கருவாய் உயிராய்

என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர். அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.

ஓசை பெற்று உயர் பாற்கடல்

வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.

பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்

திருவல்லிக்கேணியில் மதம் பிடித்த யானை இவரைக் கீழே தள்ளியதால் இறந்துபோனார் என்றுதான் ஜனரஞ்சகமாக நம்பப்படுகிறது. யானை கீழே தள்ளிய ஓரிரு நாள்களில், தனது வேலைகளைப் பழையபடி பாரதியார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சில ஊர்களில் பிரசங்கமும் செய்திருக்கிறார். இது நடந்து சில மாதங்கள் கழித்துத்தான், அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள்தான் (11 ஆம் நாள் அன்று, 12 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு) வயிற்றுக் கடுப்பின் காரணமாக இறந்திருக்கிறார்.

சாவித்ரி- ஓர் இசை

ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.

பாண்டி(த்ய)ஆட்டம்

எதை உன்னதம் என்போம்? அது மனதிற்கினிய உயர்ந்த பொருளா அல்லது எட்மண்ட் பர்க் சொல்வதுபோல் இருண்மையான, நிலையற்ற பயங்கரமா? அது ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வியலில் ‘உன்னதமயமாக்கம்’ என்று ஆகிவிட்டதா? இந்த கேள்விகளுடன் நம்பி கிருஷ்ணன் பாரதியை ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ என்று இணைக்கிறார். அப்படியாகப்பட்ட உன்னதம் ஸ்டீவென்ஸ்சுக்கு ஆத்மாவில் இறங்கி வருகிறது.
‘தன்னளவில் ஒன்றுமில்லாதவன், சொற்ப இலைகளின் ஓசையில் எந்தத் துயரையும் நினையாதொழிய, அங்கில்லாதது ஒன்றுமில்லை, உள்ளது இல்லாதது’. வாலஸ் ஸ்டீவென்ஸ் கட்டுரையில் பாரதி, ஷெல்லி, கீட்ஸ், விட்மன், குறுந்தொகை, ரிக் வேதம் அனைவரும் பொருத்தமாக இடம்பெறுகிறார்கள். விதியின் இயற்கைச் சுழற்சியைத் தலைகீழாக்கும் உன்னதம் காணக்கிடைக்கிறது.

ரீங்கரிப்பு

“நம்ம வயலா செல்வம்?”
அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போல திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.
“நாத்து வுட்டாச்சு போலயே…”
“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்தச் சென்மம் மாஞ்சுப்போச்சு…”

கணை

ஊடாக பிரண்டைக் கொடியில் இளசான காய்கள் இளம்பச்சை நிறத்தில் சங்கிலிக் கண்ணிகளாய் ஓடியிருந்தன. குட்டி கொல்லை வாசற்படியில் நின்று ஜீவா தோள்களில் கை பதித்து எம்பி எம்பி குதித்துக் கொண்டிருந்தாள்.

” பதினஞ்சு பவுன் போடணுமாம். தவிர கல்யாணம் செஞ்சு வைக்கணுமாம். தனிக் குடித்தனத்துக்குப் பாத்திர பண்டமெல்லாம் வாங்கிக் கொடுக்கணுமாம்.”

லா.ச.ரா. நூலகம்

எதிரே இரண்டு சதுர ‘பக்கெட்டுகள்’ நிறைய புத்தகங்களைக் காண்பித்து ‘இதெல்லாம் ‘ரிட்டன்’ வந்தது. எல்லாம் முக்கால்வாசி லேடி ரைட்டர்ஸ்தான். இவங்களுக்கு இருக்குற ‘ரீச்’ நீங்க நெனைச்சுக்கூட பாக்க முடியாது. ஜென்ஸ்ல சுஜாதா, பாலகுமாரன் இந்த ரெண்டு பேர்தான் இவங்க அளவு ‘கிரேஸ்’ உள்ளவங்க. இந்த புக்க எடுங்க, பின்னால பாருங்க எத்தனை ‘சீல்’ இருக்குன்னு, ஐம்பதுக்கு மேலயே இருக்கும். அத்தனைபேர் படிச்சிருக்காங்கன்னு இல்ல, அத்தனை முறை புத்தகம் வெளில போயிருக்கு.

மதுரா விஜயம்

“குமாரரே! இன்றைக்கு சுமார் நாற்பத்தெட்டு வருடங்களுக்குமுன் உலுக்கான் படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளரையும் உபய நாச்சியார்களைக் காப்பாற்றுவதற்காக அரங்கத்திலிருந்து அவர்களைப் பிள்ளை லோகாச்சாரியர் எனும் ஆன்றோர் தலைமையில் எடுத்துச்சென்றார்கள். பிள்ளை லோகாச்சாரியர் எனும் முதிர்ந்த ஞானி பழம் பழுத்து மரத்திலிருந்து விழுவதுபோல் ஜ்யோதிஷ்குடி எனும் ஊரில் பரம பதம் எய்தினார். அதிலிருந்து பெருமாளும் நாச்சிமாரும் அழகர் கோயில் வழியாக மாவார் சென்றுவிட்டனர். அங்கே திருக்கணாம் என்கிற ஊரில் சேவை சாதித்து வந்தனர்.

கவிதைகள் – வ. அதியமான்

யசோதா

தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்

கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்…

இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு

மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.

விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன

This entry is part 10 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றலாம். இத்தனை நல்ல பொருளாதார நன்மைகளைத் தரும் தொழில்நுட்பத்தில் அப்படி என்ன குறை இருக்கமுடியும்? உலகின் கடந்த 100 ஆண்டு காலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களிலும் அதனால் விளையும் கெட்ட விளைவுகளை மனித குலம் தவிர்த்தே பார்த்து வந்துள்ளது.

பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில்

அவர்கள் கொலை செய்தார்கள், அதிகாரிகளை நேரே பகைப்பதில்லை. ஒத்துப் போகும் பொதுப் புள்ளியில் அவர்கள் நிறுவனத்திடமும் பொது மக்களிடமும் உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். (அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் தொழில் முனையும் பெரு நிறுவனங்கள் வன்முறையாளர்களுக்குக் கப்பம் செலுத்தியதும் முன்னர் ஜம்மு- காஷ்மீரத்தில் செயல்பட்ட வங்கிகள் ‘வாடிக்கையாளரை அறிவோம்’ மற்றும் ‘பெருந்தொகை வரவை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்தக் கூடாது’ என்பது போன்ற மிரட்டல்களை எதிர் கொண்டதையும் குத்து மதிப்பாக நாம் அறிவோம்.) இப்படித்தான் ஊட்டம் பெறுகிறார்கள். இதாலியின் பொருளாதாரத்திலும், அதன் அரசியலிலும் இவர்கள் ஆற்றல் மிக்க சக்தி.

யூதாஸ்

“இந்த வாய்ப்புக்காக நீண்ட நாள்களாகக் காத்திருந்தேன் கெவின். அதென்ன, அப்படியொரு ஆட்டிடியூட், தான் மட்டும்தான் பெரிய இவன், மற்றவர்கள் எல்லாம் மயிர் மாதிரி என்று? இவன் எத்தனை வாழ்க்கைகளை இல்லாமல் ஆக்கியிருக்கிறான் தெரியுமா? பிரச்சினை என்று ஒன்றும் இருக்காது, இவன் முகத்தை நேராகப் பார்த்துப் பதில் சொன்னதற்காக ஒரு பெண்ணை மீன் கழிவுப் பிரிவில் சுத்தம் செய்ய விட்டுவிட்டான் தெரியுமா?

பலிபீடம்

என் கழுத்தைப் பற்றியிருந்த பாகற்கொடி, என்னிடம் பேசத் தொடங்கியது.
“எதைப் பலிகொடுக்க உள்ளாய்?” என்று கேட்டது.
“எதற்குப் பலிகொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன்.
“என்னை விதைத்தவரைப் பக்குவப்படுத்த வேண்டியது என் கடமை. நீதான் என்னை விதைத்தாய். நான் உன்னைப் பக்குவப்படுத்த வேண்டும். நீ பக்குவப்பட வேண்டும் என்றால், நீ உன்னில் இருக்கும் தீய குணத்தை இங்குப் பலியிட வேண்டும்” என்றது.
“என்னிடம் எந்தத் தீய குணமும் இல்லையே!” என்றேன்.

அமுதா அக்கா

நல்லா இருக்கியா… நல்லா இருக்கியானு கேட்டுக்கொண்டே இருந்த அக்காவிடம் நீ நல்லா இருக்கியா என்று நான் திருப்பிக் கேட்டவேயில்லை. அப்படிக் கேட்பது அக்காவின்மேல் தொடுக்கும் வன்முறை என்று நினைத்துகொண்டேன்.
… நல்லா இருக்கேன்க்கா.

கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது

வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு

சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”