பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்

தலைப்பைப் பார்த்தவுடன் இது அம்பாளைப்பற்றிய கட்டுரை என நினைக்கலாம். ஆனால் இது அம்பாளை போற்றும் ஒரு ஸ்துதியைப் பற்றிய கட்டுரை.  அம்பாளை துதிக்க பல வழிகள் உண்டு. ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். ஒரு கோவிலில் அவளை ஆவாஹனம் செய்து துதிக்கலாம். மனதில் அவளை த்யானம் செய்யலாம். இவற்றையெல்லாம் விட “பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்”

ரசிக’மணி’கள்

கான கலாதரர் மதுரை மணி ஐயர்.  கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே “ரசிக’மணி’கள்”

வேக்ஸினேஷன் வைபவம்

‘ஓ காட்!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. ‘இந்த ஜனசமுத்திரத்தில் இறங்கினால் நமக்குத் தடுப்பூசி கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா வைரஸ் கட்டாயம் கிடைக்கும். திரும்பிப் போயிடலாம், வாங்கோ.’ முகக்கவசத்தை ஒரு கையால் அழுத்திக்கொண்டு இன்னொரு கையால் திறந்த கார் கதவை மூடி கண்ணாடியையும் ஏற்றினாள். இருநூறு இருநூற்றைம்பது பேர்களை ஜனசமுத்திரம் “வேக்ஸினேஷன் வைபவம்”

விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்

This entry is part 25 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

எஞ்சும் சூடு

கடைசியாக சங்கர், “ஊரு பிள்ளைக்குட்டி நலமா இருக்கட்டும், ஊர் பெருகட்டும், ஆடு மாடு ஈத்துஎடுக்கட்டும்,கோழியா நிறையட்டும், வீட்டு சால் குறையாதிருக்கட்டும், நெல்லம் பயிரு பால்பிடிக்க, தென்னம்மரம் பாளைவிட, மரமெல்லாம் செடிகொடியெல்லாம் பூத்து செழிக்கட்டும் ஊர்,” என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அங்கங்கே சிலர் கைக்கூப்பி நின்றார்கள். ஒருசிலர் கண்கள் கலங்க ஊரை வாழ்த்தி முடிந்தது அன்றையகூத்து.

அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!

“என்ன ஒரு மாதிரியா இருக்க!” காலையில் வேலை முடிந்து வந்த பிரேம் முகத்தின் உள்ளேயும் படித்தான்.

“வீட்ல இல்லங்க.”

ஒன்றும் சொல்லாமல் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு போன பிரேமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் ரேணு.

இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பேசும்போது குழந்தையை பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. அவளை விட அவனுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகம்.

எருக்கு

திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்குத் தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி….

இவர் தன் வாழ் நாளில் பிடித்த பிணங்கள் ஏராளம். சிலது நேர் வழி முறைகள், பலது சந்தேகத்திற்கு உட்பட்டது. இவர் கூலிக்கு ஆள் அமர்த்தி இராணுவத்திலிருந்து உடல்களைத் திருடினார் என்றும் சொல்லப்பட்டது; சிலது, இறந்தவரின் உடல், சிலது அழுகும் நிலையில் உள்ளவை, சிலது இறந்தவுடனேயே கொண்டு வரப்பட்டவை, சிலது தோண்டப்பட்டவை, சிலது மெலிந்தவை, பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த சில உடல்கள் மருத்துவ மனையிலிருந்து பெறப்பட்டவை. உடல்களைப் பதனிடுவதற்காக சில திரவங்களைப் பயன்படுத்தினார் இவர். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இவர் உடல் உள் உறுப்புக்களை எடுத்து அவற்றை அச்சில் வடித்தார்.

மின்னல் சங்கேதம் – 9

This entry is part 9 of 12 in the series மின்னல் சங்கேதம்

பட்டினியில் வாடும் பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சிலருக்கு சமைத்த சோறு தேவைப்பட்டது, சிலருக்கு அரிசி. ஒரு மணங்கு அரிசியும் பத்தே நாட்களில் காலியாகிவிட்டது. அதையெல்லாம் விட – அனங்காவின் இரண்டு வளையல்கள் – அவளுடைய கடைசி நகைகள் – நிரந்தரமாக அவளை விட்டுப் பிரிந்தன.

தடங்க(ல்)ள்

சீர்பொருட்கள் வீட்டுக்குள் வரும்போதே பஞ்சவர்ணம், “எல்லாத்தையும் வெளியேயே வையுங்க. ஊரார் பார்க்கணும். அதுதான் எங்களுக்குப் பெருமை. அப்புறமா எங்களோட தோதுக்கு எதை எங்க வைக்கணுமோ அதை அங்க வச்சுக்குறோம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

செவ்வரத்தை

ஆரம்பத்தில் முற்றத்தில்
எந்தப்பூவும் பூத்திருக்கவில்லை
வெறிச்சோடியிருந்த முற்றத்தில்
நாள் பார்த்து, வளர்பிறை காலமொன்றில்
அவள்தான்

ஒத்தப்பனை

“எல்லாம் டூப்ளிகேட் சரக்கு. மிக்ஸ்ட் மால்ட், மல்டி கிரேயின். சிங்கிள் மால்ட் விஸ்கி டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா? நாக்குல பட்டா அந்த மால்ட் நொதிச்ச சுவை வரணும். இதுல எல்லாம் கெமிக்கல்..” இப்படி உயர்தர மதுக்கூடத்தில் தன்னெதிரே பேசிக் கொண்டிருந்தவனை கவனிக்காமல் இருந்தவன், ஆறடிக்கு முன்னே இருந்த “ஒத்தப்பனை”

கொல்லி

நீ தப்பிச்சி ஓடினதுக்கு அப்பறம் வேல்ராஜ விட்டானுக. ஆனா உன்ன எங்கிருந்தாலும் பிடிக்காம விடமாட்டேன்னு அந்த ஆளு துடிக்கிறான். மனு குடுக்க வந்த கூட்டத்துல நீ அவன் சட்டய புடிச்சது அவனுக்கு அவமானமாயிட்டு. காக்கி மேல கை வச்சிட்டான் இனி அவன் செத்தான்டான்னு சொன்னான்.

விற்பனை

எம்.டி வாசுதேவன் நாயர் தமிழில்: தி.இரா.மீனா அந்தப் பெரிய நகரத்தின் பூகோளம் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. .போனில் தரப்பட்டிருந்த விவரங்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இல்லை.சித்தி விநாயகர் கோவிலின் அருகிலிருந்த பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கடற்கரைக்கு அருகிலுள்ள சாலை அதுதானா என்பதைப் பொருத்தமான சில கேள்விகளால் “விற்பனை”

பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!

போன வாரம் பாடும் நிலா பாலுவின் 75 –வது பிறந்த நாள். இந்தக் கட்டுரையின் காலகட்டம், அவருக்கு இந்தப் பெயர் வருவதற்குப் பல்லாண்டுகள் முன்பானது. அதாவது, அவருடைய ஆரம்ப வருடங்கள் – 1965 முதல் 1975 வரை. எங்கப்பா ஒரு தீவிர எம்.எஸ்.வி, மற்றும் சிவாஜி ரசிகர். அவருக்கு “பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!”

மஹான் சக்கரக்கத்தி

தாத்தா அவனுக்கு என்ன செய்தாரோ! அவனும் தாத்தாவின் பழம்பெரும் கதையாடல் செய்யத்தான் வந்திருக்கிறான்போல. போய்விட்ட தாத்தாவை அப்படியே விட்டுவிட முடியவில்லை. சடுதியில் செல்வோரை அனுமதிக்க கூடாது. அவர்களை நிறுத்தி வைத்து, கடைசி கணக்கையும் சீரமைத்துவிட்டுதான் அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான்.

எண்ணத்தின் விளை

எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அதக் கட்டிக்கிறவனுக்குத்தானே என் சொத்தெல்லாமே. அது ஒம் மூத்த பையனுக்கு சேரலாம்னு நெனக்கிறேன்” என்று முடித்தபோது கன்னய்யா முகம் மலர்ந்தார். மலர்ச்சியை நீடிக்கவிடாமல் வேறொரு எண்ணம் தோன்றியதால் முகம் கூம்பியது.

புணை

“அப்பாவ குளிப்பாட்ட போறோம். ஒரு பத்து நிமிசம் வெளிய இருக்க பெஞ்சுல எல்லாரும் உட்காந்துக்கங்க” என்றான் டொமினிக். வந்திருந்தவர்கள் வெளியே சென்ற பின், டொமினிக்குடன் சேர்ந்து நானும் சிலரும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உடலை அருகில் இருந்த திவானில் கிடத்தினோம். டொமினிக் மாமாவின் முகத்துக்கு சவரம் செய்ய ஆரம்பித்தான். இறுக்கமான சதையில் கத்தி வழுக்கிக் கொண்டே இருந்தது. பின் ஆடைகளை கலைத்து , சோப்பு தண்ணீரில் துணியை விட்டு உடலில் ஒத்தி எடுத்தான்.

முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)

கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், “முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)”

இலவசமாய் ஒரு வேலைக்காரி

ராதாபாய், கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும் கருத்தரிக்காதபோது, ‘எங்கே மலடியாக இருப்பாளோ?’ என்று கதி கலங்கிப் போனாள். ஜாதகத்தில் வேறு புத்திர பாக்கியம் மத்திமம் என்று இருந்தது இப்போது அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. முதல் வருஷத்திலேயே பிரதி வெள்ளியும் அம்பாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வணங்க ஆரம்பித்தாள்.

இருட்டு

அந்த அறைக்குள் நுழைந்ததும் முகத்தில் அறைந்த வாடை குமட்டலை ஏற்படுத்தியது. குமட்டினால் சந்தோஷுக்கு வலிக்கும். வருத்தப்படுவான். ரொம்ப கஷ்டப்படுகிறான். எல்லாம் எனக்காகத்தானா சந்தோஷ்.  ரசம் போன கண்ணாடி பெரிதாயிருந்த டிரஸ்ஸிங் டேபிள். அதன் ஸ்டூல் அத்தனை பழுப்பேறியிருந்தது. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என பார்வையிலேயே நினைக்க வைக்கும் பிசுபிசுப்பான “இருட்டு”