கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.
Category: இதழ்-240
சிற்றடி: ஏன் இந்த முயற்சி?
பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.
தாகூரின் கூப்பிய கரங்கள்
இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.
இலக்கியமும் ரசகுல்லாக்களும்
ஆரோக்கியநிகேதனம் நவீனத்தின் தாக்கத்தை ஒப்புநோக்கில் மருத்துவம் என்ற குறுகிய வட்டத்தின் உள்நின்று ஆராய்கிறது. ஹன்சுலி வளைவின் கதை அதை மேலும் விரிவாக ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவின் உருமாற்றத்தை, காலனியம், போர், தொழில்மயமாக்கல் போன்ற விசைகளைக் கொண்டு ஆராய்கிறது. ஹன்சுலி என்பது நேபாள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் குடிகள் அணியும் வளைந்திருக்கும் ஒரு திருகல்-கழுத்தணி.
பொன்னுலகின் வேடிக்கைகள்
ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.
நீலகண்டப் பறவையைத் தேடியவர்
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.
கனன்றெரியும் நீர்வெளி
இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலைக் கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறித் தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையைக் கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும் ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார்.
நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்
கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை.
சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்
ஓர் இசை மேதைக்கு ஒரு திரை மேதை செலுத்திய உச்சகட்ட மரியாதை இது. திரைப்படமாக வெளிவந்திருந்தால் ஒருவேளை ரவிஷங்கரின் மேதைமைக்கு நிகர் செய்ய இயலாமல் போயிருக்கலாம். ஒரு சாதாரண ரசிகராக நமக்குத் தோன்றியது ரேவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?
மரணத்தின் பல வண்ணம்
பிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.
மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம்
இந்தியாவில் கொத்தடிமை முறையைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர்கள். 1986ல் மகாஸ்வேதா பழங்குடிகளுக்கான இயக்கத்தைத் தொடங்குகிறார். பெங்காலின் பல தினசரிகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.
காளியின் குழந்தை ராம்பிரசாத்
சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.
பக்கிம் + பாரதி = பரவசம்
“பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா? “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.
வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்
எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”
அபத்த நாடகத்தின் கதை
சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.
மின்னல் சங்கேதம் – 1
டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”
ஆத்மஜன்
சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…
பத்து ரூபாய் மட்டும்
எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.
ஹீங்க் கொச்சூரி
குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.
தொலைந்துபோன புயல்
மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.
ரூபா
உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தன்னிரங்கல்
அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.
படகோட்டி தரிணி
தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.
நான் கிருஷ்ணாவின் காதலன்
கீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான்.
காதலும் அந்த பைத்தியக்காரனும்
அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.
ரத்தப் பாசம்
அவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர் “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன். ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான். மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.
ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
சிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
வி. ராமஸ்வாமி: நேர்காணல்
1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”
நேர்காணல்: மல்லிகா சென்குப்தா
பெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக … நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்கும் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது
மேதையுடன் ஒரு நேர்காணல்
மானுடத்திற்கு நன்மை பயப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் மானுட அபிமானம் கொண்ட படைப்பை உருவாக்காவிடில் அது நிச்சயம் கலைப்படைப்பு ஆகாது. கலை முதலில் சத்தியத்திற்கும் அடுத்ததாக அழகிற்கும் விசுவாசமுடையதாக இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் சொல்கிறார். இந்த சத்தியமானது கலைஞனின் சொந்த பார்வையிலிருந்தும் த்யானத்திலிருந்தும் விளைந்ததாக இருக்கிறது.
நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.
தன் வெளிப்பாடு – முன்னுரை
நாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.
வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.
என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!
தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”
விஷ்வ சாந்தி
பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.
சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
இந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.
கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது.
ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்
என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.
கிருஷ்ணா பாஸு கவிதைகள்
அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?
காஜி நசருல் இஸ்லாம் கவிதை
ஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள்
உங்களது நீதித்துறையின் கைச்சுத்தியை;
மகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்
எளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.
கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன
எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ
அவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து !
கல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020
2020 கொல்கத்தா புத்தகச்சந்தைக்கு 44வது ஆண்டு. புத்தகச் சந்தையில் தரை மேவப்பட்ட மைதானத்தில், சில கூடாரங்கள், தெரு ஓரக்கடைகள் என்ற இரு மாதிரிகளில் கடைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டண வேறுபாடு உண்டு. தெருவோரக்கடைகளில நிரந்தரக் கடைகள் போல ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்புக்கு கிரில் கதவுகள் வைத்து உருவாக்கப்படுகின்றன.
20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.
சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்!
கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.
தமிழில் வங்க எழுத்துகள்
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”
பரோபகாரம் – தன்னார்வுலா
பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”
யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?
மதச்சார்பற்றவர்களின் திட்டத்தில் ஒரு முக்கியப் பகுதி இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவதாகும். இந்து சமுதாயத்தில் காணப்படும் தீமைகளுக்கும் தீமைகளாக எண்ணப்படுவதற்காக இந்து மதத்தைப் பழித்தலும் நல்லவைகளையும் நல்லவைகளாக எண்ணப்படுபவைகளின் சம்பந்தத்தை உடனடியாக இந்து மதத்திலிருந்து கழித்துவிடுதலும் இவர்களின் தொழிலாகும்.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
சிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம்.