எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது.

வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள்

ஆனால் நீங்கள் அவரைப் பற்றி ஏதும் எதிர்மாறாகச் சொல்லப் போவதில்லை, ஏனெனில் அப்படிச் சொல்லும்படி துலக்கமாக ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிகிற வரை அவர் யாருக்கும் ஏதும் கெட்டது செய்யவில்லை.

சதி எனும் சதி

சதியைப் பற்றிய காலனிக் கால விவரங்களை அறிய இந்நூல் உறுதுணையாக உள்ளது. அதிலும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லும் கிருத்துவ மதத்திற்கு ஹிந்துக்களை கூட்டங்கூட்டமாக மாற்றுவதற்கு எவ்வாறு பாதிரிமார்கள் சதியை உபயோகப்படுத்தினர் என்பது நன்கு விவரமாகிறது.

‘தான்’ அமுதம் இறவாதது

மகாகவி என்றொரு அடைமொழியை அவனாக வரித்துத் கொண்டவனில்லை. அவன் கவிதையில் தோய்ந்தவர்கள் சூட்டியபெயர். பாரதி என்ற சொல்லே போதும், சட்டென்று முண்டாசுடன் நம் முன்னால் நிற்பான், அப்படியொரு ஆகிருதி, தேஜஸ். அவனுக்கெதற்கு அடைமொழிகள்.

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
புறாக்கள் புசித்தன.

காகங்களுக்கு
சோறு வைத்தேன்
மைனாக்கள் உண்டன.

காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
அணில்கள் தின்றன.

விடை

மலையில் ஒரு கருத்த சிகரம் மேகங்களுக்கு நடுவே உயர்ந்து மறைந்திருந்தது. அந்தச் சிகரத்துக்கு அருகில் மேகங்கள் சூழ்ந்திருக்க மழை பெய்துகொண்டு இருந்தது. “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து..” சத்யா பாடினாள். மொபைலில் படம் எடுக்கக் கை தானாகச் சென்றது. ஃபோன் இல்லை என்பது மறுபடியும் நினைவுக்கு வந்தது. கிளம்பும்போதே வாங்கி வைத்துக்கொண்டு விட்டார்கள்.

ப. ஆனந்த் கவிதைகள்

இருபுறமும் புரண்டு ஆடிக்கொண்டு
பால்புட்டியை தானே எடுத்து குடித்தபடியே இருந்தவன்
தூங்கும்வரை கடந்த
அமைதியான சில நிமிடங்கள்
அம்மாவாய் இருந்தான்

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1

This entry is part 26 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கைச் சர்க்கரை ரசாயனம் சாக்கரீன் ஆகும். 1879–ஆம் ஆண்டு, கரித் தாரில் (coal tar) ஆராய்ச்சி செய்தபோது, கான்ஸ்டான்டீன் ஃபால்பெர்க் என்ற வேதியல் விஞ்ஞானியால் ஏதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தான் கண்டுபிடித்த ரசாயனத்திற்குச் சாக்கரீன் என்று ஓர் ஆண்டுக்குப் பின்னர் பெயரிட்டார்.

ஒரு சாத்தானின் கடிதம்

நமக்கிடையேயான ஒரு சகஜமான உறவை இயற்கையே விரும்பவில்லை என நான் இதைப் புரிந்து கொள்கிறேன். விதி என்பதன் அர்த்தம் தெரியாமல் அல்லது அது சோம்பேறிகளால் சொல்லப்படும் வார்த்தை என நினைத்திருந்தேன். இந்தச் சம்பவத்திற்குப்பின் விதி என்பதற்கான சரியான விளக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

பறந்து வந்த பறவை
அமர்ந்த கிளைக்கு
கணத்தில் உயிர் வந்து போனது
இலைகளுக்கும் முட்களுக்கும்
நடுவில் பூத்த ரோஜா
அதனை சமன் செய்தது

வெனிலா கல்யாணம்

அந்த மாபெரும் பண்ணையைச் சுற்றி வருகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வளர்ந்துவரும் ஒரு கொடியில் இரு பச்சை நிறக் காய்களைக் கண்டு அப்படியே மலைத்து நின்றவர் ’’இவை எப்போது காய்த்தன’’ என்று எட்மண்டிடம் கேட்டார். ’’நான் சில நாட்களுக்கு முன்பு கைகளால் இதன் மலர்களுக்கு மணம் செய்துவைத்தேன், எனவேதான் காய்கள் வரத் தொடங்கி இருக்கின்றன’’ என்ற எட்மண்டை அவர் அப்போது நம்பவில்லை.

மௌனத்தின் மெல்லிய ஓசை

அல்வா எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டா, ‘நீ சீக்கிரம் வாம்மா நாம்ப போவோம்’ என்றபடி வெளியே ஓடினான் நடுவுள்ளவன். அவனுக்கு பஸ்ஸில் வெளிவூருக்குச் செல்லப்போகும் சந்தோசம். காலரில் மஞ்சளிட்ட புது சட்டையை மாட்டிக்கொண்டு தயாராக நின்றான்.

கவிப்ரியா கவிதைகள்

பாகானாய் மாறி ஏறிக் கொள்கிறாள் செல்ல மகள்
கையால் அடித்து யானையை நகர செய்கிறாய்
ஒவ்வொரு அடியிலும் இதம் பெறுகிறான்
பெற்றவன் என்பதற்காக…

இடைவேளை

கூடத்தில் ஒரு மூலையில் மூங்கில் தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறியிலிருந்து கத்தரிக்காய்களைப் பிரித்து ஒரு முறத்தில் அள்ளியவளுக்கு மூச்சு வாங்கியது. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்தவளை வேலைகள் வரிசை கட்டி நின்று அயரவைத்தன. வளர்மதி அங்கேயும், இங்கேயும் நின்று ஒப்பேத்திவிட்டுப் பக்கத்து வீட்டுப் புனிதாவிடம் கதையளக்கப் போய்விட்டாள்.

மின்னல் சங்கேதம் – 10

This entry is part 10 of 12 in the series மின்னல் சங்கேதம்

காந்தோமணி மிகவும் அன்பானவள். கங்காசரண் அதனை உடனேயே உணர்ந்து கொண்டான். எங்கிருந்தோ வெல்லமும், வீட்டில் உருவாக்கிய பசு நெய்யும் கொண்டு வந்தாள். கங்காசரண் நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று அவள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டாள். ஆனால் அவனால் சோற்றை விழுங்க முடியவில்லை. படோல், ஹபுவைக் காட்டிலும், அனங்காதான் அவனை மிகவும் தொந்தரவு செய்தாள். அவள் சாப்பிட்டு எத்தனை நாளானதோ யாருக்கும் தெரியாது.