பாரதி சாதிப்பிரிவினையை எதிர்த்து கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன் ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். …ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்த அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர்.
Category: இதழ்-229
பொம்மை
இருபது வயது பெண்ணைப் பார்த்து இருபத்து நாலு வயது ஆள் ‘நீ எனக்கு வேணும்’ என்று சொன்னால் இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்கிறது.? அதிலும் அவளைவிட படிப்பு, சாதி, சொத்துசுகம் அத்தனையிலும் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவன் ‘நீ எனக்கு வேணும்’ என்று விம்மும் குரலில் சொன்னால் அவன்மீது ஈர்ப்பு ஏற்படாமலிருக்குமா?
அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை
முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.
இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்
நாங்கள் வெளியில் இருந்து வரும்போது எங்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு வரும் தூசியும் புழுதியும் பிஸ்கெட் தயாரிக்க பயன்படுத்தும் மாவோடு சேர்ந்து நாற்றமெடுக்கும். அந்த நாற்றத்தோடு சூடாக இருக்கும் அந்த குறுகிய பேஸ்மெண்ட்டில் நாங்கள் மாவை இழுத்துப் பிசைந்து பிஸ்கட் வடிவில் வெட்டுவோம். எங்கள் வியர்வை கூட அதோடு சேர்ந்து வடிவமைக்கும். எங்களுக்கு அந்த வேலை மீது எத்தனை வெறுப்பு, அசிங்கம் என்றால், எங்கள் கையால் செய்த அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ருசி பார்ப்பதற்காகக் கூட தின்ன மாட்டோம்.
இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு
தமிழகத்தின் கிராம சபைகளைக் குறிக்கும் ஆகப் பழைய கல்வெட்டான பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டு (பொயு 898),
‘மக்கள் சபையில் மன்றாடுகிறது ஒரு தர்மம் உட்பட மந்திரப் ப்ராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும்’
என்று அந்தக் கிராமத்தின் நீதி சபையின் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. அதாவது உறுப்பினராகக் கோருவோர் தர்ம சாஸ்திரங்களின் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
ருருவின் பிரம்மத்வாரா
“எனக்கு என்ன? ஏன் என் பிரிய ருரு என்னைவிட்டு புழுழுவாக மாறி ஓடுகின்றான். இந்த கனவின் அர்த்தம்தான் என்ன? யாரிடம் கேட்பேன்“ அவள் பயத்தால் தவித்தாள். காரணம் இன்றி கண்கள் அடிக்கடி நனைந்தது. காலையில் இருந்து அந்த கனவு அவளை அலைகழிக்கிறது. தோழிகளிடம் சொல்ல கூச்சமாக இருந்தது. “அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் தேடி. பெரும்பாலையில் அலைகிறேனோ?“ கனவை உதற முயற்சித்தாள், அவளால் முடியவில்லை. கனவு அவளை வாகனமாக்கி பயணம்போனது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020
தமிழகத்து ஷ்யாமளாவிற்கும், ஜமைக்காவின் ஹாரிஸுக்கும் அமெரிக்க மண்ணில் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். தன் பெயரைத் தவிர வேறெந்த இந்திய அடையாளங்களையும் முன்னிருத்தாதவர் கமலா. அவரின் சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்து தாயிடம் வளர்ந்திருந்தாலும் தந்தையின் வழியில் தன்னை கறுப்பின கிறிஸ்தவ பெண்ணாக, ஆஃப்ரிக்கன் அமெரிக்கனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறவர். கறுப்பின அமெரிக்கர்களுக்காக, தனியாரால் நடத்தப்படும் ‘ஹாவர்ட் பல்கலை’ யில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.
குணப்படுத்த இயலாதது
ஒரு நாள் என் தாயார் என்னையும் (எனக்கு 7 வயது ) என்னுடைய வேறொரு தமக்கையையும் (வயது 10) அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். புதிதாக உழுது போடப்பட்டிருந்த வயலின் பக்கலில் நடந்து சென்றோம். அது இலையுதிர் காலத்து ஆழமாகப் புரட்டி உழுதல் வகை, வயல்தரையைக் கோரி வாரும் பெரிய அடிமண் கட்டிகள் மெதுவாக நொறுங்கி பொடியாக உதிர்ந்து உழுசால் நெடுகிலும் பரவுவதற்காக செய்யப்படுவது. அவை மண் சீவல்கள் என்றழைக்கப் படுகின்றன; மற்றும் அவை கிட்டத்தட்ட மிகச்சரியான வடிவ கணிதத் திண்மங்கள் போல் தோற்றமளிக்கின்றன: வெட்டிக் குறைக்கப்பட்ட சாய்சதுர அறுமுகத் திண்ம வடிவங்கள் (truncated rhombohedron)எனக் கருதுங்கள்.
காளி பாதம்
“ஏங்க, இது ஒரு ஸ்கூல் டிராமா. இதுல நம்ம மகளுக்கு ஒரு சின்ன வேஷம். ஒரு நிமிஷம்தான் அவள் மேடையில நிற்கப் போறா. வசனங்கூடக் கிடையாது. இதுக்குப்போயி அந்தாளு மீன்சாப்பிடாதே, கறிசாப்பிடாதே, விளக்குப்போடு, தோப்புக்கர்ணம் போடுண்ணு ஏதேதோ சொல்லிருக்காரு?” என்று எரிச்சலோடு கேட்டார் ரம்யா.
ஆற்றுப்படுத்தல்!
எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.
சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, அனல் மின் உற்பத்தியாளர்கள், ஏதோ சதிகாரர்கள் போலத் தோன்றலாம் – என் நோக்கம் அதுவல்ல. இவர்கள் விஞ்ஞானிகள் பார்க்காத சில கோணங்களில், இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார்கள் என்பது உண்மை. உதாரணத்திற்கு, ஒரு அனல் மின் அமைப்பில், பல கொதிகலன்கள் இருக்கும். ஒவ்வொரு கொதிகலனையும், ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற மையமாக மாற்றினார்கள். சின்னச் சின்ன முதலீட்டில், எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதும் இவர்களது வெற்றிச் சிந்தனை.
முறிமருந்து
வைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன.
“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது.
அருணா சுப்ரமணியன் – கவிதைகள்
கூண்டுக்குள்
அடைக்கும் முன்னர்
பிடுங்கப்பட்ட
இறக்கைகளை
பத்திரப்படுத்தி
பாதுகாத்து வந்தது
வனப்பட்சி
வ.அதியமான் கவிதைகள்
எழுந்து நின்றிருந்த
வானவில்லும்
எரிந்து ஒளிர்ந்திருந்த
மின்மினியும்
வண்ணம் நுரைத்திருந்த
புஞ்சிறகும்
வானுக்கெழுந்திருந்த
நந்தாகுமாரன்-கவிதை
சோதனை ஓட்டத்தின் போலிப் போரில்
தேடிக் கூடிய சௌஜன்யக் களிப்பு
தன் பரவசத்தின் படர்-சுகத்தில்
தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொள்கிறது
இன்பா- கவிதைகள்
உடலெனும் பேராசானை மறக்காமல்
சபித்துவிடுகிறேன் ஒவ்வொரு மாதமும்
ஆதிமனித நிறம்
அற்பமாய்த் தோன்றும் கனம்
கடந்துச்செல்ல குமட்டுகிறது
தீராத விளையாட்டுப் பிள்ளை
இந்த வீட்டில் கிருஷ்ணன் வரும் வழி நீளம். வாசலில் இருந்து ஒரு 20 அடி நடை, பிறகு ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுத்து , டைனிங் டேபிள் பக்கம் ஒரு 15 அடி நடக்க வேண்டும். அங்கேதான் பூஜை அலமாரி. கிருஷ்ணனை அடி மேல் அடி வைத்து கூட்டிக்கொண்டு போவதற்குள் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. லாக்டௌன் போது ஏறிய வெய்ட் வேறு! பாதம் போடப் போட நீளம் குறைந்த பாடில்லை. ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து கொண்டேன்.
சொம்பு
நவாப்பழ மரத்தை ஒட்டிய அறையில் தான் இருவரும் தங்கள் உடலை உணர்ந்தார்கள். நவாப்பழக்கறை படிந்த ராணியின் மென் உடலின் கறையைச் சுத்தம் செய்வான் சந்திரன். அவன் மனதின் கறையை அவள் துடைத்தெடுத்தாள்.
வல்வினை
‘அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்தின் விளைநிலமாகவும், இனநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கிய மருது சகோதர்களைப்பற்றி இவருக்கு எப்படிக் கூறுவேன்? இவர் என்னவோ பிரச்சினையில் இருகிறார். ஏதோ நமக்குத் தெரிந்த விதத்தில் பதில் சொல்லப்போக, ஆங்கிலத்தை இப்படித் துவம்சம் செய்கிறாயே என நம்மிடம் புதுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டால்…? எதற்கு வம்பு?’ வயதானவர்கள், குழந்தைகளைப்போலச் சட்டென கோபித்துக்கொள்வர் என்ற முன்அனுபவமும் நினைவுக்கு வந்தது.
ச. மோகனப்பிரியா- கவிதைகள்
மந்தகாசமான மதியமொன்றில்
கனவில் நிகழ்ந்ததென
தோற்றப்பிழையாகும்
இன்றைய உன்னுடனான
உரையாடல்
போர்ஹெஸ்ஸின் செயலாளர்
எங்களது விளையாட்டு எப்போதும் பேசப்படாததாகவும் மௌனம் சாதிப்பதாகவும் எந்தப் புள்ளியிலும் அதை விளையாடுவதாக நாங்கள் ஒத்துக் கொள்ளாததாகவும் இருந்தது. வரும் நாட்களில் எனது கட்டுரைகளில் சிறப்பான மாற்றங்களை அவள் ஏற்படுத்துவாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் போல பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தேன். இருந்தபோதிலும் அவள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
இரா. கவியரசு கவிதைகள்
அகலாத நறுமணத்தைக் கழுவினேன்
தண்ணீருக்குத் தாவியது மணம்
தொடுகின்ற விரல்கள் தோறும்
மலர்கின்ற மலரதனை
இதழ்களாகப் பிய்க்க முடியவில்லை
ஓட்டையின் உள் ஓர் ஓட்டை
இந்த மோபியஸ் துண்டால் என்ன பயன் என்று யோசிக்கலாம். ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட் மோபியஸ் தான். எல்லா இடங்களும் ஒரே மாதிரியான தேய்மானம் கிடைக்க இந்த ஏற்பாடு. ஒரு காலத்தில் ரிப்பன் வைத்த தட்டச்சு இயந்திரங்கள், மற்றும் கணினி பிரிண்டர்களின் ரிப்பன்கள் மோபியஸ் முறையில் தான் இருந்தது. நாம் தான் அதைக் கவனிக்கவில்லை! இன்னொரு மிகச் சுவாரசியமான விஷயம் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பதிவு செய்ய இரண்டு பக்கமும் பதிவு செய்யக்கூடிய டேப் மோபியஸ் உத்தியை வைத்துத் தான் செய்கிறார்கள்.
ஐமிச்சம்
சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடத் தொடங்கிய இந்த ஒன்றரை வருடத்தில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். ஆனால், ஒன்று சொன்னாற்போல எல்லாரும் ஒரே கேள்வியைக் கேட்பார்கள்.
“நெறய பசங்களே தோத்துப் போன எடம். பொம்பள புள்ள சமாளிச்சுருவியா…”
நான் முழுக்க என்னை மட்டுமே நம்பினேன். என்னை மீறி எதுவுமே எனக்கு நடந்து விடாது என்ற நம்பிக்கை இன்றளவும் எனக்கு இருந்தது.
143
அம்மா சில இளகிய போதுகளில் எதுவும் பாடுவாள். முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவள் அல்ல அவள். என்றாலும் சங்கதிகள் தொண்டைக்குள் புரளும் அவளுக்கு. ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவித் தருவது போல அம்மா காற்றால் தொண்டைக்குள் உரசிக் கொடுக்கிறாள். அவனுக்கு ரொம்ப சங்கீதம் தெரியாது என்றாலும் அம்மா பாடும்போது அத்தனை ரசித்து ருசித்துப் பாடுகிறாள் என்பது தெரியும்.
எரிநட்சத்திரம்
நெற்றியில் சிலும்பிய முடியை கோதை ஒதுக்கிவிட்டாள். தினமும் இப்படி முற்றத்தில் கிடப்பது அவளுக்குச் சுகம். பெரும்பாலும் டிரான்சிஸ்டரை அருகில் வைத்துக்கொண்டு இரவின் மடியில் இசையின் தழுவல் கேட்டுக் கொண்டிருப்பாள்.
எண்பதுகளில் வெளிவந்த இளையராஜா பாடல்களை ஒலிபரப்புவார்கள். கோதையும் கூட சேர்ந்து பாடுவாள். சில சமயம் வெறுமனே வானை வெறித்தபடி கிடப்பாள்.
‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும்
கொலம்பியாவின் ஆங்கிலத் துறையின் நிரந்தர ஆசிரியர் நிகோலஸ் டேம்ஸ்(Nicholas Dames) தான் எங்கள் ஆசான். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் கச்சிதமான உடல்வாகும், ஆழ்ந்த கருமையான கண்களும், தாடை ஓரங்களைத் தொடும் கரு மீசையும், தாடியும் கொண்டவர். இருபது ஆண்டுகளாக விட்டுவிட்டு அவர் இலக்கிய மனித நேய வகுப்புகள் எடுத்து வருகிறார். ஒரு ஆசிரியருக்குண்டான பயிற்சியுற்ற குரலும், சற்றே உலர்ந்த ஆனால் ஊடுருவும் தொனியும், என்றுமே அலுப்புத் தட்டாத அபூர்வமான விதத்தில் சொல்லக்கூடிய திறனுமுள்ள சிறந்த பேராசிரியர். வகுப்பு தொடங்குகையில் ஜூமில்(Zoom) இணைவதில் அவருக்குச் சில சிரமங்கள் இருந்தன.
மகரந்தம்
விண்ணில் ஓர் நெடுஞ் சுவர் ‘தாரகையென்ற மணித்திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே! சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத் திங்களையுஞ் சமைத்தே…’ – பாரதியார் முப்பரிமாண வரைபடம் ஒன்றின் உதவியுடன், அண்டவியலாளர்கள் மிகச் சமீபத்தில், வானில் அதி அற்புதமான தென் துருவச் சுவர் (South Pole Wall) ஒன்றைக் “மகரந்தம்”