கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.
Category: இதழ்-246
கி. ரா. – அஞ்சலி
தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.
காரு குறிச்சி
நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே அவருக்கு ‘யோகம்’ தொடங்கிவிட்டதாக இங்கே பேசிக்கொள்வார்கள். ஒருநாள் காலை 7 மணி இருக்கும். நான் வெளிக்குப் போய்விட்டு, குச்சியால் பல் தேய்த்துக்கொண்டே கரை வழியாக ஊருக்குள் வந்தேன். காளியம்மன் “காரு குறிச்சி”
தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்
அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மின்னல் சங்கேதம் – 7
கோபிநாத்பூர் போன்ற பெரிய சந்தையில் கூட அரிசி இல்லை. மக்கள் காலி கூடைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். சந்தைகளிலும், கடைகளிலும் புலம்பல்கள் ஒலித்தன. மூட்டை மூட்டையாக நெல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுவின் கடையும் இப்போது காலியாகக் கிடந்தது. தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்திருந்தனர். இத்தனை நாட்களாய் இவர்கள் எங்கே இருந்தார்கள்? யாருக்கும் கேட்கும் தைரியம் இல்லை.
சீதுரு
‘கோதண்டபாணி, சாமி… அளவுக்கார கோதண்டபாணி. எங்கப்பா பேரு அளவுக்கார சீராமுரு. வேண்டராசி அம்மன் கோயில் தெருவுல, சேஷப்ப செட்டியார் செக்குமேடு தாண்டி…’
காகித மலர் – ழ்ஜான் பாரெ
உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள் , உள்ளே சிறிய குச்சிகளை போல வெண்ணிறத்தில் இவற்றினால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள் ‘’ என்றார் பாரெ.
பொன் சிறகு
“அம்மா…உங்கள் பெயரர் விஜயரங்க சொக்கநாதரை பக்கம் அமர்த்தி நீங்கள் பேசவேண்டும். அரசியாக அல்லாது அன்னையாக…”
“நீ இளையவன்…அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தாயின் இறப்பிற்கு நான் காரணம் என்ற எண்ணம் யாராலோ அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது. நானும் தலைமேல் ஏற்ற பொறுப்புகளின் வழியே அவனிடமிருந்து விலகி நெடுந்தொலைவு வந்துவிட்டேன். பெற்றவர் இல்லாத பிள்ளை, சூழ பகைநிற்கும் ராஜ்ஜியம் இரண்டிற்கும் முன் நான் எளிய பெண்ணாக விரும்பவில்லை கொண்டய்யா .”
ஓர் அபூர்வ விலங்கு
அதோடு
வாடிக்கையாக வந்து செல்பவர்கள்
போலிஸுடன்
உடன்கட்டை ஏறுதலும்
போலிஸ் சிலரோடு
உடன்போக்கு செல்லுதலுமான
கயமைகளை
ஆழ்ந்தவதானித்துக்கொண்டு
வறியயுண்ணியாகவும்
மிரட்டுண்ணியாகவும்
நிறை
ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.
டால்கம் பவுடர்
டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.
அந்தண அம்பேத்கர்
இருண்ட முகத்துடன் இருந்த மாரிமுத்துவுக்கு பியூன் மாசானம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“விடுங்க சார்… பணத்தக் கொடுத்து போஸ்டிங் வாங்கிருக்கானுக்கோ… நியாயப்படி பார்த்தா நீங்கதான் ரெவனியூ இன்ஸ்பெக்டர் ஆயிருக்கணும்…”
“போஸ்டிங் வராதது கூட பிரச்சனை இல்லை மசானம்… சீனியாரிட்டில முதல்ல இருக்குற எனக்கு, போஸ்டிங் தாராததுக்கு பொய்யா ஒரு காரணம் சொன்னாங்க பார்த்தியா… அந்த பழியைத்தான் என்னால தாங்கிக்க முடியல…”
இருட்டு
உடம்பு சரியாக இல்லை.
அவ்வப்போது தீப்பற்றி எரிவது போலவும் உடலில் ஏதோ ஊர்வது போலவும் இருந்தது. வீடு பூட்டியிருக்கும் போதும் சில உருவங்கள் சுவரைத் தாண்டி உள்நுழைவது போல இருந்தது.
ஆகாஷின் கால்களை அவ்வப்போது பிடித்துக் கொண்டேன். அவன் பாதத்தின் கீழே தலையை வைத்துக் கொண்டேன்.
கம்பா நதி – ஒரு வாசக அனுபவம்
கடைசி வரை சங்கரன் பிள்ளை மீது கோபம் வரவில்லை, ஆற்றாமை தான் வருகிறது. அதில் கூட யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ திரு வண்ணநிலவன் கூறுவதில்லை. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற தோணியிலேயே நகர்த்திச் செல்கிறார். வாழ்க்கையை கருப்பு வெள்ளை தவிர்த்து இடையில் பார்க்கக் கற்றுத் தந்தது இந்நாவல்.
எழுத்து, மனிதன், நாய்
நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
….
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்
…
திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்
விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை
(மூலம்: சைண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகைக் கட்டுரை. எழுதியவர் லியொனார்ட் டேவிட்) 1968-ல் அமெரிக்க சூழலியலாளரான Garret ஹார்டின் முன்வைத்த “Tragedy of Commons” என்னும் நிலைப்பாடு, பொதுப் பயன்பாட்டுக்குரிய இயற்கை வளங்கள் அளவுக்கு மீறி சுரண்டப் பட்டு அருகிப் போய்விடும் என்றும் அதனால் பயனர் அனைவரும் இடருறுவர் என்றும் “விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை”
பரிணாம வளர்ச்சியும் தொல்லெச்சச் சான்றுகளும்
மயசீன் (Miocene) சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுறும் சமயத்தில், அதாவது, 9.3 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நாம், குறிப்பாகச் சிம்பன்ஸி வகைக் குரங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நாட்டுப்புற அமெரிக்கர்கள்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும்.
குவாண்டம் உணர்தல்
‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது.