அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!

எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும்  உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது  என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

எஸ்.பி.பி. என்னும் H2O

இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் “எஸ்.பி.பி. என்னும் H2O”

பூப்போலே உன் புன்னகையில்…

மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம்.  கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”

கடவுளைத் தேடி

கிட்டத்தட்ட தன் அந்திமக்காலத்திலிருக்கும் அந்தச் சூரியனைச் சுற்றிவரும் அந்தக் கிரகத்தை ஆராய்ந்தபோது, சூரியனிலிருந்து அதன் தொலைவை வைத்துப்பார்க்கையிலும், ஒரு காலத்தில் கடல் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை வைத்துப் பார்க்கையிலும், அந்தச் சூரியக் குடும்பத்தில் கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்திருக்கலாம் என்றும், அந்தக் கிரகத்திற்கு முன்பொரு காலத்தில் ஒரு நிலவும் இருந்திருக்க வேண்டும் என்றும் என்னால் ஊகிக்க முடிந்தது.

ஓவியா

மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியலைப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் எந்தப் பெயரும் தூய தமிழ்ப்பெயராக இல்லை. ‘தமிழ்நாட்டில்தான் நான் வாழ்கிறேனா?’ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. பத்துப் பெயர்களைத் தாண்டியவுடன் என் கை நின்றது. என் பார்வை ஒரு பெயரின் மீது பதிந்தபடி இருந்தது. இமைகளைப் பலமுறை சிமிட்டிய பின்னர் மீண்டும் அந்தப் பெயரைப் படித்தேன். ‘ஓ வி யா’.

பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2

This entry is part 8 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது
இந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால், டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.
வங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன.
புவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்கு திரும்பும் முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.

யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்

This entry is part 46 of 48 in the series நூறு நூல்கள்

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”

தீவு

நான் காத்திருந்தேன்.
“உங்க மனைவி ஆஸ்பத்திரில மார்ச்சுவரி இருக்குல்ல, அங்க என்னை ஒருநாள் கொண்டுபோய் விடமுடியுமா?”
“செத்தாதான் அங்க கொண்டுபோவாங்க.”
“ஹாஹாஹா. அதில்ல தம்பி… கரோனாவோட உண்மை நிலவரம் தெரியணும்னா ஒரு நைட்டு அங்க இருந்தாதான் முடியும்.”
“ஒவ்வொருத்தர் மண்டையா போய்ப் பாக்கப்போறீங்களா?”
“வேற வழியில்லை தம்பி.”

தடுப்பூசியும் முதியோரும்

எந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறது. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில், 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒரு சில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.

புனித வெள்ளி

“இன்று நான் இறந்த நாள். இன்னும் மூன்று நாட்களில் இன்னோரிடத்தில் பிறந்து மீண்டும் ஓர் வெள்ளிக்கிழமை சாக வேண்டும். நான் செத்த உடலுடன் அப்படியே பிறப்பதாக இந்த மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைப்பது. எதற்கு, இருப்பது அப்படியே இருக்கட்டும். அப்பனே என்னை ஏன் இப்படி செய்கிறாய் முதல் தடவை கொன்றாய், அப்படியே என் பிறப்பறுத்திருக்கலாமே. மீண்டும் மீண்டும் சவக்குழியில் இறக்கி பிண நாற்றத்துடம் வெளிக்கொண்டு வந்து ஏன் விளையாடுகிறீர்,”

யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்

ராஜயோகத்தில் உடலையும், மனதையும் உறுதி செய்யாமல் மூச்சு பயிற்சி, தியானம் என மேலாம் படிகளில் வேகமாக ஏறினால் பல இன்னல்கள் வரும். அதனால் சாதனைகளில் முன்னேறாமல் தடைபடும்.

நோய், சோம்பல், சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம் புலனின்பத்தில் அதிக பற்று, மனம் குவியாதிருத்தல், தவறான பார்வை, சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை இழத்தல் என ஒன்பது விதமான தடைகளை யோக சாதகன் தாண்ட வேண்டும்.

மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?

மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள்.

கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”

யார் யார் யார் இது யாரோ?

இக்கட்டுரை முழுதும் ரோபோவால் எழுதப்பட்டது. மனிதர்களே, இன்னமும் பயம் ஏன்? ஜிபிடி-3 (GPT-3) என்ற, சக்தி மிக்க, திறந்த செயற்கை நுண்ணறிவுப் புதிய மொழி உற்பத்தியாளரான (OpenArtificial Intelligence New Lanaguage Generator) ரோபோவிடம், எங்களுக்காகச் சில துண்டங்களிலிருந்து ஒரு கட்டுரை எழுதக் கேட்டுக் கொண்டோம். இடப்பட்ட பணி “யார் யார் யார் இது யாரோ?”

திருப்பரங்குன்றம்- திருக்கோயில்

மதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவில் பல்வேறு கற்றல் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் மிக எளியது பிழை திருத்தச் சுழற்சி (trial and error ) முறை. உதாரணமாக சதுரங்க ஆட்டத்தில் இறுதி முற்றுகை இடர்ப்பாடுகளுக்கு விடை காணும் கணினியின் செய்நிரல், பல தற்செயல் நகர்வுகள் மூலமாக முயற்சித்து இறுதியில் முற்றுகைக்கு விடை காணக்கூடும்; விடை கண்ட பிறகு, நிரல் அந்த நிலைகளை நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடும் .

வ. அதியமான் கவிதைகள்

இதோ இன்று
பதமிட்டு குழைத்தெடுத்த
இந்த பச்சைத் தசைகளிலும்
அந்த ஏதோ ஒன்றை
எவனோ
எப்படியோ
அப்படியே
சாத்தியமாக்கி இருக்கிறான்

சிறு மணிச்சுடர்
ஒளிரத்தான்
இருட்பெருங்கடலை
அகலாக்கியவன்
அல்லவா
அவன்?

வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2

சூழல் உண்டாக்கிக் கொடுக்கும் நெருக்கத்தின் பாலியல் விழைவா? நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா? நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது? அது குணத்தின் எதிரொலியும் அல்லவா என்று கேட்பது போலிருக்கிறது வண்ணநிலவனை வாசிக்கையில்.

க. ரகுநாதன் கவிதைகள்

ஈரப் பசும் ஒளிசூடி
சூல்களின் மகரந்தம்
மெல்லிய கால்களில் ஏறிட
பள்ளத்தாக்கின் செவியறியாமல்
அகாலத்தைக் கலைத்து
காலத்துள் பறந்தது பட்டாம்பூச்சி.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

எத்தனை பேசினாலும்
புரிந்தது போக
மிச்சம் நிறைய இருந்தது
சொல்லில் பொருள்
கொண்ட காலம்
கடந்துபோன நிலையில்
ஆதி மனிதனின்
கவலை இங்கே எடுபடவில்லை
ஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது