நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ‘ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம்.
Category: இதழ்-243
காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம்
சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களில் கயோட்டி ஓநாய்கள் ஓடின. அமெரிக்கக் கோமான்கள் புழங்கும் மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற ஊரில் வான்கோழிகள் காலியான வீடுகளின் கூரைகளைப் பிடித்துக் கொண்டன, விளைவு தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிஸ் நகரில் பெருங்கொம்புள்ள கலை மான்கள் நிழற்சாலைகளில் உலாப் போயின, துருக்கியில் மாநகரப் புறநகர்களில் காட்டுப் பன்றிகள் கூட்டங்களாக படையெடுத்தன. ஆஸ்த்ரேலியாவின் அடலெய்ட் மாநகரில் கங்காருகள் நகர் மையத்தில் குதித்தோடிக் கொண்டிருந்தன. வேல்ஸ் மாநிலத்தில் காட்டுச் செம்மறி ஆடுகள் கிராமப் புறங்களில் எங்கும் ஓடின. சிலே நாட்டின் சாண்டியாகோ நகர மையத்தில் சிறுத்தைகள் உலவின.
வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்
நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.
பய வியாபாரியா ஹிட்ச்காக்?
அவருடைய மிக விரிவான நினைவுகள்… எல்லாம் பயம் பற்றியவை. இந்த எரிபொருளை நம்பித்தான் அனைத்தையும் நசுக்கி ஓடும் ஹிட்ச்காக் வாகனம் ஓடியது. அவர் கிட்டத்தட்ட எதைப் பார்த்தாலும் தான் அச்சமடைவதாகச் சொல்லிக் கொண்டார்: பொலீஸ்காரர்கள், புது மனிதர்கள், காரோட்டுவது, தனிமை, கூட்டங்கள், உயரங்கள், தண்ணீர், மேலும் எந்த வகை மோதலும்.
ரௌத்திரம் பழகு
சீலன் உட்கார்ந்து தேவையான தஸ்தாவேஜ்களை இணைத்து அனுப்பினான். சுக்குநூறாக கிடந்த கணிணியின் கருப்புப்பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றினுள் இருந்த டேட்டாவை அனுப்பினான். இப்போதும் பரசுராமன் நம்பமாட்டான். வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என நம்பியிருந்தான்.
பத்மா அர்விந்த் – பேட்டி
படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….
ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர்
பீரங்கித் தாக்குதலில் காயமுற்று ஹால்டேன் ஸ்காட்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு கருப்புக் காவலர்களின் எரிகுண்டுப் பயிற்சிக்காக ஒரு பள்ளியைத் துவக்கினார். பிறகு மெசபொடோமியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆங்கிலேயர்களின் குண்டடியில் காயமுற்றதால் மேற்கொண்டு சேவைசெய்ய இயலவில்லை. காயங்களிருந்து குணமடைவதற்காக யுத்தத்தின் கடைசி இரண்டு வருடங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். தாய்நாடு திரும்பியபோது இந்தியா, இந்தியர்கள், இந்தியக் கலாசாரம் ஆகியனவற்றின்மேல் ஏற்பட்ட நிரந்தரமான பற்றையும் கையோடு எடுத்துச்சென்றார்.
விரிசல்
’இப்படி வேர்த்திருச்சே ஆச்சி…சரி சரி….எதுன்னாலும் மொதல்லே இதைக் குடிங்க’’
என்றபடி செம்பை அவள் கையில் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக்கொண்டு முழுச்செம்புத் தண்ணீரையும் தொண்டையில் அப்படியே சரித்துக்கொண்ட சாலாச்சி, முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு தன்னை ஓரளவுக்கு நிதானப்படுத்திக்கொண்டாள்.
அந்தப் பயணத்தின் போது
அந்தச் சந்திப்பு எதையும் நம்புவதற்கு எனக்கு வழி தந்திருக்கிறது. எதுவும் சாத்தி்யப்படக் கூடியதென்று நம்புகிறேன். யாராவது என்னிடம் வந்து சிறகுகளோடு பழைய டெல்லிகோட்டையின் மேல் நீங்கள் பறந்ததைப் பார்த்தேன் என்று சொன்னால் நான் நம்புவேன். அதற்குப் பெரிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு வரலாற்றாசிரியன் பழைய சிதைவுகளின் மீது சிறகுகளோடு கண்டிப்பாகப் பறக்க முடியும். அவனால் அதைச் செய்ய முடியும். தனக்கான சிறகுகளை வளர்க்க முடியாதவன் எப்படி ஆராய்ச்சியாளனாக முடியும் ?
மின்னல் சங்கேதம் – 4
அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”
காருகுறிச்சியைத் தேடி… (2)
காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் …
காடு
நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.
கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்
கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.
இதினிக்கோ
‘யு மஸ்ட் பி ஜோக்கிங்! ராஜப்பா வாத்தியார் சொல்லிக்கொடுத்து கணக்கு புரிஞ்சிண்டவா யாராவது இருக்காளா? ஆனால் அந்தக் கூத்தும் நடந்தது. ஆரம்பித்துக் கொஞ்ச நாளிலேயே டியூஷன் கடை மூடியாகிவிட்டது. வகுப்பறை சகிப்புத்தன்மை என்பது நம் தலைமுறையோடு முடிந்துவிட்ட விஷயம் என்று தோன்றுகிறது, முகுந்த். பட் எ குட் ட்ரெண்ட், வாட் டூ யு ஸே?’
மீச்சிறு துளி
சம்பத், எப்போதுமே அவன் செய்யும் வேலைகளை ஈடுபாட்டோடு ரசித்து செய்பவன். ஆனால் தொழில் வெற்றிகரமாக தொடர்வதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நேரம் என்று பொதுவாகச் சொன்னாலும் காலம்தான் இவன் தொழிலை நலிவடையச் செய்தது. சைக்கிளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து தானியங்கி வாகனமாக மாறியது காலத்தின் மாற்றம்தானே. இவனும் காற்றடிப்பது, பஞ்சர் போடுவது என அவற்றின் வேலைகளையும் பார்த்தாலும் பழுது பார்த்தல் இவனால் இயலாததாகிவிட்டது.
ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?
வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.
இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்
உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன.
தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?
வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது? வெ.சா. ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். “தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?”