சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.
Category: இதழ்-239
ஜோதி தாளம் . . .
சுலைமான் அப்படித்தான். மைக்கைக் கையில் பிடித்து விட்டால் வண்டி அங்கே இங்கே திரும்பாது. நம்ம ஊர் சிங்காரி மட்டுமல்ல. எங்கேயும் எப்போதும் பாடலுக்குக் கூட உடலில் அசைவில்லாமல் வேறெங்கும் பார்க்காமல் பாடுவார். ‘சொர்க்கம் மதுவிலே’ பாட்டுக்கெல்லாம் ஒருத்தன் ஆடாம பாட முடியுமாய்யா? ஆனால் அதற்கும் சுலைமான் அசைய மாட்டார். சிவகுருவுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்?
விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓர் அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸாலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன. ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது…
வாஷோகுவும் வஸாபியும்!
ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சை நிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியைச் சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.
பரோபகாரம் – நம்பகத்தன்மை
உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.
பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?
பேச்சுரிமை அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களைச் சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாகச் சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற “பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?”
நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)
அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த புன்னகை அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே புன்னகைக்க மட்டுமே செய்தார். பின் வென்றார்.
வள்ளியம்மை
ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு சராசரி ஆணுக்குள் தோன்றும் முதல் உணர்ச்சி “காமமாகவே” இருக்கிறது.. பத்து நிமிடம் அவளிடம் பழகியபின்பு, அவளின் நம்பிக்கையை பெற்று, அந்த பழக்கத்தை நீடிக்க முயற்சி செய்கிறது ஆணின் மனம்.
ஓ கங்கரே!!!
“வேணா நாங்க பிடிச்சிக்கிறோம்” என ஆணும் பெண்ணும் மாட்டைப் பிடித்துக்கொள்ள மாடு திமிறிக் கொண்டிருந்தது. தாத்தா அதன் கண், சுவாசம், நாக்கு மற்றும் உடம்பைப் பாரத்துக்கொண்டிருந்தார். திமிறிய மாட்டை அந்த முறுக்கேறிய கைகளும் கால்களும் பிடித்துக்கொண்டிருந்தன. கால்களில் சகதியோ, தொழியோ, சிமெண்டோ வெள்ளையடித்திருந்தது.
தேன்மிட்டாய்
அப்பா இருந்தா திருச்சி வானொலில ஆறரை மணிக்கு செய்தி கேட்பாரு. ஏழைகால் மணிக்கு திரும்பவும் டெல்லி செய்தி கேட்பாரு. அவர் இருக்கும்போது நியூஸ் மட்டும்தான் கேட்க முடியும். அதனால அவரு எப்படா வெளிய கிளம்புவாருன்னு பார்த்துக்கிட்டே இருந்து ரேடியோவை போடுவேன்.
ஞாயித்துக்கிழமை அப்பா வீட்டுலதான் இருப்பாரு. நான் ரேடியவோ போட்டுட்டு, சத்தம் கம்மியா வச்சுட்டு, பாட்டு கேப்பேன்.
தொந்தரை
“அதென்னவோ தெர்ல பாப்பா. வயித்துல சோத்த போட்டதும் கண்ண சொயட்டுது. பத்து நிமிசமாவது ஒடம்ப கெடத்தலன்னா ஆவட்ட, சாவட்ட அடிச்சிப்புடுது” என்று தொந்தரை சிரித்தபடி கூறும்.
விட்டு விலகுதல்
வரிசையின் அருகில் சென்ற காக்கி நிற சீருடையணிந்திருந்த அலுவலக ஊழியர் ஒருவர், “சார், அது இங்கேயேதான் கிடக்கும். என்னதான் சத்தம் போட்டாலும் அடிச்சாலும் வெளிய போகாது. என்னவோ இந்த எடம் அதுக்குப் பிடிச்சுப் போச்சு. வெறங்கேயும் போக மாட்டேங்குது. கொரக்கிற மாதிரி இருந்தாக்கூட அடிச்சு இழுத்து வெளியே போடலாம். சும்மா குறுகிக்கிட்டு கெடக்குறத என்ன செய்யறது. அது ஒன்னும் செய்யாது. பயப்படாம நில்லுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
முடிவு
“ஆமாங்க, இவங்க இப்ப நாலு வருசம் போகட்டும்னு சொல்வாங்க; அதுக்கப்பறம் பையனும் வேலைக்குப் போயிடட்டும்னு சொல்வாங்க; படிச்சு முடிச்சவுடனேயே என் தங்கைக்கு வேலை கெடைக்கணும். இல்லன்னா இன்னும் ரெண்டு வருடம் பொறுத்துக்கோன்னு சொல்வாங்க” அவள் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
ஒவ்வொரு சிகரெட்டிலும் உடலுக்குக் கேடான 93 ரசாயனங்கள் உள்ளன. இவை அத்தனையும் சிகரெட் உற்பத்தியால் உருவானதா என்று கேட்டால் ‘பெரும்பாலும்’ என்றுதான் பதில் சொல்லவேண்டும். சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள், மூன்று படிகளில் உருவாகின்றன.
அமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா?
இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம்.
சித்தார்த் வெங்கடேசன் – பேட்டி
வாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான் அனைவருக்குமே வாசிப்பு துவங்குகிறது என நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நம் கதைசொல்லிகளின் எல்லைகளை உணரும் பொழுது அல்லது அது ஒரு போதாமையை நமக்கு தரும் பொழுது வேறு கதைசொல்லல் ஊடகத்தை தேர்ந்தெடுக்கிறோம். நான் வளர்ந்த காலத்தில் காட்சி ஊடகம் பெரிதாக இல்லாததால் வாசிப்பு இயல்பான அடுத்தக்கட்டமாக இருந்தது.
மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)
ரேடியோ தொடர்பாடலில் பெருஞ்சாதனைகள் புரிந்த மார்க்கோனி முறையான பொறியியல் அல்லது இயற்பியல் பட்டம் பெறாதவர். அறிவியலர் என்பதைவிட அரைகுறைப் (tinkering) பொறியாளர் என்றால் பொருந்தும். நோபல் பரிசு ஏற்புரையில் தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரை ‘ரேடியோவின் தந்தை’ எனக் கூறிவிட முடியாது.
சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?
மதச்சார்பின்மைதான் எங்களது நோக்கம் என்று கூறும் இயக்கங்களின் உண்மையான இலக்கு, ஹிந்துத் தன்மையை நிர்மூலமாக்குவதே என்பது என் அபிப்பிராயம். பா.ஜ.க. இந்துக்களை ஆதரிக்கும் கட்சி என நினைப்பவர்கள், அக்கட்சி இத்திட்டத்தை ஆதரித்தது என்றறிந்தால் ஆச்சரியப்படுவர்.
வ. அதியமான் கவிதைகள்
முன்னமே
பிரிந்து சென்ற ஆடுகள்
குரல் கொடுப்பதும்
இல்லை
சொல் எடுப்பதும்
இல்லை
அவை மீளா பாதைகள்
என்பதறிவேன்
குமார் சேகரன் கவிதைகள்
கூடிக் கொண்டே போகும்
அந்த சத்தத்தில்
உள்ளிருந்து வரும்
ஒரு சத்தத்தை
மெல்ல மெல்ல
கொல்கிறேன் இப்போது
கு. அழகர்சாமி கவிதைகள்
எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர
நினைவுக் குறிப்புகள்
மௌனத்தின்
தருணங்களிலும்
வாஞ்சையுடன்
அணைத்துக்கொள்ளும்
வீட்டின் நினைவுகள்…
ஆக்கவோ அழிக்கவோ
அனைவருக்கும்
நாம் யார் யாரோ தான்.
சொல்லி விளங்க வைக்கும்,
செய்து நிரூபிக்கும் சங்கடங்கள் இல்லை.
எப்படி பிரிந்திருப்பது என்ற
பிலாக்கணங்கள் இல்ல…
எப்போதும் பிரிந்தே இருக்கிறோம்.
எப்போது சேர்ந்திருப்பது
என்ற பதட்டமில்லை
இருமுனைகளாய் சேர்ந்தே இருக்கிறோம்.
மெய்நிகர் நோயாளிகள்
கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன.
பால் டம்ளர்
நம் மொழிபெயர்ப்பாசிரியர் ராஜி அவர்கள், சில சமுதாயப் பிரச்னைகளை வித்யாசமாக அலசித் தெலுங்கில் அற்புதமாக எழுதிப் பல வாசகர்களைக் கவர்ந்த சிறப்பான சிறுகதைகளையே தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தமிழில் மிக நுண்ணிய முறையில் தம் உயரிய எழுத்தால் செதுக்குகிறார்.
புலம்பெயரும் பவளப்பாறைகள்
பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே.