பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது…கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை  ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.

மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு

கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை  அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர். 

மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)

விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
“ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். நாடும் நீயும் எல்லாச் செல்வமும் குறைவின்றிப் பெற்று சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. அரியாகவும் அருகனாகவும் விளங்கி எங்கும் நிறை பரப்பிரம்மமான  தெய்வத்தின் பேரருளும், விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி தேவராயரவர்களின் வழிகாட்டுதலும் பிரியமும் என்றும் உனக்கு உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.

ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்

சம்பள நாளன்று மாலையிலேயே முகம் தெரியாத சில தலைமறைவு மனிதர்கள் கிராமத்திற்குள் நுழைந்தார்கள்.  தங்களை கிராமத்தலைவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மக்களை மிரட்டினார்கள். ….தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்துக்குப் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் வீணாகத்தான் போகப்போகிறது என்பதைக் கிராம மக்கள் உடனே புரிந்துகொண்டனர். ’காட்டிலிருந்து வந்திருக்கும் முரட்டுத் தோற்றம் கொண்ட அந்த மனிதர்கள், இரவு நேரத்தில் கிராமத்திற்கு வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்.  தலைமறைவு அரசாங்கத்தின் பெயரால் தங்களிடமிருந்து திருடுவதுதான் அது.அவர்களை எதிர்த்துப் போராடுவதில் பயன் ஏதுமில்லை.  அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தார்கள்.

அமுதம்

வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.

மணப்பு

வேலியில்  ஓடியிருந்த  பிரண்டைக்  கொடியில்  குழந்தையின்  மெலிந்த  விரல்களைப்போல  இளம்பச்சையில் பிரண்டைக்காய்கள். நுனியில்  சுருள்  வளைவுகளாய்  கொடி  நீண்டிருந்தது. அம்மா  கொடி  நுனிக்காய்களை  மட்டும்  கிள்ளி  எடுப்பாள். நடுக்காய்கள்  முத்தலாயிருக்கும்  என்பாள்.  இளங்காய்களைப்  பொடியாக  நறுக்கி  எண்ணெயில்  வதக்கி  மிளகாய், உளுத்தம்  பருப்பு  வறுத்து,  உப்பு, புளி  வைத்து  துவையலரைப்பாள். சூடான  “மணப்பு”

பெயர் சொல் (உஷா அகேல்லா)

அவள் ’லைஃப் ஆஃப் பை’
திரைப்படம் பார்த்துவிட்டு
வந்து கொண்டிருந்தாள்.
அது கெடுவிதியின் அறிகுறியா?

அந்த நாள்

ஜோரான மழை பெய்து கொண்டிருந்தது. பத்து நிமிடத்திற்கு முன்னால் வரையில் வானம் மழைக்காக தயாராகியிருந்த எந்த அறிகுறியையும் காட்டவில்லை. “இப்போ எங்கயிருந்து இப்படி ஊத்து ஊத்துனு ஊத்திது” தனக்கு தானே பேசிக்கொண்டு சிங்கில் கிடந்த பாத்திரத்தை தேய்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி. சரவணன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் இரவில் சரியாக “அந்த நாள்”

திக்குதல் – கே.சட்சிதானந்தன்

திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்

விதி

வேலை செய்து கொடுத்த கூலியை கேட்க, கோதண்டத்தின் வீட்டிற்கு முன்னால் வந்து  நின்றான் கதிரேசன். சுத்துப்பட்டி கிராமத்துல குடிசை வீடு கட்டுறவங்களுக்கு மண்ணால சுவர் எழுப்பி கொடுக்குறதுல கதிரேசனுக்கு மிஞ்சின கெட்டிக்காரன் இல்லைன்னு சொல்லலாம்.  கைராசிக்காரன்னு பேரு எடுத்தவன். வேலைக்கு ஏற்ற கூலியை கறாராக கேட்டு வாங்கிடுவான். வயசு “விதி”

சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்

மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1995-2000) இலக்கியம் எனக்கு அறிமுகமானது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்னுள் வலுவாக வினையாற்றி ரோடுகளையும் நாய்களையும் பிச்சைக்காரர்களையும் வேசிகளையும் உற்று நோக்கவும் மதிப்புக்கொடுக்கவும் கற்றுக் கொடுத்தன. ஜெயகாந்தனின் நூல்களை வாங்க மீனாட்சி புத்தக நிலையத்தைத் தேடி அலைந்தேன். அதன் பயனாக சர்வோதய “சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்”

நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்

அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால்  அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான  பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.

அபிக்குட்டி

ஆச்சி எனக்குள்ள பழைய சுடிதார் கவர்ல இருக்கு. முன்னாடியே ரெண்டு கொடுத்தேம்லா, இனியும் பாவாடை சட்டை போடாதே, இதுல நாலு வச்சுருக்கேன். இத போடு”, “பாவாடை சட்டை போட்டு உடதுக்கே குறுக்கு வலிக்கு. சுடிதார்லா இவளுக்கு போட்டு உட முடியாது. பழசை கொடுக்கதுக்கு. புது பாவாடை சட்டை வாங்கிட்டு வரலாம்ல. அவளுக்கு என்ன தெரியும். பாவம் பிள்ள. நீ போட்ட பழசையே இன்னைக்கும் கொடுக்கியே” இந்திரா எதுவும் பேசாமல் இருந்தாள்.

விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று

This entry is part 28 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

லாப நோக்குடைய நிறுவனங்களும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றன. லாப நோக்கற்ற மற்றோர் அணியும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது. இதில் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுகொள்வது?

தடக் குறிப்புகள் -2

This entry is part 2 of 4 in the series தடக் குறிப்புகள்

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.

தீண்டா நதி

மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.

மான மாத்ரு மேயே மாயே

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும். 

இந்தியாவுடன் பேசுவது

A Selection of English Language Broadcasts to India. Edited and with an Introduction by George Orwell. – நூலில் இருந்து சில புகைப்படங்கள்